அரசு கஜானாவை அ.தி.மு.க என்ன செய்தது? அம்பலப்படுத்தும் வெள்ளை அறிக்கை!

ss

மிழக அரசின் நிதி நிலைமை மிகவும் கவலைக்குரியதாக இருக்கும் நிலையில், தி.மு.க. அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்களா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் உள்ள நிலையில், பட்ஜெட்டுக்கு முன்பாக வெள்ளை அறிக்கையை வெளியிட முடிவு செய்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அந்த அறிக்கையை தயாரிக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

ptr

கடந்த 10 ஆண்டுகளில் பலமுறை, வெள்ளையறிக்கை வெளியிடுங்கள் என எதிர்க்கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் கேட்டும் முந்தைய எடப்பாடி அரசு செவி சாய்க்க வில்லை. சி.ஏ.ஜி.யின் அறிக்கை யைக் கூட மக்களிடம் காட்டாமல் ஒளித்து வைத்திருந்தவர் எடப்பாடி பழனிச்சாமி. இந்த நிலையில்தான் வெள்ளை அறிக்கையை வெளியிடும் முயற்சியில் உள்ளது தி.மு.க. அரசு.

இதுகுறித்து தமிழ் வர்த்தக சங்கத்தின் தலைவரும் இந்திய தொழிற் கூட்டமைப்பின் செயற்குழு உறுப்பினருமான சோழ நாச்சியார் ராஜசேகரிடம் நாம் கேட்டபோது, ""வெள்ளை அறிக்கையை ஒரு அரசாங்கமோ அல்லது ஒரு அமைப்போ வெளியிட முடியும். ஒரு பிரச்சனையின் மீதான சாசனம் என்று அதனைச் சொல்லலாம். அதாவது, தனது அரசாங்கத்தின் நிலை அல்லது முந்தைய அரசாங்கத்தின் செயல்பாடுகள் குறித்த அங்கீகரிக்கப்பட்ட ஒரு ஆவணம். தம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கத்தின் வரவு செலவுகளையும் அதன் நிர்வாக செயல்பாடுகளையும் அறிந்துகொள்ளும் உரிமை மக்களுக்கு இருக்கிறது. அரசு இயந்திரம் வெளிப்படைத்தன்மையுடன் இயங்க வேண்டும்.

stalin

கடந்த 10 ஆண்டுகளில் முந்தைய அ.தி.

கடந்த 10 ஆண்டுகளில் முந்தைய அ.தி.மு.க. அரசு விட்டுச்சென்ற நிதி நெருக்கடிகளையும், கடன் சுமையையும் வைத்துக்கொண்டுதான் தி.மு.க. அரசு இன்னும் 5 ஆண்டு காலம் ஆட்சி செய்ய வேண்டியிருப்பதை வெளிப்படுத்துவதாக இந்த அறிக்கை அமையும். 2011-ல் 1 லட்சம் கோடியாக இருந்த தமிழக அரசின் கடன், 2021-ல் 4 லட்சத்து 85 ஆயிரம் கோடியாக உயர்ந்திருக்கிறது. அதுவே இந்த நிதியாண் டின் இறுதியில் 5 லட்சத்து 70 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும் என அ.தி.மு.க. அரசின் இடைக்கால பட்ஜெட்டில் சொல்லப்பட்டிருக்கிறது. வாங்கிய கடனுக்கு வட்டி மட்டுமே வருஷத்துக்கு 50,000 கோடி கட்டிவருகிறது தமிழக அரசு.

முந்தைய ஆட்சியின் 10 ஆண்டு காலத்தில் நடந்த ஊழல்கள், நிர்வாக முறைகேடுகள், நிதிச்சுமைக்கும், கடன் சுமைக்குமான காரணங்கள் ஆகியவற்றை பொது மக்களிடம் வெள்ளை அறிக்கையின் வாயிலாக அம்பலப்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு திட்டமிடுவதை அறிய முடிகிறது. இது வரவேற்கப்பட வேண்டியது. அரசாங்கத்தை நோக்கி மக்களின் கோரிக்கைகளும் எதிர்பார்ப்புகளும் அதிகரித்து வருகிற நிலையில், அரசிடம் என்ன தான் eeஇருக்கிறது என்பது மக்களுக்கு தெரிவதும் அதை தெரியப்படுத்த அரசு முயற்சிப்பதும் ஆரோக்கியமானதுதானே! இப்படி ஒரு வெள்ளை அறிக்கை வெளியிடுவதன் மூலம் திமுக அரசு தன்னை சுயபரிசோதனை செய்துகொள்ள நினைக் கிறது. இன்றைய சூழலில், மாற்றத்துக்கான அரசியலாகவும் அரசாகவும் இதனைப் பார்க்கலாம்''‘என்று சுட்டிக்காட்டுகிறார்.

தமிழக அரசியலில் மூத்த தலைவர்களில் ஒருவரும் சட்டப்பேரவை நிகழ்வுகளில் அனுபவம் பெற்றவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ.கு.தமிழரசனிடம் இதுகுறித்து விவாதித்தபோது, ""முந்தைய அ.தி.மு.க. அரசில் 2 ஆண்டுகளாக வெளியிடப்படாத சி.ஏ.ஜி.யின் அறிக்கையை தற்போதைய தி.மு.க. அரசு சட்டமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறது. ஒருவகையில் பார்த்தோமேயானால், சி.ஏ.ஜி. அறிக்கை கூட வெள்ளை அறிக்கை போன்றதுதான். காரணம், அ.தி.மு.க. அரசின் நிதிச் செயல்பாடுகளில் உள்ள தவறுகளையும் அதனால் அரசுக்கு ஏற்பட்ட இழப்புகளையும் துறைவாரியாக விமர்சனம் செய்திருக்கிறது அந்த அறிக்கை. அதனால், சி.ஏ.ஜி. அறிக்கையை ஒட்டி திமுக அரசின் வெள்ளை அறிக்கை இருக்கப்போகிறதா? அல்லது சி.ஏ.ஜி. ரிப்போர்ட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள இழப்புகளுக்கான மூல காரணங்களையெல்லாம் விவரித்துச் சொல்லப்போகிறார்களா? என்பது வெள்ளை அறிக்கை வெளிவந்தால்தான் தெரியும்.

அ.தி.மு.க. அரசு நிதியை கையாண்டதில் இவ்வளவு முறைகேடுகள் நடதுள்ளன, பயன்படுத்தப்படாமலே நிதி திருப்பி அனுப்பப்பட்டுள்ளது, அந்த நிதி இப்படி திசை மாற்றப்பட்டுள்ளது என்பதையெல்லாம் சி.ஏ.ஜி. தனது ரிப்போர்ட்டில் சொல்லியிருக்கிறது. பெரும்பாலும் சி.ஏ.ஜி. ரிப்போர்ட் வெறும் புள்ளிவிபரங்களின் அடிப்படையில் மட்டுமே இருக்கும். அதனால், சி.ஏ.ஜி. ரிப்போர்ட் போல கடன் சுமைகளையும், நிதி நெருக்கடிகளையும் மட்டுமே குறிப்பிடாமல், கடந்தகால ஆட்சியின் ஊழல்களையும் நிதி முறைகேடுகளையும் அதற்கான விரிவான புள்ளிவிபரங்களுடனும், பின்னணி காரணங்களுடனும், அழியாத ஆதாரங்களுடனும் வெள்ளை அறிக்கையில் முதல்வர் மு.க.ஸ்டாலினும், நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனும் முழுமையாகச் சொல்வார்கள் என எதிர்பார்க்கலாம்.

ss

கலப்புத் திருமணம் செய்துகொள்பவர்களுக்கு நிதி வழங்கும் திட்டம் செயல் பாட்டில் இருக்கிறது. கடந்த 4 ஆண்டுகளில் சிலருக்குக்கூட போய்ச் சேரவில்லை என்று புள்ளிவிபரங்கள் சொல்கின்றன. அப்படியானால், தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் சாதி மறுப்புத் திருமணமே நடக்கவில்லையா? அல்லது யாருமே இந்த திட்டத்தில் பண உதவியை கோரவில்லையா? என்ற கேள்வி வருகிறது. ஆக, அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி என்னாச்சு?

அதேபோல, பட்டியிலினத்தவர்களுக்கான நலத் திட்டங்கள் எல்லாமே, சிறப்பு உட்கூறு திட்டத்தின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு செலவிடப்பட வேண்டும். ஆனா, இந்த சிறப்பு உட்கூறு திட்டம் நடைமுறையில் இருக்கிறதா என்பதை ஆராய, தேசிய அளவில் திட்டக்குழு இருந்தது. நரேந்திரமோடி வந்த பிறகு இது, நிதி ஆயோக் என மாறிடுச்சி. இதனாலேயே சிறப்பு உட்கூறு திட்டம் இருக்கிறதா இல்லையா என்றே தெரிந்துகொள்ள முடிவதில்லை.

அதேபோல, ஜெயலலிதா அம்மையார் ஆட்சியில் சுயநிதி மற்றும் தனியார் கல்லூரிகளில் தொழிற்கல்வி படிப்புகளில் சேரும் தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவ-மாணவிகளின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்ற ஒரு திட்டம் இருந்தது. இந்த திட்டம் கேரளா, கர்நாடகா, மகாராஷ்ட்ரா, மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இருக்கிறது. ஆனால், தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் நிறுத்தப்பட்டது. நீதிமன்றத்தில் முறையிட்டோம். அதன்பிறகு திட்டத்தை தொடர்வதாக உறுதி தந்தார்கள். ஆனாலும், தாழ்த்தப்பட்ட மாணவ-மாணவிகளுக்கு அந்த உதவி கிடைக்கவில்லை. இப்படி பல பிரச்சனைகள் இருக்கிறது.

இதற்கெல்லாம் காரணம் யார்? ஒதுக்கப்பட்ட நிதி எங்கே? என்பதற்கெல்லாம் விடை கிடைக்கும் வகையில் வெள்ளை அறிக்கை இருக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. அந்த வகையில், ஜனநாயக ரீதியாக ஒரு ஆளும் கட்சி இப்படி வெளிப்படையாக மக்கள் மன்றத்தின் முன்பு வருவது மகிழ்ச்சிக்குரிய முன் உதாரணமாக இருக்கும். அதனால், வெள்ளை அறிக்கையை முழுமையாக வரவேற்பதுடன் இதை துணிச்சலான முடிவாகத்தான் பார்க்க வேண்டியதிருக்கிறது''’ என்கிறார் மிக அழுத்தமாக.

தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்த எதிர்பார்ப்புகள் ஏழை மற்றும் நடுத்தர மக்களிடம் அதிகரித்துள்ள நிலையில், தமிழக அரசின் நிதி நிலைமை இதுதான்; நிலைமை சரியானதும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என சொல்வதற்காகத்தான் வெள்ளை அறிக்கை வெளியிடுவதாக அ.தி.மு.க. தரப்பில் விமர்சிக்கப்படுகிறது. ஆனால், நிதித்துறை அதிகாரிகளோ, ’’தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகளுக்கும் நிதி நெருக்கடிக்கும் முடிச்சுப்போட தேவையில்லை. நிதி நெருக்கடியை சுட்டிக்காட்டி வாக்குறுதிகளைத் தள்ளிப்போடும் நோக்கம் இதுவரை ஆட்சி தலைமைக்கு கிடையாது. கடந்த கால ஆட்சியில் இத்தகைய ஊழல்கள் நடந்தன என்பதையும், தி.மு.க. ஆட்சியில் அத்தகைய ஊழல்களோ, முறைகேடுகளோ நடக்காது என்பதையும் மக்கள் முன்பு உறுதிப் படுத்துவதே இந்த வெள்ளை அறிக்கையின் நோக்கம். அந்த அறிக்கை மீது மக்கள் விவா திக்க முடியும்'' என்கிறார்கள் உறுதியாக.

தமிழக அரசின் நிதிச்சுமையை முழுமையாக அறிந்துகொள்ள மக்களுக்கு வாய்ப்புத் தரவேண்டும் என்பதில் விருப்பமாக இருக்கிறார் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

nkn070721
இதையும் படியுங்கள்
Subscribe