சேலம் தொங்கும் பூங்கா வளாகத் தில், 'எஸ்.எஸ். 98 சேலம் மாநகராட்சி பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் நாணய சங்கம்' என்ற பெயரில் கூட்டுறவு சங்கம் இயங்கி வருகிறது. இந்த சங்கத்தில், தூய்மைப் பணியாளர் கள் முதல் நிர்வாகப்பிரிவு ஊழியர்கள் வரை 1500 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். உறுப்பினர்கள் எவ்வளவு தொகை கடன் பெறுகிறார்களோ அதில் 10 சதவீதம், பங்குத் தொகையாக வசூலிக்கப்படுகிறது.

salem

இதன்மூலம், உறுப்பினர்களுக்கு 22 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டு உள்ளது. இந்த கடனுக்கான வட்டி, அசல் ஆகியவற்றை ஊழியர்களின் சம்பளத்தில் மாதந்தோறும் பிடித்தம் செய்து, கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் கணக்கில் சேலம் மாநகராட்சி அலுவலகம் செலுத்த வேண்டும். ஆனால், கடந்த 2018ம் ஆண்டு முதல் 12 கோடி ரூபாய் அளவுக்கு கூட்டுறவு சங்கத்திற்குச் செலுத்தாமல், சேலம் மாநகராட்சி நிர்வாகம் போங்கு ஆட் டம் ஆடிவருவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது தொடர்பாக சேலம் மாநகராட்சி ஊழியர் களிடம் பேசினோம்.

Advertisment

"கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் நாங்கள் பெற்ற கடனுக்கான அசல், வட்டியை செலுத்துவதற்காக மாதந்தோறும் மாநகராட்சி நிர்வாகம் எங்கள் கணக்கில் குறிப்பிட்ட சதவீதத் தொகையை பிடித்தம் செய்கிறது. இந்த பிடித்தம் போகத்தான் எங்களுக்கான ஊதியம் வரவு வைக்கப்படும். ஆனால் நாங்கள் கட னுக்கான அசல், வட்டியை செலுத்தவில்லை என்று கூட்டுறவு சங்கத்திலிருந்து எங்களுக்கு நோட்டீஸ் அனுப்புகின்றனர். தவணை தவறினால் வட்டிக்கு வட்டியும், சொத்துக்கள் மீது ஜப்தி நடவடிக்கையும் பாயும் என்று நோட்டீஸ் வருகிறது. இதுகுறித்து மாநகராட்சி தரப்பில் விசாரித்தபோதுதான், எங்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட 12 கோடி ரூபாய், கடந்த நான்கு ஆண்டாக கூட்டுறவு சங்கத்திற்கு வழங்காமல் இருக்கும் விவரமே தெரிய வந்துள்ளது.

ssகடந்த நான்கு ஆண்டுகளாக எங்களுக்கு கூட்டுறவு சங்கத்தின் லாபத்திலிருந்து கிடைக்கும் டிவிடெண்டு தொகையைக்கூட கொடுக்கவில்லை. மாநகராட்சியின் அலட்சி யத்தால் கூட்டுறவு சங்கமும் 1.50 கோடி ரூபாய் நட்டம் அடைந்துள்ளதாக தணிக்கையில் தெரிய வந்துள்ளது.'' எனப் புலம்புகிறார்கள் சேலம் மாநகராட்சி ஊழியர்கள். சேலம் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் வாழ்வாதார உரிமை பாதுகாப்புச்சங்க மாநிலத் துணைத்தலைவர் சுதாகர், ஆர்.டி.ஐ. ஆர்வலர் சிவராமன் ஆகியோர் கூறுகையில், "சேலம் மாநகராட்சி மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் அனைத்து மாநகராட்சிகளிலும் இதே நிலைதான் உள்ளது. ஊழியர்களின் சம்பளத்தில் கூட்டுறவு கடன், பி.எப். கணக்கு, இன்சூரன்ஸ் உள்ளிட்ட தலைப்புகளில் பிடித்தம் செய்யப்பட்டாலும், அதை முறையாக சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு செலுத்துவ தில்லை.ss

பி.எப். கணக்கிற்கும் பல கோடி ரூபாய் செலுத்தாமல் உள்ளதால் சேலம் மாநகராட்சி அலுவலக சொத்துக்களை ஜப்தி செய்யப் போவதாக சேலம் மண்டல பி.எப். அலுவலகம் எச்சரித்து நோட்டீஸ் அளித்திருக்கிறது. ஒரு தனிநபர், அரசு நிதியை எடுத்து வேறு செலவு செய்துவிட்டால் அதை கையாடல் என்கிறோம். மாநகராட்சி போன்ற அரசு அமைப்புகளே ஊழியர்களின் சம்பளப்பிடித்தத்தை வேறு திட்டங்களுக்கு செலவு செய்வதும் கையாடல் தான்,'' என்றனர்.

Advertisment

சேலம் மாநகராட்சி பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் நாணய சங்கத்தின் செயலாளர் அன்பு, "மாநகராட்சி ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகை, கடந்த 52 மாதங்களாக எங்களுக்கு வந்து சேரவில்லை. கடன் வாங்கிய உறுப்பினர்கள் அசல், வட்டியை உரிய காலத்தில் செலுத்தா விட்டால் அவர்களுக்குத்தான் வட்டிச்சுமை அதிகரிக்கும். கந்துவட்டிக்கு கடன் பெறும் சூழ்நிலை உருவாகும்,'' என்றார். "கடன் அசல், வட்டி நிலுவையை விரைந்து செலுத்தும்படி சேலம் மாநகராட்சிக்கு நினைவூட்டல் கடிதம் எழுதியுள்ளோம். நிலுவையை வசூலிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார் சேலம் மண்டல கூட் டுறவு இணைப் பதி வாளர் ரவிக்குமார்.

சேலம் மாநக ராட்சி ஆணையர் அசோக்குமார்(பொறுப்பு), சொந்த வேலையாக விடுப்பில் இருப்பதாகச் சொல்லப்பட்டதால், கணக்குப்பிரிவு உதவி ஆணையர் பார்த்த சாரதியிடம் கேட்டோம். "சேலம் மாநக ராட்சியில் ஊழியர்கள் பெறும் நிகர ஊதியத் தில்தான் பி.எப்., கூட்டுறவு கடன் நிலு வைக்கான பிடித்தம் செய்து வந்தோம். தற்போது, மொத்த சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யும் நடைமுறையை மீண்டும் கொண்டு வந்துள்ளோம். கணிசமான தவணைத் தொகையை செலுத்தியிருக்கிறோம். மின்வாரியத்திற்கு 8 கோடி ரூபாய் செலுத்தி இருக்கிறோம். படிப்படியாக கூட்டுறவு சங்கத்திற்கு பாக்கித்தொகையை செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என்றார்.

இது ஒருபுறம் இருக்க, ஒப்பந்ததாரர் களுக்கு மட்டும் அண்மையில் 2 கோடி ரூபாய் பட்டுவாடா செய்துள்ள மாநகராட்சி நிர்வாகம், பணியாளர்களின் சம்பளத்தில் மட்டும் சுரண்டலில் ஈடுபடுவதாக சலசலப்புகள் கிளம்பி உள்ளன. சேலம் மாவட்ட பொறுப்பு அமைச்ச ரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சேலம் மாநகராட்சி ஊழியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.