த்தியப்பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தின் நாக்பூர் நகரில் கோல்ட்ரிஃப் சிரப் பயன்படுத்தியதால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு 14 குழந்தைகள் உயிரிழந்துள்ளது இந்திய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட சிரப்புகளில் டைஎத்திலின் கிளைக்கால் 48 சதவிகிதத்துக்கும் அதிகமாக இருந்ததே குழந்தைகளின் உயிரிழப்புக்குக் காரணமென மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisment

இதையடுத்து தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஸ்ரீசென் பார்மா நிறுவனத்தின் தயாரிப்பான இந்த கோல்ட்ரிஃப் மருந்துக்கு மத்தியப்பிரதேசம் தடைவிதித்ததுடன், மாநிலம் முழுவதுமுள்ள மருந்துக் கடைகளில் உள்ள இந்த மருந்தை அகற்றும்படி அம்மாநில சுகாதாரத் துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Advertisment

இதில் வேடிக்கை என்னவெனில் இந்த மருந்து குறித்த செய்திவந்தவுடன் உடனடியாக அக்டோபர் 1-ஆம் தேதி முதலே தமிழகம், கேரளா போன்ற மாநிலங்களில் இந்த மருந்துக்கு அம்மாநில அரசுகள் தடை விதித்துள்ள நிலையில், பாதிப்புக்குள்ளான மத்தியப்பிரதேச மாநிலம் 5-ஆம் தேதிதான் தடைவிதித்துள்ளது.

காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரத்தில் செயல்பட்டுவரும் ஸ்ரீசென் பார்மாவில் தயாரிக்கப்படும் கோல்ட்ரிஃப் மருந்தின் 13-வது பேட்ஜை முழுமையாகத் தடை செய்துள்ளதுடன், அம்மருந்து நிறுவனத்தில் தயாராகும் 5 மருந்துகள் குறித்து தமிழக   மருந்து கட்டுப்பாட்டு இயக்குநர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். தவிரவும் டெக்ஸ்ட்ரோ டி.எஸ். என்ற மற்றொரு மருந்தின் மீதும் சந்தேகம் எழுந்துள்ளது.

Advertisment

டை எத்திலின் கிளைக்கால், பிரேக் ஆயில் சால்வன்டில் கலக்கப் பயன்படுவதாகும். இது அதிகபட்சமாக சிரப்பில் 0.1 சதவிகிதம் மட்டுமே இருக்கலாம். ஆனால் சோதனை செய்யப்பட்ட சிரப்புகளில் 48 சதவிகிதம் காணப்படுவதால், மருந்தின் தரம் குறித்த அக்கறையின்றி லாப நோக்கத்துக்காக மருந்து நிறுவனம் செயல்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்தியாவில் இதற்குமுன்பும் மருந்து நிறுவனங்களின் அலட்சியங்களால் உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. 2019-ல்  ஸ்ரீநகரில் 11 குழந்தைகள் உயிரிழந்தன. அந்த சிரப்பிலும் இந்த டை எத்திலின் கிளைக்கால் காணப்பட்டதே உயிரிழப்புக்குக் காரணம். 2022-ல் காம்பியா நாட்டில்  66 குழந்தைகள் உயிரிழந்ததற்கு இந்தியாவின் மெய்டன் பார்மா சூட்டிகல்ஸ்தான் காரணமென புகார் எழுந்தது. பின்பு அது சத்தமின்றிப் போனது.

coughsyrup1

2023-ல் உஸ்பெகிஸ்தானில் தரமற்ற இருமல் சிரப் காரணமாக 18 குழந்தைகள் இறந்து போயினர். இதனைத் தயாரித்தது நொய்டாவைச் சேர்ந்த மரியான் பயோடெக் நிறுவனம். இந் நிறுவனத்தில் இதையொட்டி நடத்தப்பட்ட சோதனையில், இதன் 22 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தியாவின் தரமற்ற சிரப் காரணமாக இறந்துபோனதில் பெரும்பான்மை யானவை குழந்தைகளே. மருந்துக் கம்பெனிகளின் உற்பத்தி செய்யுமிடங் களிலும், தயாரிக்கப்பட்ட மருந்துகளின் சாம்பிள்களிலும் மருத்துவ அதிகாரிகள் கடுமையான ஆய்வுகளை மேற் கொண்டி ருந்தாலே, இந்நிறுவனங்களின் குட்டு வெளிப்பட்டிருக்கும்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், "மருந்து கட்டுப்பாட்டு அலுவலர் தலைமையில் விசாரணை நடந்துவருகிறது. தமிழ்நாட்டில் அந்த வகை மருந்துகள் விற்பனையாகிறதா என்பது குறித்தும் விசாரணை நடத்திவருகிறோம். உற்பத்தி விபரங்களை சேகரிக்க உத்தரவிட் டுள்ளேன். கோல்ட்ரிப் மருந்தை குழந்தை களுக்கு கொடுக்க வேண்டாம்'' என்றார். 

இன்னும் எத்தனை காலத்துக்கு மருந்து நிறுவனங்களின் லாபவெறிக்கு குழந்தை களைப் பலிகொடுக் கப் போகி றோம்?