Advertisment

நேருவின் மகனே வருக..! மேயர் வேட்பாளர் அருண்? -திருச்சி பாலிடிக்ஸ்!

nn

மிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறு வதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில்... அனைத்துக் கட்சிகளும் மாநகராட்சி வார்டுகளில் போட்டுயிட விரும்புபவர்களை விருப்ப மனு தாக்கல் செய்யச் சொல்லியுள்ளன.

Advertisment

திருச்சி மாநகராட்சியில் கடந்த சில நாட்களாகவே மேயர் வேட்பாளர் யார்?, மேயர் பதவி பெண்களுக்கானதா -பொது வானதா? என்ற கேள்விகள் கட்சியின ரிடையே எழுந்துள்ளது. "பொதுவானது என்றால், அமைச்சரின் வாரிசுதான் அடுத்த மேயர்' என்ற எதிர்பார்ப்பு ஆளுங் கட்ச

மிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறு வதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில்... அனைத்துக் கட்சிகளும் மாநகராட்சி வார்டுகளில் போட்டுயிட விரும்புபவர்களை விருப்ப மனு தாக்கல் செய்யச் சொல்லியுள்ளன.

Advertisment

திருச்சி மாநகராட்சியில் கடந்த சில நாட்களாகவே மேயர் வேட்பாளர் யார்?, மேயர் பதவி பெண்களுக்கானதா -பொது வானதா? என்ற கேள்விகள் கட்சியின ரிடையே எழுந்துள்ளது. "பொதுவானது என்றால், அமைச்சரின் வாரிசுதான் அடுத்த மேயர்' என்ற எதிர்பார்ப்பு ஆளுங் கட்சியினரிடம் அதிகரித்துள்ளது.

Advertisment

kn nehru son

நகர்ப்புற உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, தி.மு.க.வின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்ட நாளிலிருந்து பொறுப்புகள் அதிகமானதுடன், தலைமையின் உத்தரவுக்கேற்ப மாநிலம் முழுவதும் கட்சிப் பணிகளை கவனிக்க வேண்டியிருக்கிறது. அதனால், திருச்சியில் தன்னை சந்திக்க வருபவர்களை எதிர்கொள்வது, தான் இருந்து செய்யவேண்டிய எல்லா பணிகளையும் தன்னுடைய மகன் அருண்நேருவிடம் ஒப்படைத்துள்ளார்.

திருச்சி மத்திய மண்டலம், வடக்கு மண்டலம் என்று மாவட்டச் செயலாளர்களில் ஆரம்பித்து அனைத்து பொறுப்பில் இருப்பவர் களும் கே.என்.நேருவை சந்திப்பதைவிட, அவ ருடைய மகன் அருண்நேருவைத்தான் சந்திக் கிறார்கள். சின்னவர் என்றும் அழைக்கிறார்கள்.

பணிச்சுமைக்கிடையில் அமைச்சர் சில சமயங்களில் உணர்ச்சிவசப்பட்டு இயல்பான கோபத்துடன் பேசி விடுவார். ஆனால் அருண் பொறுமை யானவர் என்றும், பேச்சிலும் நிதானம் வெளிப் படுகிறது என்றும் உடன் பிறப்புகள் குறிப்பிடுகின்றனர்.

திருச்சி மாவட்டம் முழுவதும் சுற்றி வலம்வர ஆரம்பித்துள்ள அருண், தொண்டர்கள் எந்த கோரிக்கையை முன்வைத்தாலும், நேரில் சென்று விசாரித்து, ஆவன செய்ய முயற்சிப்ப தும் கட்சியினரிடம் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது..

nn

"மேயர் தேர்தலுக்கான போட்டி யில் உங்களை எதிர்பார்க்கலாமா?'' என அருண்நேருவிடம் அலைபேசியில் கேட்டபோது, "நான் கட்சியில் எந்தப் பொறுப் பிலும் இல்லை. எனக்கு முன்னால் கட்சியில் பல மூத்த நிர்வாகிகள் உள்ளனர். அப்பாவுக்குத் தெரி யாதது எதுவும் இல்லை. கட்சித் தொண்டர்கள், அப்பா அத்தனை பேரும் ஆமோதித்தால், நான் மறுப்புச் சொல்வதற்கு ஒன்றுமில்லை''’என்று எளிமையாக முடித்துக்கொண்டார்.

டிசம்பர் 12-ஆம் தேதி அருண் பிறந்தநாள் என்பதால், ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே "நாளைய நாடாளுமன்றமே! மாண்புமிகு மாநகராட்சியே!' என திருச்சியில் போஸ்டர்கள் அதகளம் செய்தன. முன்னாள் துணை மேயர் அன்பழகன் இந்தமுறை மேயர் பதவிக்கு விருப்ப மனு தாக்கல் செய்தாலும், அருண்நேருவுக்கு ஆதரவு அதிகமாக இருப்பதை தொண்டர்களின் பல்ஸ் ரேட் காட்டுகிறது.

"நேருவின் மகளே வருக!' என்றார் கலைஞர். "நேருவின் மகனே வருக!' என்கிறார்கள் திருச்சி உடன்பிறப்புகள்.

nkn151221
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe