Advertisment

BREAKING எடை குறைவு! விலை அதிகம்! சத்துணவு முட்டையில் ரூ.1100 கோடி ஊழல்!

minister saroja

"கோழியிலிருந்து முட்டை கிடைக்கும். முட்டையிலிருந்து என்னென்ன கிடைக்கும்?'

Advertisment

அது எடப்பாடி அரசுக்குத்தான் தெரியும்.

தமிழகத்தில் நாமக்கல் மாவட்டத்தில்தான் 90 சதவீத முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. நாள் ஒன்றிற்கு ஏறக்குறைய மூன்றேகால் கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. அதில், பொதுமக்களுக்கு 1.5 கோடி முட்டைகள் விற்பனை செய்யப்படுகின்றன. 70 லட்சம் முட்டைகள் ஏழை எளிய குழந்தைகள் சாப்பிடும் சத்துணவுக்கூடங்களுக்கு அனுப்பப்படுகிறது. மீதமுள்ள, ஒன்றரை கோடி முட்டைகள் அண்டை மாநிலங்களுக்கு -குறிப்பாக கேரளாவுக்கு அனுப்பப்படுகிறது. ஏறத்தாழ, 25 லட்சம் முட்டைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. நாளொன்றுக்கு 70 லட்சம் முட்டைகள் வாங்கியதில்தான் ரூ.1100 கோடி ஊழல் நடந்ததுகுறித்து விசாரிக்க அதிரடி உத்தரவிட்டிருக்கிறது டெல்லியிலுள்ள மத்திய அரசின் தொழில் முறையீட்டு (Competition Commission of India) ஆணையம்.

Advertisment

eggமுட்டைகளின் எடை அளவுப்படி...

நிவெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் முட்டைகளின் அளவு – 65 கிராம் எடை கொண்டது

நிபொதுமக்கள் மற்றும் அண்டை மாநிலங்களுக்கு அனுப்பப்படும் முட்டைகள் 55 கிராம் எடை கொண்டது

நிஅங்கன்வாடி மற்றும் பள்ளிகளிலுள்ள சத்துணவுக்கூடங்களுக்கு விநியோகிக்கப்படும் முட்டைகள் – 46 கிராம் எடை கொண்டது (இருப்பதிலேயே சிறிய முட்டை)

"இந்தியாவில் விற்கப்படும் முட்டைகளின் விலையை நிர்ணயிப்பது என்.இ.சி.சி.(National Egg Coordination Committee)எனப்படும் முட்டை ஒருங்கிணைப்புக் குழு. வெவ்வேறு எடை கொண்ட முட்டைகளுக்கும் ஒரே விலையை நிர்ணயித்திருக்கிறது இந்த என்.இ.சி.சி. இதுதான், ஊழலுக்க

"கோழியிலிருந்து முட்டை கிடைக்கும். முட்டையிலிருந்து என்னென்ன கிடைக்கும்?'

Advertisment

அது எடப்பாடி அரசுக்குத்தான் தெரியும்.

தமிழகத்தில் நாமக்கல் மாவட்டத்தில்தான் 90 சதவீத முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. நாள் ஒன்றிற்கு ஏறக்குறைய மூன்றேகால் கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. அதில், பொதுமக்களுக்கு 1.5 கோடி முட்டைகள் விற்பனை செய்யப்படுகின்றன. 70 லட்சம் முட்டைகள் ஏழை எளிய குழந்தைகள் சாப்பிடும் சத்துணவுக்கூடங்களுக்கு அனுப்பப்படுகிறது. மீதமுள்ள, ஒன்றரை கோடி முட்டைகள் அண்டை மாநிலங்களுக்கு -குறிப்பாக கேரளாவுக்கு அனுப்பப்படுகிறது. ஏறத்தாழ, 25 லட்சம் முட்டைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. நாளொன்றுக்கு 70 லட்சம் முட்டைகள் வாங்கியதில்தான் ரூ.1100 கோடி ஊழல் நடந்ததுகுறித்து விசாரிக்க அதிரடி உத்தரவிட்டிருக்கிறது டெல்லியிலுள்ள மத்திய அரசின் தொழில் முறையீட்டு (Competition Commission of India) ஆணையம்.

Advertisment

eggமுட்டைகளின் எடை அளவுப்படி...

நிவெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் முட்டைகளின் அளவு – 65 கிராம் எடை கொண்டது

நிபொதுமக்கள் மற்றும் அண்டை மாநிலங்களுக்கு அனுப்பப்படும் முட்டைகள் 55 கிராம் எடை கொண்டது

நிஅங்கன்வாடி மற்றும் பள்ளிகளிலுள்ள சத்துணவுக்கூடங்களுக்கு விநியோகிக்கப்படும் முட்டைகள் – 46 கிராம் எடை கொண்டது (இருப்பதிலேயே சிறிய முட்டை)

"இந்தியாவில் விற்கப்படும் முட்டைகளின் விலையை நிர்ணயிப்பது என்.இ.சி.சி.(National Egg Coordination Committee)எனப்படும் முட்டை ஒருங்கிணைப்புக் குழு. வெவ்வேறு எடை கொண்ட முட்டைகளுக்கும் ஒரே விலையை நிர்ணயித்திருக்கிறது இந்த என்.இ.சி.சி. இதுதான், ஊழலுக்கான ஆரம்பம்'’என்கிறார் டெல்லியிலுள்ள தொழில்முறையீட்டு ஆணையத்தில் அதிரடி வாதங்களை முன்வைத்த உச்சநீதிமன்ற பிரபல வழக்கறிஞர் பொ. சோமசுந்தரம்.

நக்கீரனிடம் அவர் பேசும்போது, ""நேஷனல் எக் கோ-ஆர்டினேஷன் கமிட்டியானது 1982-ல் தொடங்கப்பட்டபோது, எப்போதெல்லாம் அண்டை மாநிலங்களுக்கு முட்டைகள் தேவைப்படும்; தேவைப்படாது என்ற தகவல்களை செய்தித்தாள்கள் மூலம் மக்களுக்கும் முட்டை உற்பத்தியாளர்களுக்கும் தெரிவித்து வந்தது. இதனால், எந்த நேரத்தில் அண்டை மாநிலங்களில் முட்டைகளை அதிகமாக விற்பனைக்கு அனுப்பலாம்; அனுப்பக்கூடாது என்று முட்டை உற்பத்தியாளர்களுக்கு இந்த தகவல்கள் உதவின. ஆனால், காலப்போக்கில் என்.இ.சி.சி.யானது தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ய ஆரம்பித்துவிட்டது. அதாவது, முட்டைகளின் விலையையே நிர்ணயிக்க ஆரம்பித்துவிட்டது. முட்டை பெரிதாக இருந்தாலும் சிறிதாக இருந்தாலும் உற்பத்தியாகும் இடத்தில் நிர்ணயிக்கப்படும் (Farm price) ஒரே விலைதான்.

அமைப்பின் பெயரில் "நேஷனல்'’என்ற வார்த்தை இருப்பதால் பலரும் மத்திய அரசின் அமைப்பு என்று தவறாக புரிந்துகொள்கிறார்கள். ஆனால், இது முட்டை உற்பத்தியாளர்களை கொண்ட தனியார் அமைப்பு. இந்த, அமைப்பிற்கு முட்டைகளின் விலையை நிர்ணயிக்கும் உரிமையே கிடையாது. அப்படியிருக்க, என்.இ.சி.சி. நிர்ணயித்த விலையில் முட்டை கொள்முதல் செய்ததே தவறு. அத்துடன், ஒவ்வொரு வருடமும் சத்துணவுக்கூடங்களுக்கான முட்டை கொள்முதல் டெண்டரின்போது மட்டும் விலையை கூடுதலாக நிர்ணயித்த மாபெரும் மோசடியும் ஆதாரப்பூர்வமாக தெரியவந்துள்ளது. விலை கூடுதலாக வாங்கியது மட்டுமல்ல, ஏழை எளிய குழந்தைகள் சாப்பிடுவதற்கு வாங்கிய முட்டைகளின் அளவும் மிக மிக குறைவான 46 கிராம் எடை கொண்டவை.

minister-sarojaஅதாவது, ஒரு முட்டைக்கு ஒரு ரூபாய் 50 பைசா கூடுதலாக கொடுத்து வாங்கியிருக்கிறார்கள் தமிழக சமூக நலத்துறை அதிகாரிகள். ஒருநாளைக்கு 1 கோடி ரூபாய் ஊழல் என கணக்கிட்டுப் பார்த்தால் ஒரு வருடத்திற்கு 220 பள்ளிநாட்கள். இதன்படி 220 கோடி ரூபாய். 2013-ஆம் வருடத்திலிருந்து என கடந்த 5 வருடங்களாக டெண்டர் விடப்பட்டு 1,100 கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது. என்.இ.சி.சியின் இணையதளத்தில் கொடுத்திருக்கும் விலை நிர்ணய வரைபடத்தை பார்த்தாலே முறைகேடாக விலை நிர்ணயம் செய்திருப்பது தெரியவருகிறது.

அதுமட்டுமல்ல, கடந்த 5 வருடங்களாக முட்டை சப்ளை செய்ய "சுவர்ணபூமி' என்கிற கம்பெனிக்கு டெண்டர் கொடுக்கப்பட்டதும் ஆர்.டி.ஐ. மூலம் ஆதாரப்பூர்வமாக தெரியவந்துள்ளது. இந்த கம்பெனியானது முட்டை உற்பத்தி செய்யும் கம்பெனி அல்ல. இதுகுறித்து, நாமக்கல்லை சேர்ந்த சுந்தரம் என்பவருக்காக... வழக்கு தொடுத்தபோதுதான் இந்த ஊழலை விசாரிக்கச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறது தொழில் முறையீட்டு ஆணையம்''’என்கிறார் விளக்கமாக.

rtiசெயற்கை கோழிக்குஞ்சு வளர்ந்து 18-வது வாரத்தில்தான் முட்டையிடத் தொடங்குகிறது. அப்போது முட்டை சிறியதாகவும் எடை குறைவாகவும் இருக்கும். ஏறத்தாழ 7 மாதங்கள் கழித்தே முட்டையின் எடை அதிகரிக்கும். அரசுத் தரப்போ எடை குறைவான முட்டைகளை அதிக விலைக்கு வாங்கி மோசடி செய்கிறது.

இந்த முட்டை ஊழலை விசாரிக்கக்கோரி டெல்லியிலுள்ள ஆணையத்தில் வழக்கு தொடர்ந்த நாமக்கல் விவசாயி சந்திரனிடம் நாம் பேசியபோது, “""இரண்டு நாட்களுக்கு ஒருமுறை முட்டைவிலையை நிர்ணயித்து பகல் 12 மணிக்கு அறிவிக்கிறது என்.இ.சி.சி. ஒருநாளைக்கு 3 ரூபாய் 25 பைசாவுக்கு முட்டை விலையை நிர்ணயம் செய்யுதுன்னா பள்ளிக்குழந்தைகளுக்கு 65 கிராம் எடையுள்ள முட்டைகளை 3 ரூபாய் 25 பைசாவுக்கு வாங்கிக் கொடுத்திருக்கலாம். அப்படியுமில்லைன்னா, 46 கிராம் எடைகொண்ட முட்டைகளை 35 பைசா கம்மியாக 2 ரூபாய் 90 பைசாவுக்கு வாங்கியிருக்கலாம்'' என்கிறார். இவருக்காக சட்டப்போராட்டம் நடத்திய மற்றொரு பிரபல வழக்கறிஞர் மயில்சாமியோ, ""ஏழை-எளிய குழந்தைகளுக்கு சின்ன சைஸ் முட்டை. ஆனால்… காசு மட்டும் என்.இ.சி.சி. நிர்ணயம் பண்ணின ரேட்டுன்னா எவ்ளோ பெரிய அநியாயம்? முன்பெல்லாம் சின்ன முட்டைகள் சந்தைகளில் குறைந்த விலையில் விற்பனை ஆகிக்கொண்டிருந்தன. ஆனா, சத்துணவு மையங்களுக்கு அனுப்பப்பட்டதால் சந்தைகளில் விற்கப்படுவதில்லை. நாமக்கல் மாவட்ட ஹோட்டல்களில் ஆம்லெட் ஆர்டர் பண்ணினா, "‘சின்ன முட்டையில போடவா? பெரிய முட்டையில போடவா?'ன்னு கேட்பாங்க. சின்ன முட்டையில ஆம்லெட் போட்டா விலை குறைவு. அப்படிப்பட்ட முட்டையை அதிக விலைக்கு வாங்கித்தான் கோடிக்கணக்கில் ஊழல் செய்திருக்கிறது தமிழக அரசு''’என்று குற்றம்சாட்டுகிறார்.

குற்றச்சாட்டுகள் குறித்து, சென்னை -தரமணியிலுள்ள தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப்பணிகள் இயக்குநரகத்தின் செயலாளர் மணிவாசன் ஐ.ஏ.எஸ்.ஸிடம் கேட்டபோது.... ""46 கிராம் முட்டை என்பது தமிழக அரசின் ஆணையில் உள்ளது. மற்ற குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள். ஜூன் மாதத்தில் விலை கூடுவது இயல்புதான். சுவர்ணபூமி நிறுவனத்துக்கு தகுதி இருப்பதால் டெண்டர் மூலம் தேர்வாகி சப்ளை செய்கிறது. அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த சுயநலக்காரர்கள் கிளப்பிவிடும் குற்றச்சாட்டு இது. இது தொடர்பான வழக்குகள் சுப்ரீம்கோர்ட் வரை போயும் நிலைக்கவில்லை'' என்றார் விளக்கமாக.

egg-corruption

இதுகுறித்து சமூகநலத்துறை அமைச்சர் சரோஜாவை தொடர்புகொண்டபோது, "நாட் ரீச்சபிள்' நிலையில் அவரது செல் இருந்தது. எஸ்.எம்.எஸ். அனுப்பினோம். இதழ் அச்சாகும்வரை அவரது விளக்கம் கிடைக்கவில்லை.

-மனோசௌந்தர்

முட்டை விலை கூடுவதற்கு காரணம்!

முட்டை விலை அடிக்கடி கூடுவதற்கும் பெருமுட்டை உற்பத்தியாளர்களைக்கொண்ட என்.இ.சி.சி.தான் காரணம். அதுவும், கடந்த 2017 நவம்பர் வரலாறு காணாத முட்டை விலை கூடியதற்கு காரணம் முட்டை உற்பத்தி குறைவானது அல்ல. 10,000 லிருந்து 25,000 எண்ணிக்கையில் உற்பத்தி செய்கிறவர்கள் சிறு முட்டை உற்பத்தியாளர்கள். 50,000 முதல் 5 லட்சம் முட்டைகளுக்குமேல் உற்பத்தி செய்பவர்கள் பெரு முட்டை உற்பத்தியாளர்கள். பொதுவாக, சிறுமுட்டை உற்பத்தியாளர் களிடமிருந்து ஒரு விலைக்கு வாங்கும் பெருமுட்டை உற்பத்தியாளர்கள் கூடுதல் விலைவைத்து சத்துணவு மையங்களுக்கு சப்ளை செய்யும் சுவர்ணபூமி உள்ளிட்ட கம்பெனிகளிடம் விற்பனை செய்துவிடுவார்கள். ஆனால், கடந்த ஜூலை மாதத்திலிருந்து சுவர்ணபூமி உள்ளிட்ட கம்பெனிகள் பல மாவட்டங்களில் குடோவுன்களை திறந்து சிறு உற்பத்தியாளர்களிடம் நேரடி யாக முட்டைகளை வாங்க ஆரம்பித்துவிட்டன. இதனால், கோபமடைந்த பெருமுட்டை உற்பத்தியாளர்கள் முட்டைகளை சப்ளையர்களுக்கு விற்பனை செய்யமாட்டோம் என்று அறிவித்துவிட்டார்கள். இதனால், சத்துணவுக்கூடங்களுக்கு 1 நாளைக்கு 70 லட்சம் முட்டை களை சத்துணவுக்கூடங்களுக்கு அனுப்பமுடியாமல் திணறின சப்ளை செய்யும் கம்பெனிகள் இதை ஈடுகட்ட, பொதுமக்களுக்கும் அண்டை மாநிலங்களுக்கும் போகும் முட்டைகளை வாங்க ஆரம்பித்துவிட்டார்கள்.

eggcorruption ministersaroja
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe