முதல்வர் ஸ்டாலின் முன்னெடுத்துவரும் "உடன்பிறப்பே வா!' நிகழ்ச்சி தி.மு.க.வில் பல்வேறு மாற் றங்களுக்கு வித்திட்டிருக் கிறது. மாவட்ட அளவில் கட்சியில் நடக்கும் பிரச்சினைகளை அறிந்து உடனுக்குடன் ஆக்ஷன் எடுத்துவருகிறார் ஸ்டாலின். இந்த நிகழ்வில் நெகிழ்ச்சி யான சம்பவங்களும் நடந்துகொண்டிருக்கின்றன.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், ஆட்சியை மீண்டும் தக்கவைத்து கொள்ள கட்சிரீதியாக பல்வேறு நடவடிக்கைகளை அமல் படுத்திவரும் ஸ்டாலின், மாவட்ட நிர்வாகிகளுக்கான பிரச்சினைகளை அறிந்து கொள்வதற்காக, அவர்களை நேரில் ஒன் டூ ஒன் சந்தித்து பேச... "உடன்பிறப்பே வா' எனும் நிகழ்வை நடத்திக்கொண்டிருக்கிறார்.
சென்னை அறிவாலயத்தில் இந்த சந்திப்பு நடந்துவருகிறது. இந்த சந்திப்புக்கு தொகுதிவாரியாக நிர்வாகிகள் அழைக்கப்படுகின்றனர். சம்மந்தப்பட்ட நிர்வாகியுடன் நேருக்கு நேர் ஸ்டாலின் விவாதிப்பதால், இந்த நிகழ்வில் மா.செ.க்களுக்கு அனுமதியில்லை. மண்டல பொறுப்பாளர் மட்டும்
முதல்வர் ஸ்டாலின் முன்னெடுத்துவரும் "உடன்பிறப்பே வா!' நிகழ்ச்சி தி.மு.க.வில் பல்வேறு மாற் றங்களுக்கு வித்திட்டிருக் கிறது. மாவட்ட அளவில் கட்சியில் நடக்கும் பிரச்சினைகளை அறிந்து உடனுக்குடன் ஆக்ஷன் எடுத்துவருகிறார் ஸ்டாலின். இந்த நிகழ்வில் நெகிழ்ச்சி யான சம்பவங்களும் நடந்துகொண்டிருக்கின்றன.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், ஆட்சியை மீண்டும் தக்கவைத்து கொள்ள கட்சிரீதியாக பல்வேறு நடவடிக்கைகளை அமல் படுத்திவரும் ஸ்டாலின், மாவட்ட நிர்வாகிகளுக்கான பிரச்சினைகளை அறிந்து கொள்வதற்காக, அவர்களை நேரில் ஒன் டூ ஒன் சந்தித்து பேச... "உடன்பிறப்பே வா' எனும் நிகழ்வை நடத்திக்கொண்டிருக்கிறார்.
சென்னை அறிவாலயத்தில் இந்த சந்திப்பு நடந்துவருகிறது. இந்த சந்திப்புக்கு தொகுதிவாரியாக நிர்வாகிகள் அழைக்கப்படுகின்றனர். சம்மந்தப்பட்ட நிர்வாகியுடன் நேருக்கு நேர் ஸ்டாலின் விவாதிப்பதால், இந்த நிகழ்வில் மா.செ.க்களுக்கு அனுமதியில்லை. மண்டல பொறுப்பாளர் மட்டும் பங்கேற்க அனுமதி தரப்பட்டுள்ளது. இந்த சந்திப்புக்குப் பிறகு நிர்வாகிகள் ஏக சந்தோசத்தி-ருக்கிறார்கள்.
இது குறித்து தி.மு.க.வின் சீனியர் நிர்வாகிகளிடம் நாம் பேசியபோது, "தி.மு.க.வின் கட்டமைப்பு மிக வலிமையானது. ஆனால், அந்த கட்டமைப்புக்குள்ளும் ஓட்டை விழுகிறது என்று உளவுத்துறை சில மாதங்களுக்கு முன்பு ஒரு ரிப்போர்ட் கொடுத்தது. அதேமாதிரி தி.மு.க.வின் தேர்தல் வியூக அமைப்பான சபரீசனின் "பென்' நிறுவனமும் இது குறித்த அறிக்கையை சமர்பித்தது.
மாவட்ட அளவிலும், கிளைக்கழகம் அளவிலும் பிரச்சினைகள் இருக்கின்றன. மா.செ.க்களுக்கும் ஒ.செ.க் களுக்குமிடையே இடைவெளி அதிகரித்துள்ளது. ஒ.செ.க்களுக்கும் நகர செயலாளர்களுக்கு மிடையே ஒற்றுமையில்லை. மாவட்ட நிர்வாகிகளுக்கும், மாவட்ட இளைஞரணி நிர்வாகிகளுக்கும் பல விசயங்களில் ஒத்துப்போவதில்லை. அமைச்சர் களுக்கும், எம்.எல்.ஏ.க்களுக்குமிடையே கருத்து வேறுபாடுகள் விரிவடைந்துள்ளன. இத்தகைய இடைவெளிகள் கிளைக்கழகம்வரை பரவத்தொடங்குகிறது. இதனை அனுமதித்தால் இனிவரும் நாட்களில் கட்சியையும் சட்டமன்றத் தேர்தலையும் இது பாதிக்கும். அதனால், இவைகளை சரி செய்வதற்கு நிர்வாகிகளை அழைத்துப் பேசுங்கள் என ஸ்டாலினிடம் கொடுக்கப்பட்ட ரிப்போர்ட்டில் விவரிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து திட்டமிடப்பட்டதுதான் "உடன்பிறப்பே வா' சந்திப்பு நிகழ்ச்சி. கிளைக் கழகம் வரை கட்சி எப்படி இருக்கிறது? ஆரோக்கியமாக இருக்கிறதா? என்பதை அறிவதற்கான சந்திப்பு. இந்த சந்திப்பின்போது, மா.செ.க்களை பங்கேற்க அனுமதிக்கக் கூடாது. மா.செ.க்கள் இல்லையென்றால்தான் கீழ்மட்ட நிர்வாகிகள் உண்மையை பயமின்றிப் பேசுவார்கள். அதனால், நிர்வாகிகளுடனான "ஒன் டூ ஒன்' சந்திப்பில் மாவட்ட செயலாளர்களை பங்கேற்கச் செய்ய வேண்டாம் எனவும், தேவைப்பட்டால் மண்டல பொறுப்பாளர்களுக்கு அனுமதி கொடுக்கலாம் எனவும் ஸ்டாலினிடம் சொல்லப்பட்டது. அதற்கேற்ப, நிகழ்ச்சிகள் தீர்மானிக்கப்பட்டு உடன் பிறப்பே சந்திப்பை நடத்திக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின்.
இந்த சந்திப்பில் தலைவரிடம் ஒன் டூ ஒன் பேசும் நிர்வாகிகள் மனம் திறந்து பேசுகிறார்கள். அப்போது பல உண்மைகள் தலைமைக்குத் தெரியவருகிறது. அதை யெல்லாம் குறித்துக்கொள்ளும் ஸ்டாலின், அடுத்தடுத்த நாட்களில் அதற்கு தீர்வும் காண்கிறார். அதாவது, சம்மந்தப்பட்ட மாவட்ட செயலாளரை நேரில் அழைத்தோ, தொடர்புகொண்டோ அவரது மாவட்டத்தில் என்ன பிரச்சினை இருக்கிறது? மா.செ. செய்துவரும் அரசியல் என்ன? எந்த இடத்தில் அவர் தவறு செய்துகொண்டிருக்கிறார் ? என்பதையெல்லாம் சுட்டிக்காட்டி டோஸ் கொடுக்கிறார் ஸ்டாலின்.
இது ஒருபுறமெனில், தம்மை சந்திக்கும் நிர்வாகிகளிடம் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் விவாதிக்கும் ஸ்டாலின். உங்கள் தொகுதியில் அடிப்படை பிரச்சினைகள் என்ன? நமது அரசு கொண்டுவந்துள்ள மக்கள்நலத் திட்டங்கள் என்ன? அந்த திட்டங்கள் மக்களிடம் போய்ச் சேர்ந்துள்ளதா? கடைக்கோடியிலுள்ள மக்கள்வரை இந்த திட்டங்கள் சென்றடை வதற்கு அமைச்சர், எம்.எல்.ஏ., கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத் துள்ளனரா? உங்கள் தொகுதியில், சமூக ரீதியாக யார் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் ? இதில் மா.செ.வின் பங்களிப்பு என்ன? தேர்தல் பணிகள் குறித்து தலைமை உருவாக்கியுள்ள கட்டமைப்புகள், கட்டளைகள் சரியாக நடக்கிறதா? எதிர்க்கட்சிகளிடம் யாரேனும் ரகசிய தொடர்புகள் வைத்துள்ளனரா? என பல்வேறு கேள்விகளைக் கேட்டு பதில் வாங்குகிறார் ஸ்டாலின். இதன் மூலம் பல உண்மைகள் அவருக்குத் தெரியவந்துள்ளது.
டிசம்பருக்குள் 234 தொகுதிகளின் நிர்வாகிகளையும் சந்தித்து முடித்துவிட வேண்டும் என்கிற திட்டத்தில் இந்த உடன்பிறப்பே நிகழ்வை தற்போது வேகப்படுத்தியுள்ளார் ஸ்டாலின். அதன்பிறகு கட்சிக்குள் பல அதிரடி மாற்றங்கள் இருக்கும்''‘என்றும் சுட்டிக் காட்டுகிறார்கள் சீனியர்கள்.
நெகிழ்ச்சியான பல சம்பவங்களும் உடன்பிறப்பே சந்திப்பில் நடந்து கொண்டிருக்கின்றன. அந்த நெகிழ்வுகளில் ஸ்டாலினும் ரிலாக்ஸ் ஆகிறார். அதேசமயம் அ.தி.மு.க.வினருடன் தொடர்பு வைத்துக் கொண்டிருக்கும் நிர்வாகிகள் குறித்த பிரச்சினைகளும் இந்த சந்திப்பில் அம்பலமாவதால், அதிரடி ஆக்ஷன் எடுப்பதிலும் கவனம் செலுத்தியுள்ளார் ஸ்டாலின்!
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us