சட்டமன்றத் தேர்தலில் 200 இடங்களை கைப்பற்ற இலக்கு வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின், சில அதிரடி முடிவுகளை கட்சியில் முன்னெடுத்திருக்கிறார். முதல்கட்டமாக, 2 தொகுதிகளுக்கு ஒரு மா.செ. என பிரித்து, புதிய மா.செ.க்களை நியமித்து வருகிறார். புதிய மா.செ.க்கள் நியமனத்தைத் தொடர்ந்து, பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கும் புகார்களுக்கும் ஆளாகியுள்ள மா.செ.க்களை மாற்றும் முடிவிலும் ஸ்டாலின் இருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தி.மு.க.வில் அமைப்பு ரீதியாக 72 மாவட்டங்கள் இருக்கிறது. இரண்டு தொகுதிகளுக்கும் அதிகமாக இருக்கும் மாவட்டங்களைப் பிரித்து புதிய மாவட்டங்கள் உருவாக்கப் பட வேண்டும் என்பது இளைஞர் அணியின் கோரிக்கை. குறிப்பாக, இளைஞரணிக்கு மாநிலச் செயலாளராக உதயநிதி பொறுப்புக்கு வந்தபிறகு இந்த கோரிக்கை வலுப்பெற்றது.
அதேசமயம், அமைச்சர், துணை முதல்வர் என படிப்படியாக உதயநிதி பதவி உயர்வு பெற்றதையடுத்து மேற் கண்ட கோரிக்கை மேலும் வலுத்தது. கட்சியில் மா.செ.க்களாக இருக்கும் மூத்த அமைச்சர்கள் சிலரிடம்தான் அதிக சட்டமன்றத் தொகுதிகள் அடங்கிய மாவட்டங்கள் இருப்பதால் அதனை எப்படி பிரிப்பது என்கிற தயக்கம் ஸ்டாலினிடம் இருந்து வந்தது. இருப்பினும் எப்போது வேண்டுமானா லும் மாவட்ட பிரிவினையை கட்சிக்குள் கொண்டு வருவார் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ஆனால், கடந்த 6 மாதங்களாக மா.செ.க்கள் நியமனம் ரிலீஸ் ஆகவில்லை.
இந்த நிலையில்தான், சட்டமன்றத் தேர்தலை மையப்படுத்தி கடந்த வாரம் புதிய மா.செ.க்களை நியமித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அதன் படி, இரண்டு மாவட்டங்களாக இருந்த விழுப்புரத்தை மூன்று மாவட்டங்களாகப் பிரித்திருக்கிறார். இதில், அமைச்சர் பொன்முடியின் மகன் கௌதம சிகாமணி வசமிருந்த விழுப்புரம், வானூர் ஆகிய 2 தொகுதிகளை எடுத்து விழுப்புரம் மத்திய மாவட்டம் உருவாக்கப் பட்டுள்ளது. இதன் மா.செ.வாக விழுப்புரம் எம்.எல்.ஏ. டாக்டர் லட்சுமணன் நியமிக்கப் பட்டுள்ளார். மேலும், விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த டாக்டர் சேகரை நீக்கி விட்டு செஞ்சி மஸ்தானுக்கு மீண்டும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
அதேபோல, இரண்டு மாவட்டங்களாக இருந்த திருப்பூர் மாவட்டத்தை 4 மாவட்டங் களாகப் பிரித்து, திருப்பூர் மேற்கு மாவட்டத் துக்கு அமைச்சர் சாமிநாதனையும், திருப்பூர் வடக்கிற்கு மேயர் தினேஷையும் புதிய மா.செ.க்களாக நியமித்திருக்கிறார் ஸ்டாலின். அதேபோல, ஈரோட்டை பிரித்து புதிய மாவட்டத்துக்கு அ.தி.மு.க.விலிருந்து தி.மு.க. வுக்கு வந்து நீ
சட்டமன்றத் தேர்தலில் 200 இடங்களை கைப்பற்ற இலக்கு வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின், சில அதிரடி முடிவுகளை கட்சியில் முன்னெடுத்திருக்கிறார். முதல்கட்டமாக, 2 தொகுதிகளுக்கு ஒரு மா.செ. என பிரித்து, புதிய மா.செ.க்களை நியமித்து வருகிறார். புதிய மா.செ.க்கள் நியமனத்தைத் தொடர்ந்து, பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கும் புகார்களுக்கும் ஆளாகியுள்ள மா.செ.க்களை மாற்றும் முடிவிலும் ஸ்டாலின் இருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தி.மு.க.வில் அமைப்பு ரீதியாக 72 மாவட்டங்கள் இருக்கிறது. இரண்டு தொகுதிகளுக்கும் அதிகமாக இருக்கும் மாவட்டங்களைப் பிரித்து புதிய மாவட்டங்கள் உருவாக்கப் பட வேண்டும் என்பது இளைஞர் அணியின் கோரிக்கை. குறிப்பாக, இளைஞரணிக்கு மாநிலச் செயலாளராக உதயநிதி பொறுப்புக்கு வந்தபிறகு இந்த கோரிக்கை வலுப்பெற்றது.
அதேசமயம், அமைச்சர், துணை முதல்வர் என படிப்படியாக உதயநிதி பதவி உயர்வு பெற்றதையடுத்து மேற் கண்ட கோரிக்கை மேலும் வலுத்தது. கட்சியில் மா.செ.க்களாக இருக்கும் மூத்த அமைச்சர்கள் சிலரிடம்தான் அதிக சட்டமன்றத் தொகுதிகள் அடங்கிய மாவட்டங்கள் இருப்பதால் அதனை எப்படி பிரிப்பது என்கிற தயக்கம் ஸ்டாலினிடம் இருந்து வந்தது. இருப்பினும் எப்போது வேண்டுமானா லும் மாவட்ட பிரிவினையை கட்சிக்குள் கொண்டு வருவார் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ஆனால், கடந்த 6 மாதங்களாக மா.செ.க்கள் நியமனம் ரிலீஸ் ஆகவில்லை.
இந்த நிலையில்தான், சட்டமன்றத் தேர்தலை மையப்படுத்தி கடந்த வாரம் புதிய மா.செ.க்களை நியமித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அதன் படி, இரண்டு மாவட்டங்களாக இருந்த விழுப்புரத்தை மூன்று மாவட்டங்களாகப் பிரித்திருக்கிறார். இதில், அமைச்சர் பொன்முடியின் மகன் கௌதம சிகாமணி வசமிருந்த விழுப்புரம், வானூர் ஆகிய 2 தொகுதிகளை எடுத்து விழுப்புரம் மத்திய மாவட்டம் உருவாக்கப் பட்டுள்ளது. இதன் மா.செ.வாக விழுப்புரம் எம்.எல்.ஏ. டாக்டர் லட்சுமணன் நியமிக்கப் பட்டுள்ளார். மேலும், விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த டாக்டர் சேகரை நீக்கி விட்டு செஞ்சி மஸ்தானுக்கு மீண்டும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
அதேபோல, இரண்டு மாவட்டங்களாக இருந்த திருப்பூர் மாவட்டத்தை 4 மாவட்டங் களாகப் பிரித்து, திருப்பூர் மேற்கு மாவட்டத் துக்கு அமைச்சர் சாமிநாதனையும், திருப்பூர் வடக்கிற்கு மேயர் தினேஷையும் புதிய மா.செ.க்களாக நியமித்திருக்கிறார் ஸ்டாலின். அதேபோல, ஈரோட்டை பிரித்து புதிய மாவட்டத்துக்கு அ.தி.மு.க.விலிருந்து தி.மு.க. வுக்கு வந்து நீண்ட மாதங்களாக காத்திருந்த தோப்பு வெங்கடாச்சலத்தை மா.செ.வாக்கி யிருக்கிறார்கள். நீலகிரி மா.செ.வாக இருந்த முபாரக் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக ராஜுவும், நெல்லையில் மைதீன்கானை நீக்கிவிட்டு மீண்டும் அப்துல் வஹாப்பிற்கும், திருவள்ளூர் வடக்கு மா.செ.வாக இருந்த கோவிந்தராஜுக்கு பதிலாக ரமேஷ் ராஜும், தஞ்சை தெற்கு மா.செ. அண்ணாதுரை நீக்கப்பட்டு பழனிவேலும் புதிய மா.செ.க்களாக நியமிக்கப் பட்டுள்ளனர். இந்த புதிய நியமனங்கள் தி.மு.க.வில் பேசுபொருளாகி வருகிறது.
இது குறித்து விசாரித்தபோது, "மேற்கு மாவட்டங்களில் உள்ள அ.தி.மு.க. ஆதரவு கொங்கு வேளாளர் சமூகத்தை குறிவைத்து தோப்பு வெங்கடாசலத்துக்கும், விழுப்புரம் மாவட்டத்தில் பெரும்பான்மையினராக இருக்கும் வன்னியர் சமூகத்தை ஈர்க்க டாக்டர் லட்சுமணனுக்கும் மா.செ. வாய்ப்புகள் தரப்பட்டிருப்பது தி.மு.க.வில் முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது. மேலும், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணியின் வன்னியர் விரோதப் போக்கிற்கு செக் வைக்கவும் லட்சுமணனை மா.செ.வாக்கியிருக்கிறார் முதல்வர்.
இன்னும் சொல்லப்போனால், வன்னியரான அமைச்சர் சிவசங்கரின் தந்தை மறைந்த சிவசுப்பிரமணி யன், ஒருங்கிணைந்த பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து சமூக மக்களின் ஆதரவை எப்படி பெற்றிருந்தாரோ, அதேபோல விழுப்புரம் மாவட்டத் தில் அனைத்து சமூகத்தினரின் நன்மதிப்பையும் பெற்றவர் டாக்டர் லட்சுமணனின் தந்தை. அதனால்தான், விழுப்புரம் மாவட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய அ.தி.மு.க.வின் சீனியரான சி.வி.சண்முகத்தை டாக்டர் லட்சுமணனால் கடந்த தேர்தலில் தோற்கடிக்க முடிந்தது. இதையெல்லாம் கணக்கில் கொண்டுதான் லட்சுமணனை மா.செ.வாக்கியிருக்கிறார் ஸ்டாலின்.
அதேபோல, சிறுபான்மை சமூகமான இஸ்லா மியர்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் தருவதற்காகவே நெல்லையில் வஹாப்பையும், விழுப்புரத்தில் செஞ்சி மஸ்தானையும் மாவட்ட பொறுப்புக்கு மீண்டும் கொண்டுவந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் படுகர் இனத்துக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை என்கிற குறையைத் தீர்க்க அச்சமூகத்தைச் சேர்ந்த கே.எம். ராஜுவுக்கும், பட்டியிலினத்தவருக்கு முக்கியத்துவம் தரும் வகையில் திருவள்ளூர் மாவட்ட ஒன்றிய செயலாளரான ரமேஷ்ராஜுவுக்கும், இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் திருப்பூரில் தினேஷுக்கும் மா.செ. பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இப்படி மாற்றுக் கட்சியிலிருந்து தி.மு.க.விற்கு வந்தவர்கள், இளைஞர்கள், பட்டியலினத்தவர், சிறுபான்மையினர் என பல்வேறு தரப்பினருக்கும் முக்கியத்துவம் தரும் வகையில் பார்த்துப் பார்த்து பதவிகள் தரப்பட்டுள்ளது. இந்த நியமனத்தின் பின்னணியில் உதயநிதி, சபரீசன் ஆகியோரின் ஆலோசனைகளும் இருந்துள்ளன. இன்னும் மாற்றங்கள் வரவிருக்கிறது. அதில் எதிர்பாராத மாற்றங்கள் இருப்பதால் அது குறித்த நீண்ட விவாதத்திலிருக்கிறார். குறிப்பாக, சென்னையில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் வசமிருக்கும் மாவட்ட எல்லைகளை உடைத்து புதிய மா.செ.க்களை நியமிக்க திட்டமிட்டுள்ளார். அதேசமயம், அமைச்சர்களின் விருப்பத்தையறிந்து சென்னையில் மாறுதல் இருக்கவேண்டும் என்பதால் ஸ்டாலினின் ஆலோசனை ரகசியமாகவே இருக்கிறது. மேலும் சென்னையில் இளைஞரணியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களுக்கு மா.செ. பதவி உறுதி ''’என்று சுட்டிக்காட்டுகிறார்கள் தி.மு.க.வின் மேலிட தொடர்பாளர்கள்.
மா.செ.க்கள் நியமனங்களில் உளவுத்துறையின் கைங்கரியமும் இருப்பதால், உளவுத்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, ‘’"வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பவர்கள், சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளில் சிக்கியிருப்பவர்கள், பொதுப் பிரச்சினைகளில் மக்களின் அதிருப்தியை சம்பாதித்திருப்பவர்கள் ஆகிய 3 அளவுகோலில் மா.செ.க்கள் மாற்றம், நியமனங்கள் ஆகியவற்றை செய்துவருகிறார் முதல்வர். முதல் பட்டியல் மட்டும்தான் வந்திருக்கிறது. மாற்றல் பட்டியல் இன்னும் வரவிருக்கிறது. மாற்றப்பட்ட மா.செ.க்களில் பலர் மீது ஏகப்பட்ட புகார்கள் அறிவா லயத்துக்கு வந்தன. அதனை பலமுறை செக்பண்ணிய பிறகே இந்த மாறுதல்கள் நடந்துள்ளன''’ என்கின்றனர்.
இந்த நிலையில், விழுப் புரத்தைப் பிரித்து லட்சுமணனை நியமித்ததில் அமைச்சர் பொன் முடிக்கு ஏக அதிருப்தி. அதனை ஸ்டாலினை சந்தித்து விவரித் திருக்கிறார். விழுப்புரத்தில் கலைஞர் அறிவாலயம் கட்டியது நான். அந்த அறிவாலயம் இருக்கும் விழுப் புரத்தை எங்களிடமிருந்து எடுத்து வேறு நபருக்கு கொடுப்பதில் எனக்கு வருத்தம் தளபதி என ஆதங்கப்பட்டிருக்கிறார் பொன்முடி. அதற்கு, விழுப்புரத் தின் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் லட்சுமணன். அவரை வேறு தொகுதிகளுக்கு மா.செ.வாக நியமிக்க முடியாதில்லையா? என கேள்வி எழுப்பியிருக்கிறார் ஸ்டாலின். அதன்பிறகு எந்த கேள்வியும் கேட்காமல் கிளம்பி விட்டார் பொன்முடி. ஆனால் அவரது ஆதங்கம் குறையவில்லை.
முதல் பட்டியலிலேயே சர்ச்சைகள் வெடித்து சமாதானமான சூழலில், சென்னை, காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் அடங்கிய இரண்டாவது பட்டியலும் விரைவில் வரவிருக்கிறது. இதனை ஆர்வமாக எதிர்பார்த்துக் காத்திருக்கும் தி.மு.க. இளைஞரணி உடன்பிறப்புகள், "அமைச்சர் களாக இருந்தாலும் மூத்த நிர்வாகிகளாக இருந்தாலும் 2 தொகுதிகளுக்கு அதிகமாக வைத்திருக்கும் மாவட்ட எல்லைகளை தயவுதாட்சண்யமின்றி பிரித்து புதிய மா.செ.க்களை நியமிக்க வேண்டும். நிர்வாக வசதிக்காக புதிய மாவட்டங்கள் பிரிக்கப்படுவதுதான் தேர்தல் களத்தில் தொய்வின்றியும் இலகுவாகவும் தேர்தல் பணிகளை முன்னெடுக்க உதவும்.
புதிய மா.செ.க்கள் நியமிப்பது, மா.செ.க்களை மாற்றுவது என அதிரடியாக கட்சி சீரமைக்கப்படும் இந்த சூழலில், அரசு வருவாய் மாவட்டமாக செங்கல்பட்டு மாவட்டம் உருவாகி 4 ஆண்டுகளாகியும் செங்கல்பட்டு மாவட்ட தி.மு.க. இன்னும் உருவாக்கப்படாமல் இருப்பதை கவனித்து, புதிதாக செங்கல்பட்டு மாவட்ட தி.மு.க.வை உருவாக்கி புதிய மா.செ.வை நியமிக்க தலைவர் ஸ்டாலின் ஆக்ஷன் எடுக்க வேண்டும்'’என்கிற கோரிக்கையையும் எழுப்புகின்றனர் இளைஞரணியினர்.
தேர்தல் நெருங்க, நெருங்க தி.மு.க.வில் மட்டுமல்ல மற்ற பிரதான கட்சிகளிலும் பல அதிரடி மாற்றங்கள் நடக்கவிருக்கிறது.
_______________
அதிருப்தியில் அமைச்சர் தரப்பு!
மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்தும், அமைச்சர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்ட செஞ்சி மஸ்தான், வடக்கு மாவட்ட அமைப்பாளராக மீண்டும் பதவியைப் பிடித்துள்ளார். அவரது பதவியை பறித்தபோது, திண்டிவனத்தை சேர்ந்த டாக்டர் சேகர், மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டிருந் தார். தற்போது, செஞ்சி மஸ்தா னுக்கு திண்டிவனம், மயிலம், செஞ்சி ஆகிய மூன்று தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளது. மத்திய மாவட்டத்திற்கு விழுப்புரம் எம்.எல்.ஏ. லட்சுமணன் மாவட்ட அமைப்பாள ராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவருக்கு விழுப்புரம், வானூர் ஆகிய இரண்டு தொகுதிகள் வழங் கப்பட்டுள்ளன. அமைச்சர் பொன்முடி மகன் கௌதம சிகாமணிக்கு விக்கிரவாண்டி, திருக்கோவிலூர் தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் அமைச்சர் பொன்முடி தரப்போ, "விழுப்புரம் தொகுதியை கௌதம சிகாமணிக்கு வழங்க வேண்டும், வானூர், விக்கிர வாண்டியை லட்சுமணனிடம் வழங்குங் கள்' என்று கட்சித் தலைமையிடம் வலியுறுத்தி வருகிறதாம். ஆனால் தலைமை கைவிரித்துவிட்டதாகக் கூறுகிறார்கள். இதையடுத்து, லட்சுமணனைப் பார்த்த பொன்முடி தரப்பினர், தனக்கு விழுப்புரம் வேண்டாம், விக்கிரவாண்டியை கொடுங்களென்று தலைமையிடம் கேளுங்களென நிர்பந்திக்க, அவரோ, "கட்சித் தலைமை சொல்வதை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை' என மறுத்துள்ளார்.
2011 தேர்தலில் விழுப்புரத்தில் அ.தி.மு.க.வின் சி.வி.சண்முகத்திடம் தோல்வியடைந்த பொன்முடி, 2016 மற்றும் 2021 தேர்தல்களில் திருக்கோவிலூர் தொகுதியில் வென்றார். அ.தி.மு.க.வில் மாவட்ட செயலாளராக இருந்த லட்சுமணன், தி.மு.க.விற்கு மாறி 2021ல் விழுப்புரத்தில் போட்டியிட்டு, அ.தி.மு.க. சி.வி.சண்முகத்தை தோற்கடித்து வெற்றிபெற்றார். தோல்வி காரணமாக விழுப்புரத்தை விட்டுவிட்டு தொகுதி மாறிய பொன்முடி, தற்போது லட்சுமணன் அத்தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கும்நிலையில், தன் மகனுக்காக விழுப்புரம் தொகுதியைக் கேட்பதில் எந்த நியாயமும் இல்லையென் கிறார்கள் கட்சியினர்.
-எஸ்.பி.எஸ்.
____________
ஈரோடு உ.பி.க்கள் புலம்பல்!
ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி உள்ளிட்ட ஈரோடு தெற்கு மாவட்டத்துக்கு அமைச்சர் சு.முத்துச்சாமி பொறுப் பாளராகவும், கோபிசெட்டிபாளையம், பவானிசாகர், அந்தியூர் ஆகிய தொகுதிகளுக்கு மீண்டும் என்.நல்ல சிவமே மாவட்ட பொறுப்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்கள். இந்த அறிவிப்பு, ஈரோடு தி.மு.க.வில் பலத்த விவாதங்களைக் கிளப்பி யுள்ளது.
மாவட்டத்தில் உள்ள எட்டு தொகுதிகளை இரண்டிரண் டாகப் பிரித்து நான்கு மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்படுவார் கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. குறிப்பாக அமைச்சர் முத்துசாமியிடம் இருந்த 4 தொகுதிகளில், ஈரோடு கிழக்கு, மொடக்குறிச்சி தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டு, ஈரோடு எம்.பியும் தி.மு.க. இளைஞரணி மாநில துணை செயலாளருமான பிரகாஷ் மாவட்ட செயலாளராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்த் திருந்தார். அதேபோல் மேற்கு மண்டலத்தில் பரவலாக உள்ள செங்குந்த முதலியார் சமூகத்திலிருந் தும் ஒரு மா.செ. அறிவிக்கப் படலாமென எதிர்பார்த்தனர். பெருந்துறை ஜெயக்குமார் மற்றும் பவானி கே.சி.கருப்பண்ணன் ஆகிய அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களைக் கொண்டுள்ள ஈரோடு மத்திய மாவட்டத்திற்கு அ.தி.மு.க.விலிருந்து வந்த தோப்பு வெங்கடாஜலத்தை மாவட்ட பொறுப்பாளராக அறிவித்ததே இவ்விரு தொகுதிக ளிலும் தி.மு.க.வை வெற்றிபெறச் செய்வதற்காகத்தான் என்றும், அமைச்சர் முத்துசாமி, அமைச்சர் செந்தில் பாலாஜி பரிந்துரைப்படியே இப்பதவி வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கட்சிப் பணியில் வேக மெடுக்க புதிய மா.செ.க்கள் அறிவிப்பு இருந்தாலும், தி.மு.க. உள்ளூர் நிர்வாகிகளிடம் "அ.தி. மு.க. உட்பட மாற்றுக் கட்சியி லிருந்து வந்தவர்களுக்கு தான் நம்ம கட்சியில் பதவிகள் கிடைக்கிறது. காலங்காலமாகவே தி.மு.க.விலேயே இருந்து கொடி பிடித்து, கோஷம் போட்டு கட்சியை வளர்த்த நமக்கெல்லாம் பதவி கிடைக்கவில்லையே!'' என்ற புலம்பலும் இருக்கத்தான் செய்கிறது!
-ஜீவா தங்கவேல்