மிழக உள்ளாட்சி தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பண விளையாட்டு உச்சகட்டத்தை அடைந்திருக்கிறது என்கிறார்கள் அ.தி.மு.க. /தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளைச் சேர்ந்தவர்கள். தனித்து களம் காணும் பா.ஜ.க.வில் உள்ள இந்து மத பக்தர்கள் பலர் ஆர்.எஸ்.எஸ். மூலம் தங்கள் தொகுதிகளில் அவர்கள் இந்து மதத்திற்கு செய்த சேவையின் அடிப்படையில் சீட் கிடைக்கும் என விண்ணப்பித்திருந்தார்கள். இது தவிர, உண்மையான பா.ஜ.க. தொண்டர்கள் அரசியல்ரீதியாக பா.ஜ.க.வையும், தங்களையும் வளர்த்துக்கொள்ள உள்ளாட்சிமன்றத் தேர்தலில் சீட் கேட்டு விண்ணப்பித்திருந்தார்கள்.

sekarbabu

இப்படி ஒருபக்கம் உண்மையான பா.ஜ.க.வினர் சீட் கேட்க, அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தால் அ.தி.மு.க. தயவில் நாம் வெற்றிபெறலாம் என இன்னொரு பக்கம் சிலர் விண்ணப்பித்திருந்தார்கள். இதுதவிர, சென்னை மாநகரை ஒருகாலத்தில் கலக்கு கலக்கென கலக்கிக் கொண்டிருந்த கராத்தே தியாகராஜன் போன்ற மாற்றுக் கட்சியிலிருந்து வந்தவர்கள், ஒரு கடுமையான போட்டியை அ.தி.மு.க.வுக்கும் தி.மு.க.விற்கும் ஏற்படுத்தக்கூடிய தனிநபர்களை வேட்பாளர்களாகத் தலைமைக்கு பரிந்துரைத்திருந்தார்கள். இந்த மூவருக்கும் இந்த முறை சீட் இல்லை என பா.ஜ.க.வினர் அங்கலாய்த்தனர். வியாபார நோக்கத்திற்காக பா.ஜ.க.வில் சேர்ந்தவர்களை கரு.நாகராஜன், வினோஜ் பி.செல்வம் ஆகிய இருவரும் அணுகுகிறார்கள். நீங்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வேண்டும். அதற்கான விலை என லட்சங்களில் பேரம் பேசப்படுகிறது என்று குற்றம் சாட்டுகிறார்கள் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள்.

அதற்கு ஆதாரமாக ஒரு சம்பவத்தை சுட்டிக் காட்டுகிறார்கள். தமிழிசை தலைவராக இருந்த காலத்தில் மைலாப்பூரைச் சேர்ந்த பெண்கள் விஷயத்தில் தவறாக நடந்து கொண்டார் என மண்டல் தலைவராக இருந்த ஒருவர் மீது நடவடிக்கை எடுத்தார்கள். அவரது மகனிடம் பல லட்ச ரூபாய் விலை பேசி பா.ஜ.க.வின் செல்வாக்குமிக்க மயிலாப்பூரில் போட்டியிட வைத்துள்ளார்கள் என்கிறார்கள் பா.ஜ.க.வினர்.

Advertisment

seatsharing

பா.ஜ.க.வினர் இவ்வாறு செய்கிறார்கள் என அமித்ஷா வுக்கு மிகவும் நெருக்கமான சங்கீதா ஓட்டல் குழுமத்தைச் சார்ந்த முரளி என்பவரும், ஸ்ரீராம் குழுமத்தைச் சார்ந்த முரளி என்பவரும் அமித்ஷா விடம் புகார் கொடுத்திருக் கிறார்கள். பா.ஜ.க.வில் இந்த நிலை என்றால் அ.தி.மு.க.வில் பணத்துக்காக சீட்டை விற்பது உச்சகட்டத்தை அடைந்துள்ளது. அ.தி.மு.க.வில் முன்னாள் மந்திரிகள் அனைவரும் இந்த நகராட்சித் தேர்தலுக்கு நாங்கள் பைசா செலவழிக்கமாட்டோம் எனத் திட்டமிட்டபடி அறிவித்திருக்கிறார்கள்.

தி.மு.க. அரசின் லஞ்ச ஒழிப்புத்துறையின் கண்காணிப்பில் இருக்கக்கூடிய அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்கள், ஆர்வக்கோளாறில் ஏதா வது செய்து அங்கு அ.தி.மு.க. வென்று விட்டால் அது தங்கள் மீதான தி.மு.க.வின் தாக்குதலை அதிகப்படுத்தும் என்கிற பயம் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்களுக்கு இருக்கிறது.

அதனால், அ.தி.மு.க.வில் செலவு செய்வதற்கு யாரும் தயாராக இல்லை. ஆக, உள்ளாட்சித் தேர்தல் சீட் ஒட்டுமொத்தமாக விற்கப்படுகிறது. அதை வாங்குபவர் யார் என்றால் தி.மு.க.வைச் சேர்ந்த மா.செ.க்கள்தான் அ.தி.மு.க.வில் போட்டி யிடுபவர்களை ஒட்டுமொத்தமாக வாங்குகிறார்கள்.

Advertisment

masu

இதில், ஒரு வினோதமான விஷயம் தமிழ் நாடு முழுவதும் நடந்திருக்கிறது. அ.தி.மு.க.வின் மா.செ.க்கள் அத்தனைபேரும் ஒன்றுகூடி எடப்பாடி பழனிச்சாமியையும், ஓ.பன்னீர்செல்வத் தையும் மிரட்டுகிறார்கள். நாங்கள் சொல்பவர் களுக்கு சீட் கொடுத்தால்தான் அ.தி.மு.க. வெற்றி பெறும், இல்லையேல் அ.தி.மு.க. தோற்றுவிடும். நீங்கள் எம்.எல்.ஏ. தேர்தலில் ஒரு தொகுதிக்கு 15 கோடியிலிருந்து 20 கோடி வரை செலவு செய்தீர்கள். ரிசல்ட் என்னவாயிற்று? அந்த பணத் தை நாங்கள் அமுக்கிக் கொண் டோம். உங்களால் என்ன செய்ய முடிந்தது? எனவே உள்ளாட்சித் தேர்தலில் நாங்கள் சொல்பவர் களுக்கே சீட் கொடுங்கள் என அனைவரும் ஒன்றுசேர்ந்து அ.தி.மு.க. தலைமைக்கு பிரஷர் கொடுக்க... அ.தி. மு.க. தலைமை அதற்கு அடிபணிந்துவிட்டது. அதற்கு உதாரணமாக, ஒரு சம்பவத்தை சொல்கிறார் கள். சென்னை சைதாப் பேட்டையைச் சேர்ந்தவர் கடும்பாடி. சைதை துரை சாமியின் பினாமியான கடும்பாடிக்கு கவுன்சிலர் சீட் பெற்றுத் தரவேண்டுமென சைதை துரைசாமி பெருமுயற்சி எடுத்தார். கடும்பாடிக்காக ஓ.பி.எஸ், இ.பி.எஸ். இருவரும் பேசினார்கள். ஆனால் மா.செ., அவரை விட அதிகமான தொகைக்கு சீட் கேட்ட ஒருவருக்கு சீட்டை கொடுத்திருக்கிறார்.

ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இருவராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. சென்னை நகரில் ஒவ்வொரு கவுன்சிலர் சீட்டும் 15 லட்சம் முதல் 25 லட்சம் வரை போகிறது. இவ்வளவு காசு கொடுத்து கவுன்சிலர் சீட் வாங்கும் இவர்களை மா.செ.க்கள் மொத்தமாக தி.மு.க.விடம் விற்று விடுகிறார்கள். அ.தி.மு.க. மா.செ.க்களான ராஜேஷ், பாலகங்கா, வெங்கடேஷ் பாபு, சத்யா, விருகை ரவி ஆகிய ஐவரும் ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரில் மாநகராட்சி அதிகாரியாக இருக்கும் செந்தில் நாதன் என்பவரது வீட்டில் சென்னை நகர அமைச் சர் சேகர்பாபு, மா.சுப்பிரமணியம் இருவரையும் சந்தித்துப் பேசி, "ஒட்டுமொத்தமாக அ.தி.மு.க. வேட்பாளர்கள் செயல்படமாட்டார்கள். தி.மு.க. வின் வெற்றி உறுதி'' என ஒட்டுமொத்த அ.தி. மு.க.வையும் தி.மு.க.வுக்கு விற்றுவிட்டார்கள். அதற்கு பிரதிபலனாக பல கோடி ரூபாய் கைமாறியிருக்கிறது என புகார் தெரிவிக்கிறார்கள் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள். தி.மு.க. தரப்பு வலிமையாக மறுக் கிறது. அ.தி.மு.க.வுடன் மறைமுக மாக பேரம் பேச வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என தி.மு.க. தரப்பு தெளிவாகத் தெரிவிக்கிறது.

மொத்தத்தில் பணம், பணம், பணம் என்கிற குரல்தான் நகர்ப்பற உள்ளாட்சித் தேர்தலில் தமிழகமெங்கும் ஒலிக்கிறது.