முதல்வர் குடும்பமேயானாலும் ஒற்றை சீட்டுக்கு அலைந்தே ஆகவேண்டும் என்ற பெருமைக்குரியது. கே.கே.நகர் பத்மசேஷாத்திரி பள்ளி. நாடக உலகில் ஜெயலலிதா உள்பட பலரையும் வளர்த்த ஒய்.ஜி.பி. குடும்பத்தினரின் பள்ளி. இதன் ஆசிரியர்களில் ஒருவர், ராஜ கோபாலன். கடந்த ஐந்து வருடங்களாக காமவெறி நாயாக செயல்பட்ட ராஜ கோபாலனை பத்மசேஷாத்திரி பள்ளி மாணவிகள் அடையாளம் காட்ட, போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்.

சென்னை கே.கே.நகர் அழகிரி சாலையில் பத்ம சேஷாத்திரி பாலபவன் பள்ளி இயங்கி வருகின்றது. இந்த பள்ளியில் கடந்த இருபது வருடங்களாக ராஜகோபாலன் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். மேல்நிலை மாணவர்களுக்கு வணிகவியல் ஆசிரியராக இருக்கும் இவர், தன்னை ரோமியோ போல மனதில் நினைத்துக்கொண்டு, கடந்த சில வருடங்களாகவே மாணவிகளைத் தவறான கண் ணோட்டத்தில் தொடுவது, ஆபாசமான அர்த்தங் களில் பேசுவது என்று லீலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

pssb

கடந்த வருடம் முதல் கொரோனா தொற்று காரணமாக அரசு உத்தரவின்படி பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் ஆன்லைன் வகுப்புகள் நடத் தப்பட்டு வருகிறது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஆசிரியரான ராஜகோபாலன் பிளஸ் ஒன், பிளஸ் டூ மாணவிகளிடம் தன் வலையை விரித்து வந்துள்ளார். செக்ஸ் ஜோக் அனுப்பு வது, ஆபாச வீடியோ லிங்க் அனுப்பு வது, படத்துக்கு போலாமா எனக் கேட்டு தொல்லை கொடுப்பது, மாணவிகளை மிரட்டி நிர்வாண படம் எடுப்பது, பாத்ரூமில் குளித்து விட்டு அப்படியே இடுப்பில் துண்டை மட்டும் கட்டிக் கொண்டு அரை நிர்வாணமாக பாடம் நடத்துவது என்று இருந்து வந்துள்ளார். பெற்றோரி டம் எப்படிச் சொல்வது, புகார் தந்தால் மதிப்பெண் குறைத்துவிடுவாரோ எனத் தயங்கி மாணவிகளும் செய்வதறியாமல் இருந்து வந்துள்ளனர்.

Advertisment

2016-ஆம் ஆண்டே இவர் மீது பாலியல் அத்துமீறல் புகார் கொடுத்தும் பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. வெறு மனே பெற்றோர் முன் ஆசிரியரை அழைத்து எச்சரிக்கை மட்டும் விடுத்து அனுப்பியிருக்கிறார்கள். இதனால் மற்ற மாணவிகளுக்கு இவர்மேல் புகார் கொடுக்க தயக்கம் இருந்து வந்திருக்கிறது. இந்நிலையில்தான் ராஜகோபாலனின் டார்ச்சர் தாங்காமல் தற்போது பயிலும் மாணவிகள், பத்ம சேஷாத்திரி பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவியரில் ஒருவரான கிரிபாலியுடன் பேசியுள்ளனர். பிரபல பெண் மாடல் அழகியான கிரிபாலி, இதுகுறித்து தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டது பெரிய அளவில் கவனத்தை ஈர்த்தது.

விஷயம் தீயாகப் பரவத் தொடங்கிய நிலையில், எம்.பி.க்கள் கனிமொழி, தயாநிதிமாறன், தமிழச்சி தங்க பாண்டியன் போன்றோர் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் நிஷாங்கை டேக் செய்து, சமூக வலைத்தளங்களில் ராஜ கோபாலனின் லீலைகளையும், வீடியோக்களையும், ஆபாச மெசேஜ்களையும் ஸ்க்ரீன்ஷாட் எடுத்து அடுத்தகட்டத் துக்கு எடுத்துச் சென்றனர்.

இணைய அளவில் இவ்விவகாரம் குறித்து கொந்தளிப்பு ஏற்பட்ட நிலையிலும், சென்னை காவல்துறை இது குறித்து விசாரிக்கச் சென்றபோது பள்ளிநிர்வாகம் சரியான ஒத்துழைப்பு தரவில்லை. இவ்விஷயம் முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்கு வந்த நிலையில், உடனடியாக விசாரணை நடத்த உத்தரவிட்டார். பின்னர் பெண்கள் மற்றும் குழந்தை களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு எஸ்.பி. ஜெயலட்சுமி, மாணவிகளின் பதிவுகளை வைத்து விசாரணை நடத்தினார். விஷயம் கைமீறிய நிலையில் ஆசிரியர் ராஜகோபாலை சஸ்பெண்ட் செய்திருக்கிறது. பள்ளி முதல்வர் கீதா கோவிந்தராஜன் மற்றும் தாளாளர் ஷீலா ராஜேந்திர னிடம் காவல்துறை விசாரணையை நடத்திமுடித்துள்ளது.

Advertisment

pssb

முதல்கட்ட விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்காதது குறித்து பள்ளிக் கல்வித்துறை சார்பில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. தேசிய குழந்தைகள் ஆணையமும் இந்த விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவி ஒருவர் அளித்த புகாரின் பெயரில் அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட் டுள்ளது. அதன் பெயரில் நங்கநல்லூர், இந்து காலனி 7- வது தெருவில் வசிக்கும் கோவிந்த வரதாச் சாரி ராஜகோபாலன் கைது செய்யப்பட் டார். ராஜகோபால னிடமிருந்து போலீ ஸார் கைப்பற்றிய லேப்டாப், செல் போனில் நிறைய படங்கள், வீடியோக்கள் டெலிட் செய்யப்பட் டிருந்ததால் சைபர் க்ரைம் போலீஸார் உதவியுடன் அழிக்கப் பட்ட டேட்டாக்கள் ரிக்கவரி செய்யப்பட்டது.

விசாரணையில் ராஜகோபால் தான் செய்த தவறுகளை ஒப்புக்கொண்டதுடன், மேலும் மூன்று ஆசிரியர்களுக்கும் தொடர்புள்ளதாகவும், விசாரணையில் தெரிவித்துள்ளார். ராஜகோபாலன் மீது முப்பதுக்கும் மேற்பட்ட மாணவிகள் புகார் தெரிவித்துள்ளதால், போக்சோ சட்டம் பாய்ந்ததுடன் ஐந்துநாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.

ராஜகோபாலன் விவகாரத்தில் சர்ச்சைக்கு ஆளாகியுள்ள பத்மசேஷாத்திரி பள்ளி, இதற்குமுன்பும் சர்ச்சைக்கு ஆளாகியுள்ளது. 2012-ல் ஜெயலலிதா ஆட்சியின் போது பத்மசேஷாத்திரி பள்ளி நீச்சல்குளத்தில் நான்காம் வகுப்பு மாணவன் ரஞ்சன் நீச்சல்குளத்தில் மூழ்கி இறந்தான்.

pssb

இந்த விவகாரத்தில் மாணவன் உடல்நிலை மோசமாக இருப்பதாகக் கூறி பெற்றோரை அழைத்த நிர்வாகம், பின் அவன் எந்த மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டிருக்கிறான் என்பதைத் தெரிவிக்காமல் மருத்துவமனை மருத்துவமனையாக பெற்றோரை அலைக்கழித்தது. இதுகுறித்து காவல்நிலையத்தில் வழக்கு பதியக்கூட விடாமல், அன்றைக்கு ஆட்சியி லிருந்தவர்களின் அறிமுகம் பள்ளி நிர்வாகத்துக்கு உதவியது.

இந்நிலையில் இக்குழுமத்தின் குடும்பத்தை சேர்ந்தவரும் பா.ஜ.க. பிரமுகருமான மதுவந்தி, “"தனிநபர் செய்த தவறுக்காக ஒட்டு மொத்த நிர்வாகத்தையும் குற்றம்சாட்டு வதா?'… என மிரட்டல் தொனியில் வீடியோ பதி விட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

pssb

இதில் பாதிக்கப்பட்ட மாணவிகளின் குடும்பங்களை,…குறிப்பாக பிராமண குடும்பத்தை சேர்ந்த பெற்றோரிடம் சாதிய அடிப்படையில் சமாதானம் பேசி புகாரை வாபஸ் வாங்க முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில், முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனை வைத்து சமாளிக்கலாம் என நினைக்க, அவர் இந்த ஆட்சியில் எனக்கு அதிகாரம் இல்லை என ஒதுங்கியுள்ளார். ரஜினி கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டபோதும் அவர் நீதியின் பக்கம் நின்றிருக்கிறார்.

காமவெறி நாய்க்கு வக்காலத்து வாங்கி, தன் பள்ளியின் தரத்தைக் காட்டியிருக்கிறது பத்மசேஷாத்திரி நிர்வாகம்.

_______________________

பதறிய ஒய்.ஜி.மகேந்திரா, விலகிய கிரிஜா, ரஜினிகாந்த்

தங்கள் பள்ளிக்கு இப்படியொரு சிக்கல் வந்துசேருமென்று கனவிலும் நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்கள் ஒய்.ஜி.எம். குடும்பத்தினர். செய்தி வெளி யானவுடன் தனிப்பட்ட முறையில் செய்தியை விசாரித்த நடிகர் ஒய்.ஜி.மகேந்திரா, இது ஒரு நீண்ட நாள் சிக்கலென்றும், ஒருசில ஆசிரியர்கள் தாங்கள் குறிவைக்கும் மாணவிகளுக்கு வசதிபடைத்த மாணவர் களை லவ் லெட்டர் கொடுக்க வைத்து, ஸ்பெ ஷல் கிளாஸ் என்று விடுமுறை நாட்களில் பள்ளிக்கு வரவைத்து, அவர்கள் அசந்தர்ப்ப மாக இருக்கும் நேரத்தில் படம்பிடித்து மிரட்டி தங்கள் பாலியல் தேவைகளை தணித்துக்கொண்டதையும், அப்படியான சில படங்களையும் வீடியோக்களையும் தங்களுக்குள் பகிர்ந்துகொண்டதையும் உறுதி செய்து கொண்ட பின்னரே, தனக்கும் பள்ளிக்கும் எந்த நேரடித் தொடர்பும் இல்லையென்ற அறிவிப்பை வெளியிட் டார். குடும்ப பாகப் பிரிவினையில் பள்ளி யின் உரிமம் முழுவதும் தன் தம்பிக்கு போய்விட்டாலும் தான், அதில் ஒரு ட்ரஸ்டியாக மட்டுமே தொடர் வதாக ஒப்புக்கொண்டார். இது அரசியல் பழிவாங்கல் என்று மகள் மதுவந்தி சொன்னதும் அவரிடம் சீறிய மகேந்திரா, அது உண்மை யல்ல என்றும், புகார் களை தானே விசாரித்து விட்ட பின் தன்னிடம் பொய் சொல்வதில் அர்த்தமில்லை என்றும் அவர் வாயை அடைத்திருக்கிறார்.

தனக்கென இருந்த சர்வ கட்சித் தொடர்பை மகளுடைய நேரடி பா.ஜ.க. சார்பு நடவடிக்கைகள் கெடுத்து விட்டதையும் சொல்லிப் புலம்பியிருக்கிறார். நேரடியாக தான் தலையிடாமல் யார் மூலம் பேசலாம் என்று தவித்தவருக்கு முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நினைவு வந்திருக்கிறது. இரவோடு இரவாக அவரைத் தொடர்பு கொண்டபோது, தனக்கும் புதிய அரசுக்கும் தொடர்பே இல்லையென் றும் தன்னால் ஆகப்போவது ஏதுமில்லை என்றும் கைவிரித்திருக் கிறார் கிரிஜா. இருக்கவே இருக் கிறார் ரஜினி என்று அவரை அழைத் ததற்கு, இப்போது தான் நிம்மதியாக இருப்பதாகவும், இனி எதற்காகவும் யாருக்காகவும் எந்த அரசியல் கட்சித் தலைவரையும் தொடர்புகொள்ளும் மனநிலையில் இல்லையென்றும், குறிப் பாக ஆட்சியமைத்து ஒரு மாதம்கூட ஆகாத நிலையில் மு.க.ஸ்டாலினுடன் பேசுவது முறையாக இருக்காது என்றும் தெரிவித்திருக்கிறார். இதன்பின்னரே தன்னைத் தற்காத்துக் கொள்ளும்

பொருட்டு, பள்ளியின் நிர்வாகத் தலைமை யிலிருப்பவர்களுக்கு, சம்மந்தப் பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை தன்னு டைய கோரிக்கை யாக்கி நள்ளிரவில் இ-மெயில் அனுப்பியிருக்கிறார் ஒய்.ஜி.மகேந்திரன்.

-கீரன்