மனிதர்களின் மானம் காக்கும் நெசவுத்தொழில் தொடர்ந்து நசிந்துகொண்டே போகிறது... மத்திய அரசின் புதிய ஜவுளிக் கொள்கையின் காரணமாக நூல் விலை ஏற்றம், ஆன்லைன் வர்த்தகம், கார்ப்பரேட் கம்பெனி களுக்கு வரிச்சலுகை என ஒவ்வொன்றும் அப்பாவி விசைத்தறித் தொழிலாளர்களை நசுக்கி வருகிறது. இந்த நெருக்கடியிலிருந்து விசைத்தறியாளர்களைக் காக்க வேண்டும் என்ற குரல் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு விசைத்தறி யாளர்கள் சங்கக் கூட்டமைப்பின் ஒருங் கிணைப்பாளர் கந்தவேல், "ஈரோடு மாவட்டத்தில் பல்லாயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்குகின்றன. கொங்கு மண்டலத்தில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி மற்றும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தானியங்கித் தறிகளில் ரயான் துணி ஒரு நாளைக்கு ஒரு கோடி மீட்டருக்கு மேல் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த ஆறு மாதங்களாக இலவச வேட்டி சேலை உற்பத்தி காரணமாக ரயான் துணி உற்பத்தி குறைந்திருந்தது.
ரயான்

ரயான் துணியைப் பொறுத்தவரை லாபம் இல்லாவிட்டாலும் சீராக விலை கொடுத்து வட இந்திய வியாபாரிகள் கொள்முதல் செய்து வந்தார்கள். ஆனால் தற்போது வட மாநிலங்களில் ரயான் துணிகளுக்குப் பதிலாக பாலியஸ்டர், நைலான் போன்ற துணிகள் மூலம் உற்பத்தி செய்து, துணிகளாக வடிவமைத்து குறைந்த விலையில் அகமதாபாத், டெல்லி, மும்பை போன்ற பெருநகரச் சந்தைகளில் விற்பனை செய்கிறார்கள். இதனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரம்ஜான் வியாபாரம் இப்போது கைகூடவில்லை.
இருந்தாலும் மேற்குவங்கத்தில் தேவைக் கேற்ப ரயான் துணிகள் உற்பத்தி செய்யப் படுகின்றன. கடந்த மாதத்தில் 120 கிராம் எடை கொண்ட துணியின் ஒரு மீட்டர் விலை 25 ரூபாய் 50 பைசாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது 24 ரூபாய் முதல் 24.25 வரை மட்டுமே வியாபாரிகள் விலை கேட்கிறார்கள். அதேபோல, 140 கிராம் எனப்படும் துணியின் விலை கடந்த மாதத்தில் 30 ரூபாய் 50 பைசா இருந்தது. தற்போது 29 ரூபாய் என்று விற்பனை நடைபெறுகிறது.
அனைத்து ரகங்களும் குறைந்தபட்சம் ஒரு ரூபாய் முதல் ஒரு ரூபாய் 50 பைசா வரை குறைத்து வியாபாரம் நடைபெறுவதால் ரயான் உற்பத்தி செய்த விசைத்தறியாளர்கள் முழுமையான உற்பத்திக் கூலியை இழந் துள்ளனர். ரயான் உற்பத்தி செய்யும் விசைத்தறியாளர்கள் தற்போது, ஒரு வாரத்தில் 13 ஷிப்ட் உற்பத்தி என்ற நிலையிலிருந்து, வாரத்தில் மூன்று அல்லது நான்கு ஷிஃப்ட் வரை குறைத்துள்ளார்கள்.
இதன்மூலம் விசைத்தறித் தொழிலாளிகள் ஒரு வாரத்திற்கு 500 முதல் 1000 ரூபாய்வரை சம்பளத்தை இழக்கிறார்கள். இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இதே நிலை தொடர்ந்தால், விசைத்தறிகளை பழைய இரும்புக்கு விற்று, உடைப்புக்கு செல்லும் சூழல் ஏற்படும்.
கடந்த ஆறு மாதங்களாக தமிழக அரசின் இலவச வேட்டி சேலை உற்பத்தி மூலம் பெரும் பாலான விசைத்தறிகள் காக்கப்பட்டு இருந்தன. தற்போது அது நிறைவடைந்துவிட்டதால் விசைத்தறியாளர்கள் ரயான் உற்பத்திக்கு செல்வார்கள். தற்போதுள்ள சூழலில் நஷ்டத் துக்கு உற்பத்தி செய்யத் தயங்குகிறார்கள். எனவே தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த மாதத்தில் கோவை கருமத்தம்பட்டியில் விசைத்தறி யாளர்களின் விழாவில் அறிவித்தது போல் தமிழக அரசின் அனைத்துத் துறை சீருடைகளையும் விசைத்தறி கூட்டுறவு சங்கங்கள் மூலம் விசைத்தறியில் நெய்யப்படுவதை உடனடியாக செயல்படுத்தினால் விசைத்தறியாளர்களைக் காக்க முடியும்.
மெடிக்கல் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் டெக்னிக்கல் டெக்ஸ்டைல்ஸ் போன்ற புதுவகையான ஜவுளி துணி உற்பத்தி செய்ய தமிழக அரசு ஊக்கப்படுத்தும் வகையில் விசைத்தறி கூட்டுறவு சங்கங்கள் அல்லது விசைத்தறி குழுமம் மூலம் உற்பத்தி செய்யும் பட்சத்தில், விசைத்தறி தொழிலை மேம்படுத்த வழி வகையை செய்ய உறுதுணையாக இருக்கும்.
சென்ற வருடம் இலவச வேட்டி, சேலை தயாரிப்பு பணிக்கான ஆர்டர் காலம் கடந்து கொடுக்கப்பட்டது. அதனால் பல குழப்பங்கள் நிலவியது. அது போல் இல்லாமல் இந்த வருடம் இலவச வேட்டி சேலை பணியை வருகிற ஜூன் முதல் வாரத்திலேயே தொடங்க வேண்டும். அதற்கு தகுந்தாற்போல் விசைத்தறி கூட்டுறவு சங்கங்களுக்கு இலவச வேட்டி சேலை ஆர்டர் வகைகளை உடனே வழங்க வேண்டும். அப்போதுதான் விசைத்தறிகளைக் காக்க முடியும்.
தமிழ்நாட்டில் காடா துணியை பிரிண்டிங், டையிங், பிராசஸிங் செய்ய பெருஞ்சிக்கல்கள் இருப்பதால், ஜவுளி துறையினர் பெரிதும் பயனடையும் வகையில், தமிழகத்தில் சாயம் போடும் தொழிலை ஊக்கப்படுத்த முன்வர வேண்டும். வருங் காலத்தில் ஜவுளித்துறையில் தமிழகத்தை முதல் மாநிலமாக்கும்விதமாக புதிய திட்டங்களையும், அறிவிப்புகளையும் செயல்படுத்த வேண்டும்'' என்றார்.
1953 ஆம் வருடம், பேரறிஞர் அண்ணா கைத்தறித் துணிகளை திருச்சி வீதிகளிலும், கலைஞர் சென்னை வீதிகளிலும் விற்பனை செய்து, கைத்தறி நெசவாளர்களைக் காப்பாற்றிய இயக்கம் தி.மு.க. என்பதை நிரூபித்தார்கள். அதேபோல ஸ்டாலின் தலைமையிலான அரசும் தமிழ்நாடு விசைத்தறியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியைக் களைய முன்வர வேண்டும்.