Advertisment

த.வெ.க.வை உடை! இல்லைன்னா கூட்டணியில் இணை!  ஆதவ்வுக்கு பா.ஜ.க. பக்கா  அசைன்மெண்ட்!

adhav


"ஆதவ் அர்ஜுனா மீதான அதிருப்தி அலை த.வெ.க.வில் சுழன்றடிக்கும் அதே வேளை யில், ‘அவர் ஒரு சரித்திரப் பதிவேடு குற்றவாளி யைப் போன்றவர்,  அமைதிப்படை அமாவாசை யைப் போல அனைத்தையும் சுருட்டப் பார்க் கிறார்'’ என்ற குற்றச்சாட்டுகள் அவரின் குடும்ப உறுப்பினர் ஒருவரிடமிருந்தே கிளம்பியிருக்கும் விவகாரம் த.வெ.க.வை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த அரசியல் தளத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisment

மிகவும் ஏழ்மையான குடும் பத்தில் பிறந்து, கூடைப்பந்து விளையாட்டு வீரனாக இருந்து, பின்னர், லாட்டரி சாம்ராஜ்ய அதிபர் மார்ட்டி னின் மகளை காதல் திரு மணம் செய்து கொண்ட பிறகு தன்னு டைய மாம னாரின் பணத் தில் மஞ்சள் குளித்தபடி ஆதவ் அர்ஜுனா துவங்கிய தொழில் கள் அத்தனையுமே தோல்வி தான். அதன்பிறகு, “"சேச்சே, அதுக்கெல்லாம் நீ சரிப்பட்டு வர மாட்டே!' என மார்ட்டின் குடும்பம் அவரது தொழிலுக்கு முட்டுக்கட்டை போட்ட நேரத்தில் தான், அரசியல் பகுப்பாய்வாளர் என்ற போர்வையோடும், மார்ட்டினின் மருமகன் என்ற செல்வாக்கோடும், அரசியல் தலைவர்களிடம் பேசி, அவர்களின் தேர்தல் பிரச்சாரங்களுக்காக வேலை பார்க்கத் தொடங்கினார் ஆதவ். இடையிடையே, மாமனார் மார்ட்டின் மூலமாகக் கட்சி பேதமில்லாமல் டெல்லியிலும் தனது செல்வாக்கை வளர்த்துக்கொண்டார்.

Advertisment

தமிழகத்தை பொறுத்தவரை, தி.மு.க.விலுள்ள முக்கியப் புள்ளிகள் சிலரோடு நெருங்கிப்பழகி, அதன்மூலம் 2011ஆம் ஆண்டு தி.மு.க.வுக்காக தேர் தல் வேலைகள் செய்தபோதுதான் முதன்முறையாக மீடியா வெளிச்சம் அவர்மீது பாய்ந்தது. அதன்பிறகு, தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் அறிமுகம் அவருக்கு கிடைக்கவே, 2021ல் 'வாய்ஸ் ஆஃப் காமன்ஸ்' என்ற தனது நிறுவனம் மூலமாக தானும் ஒரு தேர்தல் வியூக பயிற்சியாளராகி, முதன்முதலாக தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார் ஆதவ் அர்ஜுனா. பின்னர், தி.மு.க. தலைவரின் குடும்ப உறுப்பினர்களோடு நெருங்கிப்பழகுவதற்கு தனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி, அந்த குடும்பத்திற்


"ஆதவ் அர்ஜுனா மீதான அதிருப்தி அலை த.வெ.க.வில் சுழன்றடிக்கும் அதே வேளை யில், ‘அவர் ஒரு சரித்திரப் பதிவேடு குற்றவாளி யைப் போன்றவர்,  அமைதிப்படை அமாவாசை யைப் போல அனைத்தையும் சுருட்டப் பார்க் கிறார்'’ என்ற குற்றச்சாட்டுகள் அவரின் குடும்ப உறுப்பினர் ஒருவரிடமிருந்தே கிளம்பியிருக்கும் விவகாரம் த.வெ.க.வை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த அரசியல் தளத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisment

மிகவும் ஏழ்மையான குடும் பத்தில் பிறந்து, கூடைப்பந்து விளையாட்டு வீரனாக இருந்து, பின்னர், லாட்டரி சாம்ராஜ்ய அதிபர் மார்ட்டி னின் மகளை காதல் திரு மணம் செய்து கொண்ட பிறகு தன்னு டைய மாம னாரின் பணத் தில் மஞ்சள் குளித்தபடி ஆதவ் அர்ஜுனா துவங்கிய தொழில் கள் அத்தனையுமே தோல்வி தான். அதன்பிறகு, “"சேச்சே, அதுக்கெல்லாம் நீ சரிப்பட்டு வர மாட்டே!' என மார்ட்டின் குடும்பம் அவரது தொழிலுக்கு முட்டுக்கட்டை போட்ட நேரத்தில் தான், அரசியல் பகுப்பாய்வாளர் என்ற போர்வையோடும், மார்ட்டினின் மருமகன் என்ற செல்வாக்கோடும், அரசியல் தலைவர்களிடம் பேசி, அவர்களின் தேர்தல் பிரச்சாரங்களுக்காக வேலை பார்க்கத் தொடங்கினார் ஆதவ். இடையிடையே, மாமனார் மார்ட்டின் மூலமாகக் கட்சி பேதமில்லாமல் டெல்லியிலும் தனது செல்வாக்கை வளர்த்துக்கொண்டார்.

Advertisment

தமிழகத்தை பொறுத்தவரை, தி.மு.க.விலுள்ள முக்கியப் புள்ளிகள் சிலரோடு நெருங்கிப்பழகி, அதன்மூலம் 2011ஆம் ஆண்டு தி.மு.க.வுக்காக தேர் தல் வேலைகள் செய்தபோதுதான் முதன்முறையாக மீடியா வெளிச்சம் அவர்மீது பாய்ந்தது. அதன்பிறகு, தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் அறிமுகம் அவருக்கு கிடைக்கவே, 2021ல் 'வாய்ஸ் ஆஃப் காமன்ஸ்' என்ற தனது நிறுவனம் மூலமாக தானும் ஒரு தேர்தல் வியூக பயிற்சியாளராகி, முதன்முதலாக தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார் ஆதவ் அர்ஜுனா. பின்னர், தி.மு.க. தலைவரின் குடும்ப உறுப்பினர்களோடு நெருங்கிப்பழகுவதற்கு தனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி, அந்த குடும்பத்திற்குள் குழப்பத்தை உண்டு பண்ணி அரசியல்ரீதியாகவும் தன்னை வலுப்படுத்த முயற்சிக்கவே, அவரின் கிரிமினல் புத்தியை ஸ்மெல் செய்த தி.மு.க., ஆதவ்வை கட்சியை விட்டே துரத்தியது.

இதனால், தன்னுடைய அரசியல் கனவு அஸ்தமனமாகிவிடக்கூடாது என முடிவெடுத்த ஆதவ் அர்ஜுனா, தி.மு.க. பற்றிய நெகடிவ் ஃபைல் களை தயார் செய்துகொண்டு டெல்லியிலுள்ள பா.ஜ.க. முக்கிய தலைவர்களை சந்தித்துப்பேசி அக்கட்சியில் தன்னை ஐக்கியப்படுத்திக்கொள்ள முடிவெடுத்தார். ஆனால், ஆதவ்வின் கிரிமினல் ஜீன் பற்றி நன்கு அறிந்திருந்த தமிழக பா.ஜ.க. தலைமை அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை எனவும், அதற்கு பதிலாக சில முக்கிய அரசியல் அசைன்மெண்டுகளை தந்ததாகவும் கூறப்படுகிறது.  

அதன்படி, ‘தான் நல்லவன், வல்லவன், ஏழைகளுக்காகவும், அடக்கப்படும் சமூகத்திற்கவும் உழைப்பவன்’ என வி.சி.க. தலைவர் திருமாவளவ னிடம் பேசி, அவரை நம்பவைத்து 2022-ல் அக்கட்சியில் இணைந்த ஆதவ் அர்ஜுனாவிற்கு துணைப் பொதுச்செயலாளர் பதவியை தந்து அழகுபார்த்தார் திருமா. அப்போது, 2024ஆம் ஆண்டு இறுதியில் சென்னை வர்த்தக மையத்தில் நடந்த ஒரு விழாவில், வி.சி.க.வின் கூட்டணிக் கட்சியான தி.மு.க.வையும், அதன் தலைவரையும் சகட்டுமேனிக்கு சாடவே, அதிர்ச்சியடைந்த திருமா, தி.மு.க. கூட்டணியை சிதைக்க நினைத்த ஆதவ் அர்ஜுனாவின் அஜென்டாவை புரிந்து கொண்டு, அவரை கட்சியை விட்டு 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்தார். 

adhav1

அதே ஆண்டு, தமிழக வெற்றிக் கழகத்தை துவங்கிய நடிகர் விஜய், அப்போதுதான் தனது முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் பிரமாண்ட மாக நடத்தி, அனைத்து அரசியல் கட்சிகளின் கவனத்தையும் ஈர்த்திருந்தார். இதனால், விஜய்யின் பக்கம் துண்டுபோட்ட ஆதவ் அர்ஜுனா, வி.சி.க.விலிருந்து விலகி த.வெ.க.வில் இணைந்தார். அதன் பின்னணியிலும் பா.ஜ.க. இருப்பதாகக் கூறுகிறார்கள்  அரசியல் வல்லுனர்கள். இது குறித்து நம்மிடம் பேசியவர்கள், “"தமிழகத்தில் எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க நினைக்கும் பா.ஜ.க., அதற்காக வலுவாக இருக்கும் கட்சிகளை உடைப்பது, கூட்டணிகளைப் பிரிப்பது, வளரும் கட்சிகளைத் தங்களை நோக்கி இழுப்பது எனத் திட்டம் போட்டு செயல்பட்டு வருகிறது. 

அந்த சூழலில், 930 கோடி மதிப்பிலான சிக்கிம் கள்ள லாட்டரி ஊழல் வழக்கில், தனது மாமனார் மார்ட்டின் குடும்பத்தோடு சிக்கிய ஆதவ் அர்ஜுனா ,பா.ஜ.க.வின் அடுத்த அசைன் மெண்ட்படிதான் த.வெ.க.வில் இணைந்ததாக டெல்லி வட்டாரங்களில் தகவல்கள் கசிந்தன. அதற்கேற்றபடி, பா.ஜ.க.வின் பி டீம் தான் த.வெ.க. என்ற பேச்சுக்களும் தமிழகத்தில் கிளம்பி யது. அதனை மறைப் பதற்காகவே "கொள்கை எதிரி பா.ஜ.க. -அரசியல் எதிரி தி.மு.க.' என்ற கோசத்தோடு தனது பிரச்சாரப் பயணத்தை துவங்கினார் விஜய். தவிர, தனிப்பட்ட முறையில் பா.ஜ.க. கூட்டணியில் இணைவது குறித்து நடிகர் விஜய் அப்போது எந்த முடிவும் எடுக்காத நிலையில்தான், 41 பேர் பலியான சோகமும் அரங்கேறியது. 

இதற்கு, விஜய்யின் தேர்தல் பிரச்சார பய ணத்தை முழுக்க முழுக்க திட்டமிட்ட த.வெ.க.வின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செய லாளர் ஆதவ் அர்ஜுனா தான் காரணம் எனக் கட்சிக்குள் முணுமுணுப்புகள் எழுந்தன. அவ்வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்ட பின்னர் ஆதவ் அர்ஜுனா மீதுதான் தனது முதல் பார்வையை திருப்பியது சி.பி.ஐ. இது ஒருபுறம் நடந்துகொண்டிருக்கும் போதே, டெல்லிக்குப் பறந்தார் ஆதவ் அர்ஜுனா. அப்போதுதான், ஏற்கெனவே ஈ.டி. விசாரணையில் சிக்கி, தற்போது சி.பி.ஐ.யின் ஸ்கேனரிலும் இருக்கும் அவரிடம், பா.ஜ.க. கூட்டணியில் த.வெ.க.வை உடனே அழைத்து வரும்படி அழுத்தம் கொடுக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள். அதன் வெளிப்பாடுதான், சமீபத்தில் நடந்த த.வெ.க. சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில், பி.ஜே.பி. குறித்து அடக்கிவாசித்த ஆதவ், ‘"வாடா, வந்து எங்க தலைவன் மேல கைய வச்சுப் பாருடா'’ என சும்மா கிடந்த தி.மு.க.வை வம்புக்கு இழுத்திருக்கிறார்.

இதனால் அதிர்ச்சியடைந்த விஜய், அதன் பின்னார் ஆதவ் அர்ஜுனாவை முக்கிய நிர்வாகி கள் மத்தியில் வைத்தே கடுமையாக டோஸ்  விட்டி ருக்கிறார். எனவே, தனெக்கென வைத்திருக்கும் வார் ரூம் பாய்ஸ் மூலம், ‘ஆதவ் பேசியதுதான் சரி’ என அவர் பரப்பவே, விஜய்க்கு ஆதரவாகவும் குரல்கள் பறந்தன. இவ்விவகாரத்தில், கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில்தான், ஆதவ் அர்ஜுனாவின் ஒரிஜினல் குணம் தெரிந்து, அவரை ஓரங்கட்ட கட்சித்தலைமை முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதன் வெளிப்பாடுதான், கட்சிக்கு சின்னம் கேட்டு அப்ளை செய்வதற்கு ஏற்கெனவே ஆதவ் அர்ஜுனாவை டெல்லிக்கு அனுப்பத் திட்டமிட்டிருந்த விஜய், அவரை தடுத்துவிட்டு, அருண்ராஜ் மற்றும் நிர்மல்குமார் ஆகியோரை அனுப்பினார். கட்சி ஆரம்பித்த சில காலங்களிú லயே இப்படி சிக்கலிலிருக்கும் விஜய், பா.ஜ.க. பக்கம் நகர்கிறாரோ இல்லையோ, ஆதவ் தனக்கான முயற்சியை எடுத்துவிட்டார் என்பதே உண்மை''’என விலாவரியாகக் கூறினர் நம்மிடம். 

ஆதவ் அர்ஜுனா மீதான இதுபோன்ற அதிருப்திகள் த.வெ.க.வில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு இருக்கும் நிலையில்தான், ஆதவ் அர்ஜுனாவின் மைத்துனரும், லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகனுமான சார்லஸ் மார்ட்டின், ‘"ஆதவ் அர்ஜுனா சரித்திரப் பதிவேடு குற்றவாளியைப் போன்றவர், அவர் ஒரு அமைதிப் படை அமாவாசை''’என்றெல்லாம் ஊடகங்களில் விரக்தியோடு வறுத்தெடுத்தது மட்டுமில்லாமல், ஆதவ் அர்ஜுனாவை த.வெ. க.வுக்கு அனுப்பியதே தி.மு.க. தான் எனவும் பேசியிருப்பது அரசியல் வட்டாரங்களை பரபரப்புக்குள்ளாக்கி இருக்கிறது.

சார்லஸ் மார்ட்டினின் இந்த திடீர் கொந்தளிப்புக்கு என்ன காரணம் என்பதையறிய அவரின் குடும்பத்திற்கு நெருக்கமான சிலரிடம் பேசினோம். “"ஆதவ் அர்ஜுனாவைப் போலவே சார்லஸ் மார்ட்டினுக்கும் அரசியல் ஆசை வந்துவிட்டது. கொட்டிக்கிடக்கும் பணத்தை கொஞ்சம் வெட்டியெடுத்து பா.ஜ.க. ஆசியோடு புதுச்சேரி அரசியலில் முதல்வர் வேட்பாளராக தன்னை நிலைநிறுத்த முயற்சி செய்துவருகிறார் சார்லஸ். இதனால், ஏற்கெனவே டெண்டர், அது, இதுவென தொழில்ரீதியாக செய்துவந்த சப்போர்ட்டை தி.மு.க. நிறுத்திவிட்டது.  தவிர, சார்லஸின் கனவை தகர்ப்பதுபோல தி.மு.க. சார்பாக அப்பகுதியைச் சேர்ந்த அரசியல் ஜாம்பவான் ஜெகத்ரட்சகனும் புதுச்சேரியில் கடுமையாகக் களப்பணியாற்றி வருவதும் சார்லஸுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியிருப்பதை மறுக்க முடியாது. 

இப்படி, தொழில் மற்றும் அரசியல் ரீதியாக பின்னடைவை சந்தித்துவரும் நிலையில்தான், ஆதவ் அர்ஜுனாவின் செயல்பாடுகளால் தங்கள் குடும்பத்திற்கு தொடர்ந்து அவப்பெயர் ஏற்பட்டு வருவதாகக் கருதுகிறார் சார்லஸ். அதன் வெளிப்பாடுதான் அந்த வார்த்தைகள்''” என்ற வர்கள், “வந்தவனும் சரியில்லை; வாய்ச்சவனும் சரியில்லை” என்ற கடுமையான மன நெருக்கடியில் இருக்கும் மார்ட்டினுக்கு, இவர்கள் இருவராலும் நெஞ்சு வலி வந்ததுதான் மிச்சம்” என சோகத்தோடு முடித்தனர்.

இப்படி, ஆதவ் அர்ஜுனா மீது கட்சியிலும், குடும்பத்திலும் கொந்தளிப்புகள் அதிகரித்துள்ள நிலையில்தான், கடந்த வாரம் சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்த சி.சி.டி.வி. காட்சிகளில் பிரச்சாரப் பேருந்திலிருந்த முக்கியமான சில காட்சிகள் மட்டும் மிஸ்ஸிங்காகி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், அதுகுறித்து கேட்கவே, அதற்கும் ஆதவ் அர்ஜுனாவை நோக்கி விரல் நீட்டியிருக்கிறார்களாம் த.வெ.க. நிர்வாகிகள்!

ஆக மொத்தத்தில், "த.வெ.க.வை உடை அல்லது அதை பா.ஜ.க. கூட்டணியில் இணை' என டெல்லி        தந்த அசைன்மெண்டை சிறப்பாக செய்துகொண்டிருக்கிறார் ஆதவ். 


____________
இறுதி சுற்று! 

ரஜினி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு கடந்தவாரம் வெடி குண்டு மிரட்டல் வர... வெடிகுண்டு நிபுணர்கள் அவரது வீட்டை சோதனையிட்டனர். வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இந்த நிலையில், 13-ந் தேதி வியாழக் கிழமை மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. தகவல் அறிந்து போலீசார், ரஜினி வீட்டை சோதனை யிட்டபோது, மிரட்டல் வெறும் புரளி என தெரிய வந்துள்ளது. இருப்பினும் "இத்தகைய போலி மிரட்டல்களால் காவல்துறையினரும் மனஉளை ச்சல்களுக்கு ஆளாகிவருவதால் இந்த விசயத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க காவல்துறை அதிகாரிகள் சீரியசாக முயற்சிக்க வேண்டும்' என்கிறார்கள் வெடிகுண்டுகளை செய-ழக்க வைக்கும் நிபுணர்கள். 

-இளையர்

nkn151125
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe