ரூரில் நடந்த தி.மு.க.வின் முப்பெரும் விழா இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைத்துள்ளது. சமத்துவம், சமூக நீதி, சுயமரியாதை, பகுத்தறிவு என கொள்கை சார்ந்து இயங்குகிற இயக்கம் என்பதை கரூரில் நடந்த முப்பெரும் விழா மூலம் மெய்ப்பித்துக்காட்டியுள்ளது தி.மு.க.!

Advertisment

"இந்த முறை முப்பெரும் விழா நடத்த எங்கள் கரூருக்கு வாய்ப்புத் தாருங்கள்' என கட்சித் தலைமையிடம் செந்தில்பாலாஜி வைத்த கோரிக்கை ஏற்கப்பட்டது. கடந்த ஒருமாத காலமாக முப்பெரும் விழா பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட செந்தில்பாலாஜி, இரவுபகலாக அனைத்து வேலைகளையும் முன்னின்று செய்துவந்தார்.

கரூர்- திருச்சி பைபாஸ் சாலையிலுள்ள கோடங்கிபட்டி என்ற பகுதியில் 150 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில்,  60அடி அகலம் 200 அடி நீளத்தில் மேடையமைக்கப்பட்டு திடலின் முன்பகுதியில் 100 அடி உயர கொடிக்கம்பம் நிறுவப்பட்டிருந்தது. மேடையின் இருபுறமும் ஒரு லட்சம் இருக்கைகள் போடப்பட்டு உணவு, குடிநீர், கழிவறைகள் என அனைத்து வசதிகளும் செய்யப் பட்டிருந்தது. விழாவில் சுமார் 4 லட்சம் தி.மு.க. வினர் கலந்துகொண்டனர். விழா நுழைவுவாயிலி லிருந்து மேடைவரை ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு தார்ச்சாலை அமைக்கப்பட்டிருந்தது. 

செப்டம்பர் 17-ஆம் தேதி மாலை, முப்    பெரும் விழா மேடைக்கு திறந்த வேனில் இருபுறமும் தொண்டர்கள் ஆர்ப்பரிக்க... மிகுந்த உற்சாகமாக எல்லோருக்கும் கையசைத்துக் கொண்டே மேடைக்கு வந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். வரவேற்புரை நிகழ்த்திய கரூர் மாவட்ட கழகச் செயலாளர் செந்தில்பாலாஜி,  "கழகத்தின் கோட்டை கரூர். இந்த கரூரில் முப்பெரும் விழா நடத்திட எங்களுக்கு வாய்ப்புத் தந்த முதல்வருக்கு நன்றி. இந்த மேற்கு மண்டலத்திலிருந்து சொல்கிறேன், வருகிற 2026-ல் மேற்கு மண்டலம் தி.மு.க.வின் கோட்டையாக உருவாகும். எதிரிகள் யாராக இருந்தாலும், எந்த வடிவில் வந்தாலும், எத்தனை பேராக வந்தாலும் நாம்தான் ஜெயிக்கிறோம்... நாம் மட்டும்தான் ஜெயிக்கிறோம்''’என உற்சாகத்தோடு கூறினார்.

Advertisment

cm1

முப்பெரும் விழாவில் முக்கிய நிகழ்வான விருது வழங்கும் நிகழ்ச்சியில் "தந்தை பெரியார்' விருது தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழிக்கும், "அண்ணா விருது' முன்னாள் நகர்மன்ற தலைவர் சீதாராமனுக்கும், "கலைஞர் விருது' முன்னாள் எம்.எல்.ஏ. ராமச்சந்திரனுக்கும், "பாவேந்தர் பாரதிதாசன் விருது' மறைந்த தலைமை செயற்குழு உறுப்பினர் குளித்தலை சிவராமன் குடும்பத்தினருக்கும், "பேராசிரியர் அன்பழகன் விருது' முன்னாள் எம்.எல்.ஏ., கொறடா  மருதூர் ராமலிங்கத்துக்கும்,  "மு.க.ஸ்டாலின் விருது' முன் னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமிக்கும், "முரசொலி' விருது மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வத்துக்கும் வழங்கப்பட்டது. இந்த விருதுகளுடன் ஒவ்வொருவருக்கும் தலா மூன்று லட்சம் ரொக்கமும் வழங்கப்பட்டது. 

விழா தொடங்கியது முதல் மழை பொழிய ஆரம்பித்தது. ஆனாலும் மேடைக்கு முன்புறமிருந்த லட்சக்கணக்கான ஆண்கள், பெண்கள், இளைஞர் கள் எல்லோரும் அவர்களது இடத்திலேயே அமர்ந்திருந்தனர்.

விருதுபெற்ற கனிமொழி பேசுகையில், “"தந்தை பெரியார் விருதை பெற்றதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந்த கொட்டும் மழையிலும் இங்கே நின்றுகொண்டிருக்கக்கூடிய உடன்பிறப்பு களைப் பார்க்கும்பொழுது இந்தப் படை போதுமா.....? எந்த தேர்தலையும் எந்த பகைவர் களாக இருந்தாலும், அது நம்முடைய பரம்பரைப் பகைவர்களாக இருக்கட்டும், பாரம்பரிய பகைவர்களாக இருக்கட்டும், புதிதாக வரக்கூடிய பகைவர்களாகவும் இருக்கட்டும்.... அத்தனை பேரையும் வென்றுகாட்டுவோம்... வென்று காட்டுவோம்....'' என்றார்.

Advertisment

"தலைவர் கலைஞர் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வென்ற கரூர் மாவட்டத்திலிருந்து, வரப்போகிற சட்டமன்றத் தேர்தலில் நமது வெற்றியைத் துவக்குவோம்'' என துணை முதல்வர் உதயநிதி பேசினார்.

மழை தொடர்ந்து பெய்ய, துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா, திருச்சி சிவா, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு போன்றவர்கள் பேசுவதைத் தவிர்த்து, முதல்வர் சிறப்புரையாற்றத் தொடங்கினார்.

 விருதுபெற்ற எல்லோரையும் வாழ்த்திப் பேசிய முதல்வர், "எனது தங்கை கனிமொழி, பெரியார் விருது பெற்றுள்ளார். பார்த்தால் அவர் கனிமொழி. ஆனால் நாடாளுமன்றத்தில் அவர் பேசினால் கர்ஜனை மொழி. திராவிட இயக்கத்தின் திருமகளாகவும், பெரியாரின் பேத்தியாகவும் நாடாளுமன்றத்தில் ஒலிக்கிறார்'' என்றார்.

முப்பெரும் விழாவை சிறப்பாக நடத்திய முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியை பாராட்டிப் பேசிய முதல்வர், "வெளியே இருந்தால் நிம்மதியாகத் தூங்க முடியாது என சிலர் செந்தில்பாலாஜியை முடக்கப் பார்த்தனர். அவரை முடக்கமுடியுமா...? தான் எடுத்த பணியை வெற்றிகரமாக முடித்துக் காட்டுபவர் அவர். கோடு போடச்சொன்னால் செந்தில்பாலாஜி ரோடு போட்டுள்ளார். தமிழகத்தில் உள்ள சில கட்சிகள் தி.மு.க.வை அழிப்போம்,…ஒழிப்போம் என்று பேசுகின்றனர். தி.மு.க.வுக்கு நாங்கள்தான் மாற்று என்று சிலர் பேசுகிறார்கள். என்ன மாற்றப் போகின்றார்கள்..... எதை மாற்றப் போகின்றார்கள்? தமிழ்நாடு வளர்ச்சியை மாற்றி பின்னோக்கி இழுத்துக்கொண்டு போகப்போகிறார்களா...? நம் கொள்கையோடு சிறந்த கொள்கையை யாராவது பேசுகிறார்களா.. மாற்றம் என்று சொன்ன எல்லோரும் மறைந்துபோனார்கள். ஆனால் தி.மு.க. மட்டும் மாறவில்லை. தமிழ்நாட்டு மக்கள் மனதிலிருந்து என்றும் மறையவில்லை. இதுதான் தமிழ்நாடு அரசியல். நம்முடைய கொள்கைதான் நம்முடைய பலம். நாம் செய்யவேண்டியது இன்னும் நிறைய இருக்கு. 

cm2

தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட் டோம் என நாம் சூளுரை ஏற்றுள்ளோம். அண்ணாவின் கொள் கைப் பட்டாளமே, தலைவர் கலைஞரின் உயிரினும் மேலான உடன்பிறப்புகளே தனி நபர்கள் அவ்வப்போது தோன்றுவார்கள்.. மறைவார்கள்....  பல கட்சிகள் வரும் போகும். ஆனால் தமிழ்நாட்டின் தனித்திறமை நிரந்தர மானது. தமிழ் மொழியின் பெருமை நிரந்தர மானது. நம்முடைய மக்களின் உரிமை காக்கப்பட வேண்டும். இந்த தமிழ் மண்தான் நமக்கு எல்லாவற்றையும் கொடுத்தது. இந்த மண்ணைக் காக்கின்ற பொறுப்பும் கடமையும் நமக்கு இருக்கு. 

டெல்லி நம்மீது எப்படியெல்லாம் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.? இந்தி மொழித் திணிப்பு, மாணவர்களை பழிவாங்கக்கூடிய நீட் தேர்வு, கீழடி தொன்மையை மறைக்கிறார்கள், வாக்காளர் பட்டியலில் திருத்தம் என்ற பெயரில் நமது வாக்குரிமையைப் பறிக்கிறார்கள்.... அந்நாளும் சரி, இந்நாளும் சரி, அடக்குமுறைக்கு இங்கு நோ தான். ஆதிக்கத்துக்கு இங்கு நோ தான். இந்தி திணிப்புக்கு இங்கு நோதான். மொத்தத்தில் தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்கு நோ என்ட்ரிதான்.  இது பெரியார், அண்ணா, கலைஞர் செதுக்கிய தமிழ்நாடு.  ரெய்டுகளிலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள அ.தி.மு.க.வை பா.ஜ.க.விடம் அடகு வைத்துவிட்டார் எடப்பாடி பழனிச்சாமி.  திராவிடம் என்றால் என்ன என்று கேட்டதற்கு அதெல்லாம் எனக்குத் தெரியாது என்று சொன்னவர்தான் இந்த பழனிச்சாமி. அதுதான் வெட்கக்கேடு. அ.தி.மு.க. தொடங்கியபோது தன்னுடைய கொள்கை அண்ணாயிசம் என்று சொன்னார்கள். அதை இப்போது பழனிச்சாமி அடிமையிசம் என மாற்றிவிட்டார். அமித்ஷாவே சரணம் என மொத்தமாக சரண்டராகிவிட்டார். நேற்று டெல்லியில் கார் மாறிப்போன பழனிச்சாமியைப் பார்த்து எல்லோரும் என்ன சொல்கிறார்கள் என்று தெரியுமா? காலிலேயே விழுந்த பிறகு முகத்தை மூட கர்ச்சீப் எதற்கு என்று கேட்கிறார்கள்.

23 வயதில் எமர்ஜென்சியை எதிர்த்து சிறை சென்ற முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய நான் உங்களுடன் இருக்கிறேன். உறுதியுடன் சொல்கிறேன், நம் தாய்மார்கள், உழவர்கள், சகோதரர்கள் அனை வரையும் காக்க நான் தொடர்ந்து உழைப்பேன். தமிழ்நாட்டில் ஒவ் வொரு குடும்பத்திற்கும் ஒவ்வொரு மாவட்டத்திற் கும் தேவையான அனைத்தையும் பார்த்துப் பார்த்து செய்துகொடுப்பேன். நமக்கு துணையாக பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் விதைத்த இன உணர்வு உள்ளது. 8 கோடி தமிழ் மக்களின் ஆதரவும் ஆற்றலும் நமக்கு பக்கபலமாக உள்ளது. இதே உறுதியுடன் போராடுவோம். இப்போது நாம் முன்னெடுக்கும் போராட்டம், தமிழ்நாட்டு மக்களுக்கான போராட்டம்.... தமிழ்நாடு முழுக்க ஓரணியில் திரளவேண்டும். கரூர் மண்ணில் நின்று பெரியார் பிறந்தநாளில் உரக்கச் சொல்லுவோம். தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம். டெல்லிக்கு கேட்குமளவுக்கு அனைவரும் சேர்ந்து சொல்லவேண்டும்'' என மிகுந்த உற்சாகத்துடன் தனது பேச்சை முடித்தார் முதல்வர் ஸ்டாலின்.