"அ..மலைக்கு எதையுமே பொறுப் பாகப் பேசத்தெரியாது. அவரது இந்தி மிகவும் மோசமாக இருக்கும். அவர் பேசுகின்ற ஒவ்வொன்றும், எதிர்க்கட்சியினருக்கே சாதகமாகப் போவதால், பா.ஜ.க.வே அவரை கட்சியிலிருந்து ஓரங்கட்டித்தான் வைத்திருக் கிறது. எனவே அவர் மும்பை குறித்து பேசு வதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்'' என்று மகாராஷ்டிராவின் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் அ... மலையின் பேச்சு குறித்து விளக்கமளித்துள்ளார்.
பா.ஜ.க.வை சேர்ந்த ஒருவரே அ... மலை குறித்து மிகமோசமாகப் பேச வேண்டிய காரணமென்ன? தமிழ்நாடு பா.ஜ.க.வின் தலை வராக இருந்த அ... மலை பேசும் பேச்சுக்கள் அனைத்துமே சர்ச்சையை ஏற்படுத்துவதாகவே இருக்கும். அவரது கட்சியை சேர்ந்தவர்களையே ஹனி ட்ராப் செய்த குற்றச்சாட்டுக்கு ஆளானவர். அவர்மீது நிர்மலா சீதாராமன், கே.டி.ராகவன், காயத்ரி ரகுராம், திருச்சி சூர்யா சிவா உள்ளிட்ட பலரும் மிக மோசமான குற்றச் சாட்டுகளை கூறியிருந்தனர். இந்நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட பின்னரும் தனது போக்கை மாற்றிக்கொள்ளாத அ.... மலை, தற்போது மகாராஷ்டிர அரசியலில் பேசிய கருத்து, தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் எதிராகத் திரும்பியிருக்கிறது!
மகாராஷ்டிராவில் வரும் 15ஆம் தேதி நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரத்தில், அ.மலையும் கலந்துகொண்டு, மும்பை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து, கடந்த ஜனவரி 8ஆம் தேதி, தமிழர்கள் வாழும் பகுதிகளில் பேசியிருந்தார். அப்போது அவர், "மும்பை, மகாராஷ்டிராவுக்கு சொந்தமென்று சொல்லக்கூடாது, இது சர்வதேச நகரம்'' என்று பேசியிருக்கிறார். அதைக் கேட்டதும் மகா ராஷ்டிராவே கொந்தளிக்கத் தொடங்கிவிட்டது.
அ..மலையின் பேச்சுக்கு, சிவசேனாவின் உத்தவ் தாக்கரே பிரிவும், நவநிர்மான் சேனா அமைப்பின் தலைவரான ராஜ் தாக்கரேயும் கடுமையான கண்டனத்தை தெரிவித்தனர். தனது கட்சிக் கூட்டத்தில் பேசிய ராஜ் தாக்கரே, "தமிழ்நாட்டிலிருந்து இங்கே வந்த அ..மலை, ரசமலாய்க்கும் இந்த மண்ணுக்கும் என்ன தொடர்பு? அதனால்தான் தமிழர்களை பால் தாக்கரே விரட்டியடித்தார். வட இந்தியர்களுக்கு எதிராக அவதூறுகளை இதுவரை பேசிவிட்டு, இப்போது தென்னிந்தியர்களுக்கு எதிராகப் பேசுவதா?'' எனக் குறிப்பிட்டதோடு, தமிழர் களை இழிவுபடுத்தக்கூடிய ஒரு சொலவடை யையும் கூறியது கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது. உத்தவ் தாக்கரே சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில், "இனிமேல் மும்பை மாநகருக்குள் அ..மலை கால் வைத்தால் காலை வெட்டுவோம்' என எழுதினார்கள். அதுமட்டுமல்லாது, அ..மலை மீண்டும் மகாராஷ்டிராவில் கால் வைத்தால், மராத்தி ஏகிகரன் சமிதி அமைப்பு, அவர் முகத்தில் கருப்பு மை வீசும். மகாராஷ்டிராவுக்கு வந்து துரோகம் இழைக்கக்கூடாதென்பதை நினைவில் கொள்ளுங்கள். மகாராஷ்டிராவை இழிவுபடுத்துவதை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது. மகாராஷ்டிராவின் தியாகிகளையும், மராத்தி மக்களையும் அவமதித்ததற்கு, அ....மலை உடனடியாக மகாராஷ்டிரா மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்' என்றும் கூறப்பட்டது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/14/thackery1-2026-01-14-16-54-53.jpg)
"அ..மலை மீது மகாராஷ்டிரா முதலமைச்சர் பட்னாவிஸ் கிரிமினல் வழக்கு பதிவு செய்து, கைது செய்ய உத்தரவிட வேண்டும்' என்று உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் கூறியிருக்கிறார்.
தனக்கெதிரான மிரட்டல்களுக்கு பதிலளித்த அ..மலை, "மும்பைக்கு வந்தால் என் காலை வெட்டுவதாகவும், என் மீது மை பூசப் போவதாகவும் மிரட்டி சிவசேனா பத்திரிகை யில் எழுதியிருக்கிறார்கள். நான் மும்பைக்கு வருவேன், முடிந்தால் என் காலை வெட்டிப் பாருங்கள். இங்க் அடித்துப் பாருங்கள். மிரட்டல், உருட்டலுக்கு நான் பயப்பட மாட்டேன். மும்பை, சர்வதேச தலைநகர் என்று சொல்லும்போது அது மராட்டியர்களால் கட்டிய நகரம் இல்லையென்று ஆகிவிடுமா?'' என கேள்வியெழுப்பியுள்ளார்.
உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரேவோ, "அ..மலை பா.ஜ.க.வில் கிட்டத்தட்ட வெத்து வேட்டு. அவரால் தனக்கான டெபாசிட்டைக்கூட காப்பாற்றிக் கொள்ள முடியாமல் தேர்தலில் தோற்றார். ஆனால் பேச்சு மட்டும் அடுத்த பிரதமரைப் போல பேசுகிறார். தமிழ்நாடும் மகாராஷ் டிராவும் முற்றிலும் மாறுபட்ட இரண்டு பகுதிகள். மும்பைன்னா என்னவென்று எங்களுக்கு அ..மலை பாடமெடுக்கப் போகிறாரா? அ..மலையும், பா.ஜ.க.வும் மகாராஷ்டிராவை அவமதித்துள்ளனர். இதை மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்'' என காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தற்போது அ..மலையால் ஏற்பட்டுள்ள பிரச்சனை, தமிழர்களுக்கு எதிரான வன்முறை யாக மாறிவிடக்கூடாதே என்ற அச்சத்தில் மகாராஷ்டிராவிலுள்ள தமிழர்கள் பதட்டத்தில் இருக்கிறார்கள். மும்பை தமிழர் ஒருவரிடம் பேசியபோது, "அ..மலை தமிழ்நாட்டில் தற்போது வேறெந்த பெரிய பொறுப்பும் இல்லாமல் சும்மாதான் இருக்கிறார். அதேபோல் ராஜ் தாக்கரேவுக்கும் பெரிதான அரசியல் செல்வாக்கு இங்கில்லை. எனவே இருவருமே தங்களை அரசியலில் காட்டிக்கொள்வதற்காக இரு மாநில மக்களுக்கிடையே பிளவை உருவாக்குகிறார்கள்'' என்று வேதனைப்பட்டார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/14/thackery-2026-01-14-16-54-30.jpg)