தமிழகத்தின் மணல் ராஜ்ஜியத்தை அ.தி.மு.க ஆட்சியில் கட்டியாண்ட சேகர் ரெட்டியின் சிஷ்யர்களான மூவர் கூட்டணியே இப்போதும் கொடிகட்டிப் பறக்கும் நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், கனிம வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கும் விருதுநகர் மாவட்ட குவாரி உரிமையாளர்கள் சங்கம் அனுப்பிவைத்துள்ள ஒரு கடிதம் கோட்டையில் பரபரப்பை உருவாக்கி வருகிறது.
இதுகுறித்து விருதுநகர் மாவட்ட குவாரி உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் நாராயண பெருமாள்சாமியை தொடர்புகொண்டு நாம் விசா ரித்தபோது, "எங்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள கல் குவாரி உரிமையாளர்கள் தங்களின் பட்டா நிலங்களில் உடைகல், கிராவல், ஜல்லிக்கற் களை வெட்டி எடுத்து விற்பனை செய்ய மாவட்ட ஆட்சியரிடம் 5 ஆண்டுகால குத்தகை உரிமத்தைப் பெற்றுள்ளனர். கனிமங்கள் மேம்படுத்துதல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் சட்டவிதிகளின்படியும், தமிழ்நாடு சிறு கனிமங்கள் விதிகளின்படியும் முறைப்படி இந்த லைசன்ஸை பெற்றுள்ளோம்.
அதன்படி சுரங்கத்துறையின் உதவி இயக்குநரிடம் ஒரு யூனிட்டுக்கு அரசு நிர்ணயித்த தொகையைக் கட்டி, கற்களை அனுப்பும் ஒப்புகை சீட்டுகளைப் பெற்று எந்த பிரச்சனை யுமில்லாமல் பட்டா நிலங்களில் கல் குவாரி பிசினெஸ் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த 16ந் தேதி, அனுப்புகை சீட்டுகளைப் பெறுவதற்காக மாவட்ட சுரங்கத்துறை உதவி இயக்குநர் செல்வ சேகரனை சங்க உறுப்பினர்கள் சந்தித்தனர். அனுப்புகை சீட்டை தர மறுத்து, "புதுக்கோட்டை ராம
தமிழகத்தின் மணல் ராஜ்ஜியத்தை அ.தி.மு.க ஆட்சியில் கட்டியாண்ட சேகர் ரெட்டியின் சிஷ்யர்களான மூவர் கூட்டணியே இப்போதும் கொடிகட்டிப் பறக்கும் நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், கனிம வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கும் விருதுநகர் மாவட்ட குவாரி உரிமையாளர்கள் சங்கம் அனுப்பிவைத்துள்ள ஒரு கடிதம் கோட்டையில் பரபரப்பை உருவாக்கி வருகிறது.
இதுகுறித்து விருதுநகர் மாவட்ட குவாரி உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் நாராயண பெருமாள்சாமியை தொடர்புகொண்டு நாம் விசா ரித்தபோது, "எங்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள கல் குவாரி உரிமையாளர்கள் தங்களின் பட்டா நிலங்களில் உடைகல், கிராவல், ஜல்லிக்கற் களை வெட்டி எடுத்து விற்பனை செய்ய மாவட்ட ஆட்சியரிடம் 5 ஆண்டுகால குத்தகை உரிமத்தைப் பெற்றுள்ளனர். கனிமங்கள் மேம்படுத்துதல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் சட்டவிதிகளின்படியும், தமிழ்நாடு சிறு கனிமங்கள் விதிகளின்படியும் முறைப்படி இந்த லைசன்ஸை பெற்றுள்ளோம்.
அதன்படி சுரங்கத்துறையின் உதவி இயக்குநரிடம் ஒரு யூனிட்டுக்கு அரசு நிர்ணயித்த தொகையைக் கட்டி, கற்களை அனுப்பும் ஒப்புகை சீட்டுகளைப் பெற்று எந்த பிரச்சனை யுமில்லாமல் பட்டா நிலங்களில் கல் குவாரி பிசினெஸ் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த 16ந் தேதி, அனுப்புகை சீட்டுகளைப் பெறுவதற்காக மாவட்ட சுரங்கத்துறை உதவி இயக்குநர் செல்வ சேகரனை சங்க உறுப்பினர்கள் சந்தித்தனர். அனுப்புகை சீட்டை தர மறுத்து, "புதுக்கோட்டை ராமச்சந்திரனின் ஆட்கள் வெளியே இருக் கிறார்கள். அவர்களை பார்த்துவிட்டு வாருங்கள்' எனச் சொல்லியிருக்கிறார் அந்த அதிகாரி.
அவர்களை சங்க உறுப்பினர்கள் பார்த்துள்ளனர். அப்போது, "ஒரு நடை சீட்டுக்கு 300 ரூபா கொடுத்தாதான் அனுப்புகை சீட்டு கொடுக்க அதிகாரியிடம் சொல்லுவோம். நாங்க சும்மா ஒண் ணும் இதை கேட்கலை. ஏற்கனவே ஸ்டாலினுக்கு 500 கோடியும், துரைமுருகனுக்கு 300 கோடியும் கொடுத்திருக்கிறோம். அதுபோக, மாசம் 300 கோடி கட்டியாகணும். உங்ககிட்ட வசூல் பண்ணாத் தானே கட்ட முடியும்? எங்க சூழ்நிலையையும் நீங்க பாருங்க! சந்தோஷமா கொடுங்க! தகராறு பண்ணாதீங்க'ன்னு சொல்லியிருக்காங்க ராமச்சந்திரனின் ஆட்கள் .
இதனை சங்க உறுப்பினர்கள் என் கவனத்துக்கு கொண்டு வந்ததையடுத்து, உதவி இயக்குநரிடம் நான் பேசினேன். அப்போ அவர், "தலைவரே மேலிருந்து உத்தரவு வருது. அதனால, ஒரு நடை சீட்டுக்கு 300 ரூபாய் கொடுத்துதான் ஆகணும்' என்றார். அதாவது, புதுக்கோட்டை ராமச்சந்திரனின் ஆட்கள் தினமும் இங்கு வராங்க. அவர்களிடம் கொடுக்க சொல்கிறார். கொடுக்கலைன்னா பெர்மிட்டை நிறுத்தத்தான் வேண்டியிருக் கும்னு சொன்னார். உடனே நான், "நீங்க ஏ.டி.யா (உதவி இயக்குநர்) இருக்கீங்களா? புரோக்கரா இருக்கீங்களா? நீங்க எதுக்கு வசூல் செய்து கொடுக் கிறீங்க?' என கேட்டேன். அதற்கு அவர், "உங்களுக்குத் தெரியாதா? நான் என்ன பண்ணட்டும்? எனக்கு அவங்கதான் வேண்டும்' என்று சொல்லி, அனுப்புகை சீட்டை தர மறுத்துவிட்டார்.
இப்படிப்பட்ட நிலையில், முறைப்படி லைசன்ஸ் எடுத்து அதுவும் நம்முடைய பட்டா நிலங்களில் குவாரி நடத்த இவனுங் களுக்கு எதுக்கு ஒரு நடைக்கு 300 ரூபாய் நாம் தரணும்? இவனுங் களுக்கும் நமக்கும் என்ன சம்மந்தம்? ஆட்சியாளர்களுக்கு இவங்க பணம் கொடுத்தாங் களா? அவங்க கேட்டு வாங்கினாங்களா?ன்னு நமக்குத் தெரியாது. ஆனா, ராமச்சந்திரனின் ஆட்கள் அப்படிச் சொன்னதையும், மாவட்டத்தில் கல்குவாரி தொழில் நடத்த முடியாமலிருப்பதையும், சங்க உறுப்பினர்கள் பணம் தர மறுப்பதால் லைசன்ஸை ரத்து செய்வோம் என மிரட்டப் படுவதையும் விவரித்து முதல்வர் ஸ்டாலினுக்கும் அமைச்சர் துரைமுருகனுக்கும் புகார் அனுப்பு வோம் என சங்க உறுப்பினர்கள் எல்லோரும் வலியுறுத்தினர். அதன்படி உறுப்பினர்கள் தனித் தனியாக பதிவுத் தபாலில் ஆட்சியாளர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். சங்கத்தின் சார்பில் நானும் பதிவுத் தபாலில் புகார் கடிதம் அனுப்பி யிருக்கிறேன். நடவடிக்கை எடுக்கிறார்களான்னு பார்ப்போம்'' என்றார். ‘’
இதற்கிடையே, தமிழக கல் குவாரி உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் கடந்த வாரம் குற்றாலத்தில் நடந்தது. அதில், தமிழகத்திலுள்ள ஒவ்வொரு மாவட்ட கல் உரிமையாளர்கள் சங்கத்தினர் அனைவரும் கலந்து கொண்டனர். அப்போது, ஒவ்வொரு மாவட்டத் திலும் இதே பிரச்சனை எழுந்திருப்பதை விரிவாக விவாதித்திருக்கிறார்கள்.
இதுகுறித்து நாம் விசாரித்தபோது, "அரசாங்கத்தின் சட்ட விதிகளின்படிதான் லைசன்ஸ் பெற்று கல்குவாரி தொழில் செய்கிறோம். அரசுக்குரிய தொகையையும் கட்டி விடுகிறோம். இடையில் நாட்டாமை செய்ய இவர்கள் (மணல் ராஜாக்கள்) யார்? சட்டத்திற்கு விரோதமாக நடக்கும் போதைப் பொருள் மற்றும் பாலியல் தொழில்களில் கூட முதலீடுகள் இருக்கிறது; உழைப்பு இருக்கிறது; வர்த்தக எத்திக்ஸ் இருக்கிறது. ஆனால், இவைகள் எதுவுமே மணல் ராஜாக்களின் தொழிலில் இல்லை. எந்த ஒரு வர்த்தக எத்திக்ஸிலும் வராத இவர்களின் தொழிலில் முதலீடும் கிடையாது. முறைப்படி யாரோ லைசன்ஸ் வாங்கி தொழில் நடத்துவான். அதில் இவர்கள் புகுந்து, ஒரு நடைக்கு 300 ரூபாய் கொடுக்கணும்னு மாமூல் வசூல் பண்ணுவாங்களா? கொடுமை சார் ! கிராவல், சவுடு, கல் குவாரி விவகாரங்களில் ஆட்சியாளர்களின் பெயரைச் சொல்லி நடக்கும் வில்லங் கத்தை தி.மு.க. அரசு இரும்புக்கரம் கொண்டு நசுக்க வேண்டும். இல்லையெனில் மிகப்பெரிய கெட்டபெயர் ஆட்சிக்கு ஏற்படும்''‘என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.
இதுகுறித்து தமிழக அரசின் புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநர் நிர்மல்ராஜ் ஐ.ஏ.எஸ்.சிடம் கேட்டபோது,’"இதேபோன்ற ஒரு புகார் கடிதம் எங்க ளுக்கும் வந்திருக்கிறது. அதுகுறித்து முழுமையாக விசாரித்து வருகிறோம். மூன்றாம் நபர்களின் தலையீடு கள் இருக்கிறதா? என்பதும் விசாரிக்கப் படுகிறது. ஆட்சிக்கு கெட்ட பெயரை ஏற் படுத்த யார் முயற்சித்தாலும் அதை அனு மதிக்க முடியாது'' என்கிறார் உறுதியாக.
இது குறித்து கருத்தறிய புதுக் கோட்டை ராமச்சந்திரனை தொடர்பு கொண்டபோது, ஏர்போர்ட்டில் இருப்ப தாகவும், பிறகு கூப்பிடுவதாகவும் தெரி வித்தார். மீண்டும் நாம் தொடர்பு கொண்டபோது, "முக்கிய வேலைகளில் இருக்கிறேன், கூப்பிடுகிறேன்'' என்றார். அவர் விளக்கம் அளித்தால் வெளியிட தயாராக இருக்கிறோம்.
இந்த நிலையில், கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது அ.தி.மு.க. தலைவர் களின் உறவுகளை அந்தந்த மாவட்டத்தில் பொறுப்பாளர்களாக வைத்து தொழிலை சிறப்பாக நடத்திவந்த மணல் ராஜாக்கள், தி.மு.க. ஆட்சியில் ஏற்பட்டிருக்கும் இத்தகைய இடையூறுகளைத் தவிர்க்க, அதே பாணியை பின்பற்றலாமா எனவும் ஆலோசிப்பதாகத் தெரிகிறது.
இதற்கிடையே, தமிழகத்தில் லாட்டரியை கொண்டு வர அத்தொழி லின் ஆகப்பெரிய தொழிலதிபராக இருக்கும் குடும்பத்தினர், தி.மு.க ஆட்சி அமைந்ததும், தேர்தல் நேரத்தில் தி.மு.க. வுக்கு கொடுத்த நிதியை அடிப்படையாக வைத்து, லாட்டரிக்கான அனுமதி குறித்து மேலிட தலைமையிடம் விவாதித்திருக் கிறார்கள். அப்போது, "தேர்தல் நிதியாக எவ்வளவு கொடுத்தீர்களோ அதைத் திரும்ப வாங்கிக் கொள்ளுங்கள். லாட் டரிக்கு அனுமதி கேட்டு இனி பேசக் கூடாது. மக்களை பாதிக்கும் எதற்கும் அனுமதி கிடையாது' என கறாராக தெரி வித்து, லாட்டரி விவகாரத்துக்கு முற்றுப் புள்ளி வைத்தது மேலிடம். அதேபோல, "அரசுக்கு வருவாய் குறைவாகவும், தனி கும்பலுக்கு வருவாய் அதிகமாகவும், அரசுக்கு கெட்டபெயரை ஏற்படுத்துவது மான குவாரி தொழில் விசயத்திலும் தீர்க்கமான ஒரு முடிவை அரசு எடுக்க வேண்டும். இல்லையெனில் ஒவ்வொரு நாளும் தலைவலிதான்'' என்கிறார்கள் கனிம வளத்துறை அதிகாரிகள்.