Advertisment

விசைத்தறி தொழிலாளர்களின் பேராதரவைப் பெற்றுள்ளோம்! - தி.மு.க. மா.செ. சிற்றரசு நம்பிக்கை!

er

ரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க. கூட் டணிக்கு போட்டியாக அ.தி. மு.க. கூட்டணியும், இரட்டை இலை சின்னத் தோடும், கூட்டணி, கோஷ்டிகளின் ஒருங்கிணைப் போடு களத்தில் இறங்கியுள்ளதால் தேர்தல் சூடு பிடித்துள்ளது. தி.மு.க. தரப்பில் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் பலரும் பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்கியிருப்பதால் தி.மு.க. யள் அ.தி.மு.க. போட்டியாகவேதான் பார்க்கமுடிகிறது.

Advertisment

erode

காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங் கோவனுக்காக வாக்குகள் சேகரிக்க ஈரோட்டுக்குச் சென்றுள்ள தி.மு.க.வின் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர

ரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க. கூட் டணிக்கு போட்டியாக அ.தி. மு.க. கூட்டணியும், இரட்டை இலை சின்னத் தோடும், கூட்டணி, கோஷ்டிகளின் ஒருங்கிணைப் போடு களத்தில் இறங்கியுள்ளதால் தேர்தல் சூடு பிடித்துள்ளது. தி.மு.க. தரப்பில் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் பலரும் பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்கியிருப்பதால் தி.மு.க. யள் அ.தி.மு.க. போட்டியாகவேதான் பார்க்கமுடிகிறது.

Advertisment

erode

காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங் கோவனுக்காக வாக்குகள் சேகரிக்க ஈரோட்டுக்குச் சென்றுள்ள தி.மு.க.வின் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் சிற்றரசுவிடம், "வாக்காளர் களின் எதிர்பார்ப்பும், வரவேற்பும் எப்படியிருக் கிறது?' என்ற கேள்வியை முன்வைத்தோம். "ஈரோடு கிழக்குத் தொகுதியில் அனைத்து சமூகத் தினரும் பரவலாக வசிக்கிறார்கள். இவர்களில் செங்குந்த முதலியார் சமூகத்தினர் மிகுதியாக உள்ளனர். இத்தொகுதியில் விசைத்தறி தான் முக்கிய தொழிலாக இருக்கிறது. முந்தைய ஆட்சி யில், இலவச வேட்டி, சேலை திட்டப்பணிகளை ஈரோடு விசைத்தறி உரிமையாளர்களுக்கு வழங்கியது கிடையாது. முதன்முறையாக, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு தான் இலவச வேட்டி சேலைத் திட்டத்துக்கான தயாரிப்புப் பணிகளை ஈரோடு, திருப்பூர் பகுதி விசைத்தறி உரிமை யாளர்களுக்கு வழங்கியது. அதே போல் மானியமாக வழங்கப்பட்ட மின்சாரம், 800 யூனிட்டுகள் என்பதை 1000 யூனிட்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்பகுதி விசைத்தறித் தொழிலாளர்களுக்கு நான்கு மாத காலத்துக்கு தொடர்ச்சியாக வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இதன்காரணமாக முதல்வர்மீது மிகுந்த நம்பிக்கையையும், ஈர்ப்பையும் ஏற்படுத்தியிருப்பதை, களத்தில் எங்களால் அறிய முடிகிறது. ஜவுளித்துறை மூலமான ஏற்றுமதிகள் நடைபெறும்போது சிற்சில பணிகளை விசைத்தறித் தொழிலாளர்களுக்கும் கொடுக்க வேண்டுமென்று எதிர்பார்க் கிறார்கள். செய்து தருவோ மென்று உறுதியளித்திருக்கிறோம்.

பொதுவாக, ஆட்சியில் இருக்கும் கட்சியினர் மீது ஏதேனும் அதிருப்தியை வெளிப்படுத்துவார் கள். அப்படி எதையும் நாங்கள் சந்திக்கவில்லை. "சென்னையிலிருந்து வந்திருக்கிறோம்... இந்த ஆட்சி எப்படியிருக்கிறது எனச் சொல்லுங்கள்' என்று கேட்போம். பெரும்பாலானவர்கள் ஆட்சி நன்முறையில் இருப்பதாகவே கூறுகிறார்கள். சிலர் மட்டும், இன்னும் நல்லா பண்ணணும் என்று சொல்லும்போது, வரவுள்ள மூன்றாண்டுகளில் மேலும் பலவற்றை செய்து தருகிறோம் என்போம். படித்த பெண்களிடம் பேசும்போது, கல்லூரி மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்குவதைப் பெரிதும் பாராட்டுகிறார்கள். இங்கே விசைத்தறித் தொழிலாளராக வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு தினமும் 300 ரூபாய் தான் சம்பளமாகக் கிடைக்கும். அப்படியான சூழலில், கல் லூரியில் படிக்கும் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் கல்வி உதவித்தொகை அவர்களுக்கு பேருதவியாக இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி, கொங்கு வேளா ளர்களின் ஆதரவு கிடைக்குமென்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார். நாங்கள் 20 நாட்களுக்கு முன்பே களத்துக்கு வந்துவிட்டதால் எங்களுடைய பிரச்சா ரத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கிறது'' என்றார்.

Advertisment

nkn150223
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe