ஜெ.வின் மரணத்தைப்பற்றி விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணைக் கமிஷனில் அவருக்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் எனப்படும் அகில இந்திய மருத்துவ விசாரணை கழகத்தின் மருத்துவர்கள் அளித்த சாட்சியம் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
2016 செப்டம்பர் 22-ம் தேதி அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட ஜெ.வை 5-ம் தேதியும் 6-ம் தேதியும் எய்ம்ஸ் மருத்துவர்களான அஞ்சன் ட்ரிக்கா, நிதிஷ் நாயர், கில்நானி ஆகியோர் முதன்முறையாக வந்து பார்த்தனர். அவர்களது ஆலோசனைப்படிதான் ஜெ.வுக்கு ட்ரக்கியோஸ்டமி எனப்படும் தொண்டை வழியாக செயற்கை சுவாசம் அளிக்கும் கர
ஜெ.வின் மரணத்தைப்பற்றி விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணைக் கமிஷனில் அவருக்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் எனப்படும் அகில இந்திய மருத்துவ விசாரணை கழகத்தின் மருத்துவர்கள் அளித்த சாட்சியம் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
2016 செப்டம்பர் 22-ம் தேதி அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட ஜெ.வை 5-ம் தேதியும் 6-ம் தேதியும் எய்ம்ஸ் மருத்துவர்களான அஞ்சன் ட்ரிக்கா, நிதிஷ் நாயர், கில்நானி ஆகியோர் முதன்முறையாக வந்து பார்த்தனர். அவர்களது ஆலோசனைப்படிதான் ஜெ.வுக்கு ட்ரக்கியோஸ்டமி எனப்படும் தொண்டை வழியாக செயற்கை சுவாசம் அளிக்கும் கருவி பொருத்தப்பட்டது என்பதுதான் இதுவரை அறியப்பட்ட உண்மை. இதைத் தாண்டி ஒரு புதிய விஷயத்தையும் சிறந்த இதயநோய் மருத்துவத்திற்காக இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ பட்டம் பெற்ற நிதிஷ் நாயக் தனது சாட்சியத்தில் உறுதி செய்திருக்கிறார்.
""பல தொற்று நோய்களால் உடல் பாதிக்கப்பட்டிருந்த ஜெ.வை வெளிநாட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்லலாமா? என அப்பல்லோ மருத்துவர்கள் எங்களிடம் கேட்டனர். அதற்கு பதிலளித்த நான், "நாங்கள் இந்திய மருத்துவர்கள். வெளிநாட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்வது பற்றி நாங்கள் எதுவும் சொல்ல முடியாது' என மறுத்தோம். அதேநேரம் "டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லலாமா' என நாங்கள் கேட்டதற்கு, "ஜெ.வின் உறவினர் என சொல்லப்படும் சசிகலா மறுத்துவிட்டார். உடனே அப்பல்லோ மருத்துவர்கள் அமெரிக்காவிலுள்ள ஒரு மருத்துவமனையுடன் தொடர்பு கொண்டார்கள். அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து லைவ் வீடியோவில் ஜெ.வின் நிலைமையையும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளையும் அந்த மருத்துவமனையில் இருந்த ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்களிடம் காட்டினார்கள். அந்த டாக்டர்கள் அங்கிருந்தபடியே என்னிடம் பேசினார்கள். நாங்கள் அவர்களிடம் விவாதம் செய்தோம். அவர்கள் அப்பல்லோ அளிக்கும் சிகிச்சை முறையில் சில மாற்றங்களை சொன்னார்கள். அந்த மாற்றங்களை செய்வதாக அப்பல்லோ உறுதியளித்தது'' என்றார் "ஜெ.வின் சிகிச்சையில் அமெரிக்க மருத்துவமனை' என எய்ம்ஸ் டாக்டர் நிதிஷ் நாயக் அளித்த சாட்சியம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
""இந்த டாக்டர்களிடம் ஒன்றரை நாட்கள் விசாரணை நடத்திய ஆணையம் ஓர் ஆவணத்தைக் கூட பதிவு செய்யவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனை ஜெ. உடல்நிலை குறித்து வெளியிட்ட அறிக்கைகளில் இடம் பெற்ற மருத்துவர்களின் கையெழுத்து கூட அவர்களுடையதுதானா என பதிவு செய்யவில்லை. "நாங்கள் வந்தோம், பார்த்தோம், அப்பல்லோ ரிக்கார்டுகள் படி ஜெ.வின் உடல்நிலைக்கான ஆலோசனைகள் சொன்னோம். டிசம்பர் 3-ம் தேதி வந்து பார்த்தோம். ஜெ. உயிருடன் இருந்தார். 5-ம் தேதி வந்து பார்த்தோம். ஜெ. இறந்துவிட்டாரென அப்பல்லோ மருத்துவர்கள் எங்களுக்கு சொன்னார்கள். அவரது உடலுடன் இணைக்கப்பட்ட செயற்கை சுவாச கருவியான எக்மோ எந்திரத்தை நிறுத்தி அவரது மரணத்தை அறிவித்தோம்' என்கிற அவர்கள் "3-ம் தேதிக்கும் 5-ம் தேதிக்கும் இடையில் என்ன நடந்தது என்பது எங்களுக்குத் தெரியாது' என சாட்சியமளித்திருக்கிறார்கள்'' என்கிறது ஆணைய வட்டாரம்.
-தாமோதரன் பிரகாஷ்
படம்: குமரேஷ்