டிகர் விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்து முதல் மாநாடு நடத்தி முடிப்பதற்குள் ஆங் காங்கே கட்சியில் பொறுப்பு கேட்டு கோஷ்டிப் பூசல் வெடிக்கத் தொடங்கியிருக்கிறது.

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருந்துவரும் விஜய் கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியைத் தொடங்கினார். அக்டோபர் 27-ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடக்கும் முதல் மாநாட்டுக்கு நிர்வாகிகளுக்கு அழைப்புக் கொடுத்துவருகிறார் புஸ்ஸி.

tvk

கும்பகோணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி யில் புஸ்ஸி ஆனந்த் மேடையில் பேசிக் கொண்டிருக்கும்போது புஷ்பா என்கிற பெண் மேடைக்கு அருகில் ஆவேசமாகச் சென்று, “"என் அண்ணன் தங்கதுரை கும்பகோணம் மாநகர தலைவரா இருக்கிறார். அவர் விஜய் மக்கள் இயக்கத்தில் தஞ்சை மாவட்ட தலைவராக இருந்தார். விஜய் மக்கள் இயக்கம் தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியாக மாற்றப்பட்ட பிறகு தங்கதுரைக்கு உரிய முக்கி யத்துவம் கொடுப்பதில்லை. ஓரங்கட்டிட் டாங்க. விஜய்க்காக சொத்தை விற்று செலவு செய்து மக்கள் இயக்கத்தை வளர்த்தார். எங்க குடும்பமே விஜய் மன்றத்தால கடனாளிகளா மாறிட்டோம். அரசியல் கட்சியானதும் என் அண்ணனை ஓரம்கட்டிட்டாங்க, இது சரியா?''’என ஆத்திரத்தில் பொங்கியெழுந்தார்.

Advertisment

இதனை சற்றும் எதிர்பார்க்காத புஸ்ஸி ஆனந்தின் முகம் வெளிறிப்போனது. சுதாரித் துக்கொண்ட புஸ்ஸி, "சரிமா, கொஞ்சம் அமைதியா பேசுங்க, நிதானமா இருங்க. நீங்க இந்த விஷயத்தை இதற்குமுன் என்னிடமோ, நம் நிர்வாகிகளிடமோ சொல்லியிருக்கீங்களா? நீங்கள் சொல்ல நினைப்பதை மனுவாக எழுதி என்கிட்ட கொடுங்க. நான் என்னன்னு பார்க் கிறேன்''”என்றார். புஷ்பா விடாப்பிடியாக வாக்குவாதம் செய்ய, பொறுமையிழந்த ஆனந்த் மேடையைவிட்டு இறங்கிவிட்டார். இதைத் தொடர்ந்து பாதுகாப்பு பணியிலிருந்த பவுன்சர் கள் புஷ்பாவை அழைத்துச் சென்று கண்ணாடி அறைக்குள் தனியாக உட்காரவைத்தனர். இத னைச் செய்தியாளர்கள் படம் எடுக்கவிடாமல் தடுத்தனர். நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு புஸ்ஸி கிளம்பிய பிறகு, புஷ்பாவை வெளியே அனுப்பினர்.

தங்கதுரையின் சகோதரி புஷ்பா வை அவரது வீட்டில் சந்தித்துப் பேசி னோம், "பூவே உனக்காக படத்தைப் பார்த்துட்டு விஜய் மன்றத்தை துவங் கினேன். நான் பெண்ணா இருந்ததால எனது அண்ணன் தங்கதுரையை நடத்தச் சொன்னேன். சொந்தக் காசை செலவு பண்ணி மன்றத்தை வளர்த்தோம். ஆனா இன்னைக்கு அரசியல் கட்சி ஆனதும் ஆளா ளுக்கு போட்டி போட்டுக்கிட்டு எங்களை ஓரங்கட்டுறாங்க. தஞ்சை யை சேர்ந்த விஜய் சரவணன் மாவட் டத்தையே கட்டுப்பாட்டில் வைக்க முயற்சிக்கிறார். அவருக்கே பொறுப்பு வாங்கித் தந்தவங்க நாங்க. போஸ்டிங் போட நிறைய பேர்கிட்ட காசு வாங்கியிருக்கிறதாவும் கேள்விப்படுறேன். வசூல் வேட்டையை இப்பவே துவங்கிட்டாங்க'' என்கிறார்.

"தங்கதுரையின் சகோதரி புஷ்பா இவ்வளவு ஆவேசமாகப் பேச என்ன காரணம்...'' என தமிழக வெற்றிக் கழக குடந்தை நிர்வாகிகள் சிலரிடம் விசாரித்தோம். "இதுபோன்ற விவகாரம் தமிழகம் முழுக்க இருக்கிறது. ரசிகர் மன்றமாக, மக்கள் இயக்கமாக இருக்கும்போது விஜய்மீது உண்மையான பாசம் வைத்து இயக்கத்தை வளர்த்தவர்கள் பலர் உள்ளனர். சொத்தை இழந்தவர்கள் ஏராளம். தங்க துரை போன்ற மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசும் நபர்களை பதவிக்காக புஸ்ஸிஆனந்திடம் தவறாகச் சொல்லி நெருங்கவிடாமல் செய்துவிடு கின்றனர். உண்மையாக உழைப்பவர்கள் யார், விசுவாசமாக இருப்பவர்கள் யார், என்றெல்லாம் புஸ்ஸி முழுமையாக ஆய்வுசெய்து செயல்படவேண்டும். சொந்த பணத்தில், கடன் வாங்கி செலவு செய்றோம் என்பதை முதலில் தலைவர் உணரவேண்டும்''’என்கிறார்கள்.

Advertisment

கும்பகோணம் மாவட்ட நிர் வாகிகளிடம் விளக்கம் பெற சிலரைத் தொடர்புகொண்டோம். “"தற்போது எதுவும் வேண்டாம்'’என்றவர்கள் “"தங்கதுரை இன்றும் கட்சியின் மாநகர பொறுப்பாளராத்தான் இருக்கார். அவர் இயக்கத்தின் சீனியர் என்பதை யாரும் மறக்கவில்லை. அதேநேரம் மன்றத்திற்காக சொத்தை இழந்தேன் என்பது பொய்'” என் கிறார்கள்.

-செல்வா