வேட்டையிலிருந்து விடுபட்டு தற்சார்புக்காக மனிதன் முதலில் கைவைத்த தொழில் விவசாயம். விவசாயிகள் மண்ணில் கைவைத்தால்தான், அன்னபூரணியே பக்தனுக்கு படியளக்கமுடியும். விளைந்தாலும் பிரச்சனை, விளையாவிட்டாலும் பிரச்சனையென விவசாயிகளின் பிரச்சனைகள் வளர்ந்துகொண்டே வரும் சூழலில், விவசாயிகளின் பிரச்சனைகளைப் பேசுவதற்கு எதிர்க்கட்சியான தி.மு.க. தஞ்சை- திருச்சி சாலையில் கருத்தரங்கம் ஒன்றை நடத்தியது.
ஆகஸ்டு 28-ஆம் தேதி காலை தி.மு.க. விவசாய அணி சார்பில் தஞ்சை தெற்கு மா.செ. துரை.சந்திரசேகரன் தலைமையில் கருத்தரங்கம் தொடங்கியது. மேடையில் கல்லணை கட்டிய கரிகால்சோழன், வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், நெல் ஜெயராமன், முன்னாள் முதல்வர் கலைஞர் படங்கள் அலங்கரித்தன.
மாலை 4 மணிக்கே அரங்கம் தொடங்கியது. வானிலை ஆய்வாளர் தகட்டூர் செல்வகுமார், “""மழைத் தண்ணீரை குளம், குட்டைகளில் சேமிக்கவேண்டும். பண்ணைக் குட்டைகள் அமைத்தாவது தண்ணீரைச் சேமித்து விவசாயம் செய்தால் நிலத்தடி நீரைப் பாதுகாக்கமுடியும்.
வேட்டையிலிருந்து விடுபட்டு தற்சார்புக்காக மனிதன் முதலில் கைவைத்த தொழில் விவசாயம். விவசாயிகள் மண்ணில் கைவைத்தால்தான், அன்னபூரணியே பக்தனுக்கு படியளக்கமுடியும். விளைந்தாலும் பிரச்சனை, விளையாவிட்டாலும் பிரச்சனையென விவசாயிகளின் பிரச்சனைகள் வளர்ந்துகொண்டே வரும் சூழலில், விவசாயிகளின் பிரச்சனைகளைப் பேசுவதற்கு எதிர்க்கட்சியான தி.மு.க. தஞ்சை- திருச்சி சாலையில் கருத்தரங்கம் ஒன்றை நடத்தியது.
ஆகஸ்டு 28-ஆம் தேதி காலை தி.மு.க. விவசாய அணி சார்பில் தஞ்சை தெற்கு மா.செ. துரை.சந்திரசேகரன் தலைமையில் கருத்தரங்கம் தொடங்கியது. மேடையில் கல்லணை கட்டிய கரிகால்சோழன், வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், நெல் ஜெயராமன், முன்னாள் முதல்வர் கலைஞர் படங்கள் அலங்கரித்தன.
மாலை 4 மணிக்கே அரங்கம் தொடங்கியது. வானிலை ஆய்வாளர் தகட்டூர் செல்வகுமார், “""மழைத் தண்ணீரை குளம், குட்டைகளில் சேமிக்கவேண்டும். பண்ணைக் குட்டைகள் அமைத்தாவது தண்ணீரைச் சேமித்து விவசாயம் செய்தால் நிலத்தடி நீரைப் பாதுகாக்கமுடியும். புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கலம், கொத்தமங்கலம், வடகாடு, பேராவூரணி பகுதிகளில் பல ஏரிகளையும், குளங்களையும் இளைஞர்கள் தூர்வாரி தயாராக வைத்திருக்கிறார்கள். அதேபோல ஒவ்வொரு கிராமத்திலும் தண்ணீரைச் சேமிக்கவேண்டும்''’’ என மழைநீர் சேமிப்பின் தேவையை வலியுறுத்தினார்.
அடுத்துவந்த பழநிமாணிக்கம் எம்.பி., “""இந்த ஆட்சியில் பாசன வாய்க்காலை தூர்வாருங்கன்னு சொன்னா... வடிகால் வாய்க்காலை தூர்வாருகிறார்கள். நல்ல மழை பெய்தாலும்கூட அதைச் சேமித்துவைக்க வழிதெரியாமல் தடுமாறுகிறது இந்த அரசு. கஜா புயலில் 60 லட்சம் தென்னை மரங்களும், ஒரு கோடிக்கும் மேல் மரங்களும் சாய்ந்து விவசாயிகளை நிலைகுலையச் செய்தது. அந்த மரங்களைக்கூட இன்னும் அகற்றவில்லை. ஆனால் முதல்வர் தன்னை விவசாயி என்று சொல்லிக்கொள்வது அபத்தமாக உள்ளது''’ என்றார்.
தொடர்ந்து பேசிய கே.என்.நேரு, “""8 வருசமா விவசாயிகள் குறுவைச் சாகுபடி செய்யமுடியல. அப்பறம் எப்படி இதை விவசாயி ஆட்சியென சொல்லமுடியும். எந்த வாய்க்காலையும் காலத்தோடு தூர்வாராமல் தற்போது வாருவதால் விவசாயிகளுக்கு எந்த பலனும் இல்லை''’என்றார்.
காவேரி ரெங்கநாதன், ""விவ சாயிகள் கருத்தரங்கில் வைக்கப் பட்டுள்ள நெல் விதைக் கோட்டை யைப் பார்க்கும்போது ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு விவசாயி கதிரடித்த உடனேயே முதலில் நெல் கோட்டை கட்டிவிட்டுதான் வீட்டுக்கே நெல்லை எடுத்துச் செல்வான். அந்த நெல்தான் விதைக்காக பாதுகாக்கப்படும்.
கால்வாய்கள் தூர்வாரியது தி.மு.க. ஆட்சியில்தான் சிறப்பாக இருந்தது. அதாவது தண்ணீர் நிறுத் தப்பட்டவுடன் முறையாக டெண் டர்விட்டு வேலைகள் நடந்தன. தற்போதைய நிலையில் ஆறுகளைத் தூர்வார முடியாது. காரணம் 30 அடி ஆழம் வரை மணல் அள்ளப்பட்டு விட்டதால் ஆறு கீழே போய் விட்டது. வாய்க்கால் மேலே உள்ளது. அதனால் தண்ணீர் வந்தால் பாசனத் திற்கு போகாது ஆற்றோடுதான் போகும். மணல் கொள்ளையால் வந்த வினை இது. அதுபோல வாய்க் காலைத் தூர்வாரினால் வயல் மேலே போய்விடும். தண்ணீர் கொஞ்சம்கூட பாயாது. அதனால் பழைய பொறி யாளர்கள், வல்லுநர்களைக் கொண்டு ஆலோசனை பெற்று மராமத்துப் பணிகளைச் செய்யவேண்டும்.
டெல்டா மண்ணில் ஒருமுறை தண்ணீர் பாய்ந்தால் 5 நாட்களுக்கு ஈரம் இருக்கும். அதனால்தான் 5 நாளுக்கு ஒரு முறை தண்ணீர் திறக்கும் முறையைக் கொண்டு வந்தார்கள். 3 ஆயிரம் ஆண்டுகளாக நெல் சாகுபடியை மாற்றாத விவ சாயிகள் நம் டெல்டா விவசாயி கள்தான்''’என்றார்.
இறுதியாகப் பேசவந்த மு.க.ஸ்டாலின், ""நிறைவுரை என்று சொன்னார்கள். உரையை மட்டும்தான் என்னால் நிறைவு செய்ய முடியும். விவசாயிகளுக்கு நிறைய செய்ய முடியாமல் போகிறது.
தலைவர் கலைஞர் 1957-ல் குளித்தலையில் முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினரானவுடன் பேசிய கன்னிப் பேச்சுகூட நங்கவரம் விவசாயிகள் பிரச்சினை குறித்ததுதான். அதேபோல நான் தலைமைப் பொறுப்பேற்ற 2-வது ஆண்டின் தொடக்க நாளில் முதல் பேச்சு விவசாயிகளுக்கானது என்பதாக அமைந்து விட்டது.
தஞ்சைக்கு ஆபத்து என் றால் ஒட்டுமொத்த தமிழகத் துக்கே ஆபத்து என்பதை இந்த ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வில்லை. 1968-ல் கலைஞர் பொதுப்பணித்துறை அமைச்ச ராக இருந்தபோது கர்நாடக அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி தண்ணீரைப் பெற்றுக் கொடுத்தார்.
காவிரி மேலாண்மை ஆணையம் முறையாகச் செயல் படவில்லை. அதனால் நம் உரிமைகள் மறுக்கப்படுகிறது. கர்நாடக அரசுக்கும் மக்களுக்கும் உள்ள உணர்வு தமிழ்நாட்டு அரசுக்கு ஏன் வரவில்லை?
தங்களுக்கு ஓட்டுப்போட வில்லை என்பதால் தமிழகத்தை வஞ்சிக்க ஒரு பக்கம் ரசாயனத் தாக்குதல், மறுபக்கம் கலாச்சாரத் தாக்குதலை தமிழகம்மீது தொடுத்துள்ளது பா.ஜ.க.
சர்வதேச சூரிய ஒளி மாநாட்டில் கலந்துகொண்ட மோடி "மண்ணுக்கடியில் உள்ள எரிபொருளை எடுப்பதைவிட சூரிய ஒளியை பயன்படுத்தி எரிபொருள் தயாரிப்பதையே விரும்புகிறேன்' என்று அன் றைக்கு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்துப் பேசினார். அதையேதானே நாங்களும் செய்கிறோம்''’என்றார்.
கருத்தரங்கில் 9 தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்ட நிலையில் கம்யூனிஸ்ட் தோழர்கள் காவிரி யில் இருபதாயிரம் கனஅடி தண்ணீர் திறக்கவேண்டுமென வைத்த கோரிக்கையை ஏற்று 10-வது தீர்மானமாக சேர்த்துக் கொண்டனர்.
-இரா.பகத்சிங்