டத்தல் பஜாரில் இது புதுசு என்றாலும் ஹைடெக் முறையிலான கடத்தல் என்கிறார்கள் கேரள போலீசார், இதனைக் கண்டுபிடிக்க மூளையைக் கசக்கவேண்டும் என்கிறார்கள் ஆச்சர்யமும் அதிசயமுமாய்.

தமிழகத்தின் தென்காசி மாவட்டத்தின் புளியரை வனப்பகுதியை ஒட்டி கேரளாவின் நுழைவாயில் அமைந் துள்ளது. இரண்டு எல்லைப்புறங்களிலும் தமிழக- கேரள அரசுகளின் தலா மூன்று சோதனைச்சாவடிகள் உள்ளன. இந்த எல்லைப்புறங்களை அன்றாடம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இரு மாநில வாகனங்கள் கடந்துசெல்கின்றன. குறிப்பாக, தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு உள்ளங்கால் முதல் உச்சி வரை தேவையான பொருட்கள் வாகனங்களில் செல்கின்றன. இதில் சட்டத்திற்குப் புறம்பான பொருட்களும் கடத்தப்படுவதுண்டு. பல தப்பித்தாலும் சில சிக்குவதுண்டு.

இந்த நிலையில் கேரளாவின் கொல்லம் ரூரல் எஸ்.பி.யான கே.பி.ரவிக்கு, தமிழகம் வழியாக கேரளாவின் ஆரியங்காவுப் பாதையில் வருகிற கார் ஒன்றில் கஞ்சா கடத்தப்படுவதாக தகவல். இதையடுத்து அலர்ட் ஆன எஸ்.பி., தனது க்ரைம் ஸ்குவாடான டி.ஒய்.எஸ்.பி. அசோக்குமார், புனலூர் டி.ஒய்.எஸ்.பி. வினோத்குமார், தென்மலை எஸ்.ஐ. சாலு உள்ளிட்ட போலீஸ் டீமை அனுப்புகிறார்.

mm

Advertisment

இந்த டீம் தமிழக புளியரை எல்லையிலிருக்கும் கேரளாவின் ஆரியங்காவு கோட்டைவாசல் பகுதியில் காலை முதல் மாலை வரை பழியாய் கண்காணிப்பில் இருந்திருக்கிறார்கள். மாலை 6 மணிக்கு மேல் எல்லையைக் கடந்த ஆந்திரப் பதிவு எண் கொண்ட கார் ஒன்றை மடக்கிய டி.ஒய்.எஸ்.பி. அதிலிருந்த இருவரையும் விசாரித்திருக்கிறார். தங்களுக்கு தமிழும் மலையாளமும் தெரியாது, தெலுங்கு மட்டுமே தெரியும் என்றவர்கள், சபரிமலை போவதாக போல்டாகத் தெரிவித்திருக்கின்றனர்.

சபரிமலைக்கு மாலை அணியாமல், சாதாரண உடையில் அவர்களிருந்ததால் சந்தேகப்பட்ட போலீசார், அந்தக் காரின் மூலை முடுக்கெல்லாம் இரண்டு மணிநேரம் ஸ்கேன் செய்தும் சந்தேகப்படும்படியான பொருட்கள் சிக்கவில்லை. சலித்துப்போன டி.ஒய்.எஸ்.பி. தற்செயலாகக் காரின் டோரைத் திறந்தபோது அதன் உட்புறம் ஒன்றின் ஷீட் சமமாக இல்லாமல் மேடும் பள்ளமுமாய் இருப்பது தெரிய, சந்தேகப்பட்டவர் அந்த ஷீட்டை ஆயுதம்கொண்டு ஓப்பன் செய்தபோது டோரின் உள்ளறைகளில் பெரிய பெரிய பொட்டலம் திணிக்கப்பட்டிருப்பது தெரியவர, அதனைப் பிரித்துப் பார்த்தபோது, அத்தனையும் அசல் கஞ்சா. இதுபோன்று காரின் நான்கு டோர்களிலும் மறைத்துவைக்கப்பட்ட 30 பாக்கெட்டுகளில் சுமார் 65 கிலோ கஞ்சா சிக்கியிருக்கிறது.

விசாரணையில், அவர்கள் தெலங்கானா மாநிலம் ஹைதரா பத்தின் ஹயாத் நகரைச் சேர்ந்த செம்பெட்டி பிரம்மையா, சொல சானி ஹரிபாபு என்று தெரிய வந்திருக்கிறது. தெலங்கானாவி லிருந்து கடத்திவரப்பட்ட கஞ்சா, கொல்லம் -திருவனந்தபுரம் ஏஜெண்ட்களுக்கு சப்ளை செய்ய கொண்டுசெல்வதாகத் தெரிவித்திருக்கிறார்கள்.

Advertisment

தெலங்கானாவின் மாவோயிஸ்ட்கள் மறைந்து வாழும் பகுதியில் விளைகிற முதல்தர கஞ்சா இது. இங்குள்ள மார்க்கெட்படி இதன் ஹோல்சேல் விலை ஒரு கோடி. ரீட்டெய்லில் விலை டபுள். போதையில் முதல்தரமான இந்த தெலங்கானா கஞ்சாவிற்கு கொல்லம், திருவனந்தபுரம் பிளாக் சந்தையில் ஹெவி டிமாண்ட். பல கடத்தல்களை நாங்கள் பிடித்தாலும் இதுபோன்ற டெக்னிக் ஸ்மக்ளிங்கை நாங்கள் இதுவரை கண்டதில்லை.

இவர்கள் கடத்திய டெக்னிக்தான் இவர்களை தெலங்கானா மாநிலத்திலிருந்து தமிழகத்தின் பல மாவட்ட செக்போஸ்ட்களை ஈசியாக சந்தேகப்படாமல் கடக்க வைத்திருக்கிறது. மொத்தக் கஞ்சாவையும், காரையும் கைப் பற்றினாலும் பிடிபட்டவர்கள் கூலிக்குக் கடத்துபவர்கள். இதன் டோட்டல் ப்ளானையும் அறிய மேல் விசாரணைக் காகத் தென்மலை காவல் நிலையம் கொண்டுபோவதாகத் தெரிவித்தார் க்ரைம் பிராஞ்ச் டி.ஒய்.எஸ்.பி.யான வினோத்குமார்.

கஞ்சா வேண்டுமானால் லோக்கல் அயிட்டமாக இருக்க லாம். கடத்துறதுன்னு வந்துட்டா இன்டர்நேஷனல் லெவலுக் கான யோசனைகள்தான் என்ற மாபியாக்களின் அணுகு முறை காவல்துறையை திகைக்க வைத்திருக்கிறது.