"மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு' என்ற தலைப்பில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம், சனிக்கிழமை (பிப்ரவரி 21, 2026), திருச்சி -திண்டுக்கல் சாலையில் ஆலம்பட்டிபுத்தூர் பகுதியில் நடைபெற்றது.
திருச்சி பொதுக்கூட்டத்தில், ஐந்து மணிக்கு விழா மேடைக்கு வந்த சீமான், ஒவ்வொரு வேட்பாளரையும் தனித்தனியாக அறிமுகம் செய்தார். அதோடு, தான் காரைக்குடியில் போட்டியிடப் போவதாகவும் கூறினார். முன்னதாக, விழாவை சீமானின் மனைவி கயல்விழி குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார்.
சீமான் அறிமுகப்படுத்தியுள்ள 234 வேட்பாளர்களில் 117 ஆண்கள், 117 பெண்கள் என ஆண் -பெண் சரிசம விகிதத்தில் வேட்பாளர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. 18-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், 50-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் என வேட்பாளர்கள் பெரும் பாலானோர் பட்டப்படிப்பை முடித்தவர்களாகக் களம் காணவிருக்கின்றனர
"மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு' என்ற தலைப்பில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம், சனிக்கிழமை (பிப்ரவரி 21, 2026), திருச்சி -திண்டுக்கல் சாலையில் ஆலம்பட்டிபுத்தூர் பகுதியில் நடைபெற்றது.
திருச்சி பொதுக்கூட்டத்தில், ஐந்து மணிக்கு விழா மேடைக்கு வந்த சீமான், ஒவ்வொரு வேட்பாளரையும் தனித்தனியாக அறிமுகம் செய்தார். அதோடு, தான் காரைக்குடியில் போட்டியிடப் போவதாகவும் கூறினார். முன்னதாக, விழாவை சீமானின் மனைவி கயல்விழி குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார்.
சீமான் அறிமுகப்படுத்தியுள்ள 234 வேட்பாளர்களில் 117 ஆண்கள், 117 பெண்கள் என ஆண் -பெண் சரிசம விகிதத்தில் வேட்பாளர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. 18-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், 50-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் என வேட்பாளர்கள் பெரும் பாலானோர் பட்டப்படிப்பை முடித்தவர்களாகக் களம் காணவிருக்கின்றனர்.
சேலம் மாவட்டம், மேட்டூர் தொகுதியில் வீரப்பன் மகள் வித்யாராணி போட்டியுடவுள் ளார். மேட்டூர் தொகுதியில் வசிக்கும் மக்கள் மத்தியில் வீரப்பனுக்கு இன்றளவும் தனி மதிப்பிருப்பதால், இத்தொகுதியில் இவர் கூடுதல் வாக்குகள் பெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
தற்போது விஜய் கட்சியின் கூட்டங்களில் நடக்கும் உயிர்ப்பலிகள் கடும் விமர்சனத்தை சந்திக்கும் சூழலில், நாம் தமிழர் கட்சியின் மாநாட்டில், குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, மருத்துவ வசதி உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
234 வேட்பாளர்களையும் அறிமுகப்படுத் திய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங் கிணைப்பாளர் சீமான், பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது, "சாதிக்காக, சாமிக்காக, மதத்துக்காக கூடிய தமிழன், தன் மொழிக்காகக் கூடியிருப்பது இங்குதான். ஒரு மனிதனின் பிறப்பு முதல் இறப்புவரை அனைத்தையும் தீர்மானிப்பது அரசு. அந்த அரசைத் தீர்மானிப்பதுதான் அரசியல். அது ஒரு வாழ்வியல். ஆள்மாற்றம், ஆட்சி மாற்றமல்ல, ஆட்சி முறை மாற்றமே எங்கள் இலக்கு.
பசி, பஞ்சம், ஊழல், லஞ்சம், கொலை, கொள்ளை, சாதிய இழிவு, அடக்குமுறை, பெண் ணிய அடிமைத்தனம், பாலியல் வன்கொடுமை, மது, மதப்போதை, இயற்கை வளக்கொள்ளை இல்லா நல்லாட்சி கொடுப்பதே எங்கள் கனவு. மொழி, கலை, பண்பாடு ஆகிய எல்லாவற்றையும் காப்பது தான், இவை அனைத்தும் சேர்ந்ததுதான் தமிழ்த் தேசிய அரசியல்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/23/ntk1-2026-02-23-15-39-58.jpg)
2016-ல் வெறும் 1.1% பெற்றோம்! இப்போது 8.5% வாக்குகளை பெற்றுள்ளோம்! ஒரு அரசியல் கட்சி ஐந்தாவது முறையாக எந்த சமரசமும் செய்யாமல் சீட்டுக்கும், நோட்டுக்கும் பேரம் பேசாமல் தனித்து நிற்கிறது என்றால், அது இந்தியத் துணைக் கண்டத்திலேயே நாம் தமிழர் கட்சி மட்டும்தான். இங்கு கூட்டணி என்பது சீட்டணி, நோட்டணியாக மாறிவிட்டது. ஒரு மொழி சிதைந்து அழிந்தால் அந்த இனத்தை எளிதாக அழித்துவிட முடியும். பயிற்று மொழி, பாட மொழியாகி, விருப்ப மொழியாகி சிதைந்துவிட்டது. தமிழன் ஆளும்போதுதான் தமிழ் மீட்சி ஏற்படும். அதற்காகத்தான் தொடர்ந்து பேசி வருகிறோம். அடுத்தவன் மொழி எப்படி அறிவாகும் என்ற கேள்வி ஏன் நமக்கு எழவில்லை? நாம் இவர்களைப் பார்த்து அரசியல் செய்ய வரவில்லை. நாம் செத்தாலும் பரவாயில்லை, நம் இனம் வாழ வேண்டும் என்ற பிரபாகரனைப் பார்த்து அர சியல் செய்ய வந்தவர் கள். அதற்காகத்தான் அறிவாயுதம் ஏந்திக் களத்துக்கு வந்திருக்கிறோம்.
இந்தித் திணிப்பால் நம் பாட்டன்கள் உயிர் கொடுத்தார்கள். இன்றும் அந்தப் போராட்டம் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. எனவே, வரலாறு தெரியாதவன் எழ வாய்ப்பில்லை. வரலாற்றைப் படிக்காதவன் வரலாற்றைப் படைக்க முடியாது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/23/ntk2-2026-02-23-15-40-18.jpg)
வரலாற்றில் புறக்கணிக்கப்பட்டவர்கள் தங்களின் வரலாற்றை எழுதுவார்கள். நம்முடைய 5,000 ஆண்டுகால அரசியல் வரலாறு என்ன வென்று நமக்கு தெரியுமா? விழிப்புணர்வு தான் விடுதலையின் முதல்படி. அரிசி, பருப்பு, வேட்டி, சேலை எல்லாம் இலவசம். இலவசத்தில் இழக்கும் பணத்தை எங்கிருந்து எடுப்பார்கள் என்பதுதான் கேள்வி. தனியார் பள்ளி, கல்லூரிகளில் தாழ்த்தப்பட்டவர்களுக்கெனத் தனி தங்கும் விடுதி இல்லை. ஆனால், அரசுப் பள்ளி, கல்லூரிகளில் தனித் தங்கும் விடுதி அமைக்கப்படுகிறது என்றால் இதில் யார் சமூக நீதியைக் காப்பது?
எந்த இடத்தில் தி.மு.க.விற்கும், அ.தி.மு.க.விற்கும் மாற்றம் இருக்கிறது? இவர்கள் யாரோடும் சேராமல் நிற்கும் கட்சி நாம் தமிழர் கட்சி. அடுத்தவன் தோள் மேல் நின்று உயரத்தை காட்டுவதை விட தனித்து நிற்கின்றோம். இது, ரசிகர்கள் கூட்டம் இல்லை.. லட்சியக் கூட்டம்'' என்று உணர்ச்சிகரமாகப் பேசினார். சீமான் தொடர்ச்சியாக விவசாயத்தை உயர்த்தியும், ஆடு, மாடு மேய்ப்பதை உயர்த்தியும் பேசிவந்த நிலையில்... அவர் அறிமுகப்படுத்திய வேட்பாளர் களில், யாரையும் விவசாயி என அடையாளப் படுத்தாதது சமூக வலைத்தளத்தில் பலராலும் விமர்சிக்கப்பட்டுவருகிறது.
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us