சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் தண்ணீர் லாரிகள் விபத்துகளை ஏற்படுத்திவருவது வாடிக்கையாகி வருகிறது. கடந்த ஜூன் 18ஆம் தேதி சௌமியா என்ற பத்து வயதுச் சிறுமி தண்ணீர் லாரி விபத்தில் உடல் நசுங்கி உயிரிழந்தது அப்பகுதி மக்களை அதிரவைத்திருக்கிறது.

Advertisment

சென்னை கொளத்தூர் பொன்னியம்மன் மேடு, சாய்ராம் சாலை மூன்றாவது தெருவைச் சேர்ந்த யாமினி- செந்தில் தம்பதியின் குழந்தை சௌமியா. சௌமியா புரசைவாக்கம் பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் படித்துவருகிறார். சௌமியாவை அவரின் அம்மா யாமினி தினமும் பள்ளியில் விட்டுவிட்டு பின்பு அழைத்துவருவது வழக்கம்.

ss

இந்த நிலையில் கடந்த ஜூன் 18-ஆம் தேதி காலை சௌமியாவை பைக்கின் சீட் பின்புறத்தில் அமர வைத்துக்கொண்டு யாமினி வண்டியை ஓட்டிச்சென்றுள்ளார். சாலையிலிருந்த பள்ளத்தில் அவருடைய பைக் இறங்கியேறியபோது தடுமாறிச் சாய்ந்துள்ளது. இதில் யாமினி இடதுபுறம் சரிந்து விழ, பைக் பின்சீட்டில் அமர்ந்திருந்த குழந்தை சௌமியா வலதுபுற சாலையில் விழுந்துள்ளார். பின்புறத்தில் வேகமாக வந்த தண்ணீர் டேங்கர் லாரியின் பின்புற டயரில் சிக்கினார். குழந்தை சௌமியாமீது லாரி டயர், ஏறி இறங்கிய தில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலே உயிரிழந் தார்.

Advertisment

தன் கண்முன்னே குழந்தை நசுங்கி இறந் தது கண்டு மயக்க மடைந்த தாய் யாமினியை செம்பியம் காவல் நிலைய ஆய் வாளர் சிரஞ்சீவி தண்ணீர் தெளித்து முதலுதவி செய்து, போக்குவரத்து ஆய்வாளர் சுடலைமணிக்கு தகவல் கொடுத்தார்.

ff

போக்குவரத்து காவல் போலீசார் தண்ணீர் லாரியை ஓட்டிவந்த ஓட்டுநர் கார்த்தி கேயனைக் கைதுசெய்து வழக்குப் பதிவுசெய்தனர். இந்த விபத்து குறித்த தகவல் சென்னை மாநகர காவல் ஆணையர் அருணுக்கு தெரிய, தீவிரமாக விசாரித்து ரிப் போர்ட் அளிக்கக் கூறியிருந்தார். விபத்து நடந்த நேரத்தில் போக்குவரத்து போலீசார் அந்தப் பகுதியில் பணியில் இல்லை என்பதை அறிந்தவுடன் செம்பியம் போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் சுடலைமணியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மேலும் புளியந்தோப்பு உதவி ஆணையர் சத்தியமூர்த்திமீது துறைரீதி யான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். சென்னை மாநகர காவல் ஆணையர் அருணின் இந்த அதிரடி நடவடிக்கை தமிழக போக்குவரத்து காவல் துறையினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பணிநேரத்தில் பணிகளைச் செய்யாத போலீசார்மீது அதிரடி காட்டிவரும் சென்னை மாநகர காவல் ஆணையர் அருணின் நடவடிக்கை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ss

பள்ளி, கல்லூரி நேரங்களில் அதாவது காலை 7 மணி முதல் 12 மணி வரை மற்றும் மாலை 4 முதல் 8 மணி வரை தண்ணீர் லாரி மற்றும் கனரக வாகனங்களை இயக்க அனுமதி மறுத்து அதற்கு தடைவிதித்துள்ளார் கமிஷனர் அருண். கவனக்குறைவாக விபத்தை ஏற்படுத்தும் வாகனங்களை 100 நாட்கள் வரை விடுவிக்கக்கூடாது என்று போக்குவரத்து, புலனாய்வு காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு துரைப் பாக்கம் பல்லாவரம் ரேடியல் சாலையில் ஐ.டி. பெண் ஊழியர் சுபஸ்ரீ அ.தி.மு.க. கட்சி பேனர் விழுந்து நிலைதடுமாறியதில் தண்ணீர் லாரியில் நசுங்கி உயிரிழந்தார். கடந்த ஆறு மாதத்தில் மட்டும் சென்னை மாநகர காவல் எல்லைக்குள் சிறுமி சௌமியா உட்பட இருவர் பலியாகி யுள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை மாநகர காவல் எல்லைக்குள் மக்கள் அதிகமாக நடமாடும் பீக் அவர்ஸ் நேரத்தில் கனரக வாகனங்கள் வரக்கூடாது என்று உத்தரவுகள் இருந்தாலும் சிலர் போக்கு வரத்து காவல்துறையினருக்கு சன்மானங்களைக் கொடுத்துவிட்டு வருவது வழக்கமாக இருந்துவருகிறது. கமிஷனரின் உத்தரவால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?