மிழ்நாட்டில் இந்த ஆண்டு பருவ மழை பொய்த்து விட்டதால் ஏரி, குளம், குட்டை போன்ற நீர்நிலைகள் தண்ணீ ரின்றி வறண்டு காணப்படுகின்றன. ஆழ்குழாய்க் கிணறு களில்கூட தண்ணீர் இல்லாத நிலை.

பொதுமக்களுக் கும், கால்நடை களுக்கும் குடிதண் ணீர் கிடைக்கவில்லை. கடந்த சில மாதங் களாக புதுக்கோட்டை போன்ற பெருநக ரங்களில் வாரத்திற்கு ஒருநாள் குடிதண் ணீர் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. தற்போது அந்த நிலையும் மாறி 10 நாட்களுக்கு ஒரு நாள் குடிதண்ணீர் விடு கிறார்கள். கிராமங் களிலும் குடிதண்ணீர் பிரச்சினை தலை விரித்தாடத் தொடங்கிவிட்டது. ஆழ்குழாய்க் கிணறு களில் இருந்து தண்ணீர் எடுத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மூலம் குடிநீர் கொடுத்துவந்த நிலையில் ஆழ்குழாய்க் கிணறுகளிலும் நிலத்தடி நீர் குறைந்துவிட்டது ஒரு பக்கமென்றால் மின்சாரப் பற்றாக்குறையும் மற்றொரு காரணமாக உள்ளது. இதனால் சில நாட்கள் பொறுத்திருந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலைக்கு வந்து போராடத் தொடங்கிவிட்டனர்.

ww

புதுக்கோட்டை நகராட்சி உள்பட கிராம ஊராட்சிகளில் குடிநீர் வரி தனியாக வாங்கப்படும் நிலையில், குடிநீர் கொடுக்கவில்லை என்பதால் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக வாழ்வுரிமைக்கட்சி புதுக்கோட்டை சார்பில் நியாஸ் தலைமையில், “"பணமும் இருக்கு,… குடமும் இருக்கு,… குடிக்கிற தண்ணி எங்கிருக்கு?'’ என்ற முழக்கத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் ஆர்ப்பாட்டம் நடந்தது. முறையாக குடிதண்ணீர் கொடுக்கும் வரை தண்ணீர் வரியை ரத்து செய் என்ற கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நகராட்சி அலுவலகத்தில் மனுப் பெட்டியில் போட்டுவிட்டுச் சென்றனர். இந்நிலை புதுக்கோட்டை நகர் மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் நீடிக்கிறது.

Advertisment

தமிழ்நாடு முழுவதும் வனத்துறையின் கட்டுப் பாட்டிலுள்ள காடுகளிலும் நீரின்றி மரங்கள் கருகிவருவதுடன் வனவிலங்குகளும் தாகத்தில் தவித்துவருகின்றன. புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகமாக உள்ள வனப்பரப்புகள், கீரமங்கலம், சேந்தன்குடி, குளமங்கலம், மேற்பனைக்காடு, நெய்வத்தளி, விராலிமலை, பொன்னமராவதி, அரிமளம், திருவரங்குளம் உள்ளிட்ட பல கிராமங்களில் வனத்துறைக்குச் சொந்தமான காப்புக்காடுகளில் பல ஆண்டுகளுக்கு முன்பே பல மரக் காடுகள் அழிக்கப்பட்டு முந்திரி மற்றும் தைலமரக்காடுகளாக பராமரிக்கப்பட்டு வந்தது. இதனால் பல மரக்காடுகளில் வாழ்ந்த முயல், மான், மயில்கள், குருவிகள், பறவைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தன.

ww

தற்போது தைலமரக் காடுகள் அழிக்கப்பட்டு முந்திரி மரக்காடுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இதனால் இந்தக் காடுகளில் வன உயிரினங்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. மேலும் இந்தக் காடுகளில் உள்ள மான் போன்ற உயிரினங்கள் தண்ணீர் தேடி வெளியிடங்களுக்குச் செல்லும்போது நாய்களால் கடித்துக் குதறப்படுகின்றன. தண்ணீர் தேடி சாலையைக் கடக்க முயலும்போது வாகனத்தில் மோதி பலியாகின்றன. புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமயம், கீரமங்கலம் என மாவட்டம் முழுவதும் பல விபத்துச் சம்பவங்களில் மான்கள், மயில்கள் பலியாகி வருகின்றன.

Advertisment

கீரமங்கலம் பகுதியிலிருந்து தண்ணீர் தேடிச் சென்ற ஒரு மான் திசைமாறி பேராவூரணி பக்கம் சென்றுள்ளது. அந்த மானை பொதுமக்கள் பிடித்து வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

வடவாளம் ஊராட்சி செட்டியாபட்டி கிராமத்திற்குள் சென்ற மானை இளைஞர்கள் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கொத்தமங்கலத்தில் தண்ணீர் தேடிச்சென்ற ஒரு மான் தண்ணீரில்லாத கிணற்றுக்குள் விழுந்த நிலையில் கீரமங்கலம் தீயணைப்பு வீரர்களும், வனத்துறையினரும் சேர்ந்து அதனை மீட்டு காயத்திற்கு சிகிச்சை அளித்துவருகின்றனர். கடந்த சில மாதங்களில் மட்டும் புதுக்கோட்டை மாவட்டத்தில் தண்ணீர் தேடிச் சென்ற 5-க்கும் மேற்பட்ட மான்கள் விபத்தில் பலியாகியுள்ளன.

இதைத் தவிர்க்க ஒவ்வொரு காட்டுப் பகுதியிலும் சில இடங்களில் கோடை காலம் முடியும் வரை தண்ணீர்த் தொட்டிகள் அமைத்து வன உயிரினங்களைப் பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும். தண்ணீர் கிடைக்காமல்தான் இப்படி வெளியில் வந்து விபத்துகளில் சிக்கி உயிரினங்கள் பலியாகின்றன. எனவே வனத்துறை கோடை வெயிலில் தாகத்தில் தவிக்கும் மக்களுங்கு ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைப்பதுபோல வன உயிரினங்களின் தாகம் தீர்க்கவும் உயிர் காக்கவும் தண்ணீர்த் தொட்டிகள் அமைக்கவேண்டும் என்கின்றனர் இளைஞர்களும், விவசாயிகளும்.

கடந்த 10 வருடங்களுக்கு முன்பு வனப்பகுதியில் தண்ணீர்த் தொட்டிகள் அமைக்கப்பட்டன. சில நாட்கள் தண்ணீர் வைக்கப்பட்டது. ஆனால் அதன்பிறகு தண்ணீர் வைத்து பராமரிப்பு செய்யவில்லை. புதுக் கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓஓ வடிவத்தில் அமைக்கப்பட்ட தண்ணீர்த் தொட்டிகளில் கூட தண்ணீர்த் இல்லை. வனவிலங்குகளை காக்க தண்ணீர் தொட்டி அமைக்கவேண்டும் என்ற கோரிக்கை வலுத்திருக்கும் நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் தற்காலிகமாக சில தண்ணீர்த் தொட்டிகள் வைக்கப்பட்டு தண்ணீர் நிரப்பப்படுகிறது. இதேபோல தமிழ்நாடு முழுவதும் வனவிலங்குகளுக்காக ஆங்காங்கே தண்ணீர்த் தொட்டிகள் அமைக்கப்பட்டால் வன விலங்குகளை காப்பாற்றலாம். இல்லை என்றால் ஏராளமான வன விலங்குகள் விபத்தில் சிக்கி பலியாகும் நிலை உள்ளது.