பாசனத்துக்கு தண்ணீர்...? -கொந்தளிப்பில் கடலூர் விவசாயிகள்!

s

டலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய பாசன ஏரிகளில் ஒன்று வெ-ங்டன் ஏரி. இந்த வெ-ங்டன் ஏரி, கேட்பாரற்ற நிலையில் கிடக்கிறது. ஏரியின் முழு நீர்பிடிப்புக் கொள்ளளவு 29 அடி. சுமார் 24 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் இதனால் பாசன வசதி பெறும். ஏரியின் கரை வலுவாக இல்லாமல் நீர்க்கசிவு ஏற்படுவதால், பெரிய அளவில் மழை பெய்தும் முழுக் கொள்ளளவுக்கு நீரைத் தேக்க முடிவதில்லை என்கிறார்கள் இப்பகுதி விவசாயிகள்.

கடந்த நவம்பர், டிசம்பரில் பெய்த மழையில் ஏரியில் 24 அடி தண்ணீர் நிரம்பியது. பாசனத்திற்கு திறந்து விடுவது சம்பந்தமாக விவசாயிகளின் கருத்து என்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகளாகவே அறிக்கை தயார் செய்து, அரசிடம் இருந்து உத்தரவு பெற்று 16.12.2023 அன்று கீழ்மட்டக் கால்வாய்க்கு 120 நாட்களுக்கும், மேல்மட்டக் கால்வாயில் ஒரு பகுதிக்கு மட்டும் 60 நாட்களுக்கும் என்று தண்ணீர் திறந்து விடப்பட்டது.

dd

மேல்மட்டக் கால்வாயில

மேல்மட்டக் கால்வாயில் இரண்டாவது கிளையில் கோழியூர், கொட்டாரம், போத்திரமங்கலம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த சுமார் 4000 ஏக்கர் பாசனப் பகுதி உள்ளது. பொதுவாக வெ-ங்டன் ஏரிப் பகுதி விவசாயிகள், மழைக்காலங்களில் மழை நீரை வைத்து நாற்று விட்டு நடவு செய்து விடுவார்கள். பின்னர் ஏரி நீரை வைத்து பயிர் வளர்த்து அறுவடை செய்வார்கள். அதன்படி இந்த ஆண்டும் மழைக்காலத்திலேயே நடவு செய்து களையெடுக்கும் அளவிற்கு நெற்பயிர்கள் வளர்ந்த நிலையில், தற்போது 60 நாட்களுக்கு மட்டும் திறந்துவிடப்படும் தண்ணீரால் பூ வரும்வரை பயிர்கள் வளர்ந்துள்ளன. இன்னும் 60 நாட்களுக்கு தண்ணீர் விடப்பட்டால் தான் அறுவடை வரைக்கும் வளர்த்தெடுக்க முடியும். இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தபோதும் 60 நாட்களில் தண்ணீரை நிறுத்திவிட்டார்கள்.

இதுகுறித்து செங்கமேடு விவசாயி அன்பழகன், "திட்டக்குடி யில் 21ஆம் தேதி, மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜை, இரண்டாவது கிளை வாய்க்கால் விவசாயிகள் சந்தித்து, இன்னும் ஒரு மாதத்திற் காவது எங்கள் பகுதிக்கு தண்ணீர் திறந்து விடுமாறு கேட்டோம். அதற்கு மாவட்ட ஆட்சியர், 'உங்கள் பகுதிக்கு அறுபது நாட்கள் தான் தண்ணீர் வரும். உங்களை யார் நடவு செய்யச் சொன்னது?' என்று எங்களையே குற்றம்சாட்டினார். 1989ஆம் ஆண்டு மழை குறைவு காரணமாக வெ-ங் டன் ஏரி 19 அடி மட்டுமே தண்ணீர் பிடித்தது. அப்போதைய மாவட்ட ஆட்சியர், விவசாயிகளின் கோரிக் கையை ஏற்று, 107 நாட்களுக்கு கீழ் மட்டக் கால்வாய் மற்றும் மேல்மட்ட கால்வாயில் இரண்டாவது கிளை வரை தொடர்ந்து முறை வைத்து பாசனத்திற்கு தண்ணீர் விடுவதற்கு உத்தரவிட்டார். அதன்படி விவ சாயிகள் ஒரு போகம் சாகுபடி செய்தார்கள். ஆனால் இப்போதுள்ள புதிய முறையால், இரண்டாவது கிளை வாய்க்கால் பகுதி விவசாயிகள், தொண்டை வரை பூ வெளிவந்துள்ள நெற்பயிரை விளைவிக்க முடியாதோ என்ற வேதனையில் இருக்கிறோம்'' என்றார்.

dd

கொட்டாரம் விவசாயி மகா ராஜன், "விவசாயத்திற்கு தண்ணீர் இல்லை எனக் கூறிய மாவட்ட ஆட்சியர், வெ-ங்டன் நீர்த்தேக்கத்தில் மூன்று லட்சம் மீன் குஞ்சுகளை வளர்ப்பதற்காக விட்டுள்ளார். அப்படியானால் வெ-ங் டன் ஏறி விவசாயத்திற்கா? மீன் வளர்க்கவா?. இதை ஒருக்காலும் ஏற்றுக்கொள்ள முடியாது. பொதுப் பணித்துறை அதிகாரிகள் எழுத்து மூலம் அளித்த உறுதிமொழியின்படி முறையாக இன்னும் 60 நாட்களுக்கு தண்ணீர் வழங்கவேண்டும். இல்லையென்றால் விவசாயிகள் போராட்டத்தில் இறங்குவோம்'' என்றார் ஆவேசமாக.

புத்தேரி நீர்ப்பாசன சங்கத் தலைவர் பொன்னுசாமி, "இந்த ஆண்டு பாசனத்திற்கு குறைந்த அளவு தண்ணீரை திறந்து விட்டனர். அது எங்கள் பகுதிக்கு வந்து சேரவில்லை. அதனாலேயே நாங்கள் சுமார் 20 ஏக்கர் நிலத்தில் நடவே செய்யவில்லை. இதேபோல் இறப்பாவூர், வடகரை, அருகேரி, தொளார் கிராம விவசாயிகள் பலர் சுமார் 3000 ஏக்கர் நிலங்களில் விவசாயமே செய்ய வில்லை. பொதுப்பணித்துறை அதிகாரிகளின் தவறான நடைமுறையே காரணம். வெ-ங்டன் ஏரி நீர்ப்பகிர்வு சம்பந்தமாக உயர் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டால் பொதுப்பணித்துறை அலுவலகத்திலுள்ள ஆவணங்களை எடுத்துப் பார்க்க வேண்டும். அதில் தெளிவாக தண்ணீர்ப் பகிர்வு புள்ளிவிவரங்கள் உள்ளன'' என்றார்.

தொளார் கிராம விவசாயி ஜீவானந்தம், "வெ-ங்டன் நீர்த்தேக்கத்தின் மொத்த பாசனப்பரப்பு, 24 ஆயிரம் ஏக்கரி-ருந்து 15 ஆயிரம் ஏக்கராகச் சுருங்கிவிட்டது. பழைய பாசனப்பரப்புக் கணக்கையே வைத்து பாசனத்துக்கு தண்ணீர் விட்டால் அது சரிவராது. எங்கள் உரிமையை நிலைநாட்ட விவசாயிகள் ஒன்றுசேர்ந்து உயர்நீதி மன்றத்தில் முறையிடவுள்ளோம்'' என்றார்.

இதுகுறித்து கருத்தறிய மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜுக்கு விரிவாக வாட்சப்பில் செய்தி யனுப்பினோம். அதனை வாசித்தபோதும் பதிலே அனுப்பவில்லை. விவசாயிகளின் பிரச்சனையைத் தீர்க்க அரசாங்கம் முயல வேண்டும்.

nkn060324
இதையும் படியுங்கள்
Subscribe