ண்மைக்காலமாக தண்ணீரில் மூழ்கி இறக்கும் அதிரடிச் சாவுகள் அதிகரித்து வருகின்றன. சமீபத்திய தண்ணீர் மரணங் களுக்கு சில சாட்சிகள்.

விழுப்புரம் மாவட்டம் கரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி 50 வயது கபாலி. இவரது பேரன் ஆறாம் வகுப்பு படிக்கும் ரஞ்சன், பள்ளி விடுமுறையை கழிக்க தாத்தா வீட்டுக்கு வந்திருந்தான்.

waterdeath

Advertisment

பேரனை அழைத்துக்கொண்டு தாத்தா குடும்பத்தினர் அந்த ஊரில் உள்ள குளத் தில் குளிக்கச் சென்றனர். நீச்சல் தெரியாமல் பேரன் தண்ணீரில் தத்தளிக்க... காப்பாற்றச் சென்ற தாத்தாவும் பேரனும் தண்ணீர் மூழ்கி சடலமாக மீட்கப்பட்டனர்,

திண்டிவனம் அரு கிலுள்ளது பெருமுக்கல். இப்பகுதியில் கல்குவாரி பள்ளங்கள் நிறைய உள்ளன. அதில் ஒன்றில் தேங்கியிருக்கும் தண்ணீரில் குளிப்பதற்காக, அதே கிராமத் தைச் சேர்ந்த 60 வயது பூங்காவனம், தனது மகள் வழிப் பேத்திகளான 16 வயது வினோதினி, 14 வயது ஷாலினி, எட்டு வயது பேரன் கிருஷ்ணன் இவர்களோடு அங்கே சென்றார். அவர்கள் குவாரிப் பள்ளத்தில் குளிக்கும்போது, நீச்சல் தெரியாமல் பேரப்பிள்ளைகள் தண்ணீரில் சிக்கித் தத்தளிக்க, அவர்களைக் காப்பாற்ற சென்ற பாட்டியும் சேர்ந்து ஆழத்தில் தத்தளித்தார். நால்வரும் சடலமாக மீட்கப் பட்டனர்.

waterdeath

Advertisment

அண்மையில் திருக்கோவிலூர் அருகே உள்ள வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த ஏழெட்டு பேர், வெவ்வேறு நீர் நிலைகளில் மூழ்கி உயிரை விட்டிருக்கிறார்கள்.

இந்த வரிசையில் கடந்த மாதம், கடலூர் மாவட்டம் குச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த நவநீதா, பிரியா, மோனிஷா, பிரிய தர்ஷினி, சுமிதா, சங்ககிரி, காவியா ஆகிய ஏழு பெண் பிள்ளைகள் அந்தப்பகுதியில் ஓடும் கெடிலம் ஆற்றின் தடுப்பணையில் குளிக்கும் போது, நீச்சல் தெரியாமல் தத்தளித்து... ஒருவரைக் காப்பாற்ற ஒருவர் என ஏழு பேரும் மூழ்கி இறந்தனர்.

இது போல், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர் மாவட்டங்கள் உட்பட தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகளில் ஏராளமானவர்கள் இறந்ததாக தகவல்கள் வந்தபடியே இருக்கின்றன.

www

வயது வித்தியாசம் இல்லாமல் தண்ணீர் உயிரிழப்புகள் தொடர்கின்றன. இவற்றைத் தடுக்க என்ன வழி? இந்தக் கேள்வியோடு சிலரை சந்தித்தோம்.

சென்னை அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழக பேராசியர் மற்றும் பிசிகல் பிட்னஸ் துறையில் ஆராய்ச்சிப் பட்டம் பெற்ற பரம சிவத்தை நாம் சந்தித்த போது....

"ஒரு முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்று செய்திகள் குறைவு. இப்போதுதான் நீச்சல் தெரியாததால் ஏற்படும் மரணங்கள் அதிகரித்துள்ளன. காரணம், முன்பெல்லாம் பள்ளிகளில் என்.சி.சி, என்.எஸ்.எஸ். போன்ற சேவை மற்றும் விளையாட்டு சார்ந்த பாடங் களுக்கு முக்கியத்துவம் இருந்தன. மாணவர் களுக்கு தற்காப்பைச் சொல்லித் தருவார்கள். அதில் நீச்சல் பயிற்சியும் உண்டு. அதேபோல் நிறைய குளங்கள் அப்போது இருந்தன. இப்போது அவையெல்லாம் கட்டிடங்களாக மாறிவிட்டன. அதனால் இப்போது நீச்சல் பழகும் வாய்ப்பு பலருக்கும் இல்லை. இதுதான் தண்ணீர் மரணங்கள் அதிகரிக்கக் காரணம்''’என்கிறார் கவலையாக.

waterdeath

உளுந்தூர்பேட்டையில் யோகா, சிலம்பம்., கராத்தே, போன்ற கலைகளை ஆண், பெண் பிள்ளைகளுக்கு கற்றுத் தந்துவரும் மாஸ்டர் சுமதி நம்மிடம், "எல்லோருக்கும் நீச்சல் பயிற்சி என்பது முக்கியம். அதேபோல் ஒருவர் தண்ணீரில் தத்தளிக்கும்போது, அருகில் இருப்பவர்கள் பதட்டப்படாமல் எச்சரிக்கையுடன் இருந்து அவர்களைக் காப்பாற்றுவதற்கான வழியில் இறங்கவேண்டும். தண்ணீரில் மூழ்கித் தத்தளிப்ப வர்களின் கையைப் பிடித்துக் காப்பாற்ற முயன்றால், நாமும் அவரோடு நீரில் மூழ்க நேரும். அதனால், அவர்களின் தலைமுடியைப் பிடித்து இழுக்க வேண்டும். அல்லது வேட்டி, புடவை போன்ற துணிகளை அவர்கள் பக்கம் வீசி, அவர்கள் அதைப் பற்றிக்கொண்டதும், அவர் களைக் கரைக்கு இழுக்கவேண்டும். இதுவும் ஒரு கலைதான். இங்கு நாங்கள் சிலம்பக்கலை, யோகா, கராத்தே கலையோடு பிள்ளைகளுக்கு தன்னம்பிக்கை, தைரியம், பண்பாடு, கலாச்சாரம் போன்றவற்றையும் கற்றுத் தருகிறோம். சிக்கல்கள் ஏற்பட்டால் அதில் இருந்து எப்படி விடுபட வேண்டும் என்கிற அறிவையும் அவர்களுக்குப் புகட்டுகிறோம். அதேபோன்று அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் எங்களைப் போன்ற ஆசிரியர்களைக் கொண்டு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்தினால் நிலைமை மாறும்''”என்கிறார் உறுதியான குரலில்.

வடலூரைச் சேர்ந்த சிலம்பக் கலைஞர் குமரகுரு நம்மிடம் விரிவாகப் பேசினார். “"தைரியம் தன்னம்பிக்கை அறிவுக்கூர்மையை வளர்க்கும் கலை தான் சிலம்பம். கல்வி போதிக்கும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் சொல்லித் தராததை நாங்கள் இந்தக் கலை மூலம் சொல்லித் தருகி றோம். இதன் மூலம் மன தைரியத்தையும் உடல் ஆரோக்கியத் தையும் மாணவர் கள் பெறுவார்கள். ஒவ்வொரு பெற்றோர்களும் வெறும் ஏட்டுக் கல்விக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை, விளையாட்டுக் கலை போன்றவற்றிற்கும் கொடுக்க வேண்டும்.

waterdeath

ஒவ்வொரு குடும்பத்திலும் வளரும் பிள்ளைகள், இந்த கலையை நிச்சயமாக கற்றுக்கொண்டால், நீச்சலை எளிதாகக் கற்றுக் கொள்ள முடியும். குற்றாலீஸ்வரன் என்ற சாதனை மாணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு நீச்சல் பயிற்சியில் சிறந்து விளங்கி, கடலில் பல கிலோமீட்டர் தூரம் நீந்தி சாதனை படைத்தார். அவரைப்போல் எந்த மாணவனும் நீந்திச் சாதனை புரிய முடியும்.

இப்போது ஒவ்வொரு கிராமங்களிலும் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ள ஏரி குளங்களை மீட்டு, சீர்படுத்தி, தண்ணீர் நிரப்பி பிள்ளைகளுக்கு நீச்சல் கற்றுக் கொடுக்க உள்ளாட்சி பிரதிநிதிகள் முயலவேண்டும்''’என்கிறார் அக்கறையாய்.

ஏரிகுளங்கள் எல்லாம் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதால், இப்போதைய இளம் தலைமுறையினர் நீச்சல் கற்கும் வாய்ப்பு குறைந்துவிட்டது என்பதும், அதனால் எப்போதாவது அரிதாக அவர்கள் நீர் நிலைகளில் இறங்குவதால் மரணத்தைச் சந்திக்கிறார்கள் என்பதும், மிகப்பெரிய கொடுமை.

இந்தநிலை மாற நீர் நிலைகள் புத்துயிர் பெறவேண்டும். கூடவே நீச்சல் பயிற்சியும். இதில் அரசும் தன்னார்வலர்களும் கவனம் செலுத்தி னால் தண்ணீர் மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.