Advertisment

ஸ்டாலின் டேஞ்சரானவரா? கவர்னருடன் பிரதமர் சீக்ரெட் மீட்!

dd

டந்த மே மாதம் ஒன்றிய அரசின் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக சென்னை வந்ததை விட, செஸ் ஒலிம்பியாட்டுக்காக வந்தபோது பிரதமர் மோடியிடம் உற்சாகம் அதிகமாக இருந்தது என்கிறார்கள் பா.ஜ.க.வினர்.

Advertisment

போட்டிகளைத் துவக்கி வைத்துவிட்டு 28-ந் தேதி இரவு சென்னை ராஜ்பவனில் தங்கினார். தமிழக பா.ஜ.க.வின் மையக்குழு உறுப்பினர்கள் (கோர் கமிட்டி), பா.ஜ.க.வின் இரண்டாம் நிலை தலைவர்கள் என இரண்டு குழுக்களாக பா.ஜ.க. நிர்வாகிகள் பிரிக்கப்பட்டிருந்தனர். முதலில் கட்சியின் இரண்டாம்நிலை தலைவர்கள் 13 பேரை சந்தித்தார் மோடி. அவர்களிடம்”கட்சியின் வளர்ச்சிக்காக உழையுங்கள்; உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும்‘’ என்பதை மட்டும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் மோடி.

dd

இதனையடுத்து தமிழக பா.ஜ.க.வின் மையக்குழு உறுப்பினர்கள் அண்ணாமலை, கேசவவிநாயகம், எல்.முருகன், பொன்.ராதா கிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் விவாதித்திருக்க

டந்த மே மாதம் ஒன்றிய அரசின் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக சென்னை வந்ததை விட, செஸ் ஒலிம்பியாட்டுக்காக வந்தபோது பிரதமர் மோடியிடம் உற்சாகம் அதிகமாக இருந்தது என்கிறார்கள் பா.ஜ.க.வினர்.

Advertisment

போட்டிகளைத் துவக்கி வைத்துவிட்டு 28-ந் தேதி இரவு சென்னை ராஜ்பவனில் தங்கினார். தமிழக பா.ஜ.க.வின் மையக்குழு உறுப்பினர்கள் (கோர் கமிட்டி), பா.ஜ.க.வின் இரண்டாம் நிலை தலைவர்கள் என இரண்டு குழுக்களாக பா.ஜ.க. நிர்வாகிகள் பிரிக்கப்பட்டிருந்தனர். முதலில் கட்சியின் இரண்டாம்நிலை தலைவர்கள் 13 பேரை சந்தித்தார் மோடி. அவர்களிடம்”கட்சியின் வளர்ச்சிக்காக உழையுங்கள்; உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும்‘’ என்பதை மட்டும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் மோடி.

dd

இதனையடுத்து தமிழக பா.ஜ.க.வின் மையக்குழு உறுப்பினர்கள் அண்ணாமலை, கேசவவிநாயகம், எல்.முருகன், பொன்.ராதா கிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் விவாதித்திருக்கிறார் மோடி. இரவு 9:15-க்கு ஆரம்பித்த இந்த ஆலோ சனை கிட்டத்தட்ட 2 மணி நேரம் நடந்திருக்கிறது. இதில் பல்வேறு அரசியல் விவகாரங்களை மோடி விவாதித்ததாக சொல்லப்பட்டது.

இது குறித்து பா.ஜ.க. தலைவர்கள் தரப்பில் விசாரித்தபோது, "தமிழகத்தில் பா.ஜ.க.வின் வளர்ச்சி எப்படி இருக்கிறது என பிரதமர் கேட்க, தற்போது 5 சதவீத வளர்ச்சியில் இருக்கும் பா.ஜ.க., நாடாளுமன்றத் தேர்தலின்போது 12 சதவீதமாக வளர்ந்திருக்கும். அதற்கேற்ப எல்லோரும் உழைக்கிறோம் எனச் சொல்லியிருக்கிறார் அண்ணாமலை. அதை ஆமோதிப்பது போல, தமிழகத்தில் பா.ஜ.க. வளராது; வளர்ச்சியும் இருக்காது என ஒரு பிம்பம் இங்கு கட்டமைக்கப் பட்டுள்ளது. ஆனால், அதை உடைக்கும் வகையில் மக்கள் பா.ஜ.க. மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்கிற தகவல் எங்களுக்குக் கிடைத்துக் கொண்டுதானிருக்கிறது எனச் சொல்லியிருக்கிறார் மோடி.

அதேசமயம், நாம் வளர்ந்துக்கிட்டு இருக்கோம் என்ற நினைப்பு உங்களை சோம்பேறியாக்கும். மக்களுடன் நெருக்கமாகப் பழகுங்கள்; அவர்களின் பிரச்சினைகளை காது கொடுத்துக் கேளுங்கள். முடிந்தளவுக்கு அதற்கு தீர்வு காணுங்கள். பரபரப்புகளுக்காக தரப்படும் அறிக்கைகளால் மட்டுமே எந்த மாற்றமும் நடந்துவிடாது. நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்திலிருந்து 20 பா.ஜ.க. எம்.பி.க்கள் டெல்லிக்கு வரவேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார் மோடி. உங்கள் விருப்பம் நிச்சயம் நிறைவேறும் என ஒருமித்த குரலில் சொல்லியிருக்கிறார்கள் மையக்குழுவினர்.

Advertisment

dd

இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து பேச்சு வந்திருக்கிறது. அதற்கு மோடி, நாம் 20 எம்.பி.க்களை பெற வேண்டுமெனச் சொல்லியிருக்கேன். அதற்கான ஸ்ட்ரேட்டஜி வகுக்கப்படுகிறது. அது உங்களுக்கு பிறகு சொல்லப்படும். அதற்கு முன்பாக தாமரை சின்னத்தை ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டு போகச் செய்யுங்கள். கூட்டணி குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டாம். அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.

அ.தி.மு.க.வை பத்தி நீங்கள் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. அவர்களை எப்படி ஹேண்டில் பண்ண வேண்டும் என்று நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். ஆளும் கட்சியான தி.மு.க., சித்தாந்த ரீதியாக பா.ஜ.க.வை எதிர்க்கிறது. ஆனால், அதனை சமாளிக்கும் யுக்தி நமக்குத் தெரியும். சிந்தாந்த ரீதியாக அவர்கள் எதிர்த்தால் அதற்கு நீங்கள் பதில் சொல்வதை தவிருங்கள். அதற்கு மாறாக, தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு எதிராக நடக்கும் அத்யாவசியப் பிரச்சனைகளை, ஊழல்களை ஆதாரப்பூர்வமாக அம்பலப் படுத்துங்கள். அதுதான் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் என க்ளாஸ் எடுத்த மோடி, பா.ஜ.க.வில் நடக்கும் உள்கட்சி அரசியலைக் கண்டித்து விட்டு, அவர்களை அனுப்பி வைத்திருக்கிறார்'' என்று சுட்டிக்காட்டுகிறார்கள் தமிழக பா.ஜ.க.வினர்.

மறுநாள் காலையில் கவர்னர் ஆர்.என். ரவியுடன் காலை உணவை ரசித்து சாப்பிட்டார் மோடி. உணவுக்குப் பிறகு தமிழக அரசு குறித்து கவர்னரிடம் 1 மணி நேரம் விவாதித்துள்ளார். அப்போது, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு, அமைச்சர்களின் செயல்பாடுகள், தனது ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் சட்ட மசோதாக்கள் எனப் பலவற்றை குறிப்பிட்டுள்ளார் கவர்னர். அதில் பாசிட்டிவ்வும் இருந்துள்ளது; நெகட்டிவ் வும் இருந்துள்ளது. குறிப்பாக, தி.மு.க. அமைச்சர்களுக்கு எதிராக பேசப்பட்ட அனைத்துமே நெகட்டிவ் ரகங்கள்தான் என்கிறது விபரமறிந்த ராஜ்பவனுக்கு நெருக்கமான அதிகாரிகள் தரப்பு.

தி.மு.க. அரசின் நிர்வாகம் குறித்து கேட்டறிந்து கொண்ட மோடி, ”இந்த முறை முதலமைச்சர் ஸ்டாலினிடம் நிறைய மாற்றத்தை கவனித்தேன். மம்தா பானர்ஜி (மேற்கு வங்க முதல்வர்), சந்திரசேகரராவ் (தெலுங்கானா முதல்வர்) மாதிரி டேஞ்சரானவர் இல்லை ஸ்டாலின். எதார்த்தமான அரசியல் தலைவர். அதனை இந்தமுறை உணர்ந்தேன் என்று கவர்னரிடம் தெரிவித்திருக்கிறார் பிரதமர் மோடி.

மோடியின் சென்னை பயணத்தில் ஸ்டாலின் காட்டிய நெருக்கம் தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி மலர்கிறதோ என்கிற அச்சத்தை எதிரொலித்த நிலையில், அதனை உடைத்தெறிந்துள்ளது கேரள பத்திரிகையான மனோரமா நடத்திய "இந்தியா 75' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராக ஸ்டாலினின் பேசிய பேச்சு .

nkn030822
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe