கேரளாவில் அக்டோபர் 28-ந் தேதி திங்கள்கிழமை அதிகாலை காட்டுக்குள் நடத்திய தாக்குதலில் ஒரு பெண் உள்பட 4 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று அறிவிக்கப்பட்டது. அவர்களை அடையாளம் காண அவர்களின் உறவினர்களுக்கு தக வல்கள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இதில் மாணிக்கவாசகத்தை அடையாளம் காட்ட திருச்சி சிறையில் இருக்கும் அவரது மனைவி கலா மற்றும் அவரது அக்கா சந்திராவை பரோலில் அனுப்ப வேண்டும் என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கலும் செய்யப்பட்டது. ஆனால் உடல்நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த அவரது மற்றொரு சகோ தரியை அடையாளம் காட்ட அழைத்துச் சென்றனர்.

bbசுட்டுக்கொல்லப்பட்டவர்களில் ஒருவர் கார்த்திக் என்று கூறப்பட்டது. அந்த கார்த்திக் புதுக்கோட்டை மாவட்டம் கல்லூர் கிராமத்தைச் சேர்ந்த முத்து-மீனா தம்பதிகளின் இளைய மகன் என்பது தெரிய வந்தது.

சென்னை நந்தனம் பகுதியில் வசித்து வந்த முத்துவின் மகன்கள் முருகேசனும், கண்ணனும் அடிப்படையில் கம்யூனிஸ்ட் சிந்தனையாளர்களாக இருந்தனர். அந்தப் பகுதியில் முதன்முதலில் டைஃபி கிளையை தொடங்கினார்கள். அதில் 2 வருடங்கள் கிளைச் செயலாளராக இருந்தார் கண்ணன். அந்தப் பகுதி யில் எந்த மாதிரியான பிரச்சனை என்றாலும் முதல் ஆளாக நின்றதால், எந்த வேலையிலும் நீடிக்க முடிய வில்லை. காவிரி பிரச்சனை பெரிதாக எழுந்த போது கர்நாடக கம்யூனிஸ்ட் கள் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்ததால் டைஃபியில் இருந்து முருகேசனும், கண்ணனும் விலகினார்கள்.

2006-ல் திருப்பூரில் எக்ஸ்போர்ட் நிறு வனத்திற்கு வேலைக்கு போன கண்ணனை 2007-ல் 6 பேருடன் நக்சல் என்று பிடித்துச் சென்றனர். அதன்பிறகு நக்சலாகவே மாறி இப்போது சுடப்பட்டு இறந்திருக்கிறார் கண்ணன் என்கிற கார்த்திக். மகனை கடைசியாக பார்த்துவிடலாம் என்று கேரளாவரை சென்று ஏமாற்றத்துடன் திரும்பியுள்ள கார்த்திக்கின் தாயார் மீனாவை அவரது வீட்டில் சந்தித்தபோது...

Advertisment

""பெற்றோர் நாங்க வைத்த பெயர் கண்ணன். ஆனால் இப்ப கார்த்திக் என்று சொல்லுறாங்க. 10 வருசத்துக்கு முன்னால திருப்பூருக்கு வேலைக்குப் போறதா போனான். அப்பறம் அவனை மாவோயிஸ்ட்னு புடிச்சாங்க. அதுக்குப் பிறகு ஒரிசா பக்கம் கொண்டு போனாங்க. அப்பறம் தமிழ் நாட்டுக்குள்ள அவனை அனுமதிக்கல. அதனால் எங்கே இருக்கிறான், எப்படி இருக் கிறான் என்று எங்களுக்கு ஒருதகவலும் தெரியல. எந்தத் தொடர்பும் இல்ல. இப்ப கேரளாவுல காட்டுக்குள்ள நடந்த சண்டையில சுட்டுக் கொன்னுட்டதா சொன்னாங்க. உடனே செவ்வாய்க்கிழமை அங்கே போனோம். "உடலை போஸ்ட்மார்ட்டத்துக்கு கொண்டு போயாச்சு'னு சொல்லி காத்திருக்கச் சொன் னாங்க. கொஞ்ச நேரத்துல என்னை திருப்பி அனுப்பிட் டாங்க. கடைசியில என் மகன் முகத்தைக்கூட எனக்கு காட் டலய்யா''’என்று கதறினார்.

naxal

""ஆனால் அங்கே விசா ரிச்சா... சமையல் செஞ்சுகிட்டு இருந்தவங்களை குண்டு வீசி மயக்கமடைய வச்சு பிடிச்சு வந்து சுட்டு கொன்னுட் டாங்கன்னு சொல்றாங்க தம்பி'' என்றார்.

Advertisment

நீதிமன்றத்தின் அனுமதி பெற்று தனது தம்பி கண்ணன் என்கிற கார்த்திக் உடலை பார்த்துவிட்டு சொந்த ஊருக்கு வந்திருக்கும் முருகேசன் நம்மிடம் பேசியபோது... ""என் தம்பி கண்ணன் வேலைக்காக திருப்பூர் சென்ற இடத்தில் எதிர்பாராமல் அவன் தங்கி யிருந்த அறையில் இருந்தவர் களை நக்சல் என்று கைது செய்தனர். என் தம்பியிடம் இருந்து துப்பாக்கி கைப்பற்றியதாக bbவழக்குப்பதிவு செய்து சிறைக்கு அனுப்பினார் கள். அதன்பிறகு ஒரிசா என்று பல இடங்களுக் கும் அழைத்துச் சென்று கடைசியில் 2010-ல் "பிணையில் வந்தவனை, எங்களுடன் தங்க அனு மதியுங்கள் அவனை திரும்ப வும் அந்தப் பக்கம் போக விடாமல் தடுக்கிறோம்' என்று மன்றாடினோம். ஆனால் போலீசார் திண்டுக்கல் மாவட்டத்தில் காலை, மாலை கையெழுத்துப் போட வைத் தனர்.

"செய்யாத தவறுக்காக தண்டனை அனுபவித்துவிட்டு வீட்டுக்கு வருவதைவிட நக்சலாகவே ஆகிவிடுறேன்'னு சொன்னவன் அப்படியே போயிட்டான். சமூக செயற் பாட்டாளரான என் தம்பி கண்ணனை நக்சல் கார்த்திக்காக மாற்றியது இந்த போலீசும், அரசாங்கமும்தான்''’’என்று வெடித்தார்.

மேலும் அவர் பேசிய போது, ""இப்ப அவன் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வந்தது. அங்கே போனால் சடலத்தை பார்க்க அனு மதிக்கவில்லை. 2 நாட்கள் பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு நீதிமன்றத்தை நாடி அனுமதி பெற்று சடலத்தைப் பார்க்க சென்றேன். ஆனால் அங்கே கிடந்த சடலத்தில் கண்கள் இல்லை. முகம் சிதைக்கப்பட்டிருந்தது.

அதனால் அடையாளம் காண முடியவில்லை. சுட்டுக் கொல்லப்பட்டது என் தம்பி தானா என்ற சந்தேகம் இருக்குது. ஏதோ சதி நடப்பதை அறிகிறேன். அதனால் நீதிமன்றத்தை நாடி சடலத்தை பாதுகாக்கவும், மோதல் நடந்தபோதும், சுட்டுக் கொல்லப்பட்ட பிறகும் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்கள் நடை முறைப்படுத்தப்பட்டதா என்று கேட்டிருந்தோம். முழுமையாக எனக்கு திருப்தி ஏற்பட்ட பிறகே சடலத்தை வாங்குவோம்''’என்கிறார் உறுதியான குரலில்.

-இரா.பகத்சிங்