Advertisment

அலப்பரை மாணவர்களுக்கு அரவணைப்பு ட்ரீட்மெண்ட்! -சபாஷ் டி.ஜி.பி.

students

மீபத்தில் சமூக வலைத்தளங் களில் மாணவர்கள் குறித்த இரண்டு காணொலிகள் வைரல் ஆகின. ஒன்று திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதி அரசுப் பள்ளி மாணவர், ரெக் கார்ட் நோட் கேட்ட ஆசிரியரை ஆபாச வார்த்தைகளால் திட்டி தாக்க முயற்சி செய்யும் காணொலி. மற்றது வேலூர் தொரப்பாடி பள்ளி மாணவர் கள் வகுப்பறையிலுள்ள இரும்பு மேஜை, டெஸ்க், பெஞ்சுகளை முரட் டுத்தனமாக உடைக்க முயலும் காட்சி.

Advertisment

students

எழுத்தறிவித்தவன் இறைவன் என்பார்கள். ஆனால் பள்ளி மீதும், ஆசிரியர்கள் மீதும் மாணவர்களின் மாறிவரும் மனோபாவம் கவலை தருவதாகயிருப்பதை சமூக ஊடகங் களிலும், மக்களின் நேர்பேச்சிலும் காணமுடிந்தது. முக்கியமாக, ஆசிரியர் கள் நடுவே மாணவர்களின் இந்த செயல்பாடுகள் அச்சத்தை ஏற்படுத்தி யுள்ளது. எனினும், இரு சம்பவங்களி லும் சம்பந்தப்பட்ட மாணவர்களை சஸ்பெண்ட் செய்ததுடன், அவர் களுக்கு முறையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

கொரோனாவின் தாக்கத்தால் பல்வேறு தரப்பிலும் பொருளாதார நெருக்கடியால், தனி

மீபத்தில் சமூக வலைத்தளங் களில் மாணவர்கள் குறித்த இரண்டு காணொலிகள் வைரல் ஆகின. ஒன்று திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதி அரசுப் பள்ளி மாணவர், ரெக் கார்ட் நோட் கேட்ட ஆசிரியரை ஆபாச வார்த்தைகளால் திட்டி தாக்க முயற்சி செய்யும் காணொலி. மற்றது வேலூர் தொரப்பாடி பள்ளி மாணவர் கள் வகுப்பறையிலுள்ள இரும்பு மேஜை, டெஸ்க், பெஞ்சுகளை முரட் டுத்தனமாக உடைக்க முயலும் காட்சி.

Advertisment

students

எழுத்தறிவித்தவன் இறைவன் என்பார்கள். ஆனால் பள்ளி மீதும், ஆசிரியர்கள் மீதும் மாணவர்களின் மாறிவரும் மனோபாவம் கவலை தருவதாகயிருப்பதை சமூக ஊடகங் களிலும், மக்களின் நேர்பேச்சிலும் காணமுடிந்தது. முக்கியமாக, ஆசிரியர் கள் நடுவே மாணவர்களின் இந்த செயல்பாடுகள் அச்சத்தை ஏற்படுத்தி யுள்ளது. எனினும், இரு சம்பவங்களி லும் சம்பந்தப்பட்ட மாணவர்களை சஸ்பெண்ட் செய்ததுடன், அவர் களுக்கு முறையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

கொரோனாவின் தாக்கத்தால் பல்வேறு தரப்பிலும் பொருளாதார நெருக்கடியால், தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அரசுப் பள்ளியை நோக்கித் திரும்பும் புதிய மாற்றம் நிகழ்ந்திருக்கும் நிலையில், தமிழக அரசும் அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்தவும், நிதி ஒதுக்கீடு செய்து அரசுப் பள்ளிகளை மேம்படுத்தவும் முன்முயற்சி மேற்கொண்டு வருகிறது.

பள்ளிக்கல்வித் துறை அமைச்ச ரான அன்பில் மகேஷ், இத்தகைய அத்துமீறும் மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை மூலம் கவுன்சிலிங் வழங்கி, அவர்களை முறைப்படுத்த திட்டமிடப் பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இத்தகைய போக்குகள் எதிர் காலத்தில் தொடராமல் இருக்க கல்வித் துறை மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வரும் நிலையில், தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு, மாணவர்களுக்கு அக்கறையுடன் அரசுப் பள்ளிகளின் முக்கியத்துவத்தையும் ஆசிரி யர்களின் முக்கியத்துவத்தையும், மாணவர்களின் நடத்தையிலுள்ள தவறுகளையும் சுட்டிக்காட்டிப் பேசும் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "மாணவர்களுக்கு வணக்கம். இரண்டு காணொலிகளைப் பார்த்தேன். அரசுப் பள்ளி மாணவர்கள் இருக்க, ஒரு ஆசிரியரை குறிப்பிட்ட மாணவர் தாக்க முற்படுகிறார். இன்னொரு காணொலியில் அரசுப் பள்ளி மாணவர்கள் வகுப்பறையில் இருக்கும் இரும்பாலான மேஜையை ரொம்ப சிரமப்பட்டு உடைக்கிறாங்க. பாரதியார் சொன்ன மாதிரி நெஞ்சு பொறுக்கு தில்லையே என்கிற மனநிலையில இந்தப் பதிவை இடுகிறேன்.

Advertisment

students

அரசுப் பள்ளி மாணவர்களே, நானும் அரசுப் பள்ளியில்தான் படித்தேன். நமது பெற்றோர்கள் நம்மை ஏன் அரசுப் பள்ளிக்கு அனுப்பிவெச் சாங்கனு யோசிச்சுப் பார்த்தீங்களா?… அவங்ககிட்ட பெரிய சொத்துக்கள் கிடையாது. குறிப்பிட்டுச் சொல்ற மாதிரி வருமானம் கிடையாது. ஆனா உங்களுக்கு நிறைய சொத்து இருக்கு. நிறைய ஆதா ரங்கள் இருக்கு. நீங்க படிக்கிற அரசுப் பள்ளிகள் தான் உங்க சொத்து. அங்க இருக்கிற விளையாட்டு மைதானங்கள் உங்க சொத்து. வகுப்பறையும் அங்க உள்ள டேபிள் மேஜையெல்லாம் உங்க சொத்து. நான் படிக்கும்போது இதெல்லாம் கிடையாது. தரையில உட்கார்ந்துதான் படிக்கணும்.

இப்ப இந்த வசதியெல்லாம் அரசு செஞ்சு கொடுத்திருக்காங்க. அதை நீங்க உடைக்கிறீங்க. ஆசிரியர் உங்க சொத்து. அவங்களாலதான் நான் காவல்நிலைய தலைமை அலுவலகத்துல உட்கார்ந்திருக்கிறேன். அவங்களாலதான் இந்த உயர் பதவிக்கு வந்திருக்கிறேன். அவர்களைப் பார்த்து மாணவர்கள் கை ஓங்கறாங்க. ஏன் இந்த நிலைமை வந்ததுன்னு எனக்குச் சரியா தெரியலை.

இந்த ஆசிரியர்கள்தான் நமக்கு அறிவியல் கற்பிப்பாங்க. இந்த ஆசிரியர்கள்தான் நமக்கு கணிதம் கற்பிப்பாங்க… இவங்கதான் நமக்கு புவியியல், சமூக அறிவியல் கற்பிப்பாங்க. இந்த ஆசிரியர்கள்தான் கடந்த மூவாயிரம் ஆண்டு மனித சரித்திரம், வரலாற்றைக் கற்றுத் தருவாங்க. கணினி சொல்லித் தருவாங்க. விளையாட்டு சொல்லித் தருவாங்க. அதனால இவங்கதான் நம்ம ஆதாரம். நமது சொத்து. அப்படியிருக்கும்போது, அறிவையும் செயல்திறனையும் நல்ல மனப் பான்மையையும் கற்றுக் கொள்ளவேண்டிய நேரத்தில் இதுபோன்ற வன்முறைச் செயல்களை ஏன் செய்யறீங்க? இது எப்படியிருக்குன்னா,… நம்ம வீட்டை நாமே தீவைச்சுக் கொளுத்தற மாதிரி இருக்கு. நம்ம கை, கால்களையே நாம் வெட்டிப் போடுற மாதிரி இருக்கு.

நமக்கு கை, கால் இருந்தாத்தான், மூளை இருந்தாத்தான் பிற்காலத்தில் வேலை பார்க்க முடியும். உங்களுடைய ஆதாரங்களை நீங்களே அழிக்கிறீங்க. தயவுசெய்து இதுபோன்ற செயல்களைச் செய்யாதீர்கள். பள்ளிக் கூடத்துக்கு ஒரு நோக்கத்தோடு வர்றோம். முழு மனிதனாக, சிந்தனையாளராக வருவதற்கு, ஆற்றல்மிக்கவர்களாக வர, தயார்செய்ய வேண்டிய, பயிற்சியிடம்தான் பள்ளிக் கூடம்.

பள்ளிக்கூடத்தில் வன்முறை செய்வது சட்டப்படி குற்றம். சட்டம் சில பாது காப்புகளை மாணவர் களுக்குக் கொடுத் திருந்தாலும்கூட, இதை ஒரு குற்றமாகத் தான் கருதுகிறார்கள். தயவுசெய்து இந்தக் குற்றத்தை மீண்டும் செய்யாதீர்கள்''’என பொறுமையாக விளக்கு கிறார்.

"ஒருவரது பெரு மைக்கும் சிறுமைக்கும் அவரது செயல்களே உரை கல்' என்றார் வள்ளுவர். பள்ளி மாண வர்கள், ஆசிரியர் களுக்கு எதிராக கைகளை ஓங்கி வைரலாகாமல், தங்கள் பெருமைக்குரிய செயல்களால் வைரலாக வேண்டும்.

nkn300422
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe