பிரதமரின் உடையும் முதல்வரின் சிகையும்!
2021 ஜனவரி 6 -அமெரிக்காவின் தலைநக ரான வாஷிங்டன் டி.சி.யில் (District of Columbia) நமது நாடாளுமன்றத்துக்கு இணையான முக்கியத் துவம் உள்ள கேபிடல் கட்டிடத்தில் யாருமே சற்றும் எதிர்பாராத ஒரு காட்சி... இது உண்மையாகத்தான் நடக்கிறதா என்று உலகமே ஒரு நிமிடம் குழப்பமடைந்த காட்சி. 2000 பேருக்கும் மேல், விதவிதமான உடைகளில், அதில் சிலர் வித்தியாசமான வண்ணங்கள் பூசிக்கொண்டு உள்ளே சென்றனர். பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் ஒன்றுமே புரியவில்லை. "இது நம்ம இடம், வாங்கயா உள்ள இறங்குவோம்'' என்று டாஸ்மாக் திறக்க காத்திருந்த மதுப்பிரியர்கள் போல, தியேட்டர் கதவு திறக்கக் காத்திருந்த அஜித் -விஜய் ரசிகர்கள் போல மிகுந்த வெறியுடன், உற்சாகத்துடன் அத்துமீறி உள்ளே நுழைந்தது அந்தக் கூட்டம். சிலர் கதவை உடைக்க, சிலர் சுவரில் ஏற, விதவிதமாகக் கோஷமிட்டுக்கொண்டு கூட்டம் முன்னேறியது. "அருணாச்சலம்' படத்தில் நட்சத்திர ஹோட்டலில் என்ஜாய் பண்ணும் செந்தில் அன் கோ., போல தங்கள் விருப்பம் போல உலவினர். உள்ளே இருந்த துணை அதிபர் மைக் பென்ஸ் உள்பட செனட் உறுப்பினர்கள் எல்லோரும் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பல மணி நேரங்களுக்குப் பெரும் கலாட்டா நடந்தது. "என்னடா நடக்குது இங்க' என்று உலகமே கவனித்தது. கேபிடல் கட்டடத்தை அந்த கும்பல் கைப்பற்றி நிறைந்திருந்த அந்தக் காட்சி, அந்த ஃப்ரேம் உலக அர சியலை கவனிப்பவர்களால் என்றும் மறக்க முடியாதது. என்னதான் அமெரிக்கா ஒரு ஜனநாயக நாடு என்றாலும் இத்தனை ஜனம் அந்நாட்டின் முக்கிய தளத்தில் நுழைந்து ஆக்கிரமிப்பதை ஜனநாயகம் தாங்காது.
சரி... இப்படி ஒரு சம்பவத்தின் தொடக்கப் புள்ளி எது? நமது அண்ணன் ட்ரம்பின் ஒரு ட்வீட்தான். 2020இல் நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் வென்றார். இதை பொறுத்துக் கொள்ளாத குடியரசு கட்சியின் ட்ரம்ப், அந்
பிரதமரின் உடையும் முதல்வரின் சிகையும்!
2021 ஜனவரி 6 -அமெரிக்காவின் தலைநக ரான வாஷிங்டன் டி.சி.யில் (District of Columbia) நமது நாடாளுமன்றத்துக்கு இணையான முக்கியத் துவம் உள்ள கேபிடல் கட்டிடத்தில் யாருமே சற்றும் எதிர்பாராத ஒரு காட்சி... இது உண்மையாகத்தான் நடக்கிறதா என்று உலகமே ஒரு நிமிடம் குழப்பமடைந்த காட்சி. 2000 பேருக்கும் மேல், விதவிதமான உடைகளில், அதில் சிலர் வித்தியாசமான வண்ணங்கள் பூசிக்கொண்டு உள்ளே சென்றனர். பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் ஒன்றுமே புரியவில்லை. "இது நம்ம இடம், வாங்கயா உள்ள இறங்குவோம்'' என்று டாஸ்மாக் திறக்க காத்திருந்த மதுப்பிரியர்கள் போல, தியேட்டர் கதவு திறக்கக் காத்திருந்த அஜித் -விஜய் ரசிகர்கள் போல மிகுந்த வெறியுடன், உற்சாகத்துடன் அத்துமீறி உள்ளே நுழைந்தது அந்தக் கூட்டம். சிலர் கதவை உடைக்க, சிலர் சுவரில் ஏற, விதவிதமாகக் கோஷமிட்டுக்கொண்டு கூட்டம் முன்னேறியது. "அருணாச்சலம்' படத்தில் நட்சத்திர ஹோட்டலில் என்ஜாய் பண்ணும் செந்தில் அன் கோ., போல தங்கள் விருப்பம் போல உலவினர். உள்ளே இருந்த துணை அதிபர் மைக் பென்ஸ் உள்பட செனட் உறுப்பினர்கள் எல்லோரும் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பல மணி நேரங்களுக்குப் பெரும் கலாட்டா நடந்தது. "என்னடா நடக்குது இங்க' என்று உலகமே கவனித்தது. கேபிடல் கட்டடத்தை அந்த கும்பல் கைப்பற்றி நிறைந்திருந்த அந்தக் காட்சி, அந்த ஃப்ரேம் உலக அர சியலை கவனிப்பவர்களால் என்றும் மறக்க முடியாதது. என்னதான் அமெரிக்கா ஒரு ஜனநாயக நாடு என்றாலும் இத்தனை ஜனம் அந்நாட்டின் முக்கிய தளத்தில் நுழைந்து ஆக்கிரமிப்பதை ஜனநாயகம் தாங்காது.
சரி... இப்படி ஒரு சம்பவத்தின் தொடக்கப் புள்ளி எது? நமது அண்ணன் ட்ரம்பின் ஒரு ட்வீட்தான். 2020இல் நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் வென்றார். இதை பொறுத்துக் கொள்ளாத குடியரசு கட்சியின் ட்ரம்ப், அந்தத் தேர்தல் நேர்மையாக நடைபெறவில்லை என்றும், அமெரிக்க மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள், அமெரிக்காவை மீட்க வேண்டுமென்றும் ஒரு கதையை கிளப்பினார். அரசியல் பதத்தில் சொல்லவேண்டுமென்றால் "நேரேட்டிவ்' (narrative) செட் செய்தார். ட்வீட்டை தொடர்ந்து தன் ஆதரவாளர்கள் மத்தியில் ஆற்றிய உரையிலும் "நீங்கள் எல்லாம் இந்த ஏமாற்று வேலையை பொறுத்துக்கொள்ள மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும். நாம் கேள்வி கேட்க திரள வேண்டிய இடம் எதுவென்று உங்களுக்குத் தெரியும்'' என்று கூடி யிருந்தவர்களைத் தூண்டிவிட்டார். 2021லும் அமெரிக்கா போன்ற ஒரு முன்னேறியதாகக் கூறப்படும் நாட்டிலும் மக்களை இப்படி ஒரு கதையை நம்பவைக்க முடியுமென்றும் அவர்களை தூண்டிவிட முடியு மென்றும் இந்த சம்பவம் சொன்னது.
அமெரிக்கா மட்டுமல்ல உலகமெங்கும் அரசியலில் இந்த காலகட்டம் "நேரேட்டிவ்'களாலும் (narrative) 'பிராண்டிங்' களாலும் (branding), ஸ்ட்ராட்டஜிகளாலும் (strategy) நிரம்பி வழியும் காலகட்டம். ட்ரம்ப் செய்தது போல "நமக்கு ஆபத்து இருக்கிறது, நாம் ஏமாற்றப்படுகிறோம்' என்ற அச்ச உணர்வை எப்போதுமே மக்களிடம் தக்கவைத்து மீட்க வந்த மீட்பராகத் தோன்றி வெல்வது அரசியலின் ஆரம்ப கட்ட தந்திரம். ஆனால் இன்றும் பலனளிக்கும் தந்திரம். ஹிட்லர் முதல் மோடி வரை பயன்படுத்தும் தந்திரம். அதை பரப்பும் வழிமுறைகள் காலத்திற்கு ஏற்ப மாறியிருக்கின்றன. அந்த தந்திரம் மட்டும் போதவில்லை என்பதே இன்றைய நிலை.
அரசியல் சாணக்கியர்கள் எப்போ திருந்தோ இருக்கிறார்கள். சில நேரங்களில் சந்திரகுப்தர்களே சாணக்கியர்களாகவும் இருப்பார்கள். சில நேரங்களில் சாணக்கியர் கள் சந்திரகுப்தர்களாக முயல்வார்கள். அரசியலில் எல்லாமுமே சாதாரணம் தானே! இந்தியாவில் தொழில் நுட்பத்தையும், மக்களின் இணைய பயன்பாட்டையும் பயன்படுத்தி அரசியலில், குறிப்பாக தேர்தலில் வெல்ல வியூகங்களை வடி வமைக்கும் வியூக வகுப்பாளர்கள் பிரபலமானது 2014 தேர்தலில் பா.ஜ.க. பெரும் வெற்றிபெற்று இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றபோதுதான். அந்த வெற்றிக்கு "பீ.கே.' என்றழைக்கப்படும் பிரசாந்த் கிஷோர் மிக முக்கிய காரணமாக இருந்தார் என்று நம்பப்பட்டது. விவா தங்கள் இருந்தாலும் அது பொய் அல்ல. குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடியை இந்தியா நம்பத்தக்க ஒரு பிம்பமாகப் பெரிதாகக் கட்டமைத்தது பிரசாந்த் கிஷோர்தான். ஐக்கிய நாடுகள் சபையின் சில பிரிவுகளில் சுகாதாரம், சமூக முன்னேற்றத்துக்கான திட்டங்கள் வடிவமைக்கும் பணிகளில் இருந்த பிரசாந்த், இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு குறித்த ஒரு ரிப்போர்ட்டை அரசுக்கு அனுப்பினார். அந்த ரிப்போர்ட் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் கவனத்தை ஈர்த்தது, ரிப்போர்ட்டை அனுப்பிய பிரசாந்த், பிற்கால பிரதமர் மோடியின் கவனத்தை ஈர்த்தார். குஜராத்துக்கு அழைத்து நடந்த சந்திப்புகளின் விளைவாக குஜராத்துக்குக் குடிபெயர்ந்தார் பீ.கே. 2011லேயே அங்கு தன் பணிகளை தொடங்கிவிட்டாலும், 2013ல்தான் ஒரு நிறுவனமாக இயங்கத் தொடங்கினார். ஏற்கனவே தேர்தல் வியூகங்கள் குறித்த திட்டங்களோடு மோடியை அணுகியிருந்த சில ஐ.ஐ.எம்., ஐ.ஐ.டி. பட்டதாரிகளுடன் இணைந்து CAG (Citizens for Accountable Governance)என்ற நிறுவனத்தை தொடங்கி னார். பின்னர் அது சில நிர்வாக மாற்றங்களுடன் I-PAC (Indian Political Action Committee)யாக மாறியது.
இந்த இடத்தில் நரேந்திர மோடி குறித்து புரிந்துகொள்ள வேண்டும். அவரது தொடக்க மும், இன்று அவர் அடைந்திருக்கும் உயரத்துக்கும் நடுவிலான தூரம் மிகப்பெரியது. அது அதிர்ஷ்டம் மட்டுமல்ல. அரசியலில் ஜெயிக்க, தேர்தல்களில் ஜெயிக்க எதுவெல்லாம் உதவுமோ, எதுவெல்லாம் தேவையோ அதை தேடித்தேடிப் பயன்படுத்திக்கொள் வார் மோடி. சிந்தித்துப் பார்த்தால் புரியும். இந்தியாவில் தொழில்நுட்பத்தை, சமூக ஊடகங்களை, இணையத் தை ஆரம்ப காலத்திலேயே அரவணைத்து பெரிதாகப் பயன்படுத்திய தலைவர்களில் மோடி முன்வரிசையில் இருப்பார். இத்தனைக்கும் அக்காலகட்டத்தில் காங் கிரஸ் ஆட்சியில் ராகுல் காந்தி தனக்கென ஒரு இளம் படை வைத்திருந்தார். ஆனால், அரசியலை பொறுத்த வரை கூச்ச சுபாவியாகவே இருந்தார். அவ்வப்போது விடுமுறை எடுத்துவிடுவார். மேடைகளிலும் சரி, கட்சியிலும் சரி, முதலிடத்தை எடுத்துக்கொள்ளத் தயங்கினார். ஆனால் மோடியோ புதுப்புது வடிவங்களில் குஜராத்தை ஒரு கனவு நிலம் போல காட்சிப்படுத்தி னார். சிங்கப்பூரை உதாரணமாக சொன்ன அரசியல் வாதிகள் பலரும் குஜராத்தை சொல்லும் அளவுக்கு நம்பவைத்தார். எல்லாம் டெக்னாலஜி! (உண்மை நிலவரம் பிற்காலத்தில் வெளிவந்தது என்றாலும்) உதாரணத்துக்கு, இந்தியாவில் முதன்முறையாக 3D ஹாலோகிராம் எனப்படும் முப்பரிமாண முறையில் குஜராத்தில் பிரச்சாரம் செய்யும் மோடி, அதே நேரத் தில் சென்னை மெரினாவிலும் பிரச்சாரம் செய்தார். அதற்கு அவர் பயன்படுத்திய தொழில்நுட்ப வல்லுனர் யார் தெரியுமா? சுந்தர்.சியின் பல படங்களில் ஒளிப் பதிவாளராகப் பணியாற்றிய யூ.கே.செந்தில்குமார். இவர் லண்டன் சென்று இந்தத் தொழில்நுட்பத்தை கற்றுவந்தவர். இவரை அழைத்து பயன்படுத்தியது மோடியின் டீம். இப்போது வெளியுறவுத்துறை அமைச்சராக இருக்கும் ஜெய்சங்கரை பல ஆண்டுகள் முன்பே அவர் சீனாவில் பணியில் இருக்கும்போதே நோட் பண்ணிவிட்டார் மோடி. தன் அரசியல் கேரியருக்குத் தேவையான அனைத்தையும் தேடி எடுத்துக்கொண்டவர். அப்படி மோடி தேடிப்பிடித்த ஆள்தான் பிரசாந்த் கிஷோரும்.
இன்று பிரசாந்த் கிஷோர் நேரடி அரசியலில் இறங்கிவிட்டார். ரிஷிராஜ் சிங் தலைமையில் I-PAC செயல்படுகிறது. இன்னொரு பக்கம் சுனில், ராபின் சர்மா (ஷோ டைம்), பிரதீப் குப்தா (ஆக்சிஸ் -மை கண்ட்ரி), துஷார் பன்சால் (வார் ரூம்), பார்த்தா பிரதீம்தாஸ் (சாணக்யா) என பல நிறுவனங்கள் இருக்கின்றன. தமிழ்நாட்டிலேயே தி.மு.க.வின் PEN (Populus Empowerment Network), ஆதவ் அர்ஜுனாவின் VOC (Voice of Commons), கௌதம் -முத்து நடத்தும் டெமோஸ் ப்ராஜக்ட் (Demos Project) என பல நிறுவனங்கள் செயல் படுகின்றன. கட்சிகளுக்கு மட்டுமல்லாமல் தனிப்பட்ட தலைவர்களுக்கெனவும் டீம்கள் இயங்குகின்றன. உதயநிதிக்காக சுனில் வேலை செய்கிறார். அ.தி.மு.க. வுக்கு ப்ரமான்யா ஸ்ட்ராட்டஜி நிறுவனமும் டெமோஸ் ப்ராஜக்ட் நிறுவனமும் இயங்குகின்றன. பா.ஜ.க.வுக்கு வாராஹி ரங்கேஷ் வேலை செய்கிறார். விஜய்க்கு, ஜான் ஆரோக்கியசாமியும் ஆதவ் டீமும் பணியாற்றுகின்றன. வாக்களிக்கும் மக்கள் மனதில் தலைவர்களையும், கட்சி களையும் பதிய வைக்க பெரும் படை பணிபுரிகிறது.
இன்று இத்தனை பேர் இருந்தாலும், பல ஆயிரம் கோடி வர்த்தகமாக மாறிவிட்டாலும் இந்தத் தொழி லின் OG -ஒரிஜினல் கேங்ஸ்டர் பிரசாந்த் கிஷோர் தான். அவரது ஸ்டைல் -ஒரு கட்சியை பிரதானப் படுத்துவதைவிட ஒரு தலைவனை மக்கள் மனதில் பதியச் செய்யவேண்டும் என்பதே. இந்திய மக்கள் இன்னும் தங்களுக்கான அரசனை, மீட்பரை, ஹீரோவை தேடுகிறார்கள் என்பதே "பீ.கே.'வின் முதல் நம்பிக்கையாகவும் வியூகமாகவும் இருந்தது. அப்படித் தான் மோடியை ஒரு தலைவனாக, மீட்பராக, மாற்றத் துக்கான தூதுவராக பெரும் பிம்பத்தை கட்டமைக்கத் தொடங்கினார். ஏழைத் தாயின் மகன், தேநீரில் தொடங்கி தேசிய தலைவரானவர் என்ற இமேஜ் எல் லாம் உருவாகின. அந்தப் பணி அவர்கள் தோற்றத்தில் இருந்தே தொடங்கும். தோற்றமே மக்களுக்கு "இவரால் முடியும்' என்ற நம்பிக்கையையும் உறுதியையும் தர வேண்டும் என்றார் பிரசாந்த் கிஷோர். மோடியின் உடையில் தொடங்கி நமது முதல்வர் ஸ்டாலினின் சிகை வரை பல தோற்ற மாற்றங்கள் நடந்தன. கட்சியின் முக்கிய தலைகள், ஓரிரு வியூக வல்லவர்கள், சில எம்.பி.ஏ.க்கள் என கோடி மக்களை மயக்க, நான்கு சுவர் களுக்குள்ளான வார் ரூமில்தான் திட்டங்கள் தீட்டப் படுகின்றன. ஊரையே ஏமாற்றக்கூடிய பல அரசியல் வாதிகளை ஏமாற்றக்கூடியவர்கள் இங்கிருக்கிறார்கள்.
(தொடரும்)
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us