தஞ்சாவூர் மாநக ராட்சி மேயராக சன்.ராமநாதனுக்கு எதிராகக் கட்சித்தலைமைக்கு அனுப்பிய புகார்கள் மீது நடவடிக்கை இல்லாததால், அடுத்தகட்டமாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கும், அமலாக் கத்துறைக்கும் புகார் மனுக் களை அனுப்பவுள்ளதாகக் கூறு கின்றனர் தஞ்சை மாநகர கவுன்சிலர் களும், உடன்பிறப்புக்களும்.
இதுகுறித்து சில கவுன்சிலர்கள் நம்மிடம், "மாநராட்சியில் 51 வார்டுகள் உள்ளன. மேயராவதற்கு முன்புவரை நல்லவராகத்தான் இருந்தார் சன்.ராமநாதன். மேயர் சீட்டில் அமர்ந்தபிறகு அதிகாரம் மற்றும் பணப்புழக்கத்தைப் பார்த்ததும் கட்சிக்காரர்களையும், கவுன்சிலர் களையும் மறந்து போனார். கட்சி கவுன்சிலர்கள் அவரை பார்க்கப் போனால் காத்திருக்க வேண்டும். அதே நேரத்தில் ஒப்பந்தக்காரர்கள் வந்தால் உடனே கதவுகள் திறக்கிறது. வார்டுகளில் ஏதாவது பிரச்சனைன்னா கூட காது கொடுத்துக் கேட்க மாட்டார்.
மேலும், சொந்தக்கட்சியிலுள்ள ஒப்பந்தக்காரர்கள், எம்.பி., எம்.எல்.ஏ. ஆகியோரின் ஆதரவு ஒப்பந்தக்காரர்களுக்கு எந்தப் பணியையும் கொடுப்பதில்லை. மாறாக, வெளியூர் ஒப்பந்தக்காரர் களுக்கு மட்டும் அதிகமான வேலைகள் கொடுப்பதும், அ.தி.மு.க ஒப்பந்தக் காரர்களுக்கு வேலை கொடுப்பதும் ஓயவில்லை. இதனால் ஆளுங்கட்சி வார்டு கவுன்சிலர்களுக்கு எந்தப் பயனும் இல்லை. தேர்தலில் ரூ.2 கோடிக்கு சொத்துக்கள் காட்டியிருந்தார். ஆனால் மேயரான சில வருடங்களிலேயே அருளானந்தம் நகரில் ஒரு சொத்தை தன் மனைவி பெயரில் பதிவு செய்துள்ளார்.
தற்போது, தஞ்சை புறநகர் தட்டாங்கோரை கிராமத்தில் அ.தி.மு.க மாஜி கு.தங்கமுத்து மருமகள் (கண்ணன் மனைவி) ஜெயமாலினி என்பவரின் சொத்துக்களை மேயர் சன்.ராமநாதன் மகன் சஞ்சீத் பெயருக்கு கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி விற்பனை செய்து பத்திரப்பதிவாகி உள்ளது. இந்தப் பகுதியில் 6 பத்திரங்களில் பதிவாகியுள்ளது.
சுமார் 27 ஏக்கர் வரை பட்டா நிலம் வாங்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியிலுள்ள அரசு நிலங்களை 5 ஏக்கருக்கு மேல் ஆக்கிரமிப்பு செய்யவும் திட்டமிட்டுள்ளனர். இந்த சொத்துகளின் மதிப்பு சுமார் ரூ.70 கோடிக்கு மேல் வரும். இப்படியாக, தற்போது சுமார் ரூ.100 கோடிக்கு மேல் சொத்துக்கள் குவிந்துள்ளது. அ.தி.மு.க பிரமுகர் சரவணனோடு நட்பாக இருந்துகொண்டே இந்த சொத்துக்களை வாங்கி வருகிறார். மற்றொரு பக்கம் மேயர் குடும்பத்தினர் பெயரில் எவ்வளவு சொத்துகள் உள்ளது என்பதை ஆர்.டி.ஐ. மூலம் தகவல் கேட்கும் பணியிலும் சிலர் இறங்கிட்டாங்க.
இதுபற்றி கவுன்சிலர்களும், கட்சிக்காரர்களும் தலைமைக்கு பல புகார்கள் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் கட்சிக்குதான் கெட்ட பெயர் வருது. நாங்க கொடுத்த புகாருக்கும் நடவடிக்கை இல்லாததால் அடுத்து விஜிலன்ஸ், அமலாக்கத்துறை என்று புகாரனுப்ப போதிய ஆவணங்களைத் திரட்டிக்கொண்டிருக்கிறோம்'' என்றனர்.
அதேபோல "மாநகரக் கூட்டத்திலும் ஏற்கெனவே எழுதப்பட்டுள்ள தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதாக அறிவித்துவிடுவதால், தி.மு.க. கவுன்சிலர்களே என்று தர்ணா நடத்தியும் பயனில்லை. அ.தி.மு.க. கவுன்சிலர்களோ, எங்கள் வார்டு கோரிக்கையை காது கொடுத்துக் கேட்கக்கூட மாட்டேங்கிறீங்க என்று மாநகரக் கூட்டத்திலேயே சண்டை போடுறாங்க. மேலும், பாதாளச் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டால் அதனை சரிசெய்ய 4 கம்ப்ரஷர் வாகனங்கள் இருந்தன. அதில் 3 பழுதாகி 2 வருச மாச்சு. இப்ப ஒரு வாகனத்தை மட்டும் வைத்து 51 வார்டுகளுக்கும் அடைப்பு எடுக் கணும். ஒரே நேரத்தில் பல இடங்களில் அடைப்பு ஏற்பட் டால் தூய்மைப் பணியாளர்களை இறக்கித்தான் அடைப்பு எடுக்க வேண்டி யுள்ளது. அதனால் ரொம்ப பயமாக உள்ளது'' என்று அடுக்கடுக்காகக் குற்றச்சாட்டு களை அடுக்கினர்.
இந்த புகார்கள் குறித்து மேயர் சன்.ராமநாதன் நம்மிடம், "அரசியல் காழ்ப்புணர்ச்சியில் என்மீது அடுக்கடுக்கான புகார்களை சொல்லிக் கொண்டி ருக்கிறார்கள்.
தலைமைக்கும் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நான் தூயவனாக இருக்கிறேன். தற்போது என் மகன் பெயரில் சொத்துக்களை வாங்கிக் குவித்துவிட்டதாக சொல்வாங்க. நான் வாங்கவில்லை. என் மாமனார் அவருடைய வருமானத்திலிருந்து கடைசிக் காலத்தில் மகள் மற்றும் பேரப்பிள்ளைகளுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று அவரது மகள்(என் மனைவி) பெயரில் 6 ஏக்கர், பேரன்(என் மகன்) பெயரில் 4 ஏக்கர், பேத்தி(என் மகள்) பெயரில் 6 ஏக்கர் என விவசாய நிலங்களை வாங்கிக் கொடுத்திருக்கிறார். மொத்த சொத்துக்களின் அரசு மதிப்பு ரூ.20 லட்சம் தான். அந்த சொத்துகளுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. ஆனால் எனக்கு வேண்டாதவர்கள், நான் சொத்துக்களை வாங்கி விட்டதாக புரளி கிளப்பி வருகின்றனர். நான் எப்போதும் போல மக்களுடன் மக்களாக சாதாரண தி.மு.க தொண்டனாக இருந்து வருகிறேன்'' என்றார்.