ஓய்வுபெற்ற ஆசிரியர்களை பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் பதற வைத்துக்கொண்டிருப்பதாக குற்றச்சாட்டுக் குரல்கள் எழுந்து வருகின்றன.
குறிப்பாக, கடலூர் மாவட்டம் மங்களூர் வட்டாரத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியர் கள் பலரும், கல்வித் துறை வழங்கவேண்டிய பணப் பலன் எதுவும் கிடைக்கவில்லை என்று பரிதவிக்கின்றனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/teachers_10.jpg)
அவர்கள் சார்பில் நம்மிடம் பேசிய, ஓய்வுபெற்ற தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களான மாங்குளம் பன்னீர்செல்வம், சௌரிராஜன், பட்டூர் கருணாநிதி, சிறுமுளை வீரபாண்டியன், சிறுப்பாக்கம் பன்னீர்செல்வம், ராமநத்தம் பிச்சுமணி, ம.புடையூர் வசந்தா, திட்டக்குடி பூலோகம், சண்முகசுந்தரம், பெரங்கியம் கிருஷ்ணன், வாகையூர் ராமசாமி, அடரி கிருஷ்ணசாமி, கொட்டாரம் நாராயணசாமி, மலையனூர் பெரியசாமி, ம.கொத்தனூர் சுப்பிரமணியன், சிறுபாக்கம் பெரியசாமி, நெடுங்குளம். என்.எம்.சுப்பிரமணியன், ரேணுகாதேவி கொடிக்களம் சரோஜா உள்ளிட்டோர்...”"எங்களுக்கு உரிய பணப்பலன் கிடைக்கக்கூடாது என்ற நோக்கத்தில், இங்குள்ள வட்டார கல்வி அலுவலர் மன்னர் மன்னன், நல்லூர் வட்டார கல்வி அலுவலர் ராஜேந்திரன் ஆகிய இருவரும் ஆண்டுக்கணக்கில் முட்டுக்கட்டை போட்டு வருகிறார்கள். இது சம்பந்தமாக உயர் அதிகாரிகளுக்கு பலமுறை முறையீட்டு மனுக்கள் அனுப்பியும், அவர்கள் கண்டுகொள்ளவில்லை''’என்று நொந்துபோய் கூறுகிறார்கள்.
இது மட்டுமல்ல, நல்லூர் ஒன்றியம் கூடலூரைச் சேர்ந்தவர் மறைந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் செல்லப்பெருமாள். இவரது விதவை மகள் பார்வதி, தாய் தந்தை இருவரையும் இழந்து தவித்து வருகிறார். இவர், ஓய்வூதியர் வாரிசுக்கு வழங்கப்பட வேண்டிய குறைந்தபட்ச ஓய்வூதி யம் தனக்கு வழங்குமாறு கேட்டு விண்ணப்பித்த மனு, நல்லூர் தொடக்கக் கல்வி அலு வலகத்தில் முடங்கிக் கிடக்கிறது,.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/teachers2_2.jpg)
ஏற்கனவே தொடக்க கல்வி மாவட்டமாக கடலூர் , விருத்தாசலம் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் 1-6-2018-ல் அரசாணை 10-ன்படி உத்தரவு ஒன்றை வெளியிட்டது கல்வித்துறை. அதன்படி ஏற்கனவே செயல்பட்டு வந்த கடலூர், விருத்தாசலம் இரு தொடக்க கல்வி மாவட்டங்கள் நான்காகப் பிரிக்கப்பட்டன. அதன்படி கடலூர், விருத்தா சலம், வடலூர், சிதம்பரம் என நான்கு கல்வி மாவட்டங் களாகப் பிரிக்கப்பட்டு, மேற்படி நான்கு ஊர்களிலும் அலுவலகம் செயல்பட்டது. ஏற்கனவே கடலூர் மாவட்ட கல்வி அலுவலகத்தில் இருந்த ஓய்வூதியதாரர்கள் மற்றும் பணியில் உள்ள ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட கோப்புகள் மற்றும் கருணை அடிப்படையில் வேலை கேட்டு விண்ணப்பித்த கோப்புகள், கடலூர் அலுவலகத்தில் இருந்ததைப் பிரித்து... சிதம்பரம், வடலூர், அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். அதைச் செய்யாததால் பலரும் உரிய பலன் கிட்டாமல் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து தமிழக ஓய்வுபெற்ற அலுவலர் சங்க பொதுச்செயலாளர் ராமசாமி நம்மிடம், (இவர் எஸ்மா டெஸ்மா சட்டத்தில் சிறைக்கு சென்றவர்)”"ஓய்வு பெற்று வயது முதிர்வின் காரணமாக தங்களின் இறுதிக் காலகட்டத்தில் இருக்கும் ஆசிரியர்களுக்குச் சேரவேண்டிய பணப் பலன் கிடைக்காமல், மனஉளைச்சலுக்கு ஆளாகி வருகிறார்கள். முட்டுக்கட்டை போடும் அலுவலர்களை அதிகாரிகளை எதிர்த்து போராடுவதற்குக்கூட எங்கள் உடலில் தெம்பில்லை. அவர்கள் சம்பந்தப்பட்ட கோப்புகள் ஆண்டுக்கணக்கில் அலுவலக அறைகளில் செல்லரித்துக் கொண்டிருக்கின்றன. உதாரணத்திற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகங்களுக்கு கோப்புகள் சென்று சேராததால், மங்களூர் வட்டாரக் கல்வி அலுவலராக பணி செய்து 2004-ல் ஓய்வு பெற்றவரான லட்சுமணனுக்கு, அரசாணை 207-ன்படி திருத்தப்பட்ட ஓய்வூதிய பணப்பலன் கிடைப்பதற்கான கோப்புகளைத் தயார் செய்வதற்கு முன்பே, அவரும் இறந்துபோனார். தற்போது, அவரது குடும்பத்திற்கும் அந்தப் பணப்பலன் கிடைப் பதற்கான கோப்புகளைத் தயார் செய்ய முடியவில்லை. காரணம் சம்பந்தப்பட்ட கோப்புகள் சிதம்பரம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தில் செல்லரித்துக் கிடக்கிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/teachers1_8.jpg)
அதேபோல், மங்களூர் வட்டாரம் கொரக்கவாடியைச் சேர்ந்த ஆசிரியர் ஐயப்பன் என்பவர் பணியில் இருக்கும் போது இறந்துபோனார். அவரது மனைவி இந்திரா காந்தி கருணை அடிப்படையில் வேலை கேட்டு விண் ணப்பிக்க முடியாமல், பல ஆண்டுகளாக காத்துக் கிடக்கிறார். காரணம்... அவரது கணவர் ஐயப்பன் சம்பந்தப்பட்ட கோப்புகளும் சிதம்பரத்தில் தேங்கிக் கிடக்கிறது. இப்படி சிதம்பரம் -கடலூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவல கங்களில் லாரிகளில் ஏற்றி செல்லக்கூடிய அளவிற்கு கோப்புகள், ஆவணங்கள் பராமரிப்பின்றி தேங்கிக் கிடக்கின்றன. எனவே கல்வித்துறை அதிகாரிகள் அவைகளை முறைப்படி பிரித்து சேர வேண்டிய கல்வி அலுவலகங்களுக்கு போர்க்கால அடிப்படையில் பிரித்து அனுப்ப வேண்டியது காலத்தின் கட்டாயம். இல்லையேல் கோப்புகள் செல்லரித்துப் போகும். இதனால் ஓய்வுபெற்ற பணியில் உள்ள ஆசிரியர் களும் அவர்கள் குடும்பத்தினரும் வரும்காலத்தில் நடுத்தெருவில் தவிக்க வேண்டிய நிலை ஏற்படும். கோப்புகள் மட்டுமல்ல, தங்களுக்குச் சேரவேண்டிய பணப் பலன் கிடைக்கும் கிடைக்கும், என்று ஆண்டுக்கணக்கில் காத்துக் கிடந்து மன உளைச்சலில் கொட்டாரம் நாராயணசாமி, மலையனூர் பெரியசாமி ம.கொத்தனூர் சுப்பிரமணியன் சிறுபாக்கம் பெரியசாமி, நெடுங்குளம் என்.எம். சுப்பிரமணியன்ஆகிய ஐந்துபேர் இறந்துபோய், அவர்கள் உடலும் மண்ணுக்குள் செல்லரித்துவிட்டது. இன்னும் அவர்களுக்கான பணப்பலன் மட்டும் கிடைக்கவில்லை. இறந்துபோன குடும்பத்தினரும் இன்னும் உயிரோடு இருப்பவர்களும் எப்போது நீதி கிடைக்கும் என்று ஏக்கத்தோடு காத்துக்கிடக்கிறார்கள்.
இதுகுறித்து தமிழக முதல்வரின் சிறப்பு பிரிவு உட்பட சம்பந்தப்பட்ட பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் அனைவருக்கும் மனுக்கள் அனுப்பிக்கொண்டே இருக்கிறோம். இப்படி பலபேர் பாதிக்கப்பட்டு தவித்து வருகிறார்கள். இப்படி வயது முதிர்ந்தவர்களைக் கூட வாட்டி வதைக்கலாமா கல்வித்துறைஅலுவலர்கள்''’என்று கோபத்துடன் கேள்வி எழுப்புகிறார்.
கடலூர் மாவட்டத்திலுள்ள மங்களூர், நல்லூர் வட்டார தொடக்கக் கல்வி அலுவலகங்களில் மட்டும் இப்படி முட்டுக்கட்டை ஏன் என்று கேள்வி எழுப்புகிறார்கள் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் .
இதுகுறித்து மங்களூர் வட்டார உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மன்னர் மன்னனிடம் நாம் கேட்டபோது, "இறந்துபோன சுப்பிரமணியனுக்கு, திட்டக்குடி கருவூலம் மூலம் அவரது வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்ட அரியர் பணத்தை, ஏனோ கருவூல அலுவலர்களே மீண்டும் எடுத்துக்கொண்டனர். இதுகுறித்து திட்டக்குடி கருவூல அதிகாரிகள்தான் முடிவு செய்ய வேண்டும். ஓய்வுபெற்ற ஆசிரியர்களின் பதவி உயர்வு, ஈட்டிய விடுப்பு சம்பந்தமான பணப்பலன் கோப்புகளை ஏன் அனுப்பவில்லை என்ற காரணம் குறித்து, தகவல்பெறும் உரிமை அடிப்படையில் அவர்கள் சங்கத்தின் மூலம் எங்களிடம் தகவல் கேட்டிருந்தனர். அதுகுறித்து பள்ளி கல்வித்துறை இயக்குனர் எங்களுக்கு அனுப்பிய உத்தரவை அவர்களுக்கு அனுப்பி வைத்துவிட்டோம்''’என்று அலட்சியமாகக் கூறினார்.
பள்ளிக் கல்வித்துறையில் பல சீர்திருத்தங்களை மேற்கொண்டுவரும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தங்கள் பிரச்சினைக்கும் தீர்வு காண்பார் என நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள், ஓய்வூதியப் பணப் பலனுக்காக அல்லாடும் ரிடையர்டு ஆசிரியர்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-12/teachers-t.jpg)