டந்து முடிந்துள்ள இடைத்தேர்தலில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை அ.தி.மு.க. கைப்பற்றி யிருந்தாலும் ஆட்சி மாற்றத்திற்கான ஆப்ரேசனை தி.மு.க. கையிலெடுத்திருப்பதாக கிடைத்திருக்கும் தகவல்களால் அப்-செட்டாகியிருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி !

stalinஇடைத்தேர்தல் நடந்த 22 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றிபெறும் என்கிற திடமான நம்பிக்கையில் இருந்தார் மு.க.ஸ்டாலின். முழுமையான வெற்றியை தி.மு.க. கைப்பற்றினால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதியாகிவிடும் என தி.மு.க.வினர் மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த எதிர்க்கட்சியினரும் எதிர் பார்த்தனர். அ.தி.மு.க. தலைவர்களி டம் கூட, இடைத்தேர்தல் முடிவு களால் ஆட்சி மாற்றம் வந்து விடுமோ என்கிற அச்சம் இருக்கவே செய்தது.

அதற்கேற்ப நாடாளுமன்றத் துக்கு ஒரு தேர்தல் அறிக்கையை யும் இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளுக்கான ஒரு தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டது தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கொடுக் கப்பட்ட சில உத்தரவாதங்கள் மக்க ளிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனா லும், ஓவருக்கு 6 பந்துகளும் சிக்ஸர் அடித்தாக வேண்டும் என்பது போன்ற நெருக்கடியால் முழுமையான வெற்றியை தி.மு.க.வால் பெற முடியவில்லை.

இந்த நிலையில் வெற்றி பெற்ற தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 13 பேருக்கும் ஸ்டாலின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் சபாநாயகர் தனபால். அந்த நிகழ்வு முடிந்ததும் பத்திரிகையாளர்களை சந்தித்த ஸ்டாலினிடம், "சபாநாயகருக்கு எதிராக கொடுக்கப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத் தில் உறுதியாக இருக்கிறீர்களா?' என கேட்கப்பட்ட கேள்விக்கு, "பொறுத்திருந்து பாருங்கள்; ஜ்ஹண்ற் ஹய்க் ள்ங்ங் திரையில் காட்சிகள் வரும்' என பூடகமாகச் சொன்னார். மேலும், "ஆட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுமா?' என கேள்வி எழுந்த போது, "சட்டமன்ற கூட்டத்திற்கான தேதி அறிவிக்கப்பட்ட பிறகு ஒரு முடிவை எடுப்போம்' என அழுத்தமாகச் சொன்னார் ஸ்டாலின்.

Advertisment

அரசுக்கு எதிரான கேள்விகளுக்கு பொடி வைத்து ஸ்டாலின் பதில் சொல்லியிருப்பதாக எடப்பாடிக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், ஸ்டாலின் பதிலில் மறைந்துள்ள விசயங்களை கண்டறியுமாறு உளவுத் துறையை கேட்டுக்கொண்டிருக்கிறார் எடப்பாடி.

dmk

Advertisment

இந்த நிலையில், தி.மு.க.வில் என்ன நடக்கிறது? என்பது குறித்து விசாரித்தபோது, ""இடைத்தேர்தலில் முழுமையான வெற்றி கிடைக்காததில் ஸ்டாலின் உள்பட கட்சியின் அனைத்து தரப்பினருக்கும் ஏமாற்றம்தான். நாடாளுமன்றத் தேர்தலில் 37 இடங்களில் தி.மு.க. கூட்டணி முன்னிலையில் இருப்பதாக செய்தி வந்தபோது, தன் உழைப்பிற்கும் வியூகத்திற்கும் கிடைத்த வெற்றி என்பதில் மகிழ்ச்சியடைந்த ஸ்டாலின், இடைத் தேர்தல் முடிவுகளை அறிந்துகொள்வதில்தான் அதிக ஆர்வம் காட்டினார். அதில் 9 இடங் களை தி.மு.க. நழுவ விட்டதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. மேலும், மத்தியிலும் ஆட்சி மாற்றம் நடக்கவில்லையென்பதும் எதிர்பார்ப்பை தகர்த்து விட்டது.

epsமுன்பைவிட வலிமையாக மத்தியில் மோடி உட்கார்வதால் இன்னும் 2 ஆண்டு களுக்கு அ.தி.மு.க.வை அசைக்க முடியாதோ என்கிற சந்தேகமும் தி.மு.க. தலைவர்களுக்கு எழுந்தது. இந்த நிலையில்தான், இன்னும் 3 மாதங்களுக்குள் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடக்கவில்லையெனில் எடப்பாடி ஸ்ட்ராங்க் ஆகி விடுவார் என கட்சியின் சீனியர்களும் எம்.எல்.ஏ.க்களும் விவாதித் துக்கொண்டனர். இந்த விவாதம் ஸ்டாலினின் கவனத் துக்கு கொண்டு செல்லப் பட்டது. இந்தச்சூழலில், ""தளபதிக்கு சம்மதம் எனில் அ.தி.மு.க.வை என்னால் உடைக்க முடியும்'' என தி.மு.க. வின் தேர்தல் வியூகத்தை கவனித்த ஓ.எம்.ஜி. அமைப்பிடம் சொல்லியிருக்கிறார் செந்தில் பாலாஜி. அதேபோல, ""அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க் கள் சிலர் என்னிடம் நல்ல தொடர்பில் இருக்கின்றனர்'' என ஸ்டாலினிடம் தெரிவித் திருக்கிறார் அனிதா ராதாகிருஷ்ணன்.

இந்த நிலையில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பலரும் அமைச்சர் பதவி, வாரியப்பதவி கிடைக்காமல் எடப்பாடி மீது அதிருப்தி யில்தான் இருக்கிறார்கள். குறிப்பாக தலித் எம்.எல்.ஏ.க்களுக்கு நிறைய வருத்தம் எடப்பாடியிடம் இருக்கிறது. தவிர துணை முதல்வர் ஓ.பி.எஸ்., சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதா கிருஷ்ணன் உள்ளிட்ட அமைச்சர் கள் பலரும் எடப்பாடியோடு முரண்பட்டு நிற்கின்றனர். அதனால், எம்.எல்.ஏ.க்களிடம் பேசினால் நம் பக்கம் வருவதற்கு தயங்க மாட்டார்கள். நம்மிடம் வந்த செந்தில் பாலாஜிக்கு கட்சி பதவியும், தேர்தலில் சீட்டு தந்து எம்.எல்.ஏ.வாக ஜெயிக்க வைத்திருப் பதும் அ.தி.மு.க.வினருக்கு நம் மீது நல்ல அபிப்ராயத்தை தந்திருக்கிறது. அதனால், தேவையான அளவில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க் களை நம் பக்கம் இழுப்பதன் admkமூலம் இந்த ஆட்சிக்கு ஒரு முடிவு கட்டலாம். இதனை செய்யாமல் அமைதியாக இருந்தால் அடுத்த 2 வருடமும் அ.தி.மு.க. ஆட்சிதான் என்கிற விசயங்களை ஸ்டாலினின் கவனத்துக்கு கொண்டு போயிருக்கிறார்கள் சீனியர்கள். இதற்கு ஸ்டாலின் க்ரீன் சிக்னல் தர, மிஷன்-15 என்கிற ஆபரேசனை துவக்கியிருக்கிறது தி.மு.க.'' என்று சுட்டிக்காட்டுகிறார்கள் சீனியர்களுக்கு நெருக்கமானவர்கள்.

மிஷன்-15 குறித்து விசாரித்தபோது, ""அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை தி.மு.க.வுக்கு கொண்டு வந்து அதன்மூலம் ஆட்சியை கவிழ்க்க வேண்டுமானால் மூன்றில் 2 பங்கு எம்.எல்.ஏ.க்கள் தேவை. அதன்படி கணக் கிட்டால் 82 பேர் வேண்டும். 82 பேர் தி.மு.க.வை ஆதரித் தால் கட்சித்தாவல் தடைச் சட்டத்தின்படி அவர்களின் பதவிகள் பறிபோகாது. ஆனால், 82 எம்.எல்.ஏ.க்களை இழுப்பது நடக்கிற காரிய மல்ல. அதனால், 15 எம்.எல். ஏ.க்களை குறி வைத்துள் ளோம். அவர்கள் சிக்கியதும் எடப்பாடி ஆட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திட்டம். அப் போது நடக்கும் வாக்கெடுப் பில் அந்த 15 பேரும் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் அல்லது அன்றைய தினம் அவர்கள் சபைக்கு வர மாட்டார்கள் அல்லது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிடு வார்கள். இதனால் அவர் களின் பதவி பறிபோகும்.

finalஇதனையடுத்து வரும் இடைத்தேர்தலில் அவர்களுக்கே சீட் தந்து தி.மு.க.வை ஜெயிக்க வைத்து ஆட்சியை கைப்பற்றுவதுதான் மிஷன் - 15 திட்டம். அதாவது, தமிழகத்துக்கு பொதுத் தேர்தல் நடக்கும்போது தி.மு.க. ஆட்சியில் இருக்க வேண்டுமென்பதே சீனியர்களின் விருப்பம். இந்த திட்டம் திருச்சி நேரு, அனிதா ராதாகிருஷ்ணன், செந்தில்பாலாஜி யிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களிடம் அவர்கள் பேசி வரு கின்றனர். தற்போது 7 எம்.எல்.ஏ.க்கள் தி.மு.க.விடம் வீழ்ந்திருக்கிறார்கள். விரைவில் மிஷன் - 15 சக்சஸ் ஆகும். மூன்று மாதத்தில் எடப்பாடி ஆட்சி கவிழும்''’ என விவரிக்கிறது தி.மு.க. தரப்பு.

தி.மு.க.வின் இந்த திட்டத்தை அறிந்து அப்-செட்டாகியிருக்கும் எடப்பாடி, ""அ.தி.மு.க.வை விட்டு விலகி ஒரு எம்.எல்.ஏ.கூட தி.மு.க.வின் திட்டத்திற்கு ஒத்துழைத்துவிடக் கூடாது'' என பல்வேறு அரசியல் பரபரப்பு களுக்கு மத்தியிலும் ஒவ்வொரு எம்.எல். ஏ.விடமும் தனிப்பட்ட முறை யில் பேசியிருக்கிறார். மந்திரி பதவி கேட்டு தன்னை நெருக் கிய எம்.எல்.ஏ.க்களையும் சமாதானப்படுத்தியுள்ளார் எடப்பாடி. இதுகுறித்து அ.தி. மு.க. மேலிடத்துக்கு நெருக்க மானவர்களிடம் விசாரித்த போது, ""எடப்பாடி மீது ஏகப்பட்ட அதிருப்தி இருந்தா லும் இந்த ஆட்சி 2021 வரை நீடிக்க வேண்டுமென்றுதான் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நினைக்கின்றனர். பதவி பறிபோய் மீண் டும் இடைத் தேர் தல் வந்து அதில் தங்களுக்கே சீட் கிடைத்தாலும் மீண்டும் ஜெயிப் போமாங்கிற துக்கு உத்தர வாதமில்லை. அதற்கு எதற்கு ரிஸ்க் எடுக்க வேண்டும்?'' என் பதே எம்.எல்.ஏ.க் களின் எண்ணம். எடப்பாடியும் இதனை எம்.எல். ஏ.க்களிடம் அழுத்தமாக சொல்லியிருக் கிறார். மேலும் அமைச்சரவை மாற்றத்தை தவிர மற்ற எதிர்பார்ப்பு களை தடையின்றி நிறைவேற்ற உறுதி தந்திருக்கிறார் எடப்பாடி. அதனால், அ.தி.மு.க. ஆட்சி கவிழ எங்கள் எம். எல்.ஏ.க்கள் உடன்பட மாட்டார்கள்.

இதற்கிடையே, ஒவ்வொரு மாவட்டத்திலுமுள்ள எம்.எல்.ஏ.க் களை அந்தந்த மாவட்ட அமைச்சர் களே பாதுகாக்க வேண்டும் என்பது முந்தைய ஏற்பாடு. தற்போது எடப் பாடியோடு அமைச்சர்கள் பலரும் மல்லுக்கட்டுவதால் அந்த ஏற்பாட்டி னை இனி தானே கையில் வைத்துக் கொள்ளவும் எடப்பாடி யோசித்துக் கொண்டிருக்கிறார். அதனால் எடப்பாடியிடமிருந்து எம்.எல்.ஏ.க் களைப் பிரிப்பது கடினம்தான் ‘என்று சுட்டிக்காட்டுகிறார்கள். எடப்பாடி யின் தற்காப்பு நடவடிக்கையை செயல்படுத்த உளவுத்துறை உதவிகர மாக இருக்கிறது.

-இரா.இளையசெல்வன்

______________

இறுதிச்சுற்று

கனிம வளக் கொள்ளை!

கனிமவளத் துறையில், அதன் அமைச்சரான சி.வி.சண்முகமும் கனிம கில்லாடியான ’மணல்’ ராமச்சந்திரன் என்பவரும் கைகோத்துக்கொண்டு, ஏகத்துக்கும் ’விளையாடி’வருகின்றனர் என்கிற புகார் அ.தி.மு.க. தரப்பிலேயே பரவலாக வெடித்துக் கொண்டிருக்கிறது.

dddஇந்த மணல் ராமச்சந்திரன், சர்ச்சைக்குரிய சேகர் ரெட்டியிடம் ’தொழில்’ செய்தவர். சட்ட விரோத மணல் குவாரிகளை அங்கங்கே நடத்துவதோடு, மணல் குவாரிக்காரர்களிடமும் இவர்கள் ஏகத்துக்கு மாமூல் வசூலிக்கின்றனராம். இந்த ஏடாகூடத்தை இவர்களின் கையாளான கரிகாலன் என்பவர் கவனித்துக்கொள் கிறாராம். இவர், மாவட்டம் தோறும் இருக்கும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகளை உரியமுறையில் ’கட்டிங்’ மூலம் கவனித்து விடுவது வழக்கம். குறிப்பாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டராக இருக்கும் மகேஸ்வரியையும் அவர் கணவரையும் தனித்தனியே கவனிப்பதோடு, அங்கே எஸ்.பி.யாக இருக்கும் பொன்னி, அவர் கணவர், அவர் அம்மா ஆகியோருக்கும் வெயிட்டான வினியோகம் செய்து விடுகிறார் என்கிறார்கள். வறண்ட ஆறுகளில் இவர்கள் அடிக்கும் நீச்சல் அடாவடி நீச்சல்.

-பிரகாஷ்

மாநிலங்களவையில் ம.ம.க?

தி.மு.க. கூட்டணியில் சீட் எதிர்பார்க்காமல் தேர்தல் பணிகளை மேற்கொண்டு, சிறுபான்மையினர் வாக்குகள் சிதறாமல் செய்தது மனிதநேய மக்கள் கட்சி. கூட்டணிப் பேச்சுவார்த்தையின்போது சீட் ஒதுக்கப்படவில்லை என்பதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆகியோரிடம் அதிருப்தி ஏற்பட்டாலும், மோடி தலைமையிலான பா.ஜ.க. எதிர்ப்பு என்ற நோக்கத்துடன், தி.மு.க. கூட்டணியை ஆதரிக்கும் முடிவை ம.ம.க. எடுத்தது. அப்போது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், "உங்களுக்கு உரிய நேரத்தில் வாய்ப்புகள் வழங்கப்படும்' எனத் தெரிவித்திருந்தார். தற்போது மாநிலங்களவைத் தேர்தலை எதிர்நோக்கியுள்ள நிலையில், ம.ம.க.வுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. நாடாளுமன்றத்தில் சிறுபான்மை நலன் காக்கும் குரலை தி.மு.க.வின் ஆதரவுடன் எடுத்துரைக்க இந்த வாய்ப்பு பயன்படும். ஏற்கனவே, ம.தி.மு.க.வுக்கு ஒரு ராஜ்யசபா சீட் என தி.மு.க. ஒதுக்கியுள்ள நிலையில், மற்றொரு கூட்டணிக் கட்சிக்கான வாய்ப்பை பரிசீலிப்பது ஸ்டாலினின் கையில் உள்ளது. தி.மு.க.வினரிடமும் மாநிலங்களவை மீதான எதிர்பார்ப்பும் போட்டியும் அதிகரித்துள்ளது.

-கீரன்