Advertisment

வாக்குப்பதிவு மாறிய சதவிகிதம்! -அதிர்ச்சியில் இந்தியா கூட்டணி!

ss

2024 மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை உட்பட அனைத்து வாக்குச்சாவடிகளிலுமுள்ள வாக்காளர்களின் அங்கீகரிக்கப் பட்ட இறுதி தரவுகளை வாக்குப் பதிவு முடிந்த 48 மணி நேரத்திற் குள் வெளியிடக் கோரிய மனு வுக்கு, இந்திய தேர்தல் ஆணை யம் மே 24-ல் பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள் ளது. தற்போது நடந்துவரும் தேர்தலில், நடந்துமுடிந்த முதல் நான்கு கட்டத் தேர்தலில், தேர்தல் முடிந்ததும் ஆணையம் அறி வித்த வாக்குப் பதிவு சதவிகிதத்துக்கும், இறுதி வாக்குப்பதிவு சத விகிதத்துக்கும் இடையில் கணிசமான அதிகரிப்பு நடந்ததை

2024 மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை உட்பட அனைத்து வாக்குச்சாவடிகளிலுமுள்ள வாக்காளர்களின் அங்கீகரிக்கப் பட்ட இறுதி தரவுகளை வாக்குப் பதிவு முடிந்த 48 மணி நேரத்திற் குள் வெளியிடக் கோரிய மனு வுக்கு, இந்திய தேர்தல் ஆணை யம் மே 24-ல் பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள் ளது. தற்போது நடந்துவரும் தேர்தலில், நடந்துமுடிந்த முதல் நான்கு கட்டத் தேர்தலில், தேர்தல் முடிந்ததும் ஆணையம் அறி வித்த வாக்குப் பதிவு சதவிகிதத்துக்கும், இறுதி வாக்குப்பதிவு சத விகிதத்துக்கும் இடையில் கணிசமான அதிகரிப்பு நடந்ததையடுத்து உச்சநீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

Advertisment

வழக்கைப் பதிவு செய்த ஏ.டி.ஆர் அமைப்பு, இந்த இரு வாக்குப் பதிவு சதவிகிதத்துக்கும் இடையில் 5 முதல் 6 சதவிகித வித்தியாசம் அதிகரித்திருப்பதாக மனுவில் குறிப்பிட்டிருந்தது. மேலும், இதனை அறிவிக்க 11 நாட்கள் எடுத்துக்கொண்டதும் சேர்ந்துகொள்ள, இந்த சதவிகிதத்தின் உண்மைத்தன்மை குறித்து வாக்காளர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளிடையே சந்தேகம் எழுந்தது. இதனால் தேர்தல் ஆணையம், பதிவுசெய்யப்பட்ட வாக்குகளின் கணக்கை (படிவம் 17-சி பகுதி 1-ஐ) அதன் வலைத் தளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிடக் கோரியிருந்தது மனு.

cc

2024 தேர்தலில் ஒவ்வொரு கட்ட வாக்குப்பதிவுக்குப் பிறகும், தொகுதி மற்றும் வாக்குச்சாவடி வாரியாக வாக்காளர்களின் எண் ணிக்கையை முழுமையான எண்ணிக்கையிலும், சதவிகித வடிவத் திலும் வழங்கவேண்டும், அத்துடன் படிவம் 17-சி-யின் பகுதி 2-ல் உள்ள வேட்பாளர்வாரியான வாக்குப்பதிவு தரவும் பதிவேற்றம் செய்யப்படவேண்டும் என ஏ.டி.ஆர். கோரிக்கைவிடுத்திருந்தது.

இதையடுத்து தேர்தல் ஆணையத்தின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அமித் ஷர்மாவிடம், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, “"மனுதாரர் கேட்கும் விவரங்களை வலைத்தளத்தில் பதிவிடுவதில் என்ன சிரமம்?''’என கேட்டார்.

“அதற்கு நீண்டகால அவகாசம் தேவை” என ஆணையத் தரப்பில் பதிலளிக்கப்பட்டது.

“"ஆனால், ஒவ்வொரு தேர்தல் அதிகாரியும் தேர்தல் தினத்தின் மாலைக்குள் வாக்குப்பதிவு விவரத்தை, அதற்கான செயலியில் பதிவிட்டு விடுவார்கள்தானே? எனவே அன்று மாலை ரிட்டர்னிங் ஆபிசர் அனைத்துத் தரவுகளையும் வைத்திருப்பார்தானே?''’ என தலைமை நீதிபதி கேட்க, "உடனடியாக அவருக்கு அந்த தகவல்கள் கிடைத்துவிடாது'' என பதிலளித்திருக்கிறார்கள்.”

"சரி, மறுநாள் கிடைத்துவிடும்தானே''’என உச்சநீதிமன்றம் கேட்டது. இதையடுத்து விசாரணையின் முடிவில் ஒரு வாரத்துக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்குமாறு கூறி வழக்கை மே 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. அதேசமயம், தேர்தல் ஆணையம் சார்பாக ஆஜரான மற்றொரு வழக்கறிஞரான மணீந்தர்சிங், வாக்குப்பதிவு எந்திரத்தின் நம்பகத்தன்மை தொடர் பான வழக்குதான் இந்த வழக்கு என்று நீதிமன்றத்தை நம்பவைக்க முயன்றார். எனினும் பிரசாந்த்பூஷன் "இந்த வழக்கு வேறு என்றும் இதன் கேள்விகள் வேறு'' என்றும் விளக்கமளித்தார்.

மோடி அரசின் கைப்பாவையாகச் செயல்படும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையால் அதிர்ச்சி யடைந்துள்ளது இந்தியா கூட்டணி!

nkn220524
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe