Skip to main content

ஓட்டு மெஷின் கோல்மால் அ.தி.மு.க.வுக்கு பாடுபடும் சாகு!

ரசியல் கட்சியினர் மட்டுமல்ல, வாக்களித்த மக்களும் அதிர்ச்சியில் தான் உள்ளனர். மதுரையைத் தொடர்ந்து தேனி, ஈரோடு ஆகிய தொகுதிகளி லும் வாக்குப்பதிவு மின்னணு இயந்திர முறை கேடு பலவித சந்தேகங்களை உண்டாக்கியுள் ளது.

பா.ஜ.க.வின் பெரும்பான்மைக் கனவு சந்தேகமாகியுள்ள நிலையில், ஆட்சியைத் தக்க வைக்க தொகுதிக்கு 20 வாக்கு எந்திரங்களில் பா.ஜ.க. கூட்டணிக்கு வாக்குகள் அதிகமாக இருக் கும்படி செய்து, அதிகாரிகள் துணையோடு மாற்றி வைக்க மோடி திட்டமிட்டிருப்பதை நக்கீரனில் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தோம்.

g


அதை நினைவூட்டும் வகையில் தேனி தொகுதியிலும், ஈரோடு தொகுதியிலும் திடீரென வாக்குப்பதிவு எந்திரங்கள் வந்திருப்பதாக கூறி, எதிர்க்கட்சிகளை கையெழுத்து போட வரும்படி அதிகாரிகள் அழைத்ததும் பதற்றம் தொடங்கியது. எந்தவிதமான காரணமும் இல்லாமல் தேனி தொகுதிக்கு 50 வாக்குப்பதிவு எந்திரங்களும், ஈரோடு தொகுதிக்கு 20 வாக்குப்பதிவு எந்திரங்களும் வந்திருப்பதாக தகவல் பரவியதும் எதிர்க்கட்சி வேட்பாளர்கள் ஆவேசமடைந்தனர்.

தேனி தொகுதியில் துணை முதல்வர் ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் குமார் போட்டி யிடுகிறார். ஒரு வாக்கிற்கு 5 ஆயிரம் ரூபாய்வரை செலவழித்துள்ளார். வாரணாசி வரை சென்று ஓ.பி.எஸ்.ஸும் மகனும் மோடியை சந்தித்துள்ள னர். இந்நிலையில், திடீரென்று வாக்குப்பதிவு எந்திரங்கள் வந்ததால், எந்திரங்களை மாற்றி தில்லுமுல்லு செய்யத் திட்டமிட்டிருப்பதாக வதந்திகள் பரவின. இதையடுத்து, தேனியில் உள்ள தாலுகா அலுவலகம் முன் எதிர்க்கட்சி களின் தொண்டர்கள் திரண்டனர். அந்தப் பகுதியே பரபரப்பாகியது. தாசில்தார் மணவாளனுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நிலைமை தீவிரமடைந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவும், எஸ்.பி. பாஸ்கரனும் தாலுகா அலுவலகம் வந்தனர்.
evm
ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாலசமுத்திரம், பெரியகுளம் தொகுதிக்கு உட்பட்ட வடுகப்பட்டி ஆகிய இரண்டு வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்துவதற்காக இந்த எந்திரங்கள் கொண்டு வரப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெளிவு படுத்தினர்.

இந்த வாக்குச்சாவடிகளில் மாதிரி வாக்குப்பதிவின்போது வாக்குச்சாவடி முகவர்களால் போடப்பட்ட 50 சோதனை வாக்குகளை வாக்குச்சாவடி அதிகாரி அழிக்க மறந்துவிட்டார் என்றும், அதன்காரணமாகவே மறுவாக்குப்பதிவு நடத்தப்படுவதாகவும் மாவட்ட ஆட்சியர் பல்லவி தெரிவித்தார். எதிர்க்கட்சிகளுக்கு நம்பிக்கை ஏற்படாத நிலையில்... தேர்தல் ஆணையத்திற்கு தகவல் கொடுப்பதாக தெரிவித்தார் கலெக்டர்.

மாவட்ட ஆட்சியர் பல்லவி நம்மிடம், ""தேர்தல் சமயத்தில் வாக்கு எந்திரங்கள் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு கொண்டு செல்லப்படுவது இயல்பான விஷயம்தான். வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்றவெல்லாம் முடியாது'' என்றார்.

எதிர்க்கட்சி பிரதிநிதிகளிடம் கேட்டபோது, ""வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கம்மவர் கல்லூரி இப்போதும் இயங்கிக்கொண்டிருக்கிறது. கல்லூரிப் பேருந்துகள் உள்ளே வந்து செல்கின்றன. இங்கிருந்து வாக்கு எந்திரங்களை மாற்ற வாய்ப் பிருக்கிறது என்று சந்தேகப்படு கிறோம்''’என்றனர். தேனி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனிடம் பேசிய போது…""இதில் ஓ.பி.எஸ்.சின் சதி இருப்பதாக சந்தே கப்படுகிறேன்''’என்றார்.

தேனியில் இப்படியென்றால், ஈரோடு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட காங்கேயம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள திருமங்கலம் ஊராட்சிப் பள்ளி பூத்தில் மறுவாக்குப் பதிவு நடத்துவதற்காக என்று 20 விவிபேட் எந்திரங் கள் கொண்டுவரப்பட்டன. அந்த வாக்குச் சாவடியில் எந்திரத்தை சரிபார்க்க முகவர்கள் போட்ட மாதிரி வாக்குகள் 50. அதை வாக்குச்சாவடி அதிகாரி அழிக்கா மல் விட்டுவிட்டார். அந்த பூத்தில் பதிவான மொத்த வாக்குகள் 736. அழிக்காமல் விட்ட வாக்குகளையும் சேர்த்தால் 786 வாக்குகள் இருக்க வேண்டும். ஆனால், அந்தப் பெட்டியில் இருந்தது 777 வாக்குகள்தான். 9 வாக்குகள் குறைவாக காட்டியதால் அங்கு மறுவாக்குப்பதிவு நடப்பதாக அதிகாரி தெரிவித்தார்.

தேனி தொகுதியில் 2 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடத்த அதிகபட்சமாக 8 எந்திரங்கள் போதுமானது. ஈரோடு வாக்குச்சாவடிக்கு அதிகபட்ச மாக 4 எந்திரங்கள் போதுமானது. ஆனால், தேனிக்கு 50 எந்திரங்களும், ஈரோடுக்கு 20 எந்திரங்களும் கொண்டுவரப்பட்டது ஏன் என்று எதிர்க்கட்சிகள் இன்னமும் சந்தேகத்தை எழுப்புகின்றன.

ev


பீகார் மாநிலம் முசாபர்பூர் தொகுதியின் வாக்குப்பதிவு இயந்திரங்களையும் ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களையும் ஒரு ஓட்டலில் போலீசார் கைப்பற்றிய கூத்தெல்லாம் நடந்தது. இந்நிலையில்தான் தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு என்று அறிவிப்பு வருகிறது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய டெல்லி தேர்தல் கமிஷன் அதிகாரிகள், ""தமிழகத்தில் தேர்தல் வழக்கமான நடைமுறைகளை மீறி நடைபெறுகிறது. எப்பொழுதும் வாக்குப்பதிவு நடந்து முடிந்த பிறகு இரண்டு நாட்கள் கழித்துதான் வாக்குகளை எண்ணுவார்கள். அதற்கொரு முக்கிய காரணம் உண்டு. நடந்த வாக்குப்பதிவில் குறைகளோ, முறைகேடோ ஏதேனும் இருந்தால், உடனடியாக தேர்தல் நடந்த மறுநாள் அந்த வாக்குச்சாவடிகளில் மறுதேர்தல் நடத்துவார்கள்.. மறு தேர்தல் நடத்தப்பட்ட வாக்குகளையும் சேர்த்து மூன்றா வது நாள் எண்ணுவார்கள்.

இந்தியாவில் கடைசிக்கட்டமாக மே 19 அன்று நடக்கும் வாக்குப்பதிவில் குறைகள் ஏதேனும் இருந் தால் அன்றைய தினம் மாலையே தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்குத் தெரியவரும். உட னே மறுவாக்குப் பதிவு நடத்தி அந்த முடிவுகளையும் சேர்த்து மே 23 அன்று ஒட்டுமொத்த முடிவாக அறிவிக்கப்படும். தமிழகத்தில் 65 ஆயிரத்து 616 வாக்குச்சாவடிகளில் ஏப்ரல் 18-ஆம் தேதி தேர்தல் நடந்து முடிந்தது. அதில் எத்தனை வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு எந்திரம் வாக்குப்பதிவை சரிபார்க்கும் எந்திரம் (யய டஆஉ) ஆகியவை சரியாக பயன்படுத்தப்பட்டன என ஒரு ரிப்போர்ட் ஏப்ரல் 19-ஆம்தேதி காலையில் தமிழக தேர்தல் ஆணையரான சத்யபிரதா சாஹுவுக்கு வந்துவிடும். ஆனால், தமிழகத்தில் 46 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு முறையாக நடைபெறவில்லை என தேனி மக்களவை தொகுதிக்கான 50 வாக்குப்பதிவு எந்திரங்கள் ரகசியமாக கோவையிலிருந்து கொண்டுவரப் பட்டது குறித்து எதிர்க்கட்சிகள் புகார் எழுப்பிய பிறகு தமிழக தேர்தல் கமிஷனர் வாய் திறந்தார்.

evmஏன் இந்த தாமதம் என கேட்டதற்கு, "நாங்கள் டெல்லிக்கு தகவலை தந்துவிட்டோம். டெல்லியின் அனுமதிக்காக காத்திருந்தோம்' என்கிறார் தமிழக தேர்தல் கமிஷனர். இது தவறு, 46 வாக்குச்சாவடிகளில் குளறுபடி என்றால் 46-க்கும் மறு தேர்தல் என டெல்லி தேர்தல் கமிஷன் சொல்லும். வெறும் 13 வாக்குச்சாவடிகளுக்கு மறுதேர்தல் நடத்த டெல்லி தேர்தல் கமிஷன் உத்தரவிடாது'' என்கிறார்கள் தேர்தல் கமிஷன் அதிகாரிகள்.

""சத்யபிரதா சாஹு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்தாலும் அரசியல்வாதிபோல செயல்படு கிறார். அரசியல்வாதிகளை எப்படி சமாளிப்பது என்பதும் அவருக்குத் தெரியும். குடிநீர் வாரிய அதிகாரியாக அவர் ஆடிய ஆட்டம் எல்லாருக்கும் தெரியும். 50 ஆயிரம் இல்லாமல் ஒரு சின்ன பேப்பர் கூட நகராது. துறை அமைச்சரை குளிர்வித்து விடுவார். அவர் ஒருபக்கம் அமைச்சர் வேலுமணியின் கையாளாக இருந்து கொண்டே தி.மு.க. தலைவரான ஸ்டாலினின் மகனான உதயநிதியை ஒரு ஸ்டார் ஓட்டலில் ஒரு டி.வி.யின் சினி மா ரிப்போர்ட்டர் மூலம் அடிக்கடி சந்தித்துப் பேசினார்'' என்கிறார்கள் அதிகாரிகள் வட்டாரத்தில். ""தி.மு.க. தரப்பிலிருந்து சத்ய பிரதா சாஹுவை நேரடியாக குற்றம் சாட்டுவதில்லை. அவரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்படவில்லை. இதனைப் பயன்படுத்தி, கடுமையான போட்டிக்கிடையே குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க. வெற்றிபெறும் வாய்ப்புள்ள தொகுதிகளில் ஓட்டு மெஷின் மூலம் ஒரு ஆபரேஷனை சாஹு நடத்த திட்டமிட்டார். இதேபோலத் தான் 2016-ல் ஜெ. ஆட்சியில் நடத்தப்பட்டது. அதனால்தான் 1.1% வித்தியாசத்தில் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தோற்றது'' என்கிறார்கள் தேர்தல் ஆணைய அதிகாரிகள். தற்போது சாஹு கடைப்பிடிக்கும் இந்த மறு வாக்குப்பதிவு ரகசியம் இணை ஆணையரான பாலாஜிக்குக்கூட தெரியாதாம்.

-தாமோதரன் பிரகாஷ், சக்தி, ஜீவாதங்கவேல்

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இவ்விதழின் கட்டுரைகள்

Loading...
 
×