2016 சட்டமன்றத் தேர்தலில் திருமங்கலத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக நின்றவர் வண்டாரி தமிழ்மணி. சீமான் மீதுள்ள பற்றால் தன் கையில் சீமான் பெயரை பச்சை குத்தியவர். மாறாத பற்று கொண்டவர்.
""என்ன நடந்தது'' என கேட்க... "பெயர் வேண்டாம்' என்ற நிபந்தனையோடு "நாம் தமிழர் கட்சி'த் தொண்டர் ஒருவர் நடந்ததை விவரித்தார்.
""மனைவி ஜான்சிராணி வீட்டாரின் முயற்சியால் திருமங்கலம் அருகிலுள்ள வத்திராய்ப்பில் தமிழ்மணிக்கு நகைக்கடை வைத்துத் தர... அப்போதும் கட்சிக்கூட்டம், மீட்டிங் என அலைந்து வந்திருக்கிறார் தமிழ்மணி. நாம் தமிழர் கட்சியில் மாநில இளைஞரணிப் பொறுப்பாளரான துரைமுருகன், தமிழ்மணியின் கடையில் நகை வாங்க வந்திருக்கிறார். அதில் 65 ஆயிரம் துண்டுவிழ "ஒரு வாரத்தில் தந்துவிடுகிறேன்' என்று நகையைக் கொண்டுசென்றிருக் கிறார். சரி, கட்சிக்காரர்தானே என்று விட்டுவிட, வாரம் வருடமானது. காசு வரவில்லை.
தொழிலில் நஷ்டம் ஏற்பட, கடன் தொகை 65 ஆயிரத்தை துரைமுருகனிடம் கேட்டு அழுத்தம் தந்திருக்கிறார் தமிழ்.
நாட்கள் நகர, துரைமுருகனிடம் இருந்து பணம் வரவில்லை. அவரது ஆட்கள் மூலம் போனில் கெட்ட... கெட்ட வார்த்தை களில் வசைமழைதான் வந்திருக்கிறது. இதைத் தாங்கிக்கொள்ள முடியாமல் தமிழ்மணி தன் மனைவியிடம் சொல்லியிருக் கிறார். மனைவி அவருக்கு ஆறுதல் கூறி, "சீமான் அண்ணனிடம் நடந்ததை எடுத்துச் சொல்லுங்க தீர்வு சொல்லுவார்'’என்றிருக்கிறார்.
தமிழும், சீமானுக்குப் போனை போட்டிருக்கிறார். ஆனால் தமிழுக்கு முன்பே சீமானைத் தொடர்புகொண்ட துரைமுருகன், தமிழ்குறித்து நெகட்டிவாகப் போட்டுக் கொடுத்திருக்கிறார். சீமானோ தமிழ்மணி விசயத்தைச் சொல்லுவதற்கு முன்பே ""எல்லாம் துரை சொல்லிட்டான்… அவரை பிளாக்மெயில் பண்றி யாமே''’என்று சொல்லியபடி இவரைப் பேசவிடாமல் ஒருமையில் திட்டித் தீர்த்திருக்கிறார்.
அன்றே குடித்துவிட்டு தமிழ் மணி தற்கொலைக்கு முயற்சிக்க, மனைவி உட்பட வீட்டில் இருந்தவர் கள் தடுத்து நிறுத்திவிட்டார்கள். சில நாட்களுக்குப் பின் தமிழ் வேலைக்குப் போன நேரத்தில் துரைமுருகன் ஆட் கள் ஜான்சிராணிக்கு போன்செய்து தொந்தரவு கொடுக்க, மனம் பொறுக் காமல் ஜான்சிராணி தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் வந்திருக் கிறது. அடுத்தநாள் மதுரை அரசு மருத்துவமனையில் போஸ்ட்மார்ட்டம் முடிந்து அவரின் சொந்த ஊரான பேரையூருக்கு உடல் கொண்டுவரப் பட்டது. அங்கு சீமான் நேரில்வந்து ஆறுதல் கூறியிருக்கிறார்.
""இந்த ஆறுதலை தமிழ் போன் செய்யும்போதே சொல்லியிருந்தா அவர் மனைவி அவரை விட்டுப் போயிருக்கமாட்டா''’என்கிறார்கள் ஊர்க்காரர்கள்.
-அண்ணல்