Advertisment

ஓரணியில் உரிமைக் குரல்! -சென்னையை குலுக்கிய தலித் அமைப்பினர்!

thiruma

நீலக்கடல் சென்னை மாநகருக்குள் புகுந்து விட்டதோ என்று கருதுமளவுக்கு தாழ்த்தப்பட்ட மக்களுக்கான அமைப்புகள் ஒன்றிணைந்து மிகப்பெரிய மக்கள் கூட்டத்தை கூட்டி தங்கள் வலிமையை உணர்த்தியுள்ளன.

Advertisment

எஸ்.சி-எஸ்.டி. மக்கள் மீதான வன்கொடு மைகளுக்கு எதிராக அரசமைப்புச் சட்டம் கொடுத்திருந்த ஒரே சட்டப்பாது காப்பையும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலம் பறித்துவிடக்கூடாது என்பதற்காகத் தான் இந்த நீலக்கடல்.

Advertisment

thiruma

உச்சநீதிமன்ற நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் தலைமையிலான அமர்வு, கடந்த மார்ச் 20-ந்தேதி பரபரப்பு தீர்ப்பு ஒன்றை அளித்தது. “"வன்கொடுமை தடுப்பு சட்டத் தின்கீழ், ஒரு அரசு ஊழியர் மீது கொடுக் கப்படும் புகாரின் அடிப்படையில், அவரை உடனடியாக கைது செய்துவிடக் கூடாது, டி.எஸ்.பி. தலைமையில் பூர்வாங்க விசாரணை நடத்த வேண்டும், அதில் முகாந்திரம் இருந் தால்தான் மேல்நடவடிக்கை எடுக்க வேண்டும், மேல்அதிகாரி அனுமதியுடன் கைதுசெய்ய வேண்டும்'

நீலக்கடல் சென்னை மாநகருக்குள் புகுந்து விட்டதோ என்று கருதுமளவுக்கு தாழ்த்தப்பட்ட மக்களுக்கான அமைப்புகள் ஒன்றிணைந்து மிகப்பெரிய மக்கள் கூட்டத்தை கூட்டி தங்கள் வலிமையை உணர்த்தியுள்ளன.

Advertisment

எஸ்.சி-எஸ்.டி. மக்கள் மீதான வன்கொடு மைகளுக்கு எதிராக அரசமைப்புச் சட்டம் கொடுத்திருந்த ஒரே சட்டப்பாது காப்பையும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலம் பறித்துவிடக்கூடாது என்பதற்காகத் தான் இந்த நீலக்கடல்.

Advertisment

thiruma

உச்சநீதிமன்ற நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் தலைமையிலான அமர்வு, கடந்த மார்ச் 20-ந்தேதி பரபரப்பு தீர்ப்பு ஒன்றை அளித்தது. “"வன்கொடுமை தடுப்பு சட்டத் தின்கீழ், ஒரு அரசு ஊழியர் மீது கொடுக் கப்படும் புகாரின் அடிப்படையில், அவரை உடனடியாக கைது செய்துவிடக் கூடாது, டி.எஸ்.பி. தலைமையில் பூர்வாங்க விசாரணை நடத்த வேண்டும், அதில் முகாந்திரம் இருந் தால்தான் மேல்நடவடிக்கை எடுக்க வேண்டும், மேல்அதிகாரி அனுமதியுடன் கைதுசெய்ய வேண்டும்'’என்று உத்தரவிட்டது.

இந்தத் தீர்ப்பு வன்கொடுமைச் சட்டம் கொடுத்திருந்த பாதுகாப்பை நீர்த்துப் போகச் செய்யும் என்று எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித் தன. வடமாநிலங்களில் போராட்டங் கள் நடந்தன. வன்முறை வெடித்தது. தீர்ப்பை மறு ஆய்வு செய்யுமாறு மத்திய அரசு வைத்த கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் நிராகரித்தது.

உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பைக் கண்டித்து சென்னை -வள் ளுவர் கோட்டத்தில் வி.சி.க. நடத்திய அனைத்துக்கட்சி போராட் டத்தில் ஸ்டாலின், திருநாவுக்கரசர், வைகோ, திருமா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

thiruma

அதைத்தொடர்ந்து, தாழ்த்தப் பட்ட மக்களுக்கான அமைப்புகள் அனைத்தையும் ஓரணியில் திரட்டி, ஏப்ரல் 24 ஆம் தேதி முற்றுகைப் போராட்டத்தை நடத்தினார் திருமா. நீல நிறக் கொடிகளுடன் பல ஆயிரக்கணக்கான மக்கள் சென் னை -சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே எழுச்சியுடன் கூடினர். தமிழக வரலாற்றில் முதன் முறையாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, பகுஜன் சமாஜ், இந்திய குடியரசு கட்சி, புரட்சி பாரதம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், ஆதி தமிழர் மக்கள் கட்சி ஆகிய அமைப்புகள் ஓரணியில் திரண்டன.

இந்தப் போராட்டத்தை விடு தலைச் சிறுத்தைகள் கட்சி தலைமை யேற்று நடத்தியது. அந்தக் கட்சி யின் துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசிடம் பேசினோம்...

""தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி மக்கள் தொடர்ந்து வன்கொடுமை களுக்கு ஆளாகிறார்கள். பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகின்றனர். இவற்றிலி ருந்து தலித் மக்களுக்கு பாதுகாப்பு வழங்கு வதற்காக 1989ஆம் ஆண்டு இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், 1995-ஆம் ஆண்டு தான் நடைமுறைக்கு வந்தது. 22 வகையான பாகுபாடுகளுக்கு எதிராக இந்தச் சட்டத்தில் பாதுகாப்பு பெறலாம் என்று சொல்லப்பட்டுள்ளது.

vckஇந்த சட்டத்தின்படி யாரும் தண்டிக்கப் படவில்லை. வழக்குப்பதிவு செய்யவே போராடவேண்டியிருந்தது. 2015-ஆம் ஆண்டு 100க்கும் மேற்பட்ட சாதிய பாகுபாடுகளுக்கு எதிராக வழக்கு பதிவுசெய்து கைது செய்யலாம் என்று சட்டத்திருத்தம் செய்யப் பட்டது. அப்படி வழக்குப் பதிவுசெய்யப்பட்டால் முன்ஜாமீன் மற்றும் ஜாமீன் இல்லையென்ற நிலை இருந்தது. ஆனால், தலித் ஒருவர் மீது சாதியரீதியில் பாகுபாடு பார்ப்பதாக புகார் கொடுத்தால்... புகார் கொடுக்கப்படும் அதிகாரியின் உயர் அதிகாரியின் ஒப்புதலைப் பெறவேண்டும் என்றும், முன்ஜாமீன் பெறலாம் என்றும் உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது. மும்பையை சேர்ந்த சதீஷ் பாலகிருஷ்ணன், கிஷோர் பாலகிருஷ்ணா ஆகியோர் தங்களுக்குக் கீழ் வேலை செய்த பாஸ்கரை சாதியை சொல்லித் திட்டுகிறார்கள். அவர்களுடன் சுபாஷ் மகாஜன் என்பவர் மீதும் பாஸ்கர் புகார் அளிக் கிறார். அந்த 3 பேரையும் கைது செய்யும்படி 2009 ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் உத்தரவிடுகிறது. அதன் மேல்முறையீட்டில் தான் உச்சநீதிமன்றம் சர்ச்சைக்குரிய தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்னர், தாழ்த்தப் பட்ட மக்களுக்கு சட்டரீதியாக இருந்த பாதுகாப்பை நீதித் துறை மூலம் உடைக்கிறார்கள். இதுவரை வன்கொடுமை சட்டத் தில் யாரும் தண்டிக்கப்பட்டது இல்லை. தவறாக பயன்படுத்த வில்லை என்பதே உண்மை. ஆதிக்கசாதியினரும், அரசும் செய்தது போதாதென்று, தற்போது நீதித்துறையும் வன் கொடுமை செய்திருக்கிறது''’என்கிறார். மக்கள் அரசு கட்சியின் தலைவரும் உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான ரஜினிகாந்த்திடம் பேசினோம். ""தேசிய அளவில் 5 சதவீதம் அளவுக்கே இந்த சட்டத் தில் தண்டனை வழங்கப்படுகிறது. உச்சநீதிமன்றம் தற் போது நீர்த்துப்போகும் வகையில் தீர்ப்பு வழங்கியிருக் கிறது''’என் கிறார். இந்நிலையில் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநில அரசுகள் மறுசீராய்வு மனுதாக்கல் செய்திருக்கின்றன. பட்டியல் இன மக்களின் உரிமை மற்றும் பாதுகாப்புக்கான போராட்டம் வீறுகொண்டுள்ள நிலையில், தலித் அமைப்பினர் ஒன்று திரண்ட சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே ஆர்ப் பாட்டம் நடத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளது தமிழக காவல்துறை.உரிமைப் போராட்டங்கள் ஓய்வதில்லை.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe