Advertisment

துபாய் விசிட்! யார் யார் முதலீடு! ஸ்டாலினை கவனிக்கும் உளவுத்துறை!

stalin visit

மிழக முதல்வராக பொறுப் பேற்ற பிறகு அரசு முறை பயணமாக முதன்முறையாக வெளிநாட்டிற்கு செல்கிறார் மு.க.ஸ்டாலின். பட்ஜெட் கூட்டம் 24-ந்தேதி முடிந்ததும் அவரது இந்தப் பயணம் தொடங்குகிறது. தலைமைச் செயலகத்தின் பொதுத்துறை வட்டாரங் களில் விசாரித்தபோது,”தமிழகத்திற்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காகவே அரசுமுறைப் பயணமாக வெளிநாடுகளுக்கு முதல்வர் செல்லலாம் என திட்டமிடப்பட்டபோது, முதல் பயணத்தில் எந்த நாட்டிற்கு செல்லலாம் என ஆலோசிக்கப்பட்டது.

Advertisment

stalinvisit

அப்போது, துபாய் நாட்டில் எக்ஸ்போ நடந்து வருகிறது. இதில் சர்வதேச அளவில் 192 நாடுகள் கலந்து கொண்டிருக்கின்றன. அவைகளுக்கான அரங்குகளை ஒதுக்கியிருக் கிறது துபாய் அரசாங்கம். இங்கு இந்தியா வுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட பிரத்யேக அரங்கில் தமிழகத்திற்கென தனி அரங்குகள் தரப்பட்டுள்ளன. அதில் தமிழக தொழிற் துறை உள்பட பல்வேறு துறைகள் காட்சிப் படுத்தப்பட்டிருக்கிறது. இதற்காக 5 கோடி ரூபாயை ஒதுக்கியது தமிழக அரசு.

இந்த நிலையில், துபாய் தொழிற் கண்காட்சியி

மிழக முதல்வராக பொறுப் பேற்ற பிறகு அரசு முறை பயணமாக முதன்முறையாக வெளிநாட்டிற்கு செல்கிறார் மு.க.ஸ்டாலின். பட்ஜெட் கூட்டம் 24-ந்தேதி முடிந்ததும் அவரது இந்தப் பயணம் தொடங்குகிறது. தலைமைச் செயலகத்தின் பொதுத்துறை வட்டாரங் களில் விசாரித்தபோது,”தமிழகத்திற்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காகவே அரசுமுறைப் பயணமாக வெளிநாடுகளுக்கு முதல்வர் செல்லலாம் என திட்டமிடப்பட்டபோது, முதல் பயணத்தில் எந்த நாட்டிற்கு செல்லலாம் என ஆலோசிக்கப்பட்டது.

Advertisment

stalinvisit

அப்போது, துபாய் நாட்டில் எக்ஸ்போ நடந்து வருகிறது. இதில் சர்வதேச அளவில் 192 நாடுகள் கலந்து கொண்டிருக்கின்றன. அவைகளுக்கான அரங்குகளை ஒதுக்கியிருக் கிறது துபாய் அரசாங்கம். இங்கு இந்தியா வுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட பிரத்யேக அரங்கில் தமிழகத்திற்கென தனி அரங்குகள் தரப்பட்டுள்ளன. அதில் தமிழக தொழிற் துறை உள்பட பல்வேறு துறைகள் காட்சிப் படுத்தப்பட்டிருக்கிறது. இதற்காக 5 கோடி ரூபாயை ஒதுக்கியது தமிழக அரசு.

இந்த நிலையில், துபாய் தொழிற் கண்காட்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்வதன் மூலம் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களை தமிழகத்தில் தொழில் துவங்க வைக்க முடியும் என்பதால், முதல்வரின் முதல் பயணம் துபாயாக இருக்கட்டும் என உயரதிகாரிகள் ஆலோசனை சொன்னதன் அடிப்படையில் துபாய் பயணத்துக்கு ஒப்புதல் தந்தார் ஸ்டாலின்.

முதல்வரின் பயணம் 4 நாட்களாக திட்டமிடப்பட்டுள்ளன. மார்ச் 25, 26 ஆகிய 2 நாட்கள் துபாயிலும், 27, 28 ஆகிய 2 நாட்கள் அபுதாபியிலும் பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தில், துபாய் எக்ஸ்போவில் கலந்துகொண்டு, சுமார் 25,000 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு தொழில் முதலீடுகளை தமிழகத்திற்கு கொண்டு வருவதற்காக பல்வேறு நிறுவனங்களுடனான பேச்சுவார்த்தைகள் நடப்பதுடன், சில நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களும் போடப்பட விருக்கின்றன.

இதைத்தவிர்த்து, சபரீசனுக்கு நெருக்கமான லூலு நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் போடப்படவிருக்கிறது. இந்த நிறுவனம், சென்னையில் மிக பிரமாண்டமான மால் ஒன்றை கட்டுவதற்கு திட்டமிட்டிருக்கிறது. இந்த மால், அனேகமாக, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உருவாக்கப்படலாம். இதற்கான பேச்சுவார்த்தைகளை ஏற்கனவே சபரீசன் நடத்தியிருக்கிறாராம்.

stalin visit

Advertisment

தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து முடித்தவுடன், துபாய் தமிழர்களை சந்திக்கும் நிகழ்ச்சி ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், தி.மு.க.வின் புதிய அணியான அயலக தி.மு.க. அணியின் நிர்வாகிகளை ஒருங்கிணைக்கும் ஒரு நிகழ்விலும் கலந்துகொள்ளும் முதல்வர் ஸ்டாலின், நான்கு நாள் பயணத்தை முடித்து விட்டு 29-ந் தேதி சென்னை திரும்புகிறார் ‘’ என்று பயண விபரங்களைச் சுட்டிக்காட்டுகிறார்கள் கோட்டை அதிகாரிகள்.

இந்த பயணத்தில் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, துறையின் முதன்மைச் செயலாளர் கிருஷ்ணன், முதல்வரின் செயலாளர்கள் உதயச்சந்திரன், உமாநாத், சண்முகம், அனுஜார்ஜ் மற்றும் சிறுகுறு தொழில்துறை செயலாளர் அருண்ராய், தகவல் தொழில் நுட்பத்துறையின் கீழ் இயங்கும் கெய்டனன்ஸ் பீரோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பூஜாகுல்கர்னி ஆகிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் முதலமைச்சருடன் செல்கின்றனர்.

மேலும், தமிழக அரசின் உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசிர்வாதம், முதல்வரின் பாதுகாப்பு பிரிவு டெபுடி கமிஷனர் திருநாவுக்கரசு ஆகிய ஐ.பி.எஸ். அதிகாரிகளும் இந்த பயணத்தில் இணைகின்றனர். இந்த பயணத்தினூடே அவர் லண்டன் செல்வதாகவும், அந்த பயணம் தற்போது ரத்து செய்யப் பட்டதாகவும் தகவல் பரவியது. ஆனால், உண்மையில் லண்டன் பயணத்துக்கு திட்ட மிடப்படவே இல்லை என்கிறார்கள் உளவுத் துறையினர்.

ஸ்டாலினின் இந்த வெளிநாட்டுப் பயணம் முடிவானதுமே, ஒன்றிய அரசின் மூக்கு வேர்த்து விட்டது. அதன்படி மத்திய நிதித்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி, வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் (டி.ஆர்.ஐ.) அதிகாரிகள் கடந்த 18-ந்தேதி துபாய்க்கு சென்று விட்டனர். அவர்கள் இரண்டு பிரிவாகப் பிரிந்து, ஒரு டீம் துபாயிலும், ஒரு டீம் அபுதாபியிலும் முகாமிட்டு ஸ்டாலினின் சந்திப்பில் நடக்கும் நிகழ்வுகளின் பின்னணியில் ஏதேனும் விவகாரங்கள் இருக்கிறதா என்பதை புலனாய்வு செய்துகொண் டிருக்கின்றன. இவர்களுக்கு உதவியாக களமிறங்கி யிருக்கிறார்கள் இந்திய ரா ஏஜெண்டுகள்.

இந்த நிலையில், நான்கு நாள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பும் முதல்வர் ஸ்டாலின், ஏப்ரல் 1-ந்தேதி டெல்லிக்கு கிளம்புகிறார். டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள தி.மு.க.வின் அண்ணா -கலைஞர் அறிவாலயத்தை 2-ந் தேதி திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சி, பா.ஜ.க.வுக்கு எதிரான தேசிய அரசியல் தலைவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியாக உற்று நோக்கப்படுவதால் பரபரப்பு உருவாகலாம்.

இதற்கிடையே டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் தங்கும் முதல்வர் ஸ்டாலினை ஒன்றிய அரசில் பணிபுரியும் தமிழக கேடர் ஐ.ஏ.எஸ்.கள் சந்தித்து விவாதிக்கவும் திட்டமிடப்பட்டிருக்கிறது. அண்ணா -கலைஞர் அறிவாலயத்தை திறந்து வைத்துவிட்டு 2-ந்தேதியே சென்னை திரும்பும் அவர், தமிழக அரசின் துறை ரீதியிலான மானியக் கோரிக்கைகளை நிறைவேற்ற 4-ந்தேதி மீண்டும் கூடவிருக்கும் பட்ஜெட் கூட்டத் தொடரில் கலந்துகொள்ளவிருக்கிறார். இனிவரும் 10 நாட்கள் முழுவதும் ஸ்டாலினை மையப்படுத்தியே சுழலவிருக்கிறது அரசியல் பரபரப்பு.

nkn230322
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe