parvai

ன் தந்தையின் தொழில்நிமித்தமாக நாங்கள் அந்தமானில் குடும்பத்தோடு வசித்துவந்தோம். அப்போது நான் சிறுபிள்ளை. அந்தமானில் இருந்தபடி தமிழக நிலவரங்களை அறிந்துகொள்ள வேண்டுமென்றால், செய்தித்தாள்கள் பார்த்தால்தான் உண்டு. கடைகளில் அவ்வளவு எளிதில் தமிழ் செய்தித்தாள்கள் கிடைப்பது அரிது. தேடிப்பிடித்து வாங்குவோம். அந்தமானிலும் நக்கீரன் கிடைக்கும். வாங்கி வந்து வாசித்தால் தமிழகத்தின் நிலையை அருகில் இருந்து பார்ப்பதைப்போல் ஓர் உணர்வை ஏற்படுத்தும்; நக்கீரனின் மறுபெயர் தைரியம்.

தமிழகத்துக்கு திரும்பினோம். சென்னையில் நாங்கள் இருந்தபோது என் சித்தப்பா டி.என்.சிவமணியும், நக்கீரன் ஆசிரியரும் நண்பர்கள் என்பதால் குடும்ப விசேஷங்களில் நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தாலும் ஏனோ அவரது அருகில் சென்று பேச சிறு பயம் உள்ளுக்குள் இருக்கும். இருக்காதா... காட்டுக்கும் நாட்டுக்கும் சிம்ம சொப்பனமாய் இருந்த வீரப்பனையே காட்டில் சந்தித்த சிங்கம்தானே அவர். சிங்கத்தை தூரத்தில் இருந்து பார்ப்பதே பெருமைதானே.

2018, ஜூலை 04-06 இதழ்…:

Advertisment

சர்வதேச போதை கும்பலின் அடுத்த டார்கெட் சென்னை என்பதை உணர்த்தும் டி.ஜே. மஃபைஸின் ஈ.சி.ஆர். பார்ட்டியை நேரடியாக படம் பிடித்துக் காட்டியுள்ள செய்தி நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது. ஆனால், தமிழக இளைஞர்களை போதை வஸ்துகளுக்கு அடிமையாகாமல் காப்பதற்காக மேற்கொண்ட இந்த துணிச்சலான செயலுக்கு ஹாட்ஸ்அப்.

"கர்ஜனை' தொடரில் "வீரன் வேலுத் தம்பி' திரைப்படத்துக்காக சிறையிலிருந்தே வசனம் எழுதிய கலைஞரை எண்ணும்போதே அவரின் சின்சியாரிட்டி பெருமைப்பட வைக்கிறது.

வாசகர் கடிதங்கள்!

Advertisment

கொள்ளை போகும் மணல்!

"ஆறு இல்லா ஊர் அழகு பாழ்' என்பதற்கு வகை செய்வதாக இருக்கிறது கனரக வாகனங்களில் மணமணக்கப் புறப்படும் கொள்ளிடம் ஆற்று மணல் திருட்டு. இதைத் தடுக்காத அரசு, புதுப்புது குவாரி அதிபர்களோடு கை குலுக்கி, காரியம் சாதித்துக்கொண்டிருக்கிறது.

-வா.மு. ஆறுமுக சேகரன், மணமேல்குடி.

கள்ளநோட்டு களவாணிகள்!

கரன்சி பேப்பரில் கள்ள நோட்டு அச்சடித்த கும்பல்களின் கைவரிசையையும் அவர்களின் தொழில் நுட்பத்தையும் தெளிவாக விளக்கியிருக்கிறது நக்கீரன். ரூபாய் நோட்டுகளின் மென்பொருள் டெக்னிக்கை பயன்படுத்துவதில் களவாணிகள் காட்டுகிற அதே அக்கறையை தப்பி ஓடிய தலைமைத் திருடர்களில் ஒருவனான அசனைப் பிடிப்பதில் காட்டவேண்டும் அரசு.

-சிவ.தாண்டவராயன், வேலூர்.