parvai

வெற்றிப் பயணம்! துணைச் செயலாளர் தி.மு.கழக மாநில இலக்கிய அணி

அப்போது ஜெ.யின் காட்டுமிராண்டி ஆட்சி நடந்து கொண்டிருந்தது. நள்ளிரவில் கலைஞர் கைது செய்யப்பட்டார். சென்னை மத்திய சிறைவாச லில் அதிகாலையில் தனிமனிதத் தர்ணா போராட்டத்தை தலைவர் கலைஞர் நடத்தினார். காவலர்கள் தவிர வேறு எவரும் நெருங்க முடியாத நேரத்தில் கலைஞரிடம் ஒரு துண்டுத்தாளைக் கொடுத்து "கருத்து'க் கேட்டது நக்கீரன். "அநீதி வீழும் அறம் வெல்லும்' என்ற வரலாற்று வைர வார்த்தைகளை எழுதிக் கொடுத்தார் கலைஞர். அதைப் பதிவு செய்த பெருமைக்குரியது நக்கீரன்.

ஆமாம்... அநீதியை வீழ்த்தி அறத்தை வெற்றிப் பயணத்தில் அழைத்துச் செல்லும் பயணி நக்கீரன்.

Advertisment

நான் தி.மு.க. பொதுக்கூட்டங்களில் உரையாற்றச் செல்லும்போது அந்நேர நக்கீரனைப் படித்து உள்வாங்கிக்கொண்டே உரையாற்றுவேன். இந்திய அளவில் போராளி யாக நின்று களமாடி, புரட்சி சிந்தனையுள்ள இளைஞர்களின் இதயத்தை இழுக்கும் இதழ் நக்கீரனே.

2018, ஜூன் 16-19 இதழ்!

"யாருக்கு லாபம்? வல்லரசை இணங்க வைத்த வடகொரியா' உலகம் வியப்போடு எதிர்பார்த்த சந்திப்பின் நாடி பிடித்துக் காட்டிய செய்திக் கட்டுரை.

Advertisment

மாவலி பதில்களில் "மத்திய அரசின் இணைச் செயலாளர் களைத் தனியாக நிறு வனங்களில் இருந்து தேர்வு செய்கிறதே மத்திய அரசு?' என்ற கேள்விக்கு மாவலி கூறியுள்ள பதில் "நச்'.

மண்டல வாரி யாக அமைப்புச் செயலாளர் -ஸ்டாலின் அடுத்த மூவ் செய்தி எங்கள் கட்சியின் புதுரத்தப் பாய்ச்சலுக்குச் சாட்சி. சுவை கூட்டுகிறது மிட்நைட் மசாலா.

எத்தனை ஆண்டுகள் ஆனால் என்ன? எனர்ஜி குறையாமல் பாய்ந்துகொண்டிருக்கிறது நக்கீரன்.

வாசகர் கடிதங்கள்!

கைவிலங்கு தீர்வல்ல!

த.வா.கட்சியின் தலைவர் வேல்முருகனின் போராட்டம் என்பது மக்களுக்கானது. கலவரத்துக்கோ, சுயநலத்துக்கோ பாத்தியப்பட்டது அல்ல. போராடுகிறவர்களுக்கு ஆரம்பத்திலேயே கைவிலங்கிட்டால்தான் ஆட்சியின் தலை தப்பும் என்கிற நிலைமைக்கு வந்துவிட்டது தான் தோன்றித்தன அரசு.

-ஜி.மகாலிங்கம், மன்னார்குடி.

விக்ரம் வேதா!

"நீட்'டுக்கு எதிராக தி.க. தலைவர் கி.வீரமணியின் விளாசல்... "குருகுல கல்வித் திட்டத்திலும் அரசும் மக்களும் மேம்போக்காக இருந்துவிடக்கூடாது' என்கிற முன்னெச்சரிக்கை அறிவுரையும் வைக்கிறது. ஆனால் தமிழக அரசோ, மைய அரசை -விக்ரமாதித்தன் வேதாளத்தை தோளில் போட்டுக்கொண்டு திரிகிற கதையாக அல்லவா செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

-எம்.அசோகன், வாணியம்பாடி