parvai

Advertisment

புலனாய்வு இதழ்களில் சிம்மாசனம்! துணைத்தலைவர், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை. தொடர்ந்து 30 ஆண்டுகளாக லட்சக்கணக்கான வாசகர்களால் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் நக்கீரன் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத இதழ் என்பதில் எள் முனையளவும் சந்தேகமில்லை. படம் பார்த்து கதை சொல் என்பதுபோல், நக்கீரனின் அட்டைப் படத்தைப் பார்த்து தமிழக அரசியலை எளிதில் புரிந்துவிடலாம். அந்தளவு அதன் ஆசிரியர் கைத்திறமையை காட்டியிருப்பார். அதுவேதான் என்னையும் 30 ஆண்டுகால வாசகனாக்கியுள்ளது.

தேர்தலில் நக்கீரனின் கணிப்புகளாகட்டும், நாட்டு நடப்புச் செய்திகளாகட்டும், அரசியல் வாதிகளின் அந்தரங்கங்களாகட்டும் அனைத்துமே நக்கீரனுக்கு நிகர் நக்கீரன்தான். இந்திய புலனாய்வு இதழ்களில் நக்கீரனுக்கென்று ஒரு சிம்மாசனம் உண்டு... இதை எவராலும் தவிர்க்க முடியாது.

2018, அக் 13-16 இதழ்:

நக்கீரன் குடும்பத்தார் 35 பேர் மீது "அகங்கார வழக்கு' போட்டு நக்கீரனின் பெயரைச் சொல்லி பத்திரிகைச் சுதந்திரத்திற்கு வாய்ப்பூட்டு போட நினைத்த தமிழக கவர்னர் ஆட்சி குறித்து ஆசிரியர்பக்க கட்டுரை சரியான நெத்தியடி.

Advertisment

"கைது செய்! ராஜ்பவன் ஆர்டர்!' கட்டுரையில், கவர்னர் புகைப்படமும் அவரது கறை படிந்த பற்களுடன் உள்நோக்குச் சிரிப்பும் ஒரு சர்வாதிகாரத்தை நினைவூட்டுகிறது.

கருத்துச் சுதந்திரத்தைக் காப்பாற்றிய குரல்கள் இந்த சோதனையான நெருக்கடி நேரத்திலும் ஓர் ஆறுதலாக இருந்தது.

"இளையவேள்' ராதாரவி சாரின் வாழ்க்கைத் தொடர் ஒருவாரம் கூட சுவையின்றி இருந்தது இல்லை. மாவலி பதில்கள் மிகவும் அருமை.

மொத்தத்தில் நக்கீரன்... சுழன்றடிக்கும் சூறாவளி.

_______________

வாசகர் கடிதங்கள்!

ஆட்சிக்கு அழகல்ல!

Advertisment

முடங்கிக் கிடக்கும் கலைஞர் திட்டத்தில் ஆளும் அரசு மெத்தனப்போக்கை கடைப்பிடிப்பது நல்ல ஆட்சிக்கு அழகல்ல! தி.மு.க.வின் திட்டத்தை பழிவாங்கிவிட்டதாக அ.தி.மு.க. நினைத்துக்கொண்டால், அது மகாமுட்டாள்தனம். மாறாக, திருநெல்வேலி மாவட்ட மக்களின் வெறுப்புணர்வை பதப்படுத்துகிறார்கள் என்றே அர்த்தம்.

-பா.விக்னேஷ், திருவண்ணாமலை.

வெடித்தெழும் பொறுமை!

பாலியல் விவகாரத்தின் பாஸ்வேர்டாகிவரும் "மீ டூ'வில் பாதிக்கப்பட்ட பெண்கள் மண் அழுத்தத்துக்கு உட்பட்டுக் கிடந்த எரிவாயுவைப் போல, பொறுத்திருந்து வெடித்தெழுகிறார்கள்.

-சி.ஜெயலட்சுமி, கள்ளக்குறிச்சி.