Advertisment

விஷ்ணுப்ரியா நிர்பந்தக் கொலை! யாரைக் காப்பாற்றுகிறது சி.பி.ஐ.? -கைவிடப்பட்ட விசாரணை!

vishnupriya

"டி.எஸ்.பி. விஷ்ணுப்ரியா மர்மமான முறையில் மரணமடைந்த வழக்கை கைவிடுகிறோம்' என சி.பி.ஐ. அறிவித்துள்ளது. விஷ்ணுப்ரியாவின் மரணம் தமிழ்நாடு காவல்துறையையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. "அது தற்கொலையல்ல, நிர்பந்தக் கொலைதான்' என சக போலீசார் வேதனையுடனும் கொதிப்புடனும் குரல் கொடுத்தனர். இறுதியில் "அது கைவிடப்பட்ட வழக்காக மாறிவிட்டது' என வேதனையுடன் குறிப்பிடும் விஷ்ணுப்ரியாவின் நண்பர்கள், சி.பி.ஐ. இந்த முடிவுக்கு வந்ததன் பின்னணியையும் விவரிக்கின்றனர்.

Advertisment

vishnupriya

விஷ்ணுப்ரியாவின் மரண வழக்கை அவரது மரணத்திலிருந்து கவனித்துவரும் வழக்கறிஞர் பாஸ்கர் மதுரம், ""அரசியல் காரணங்களுக்காக உண்மைகளை மாநில போலீசார் மறைக்க முற்படும்போது எளிய மக்கள் தங்களுக்கு நீதி கிடைக்க கடைசி நம்பிக்கையாக சி.பி.ஐ.யை நம்பியிருக்கிறார்கள். ஆனால் அப்படிப்பட்ட சி.பி.ஐ. தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட வழக்குகளின் விசாரணையை தொடர்ந்து கைவிட்டு வருகிறது. வழக்கறிஞர் சங்கரசுப்புவின் மகன் சதீஷ் மரணம் தொடர்பான வழக்கு, பரமக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு போன்ற வழக்குகளை உதாரணமாகக் காட்டலாம். மேலும், ராமஜெயம் கொலை வழக்கிலும் எந்த முன்னேற்றமும் இதுவரை இல்லை. கடைசியாக விஷ்ணுப்ரியாவின் மரண வழக்கைக் கைவிடுவதாக அறிவித்துள்ளது சி.பி.ஐ. விஷ்ணுப்ரியாவின் மரணத்தில் அரசியல் பின்னணி இருக்கிறது. அரசியல்வாதிகளைக் காப்பாற்றவே சி.பி.ஐ. இந்த முடிவை எடுத்துள்ளது. விஷ்ணுப்ரியாவின் மரணத்திற்கு யார் காரணம்? அதன் பின்னணி என்ன என கண்டுபிடிக்கத்தான் சி.பி.ஐ. வந்தது. ஆனால், விஷ்ணுப்ரியாவின் மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகளை அவிழ்க்காமல் சி.பி.ஐ. கைகழுவியதன் பின்னணியில் அரசியல் உள்ளது'' என்கிறார்.

Advertisment

vishnupriya""இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ.யின் தமிழகப் பிரிவு தலைவராக இருப்பவர் துரைக்குமார். டி

"டி.எஸ்.பி. விஷ்ணுப்ரியா மர்மமான முறையில் மரணமடைந்த வழக்கை கைவிடுகிறோம்' என சி.பி.ஐ. அறிவித்துள்ளது. விஷ்ணுப்ரியாவின் மரணம் தமிழ்நாடு காவல்துறையையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. "அது தற்கொலையல்ல, நிர்பந்தக் கொலைதான்' என சக போலீசார் வேதனையுடனும் கொதிப்புடனும் குரல் கொடுத்தனர். இறுதியில் "அது கைவிடப்பட்ட வழக்காக மாறிவிட்டது' என வேதனையுடன் குறிப்பிடும் விஷ்ணுப்ரியாவின் நண்பர்கள், சி.பி.ஐ. இந்த முடிவுக்கு வந்ததன் பின்னணியையும் விவரிக்கின்றனர்.

Advertisment

vishnupriya

விஷ்ணுப்ரியாவின் மரண வழக்கை அவரது மரணத்திலிருந்து கவனித்துவரும் வழக்கறிஞர் பாஸ்கர் மதுரம், ""அரசியல் காரணங்களுக்காக உண்மைகளை மாநில போலீசார் மறைக்க முற்படும்போது எளிய மக்கள் தங்களுக்கு நீதி கிடைக்க கடைசி நம்பிக்கையாக சி.பி.ஐ.யை நம்பியிருக்கிறார்கள். ஆனால் அப்படிப்பட்ட சி.பி.ஐ. தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட வழக்குகளின் விசாரணையை தொடர்ந்து கைவிட்டு வருகிறது. வழக்கறிஞர் சங்கரசுப்புவின் மகன் சதீஷ் மரணம் தொடர்பான வழக்கு, பரமக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு போன்ற வழக்குகளை உதாரணமாகக் காட்டலாம். மேலும், ராமஜெயம் கொலை வழக்கிலும் எந்த முன்னேற்றமும் இதுவரை இல்லை. கடைசியாக விஷ்ணுப்ரியாவின் மரண வழக்கைக் கைவிடுவதாக அறிவித்துள்ளது சி.பி.ஐ. விஷ்ணுப்ரியாவின் மரணத்தில் அரசியல் பின்னணி இருக்கிறது. அரசியல்வாதிகளைக் காப்பாற்றவே சி.பி.ஐ. இந்த முடிவை எடுத்துள்ளது. விஷ்ணுப்ரியாவின் மரணத்திற்கு யார் காரணம்? அதன் பின்னணி என்ன என கண்டுபிடிக்கத்தான் சி.பி.ஐ. வந்தது. ஆனால், விஷ்ணுப்ரியாவின் மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகளை அவிழ்க்காமல் சி.பி.ஐ. கைகழுவியதன் பின்னணியில் அரசியல் உள்ளது'' என்கிறார்.

Advertisment

vishnupriya""இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ.யின் தமிழகப் பிரிவு தலைவராக இருப்பவர் துரைக்குமார். டி.ஐ.ஜி. அந்தஸ்தில் இருக்கும் அதிகாரியான இவரது சொந்த ஊர் சேலம். தமிழக முதல்வர் எடப்பாடிக்கு மிகவும் நெருக்கமானவர் துரைக்குமார். விஷ்ணுப்ரியா விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு நிறைய ஆர்வம் உண்டு.

எடப்பாடியின் சமூகத்தைச் சேர்ந்த ஒரு மாணவியை கோகுல்ராஜ் என்கிற தலித் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் காதலித்தார். அந்த மாணவியும் கோகுல்ராஜும் திருச்செங்கோடு மலைக்கோவிலில் பேசிக்கொண்டிருக்கும்போது அங்கு வந்த அந்த மாணவியின் சமூகத்தைச் சேர்ந்த குழு, இருவரையும் தனித்தனியாகப் பிரித்துக்கொண்டு சென்றது. கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டு ரயில்வே தண்டவாளத்தில் வீசப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த விஷ்ணுப்ரியா அதை "கொலை' என கண்டுபிடித்தார். அந்தக் கொலையின் முக்கிய குற்றவாளியான யுவராஜ் தலைமறைவானார்.

தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் தலைவர் என சொல்லிக்கொண்டிருந்த யுவராஜுக்கு அந்தச் சமூகத்தைச் சேர்ந்த எடப்பாடி, தங்கமணி ஆகிய இரு அமைச்சர்கள் ஆதரவாக இருந்தனர். அப்பொழுது நாமக்கல் மாவட்ட எஸ்.பி.யாக இருந்த செந்தில்குமாரும் சட்டம்-ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யாக இருந்த டி.கே.ராஜேந்திரனும் ஆதரவாக இருந்தனர்.

இறந்துபோன கோகுல்ராஜின் தலித் சமூகத்தைச் சேர்ந்த போலீஸ் அதிகாரியான விஷ்ணுப்ரியா, அமைச்சர்கள் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளின் ஆதரவுடன் தலைமறைவாக இருந்து வாட்ஸ்-அப்பில் பத்திரிகையாளர்களுடன் பேசிய நாமக்கல் மாவட்டத்தில் பெரும்பான்மையாக இருந்த சமூகத்தைச் சேர்ந்த யுவராஜை கைது செய்ய முயன்றார். இதுதான் விஷ்ணுப்ரியாவை மரணத்திற்கு தள்ளிய முதல் முரண்பாடு.

டாஸ்மாக் துறைக்கு மந்திரியாக இருப்பவர் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் தங்கமணி. அவரது ஆசியுடன் சட்டம்-ஒழுங்கு துறை ஏ.டி.ஜி.பி.யாக இருந்த டி.கே.ராஜேந்திரனின் நெருங்கிய உறவினர் ஒருவர் திருச்செங்கோடு பகுதியில் டாஸ்மாக் கடைகளின் நேரத்தை தாண்டி, மதுபானம் விற்றுவந்தார். அவரது சட்டவிரோத பார்களை ரெய்டு நடத்தினார் விஷ்ணுப்ரியா. அத்துடன் அவர் நின்றிருந்தால் அவர் மரணத்தை நோக்கி சென்றிருக்கமாட்டார். அமைச்சர் தங்கமணியின் நெருங்கிய உறவினரான ஜெகநாதன் என்பவருக்குச் சொந்தமான மில்லில் கொடுக்கல் வாங்கல் மற்றும் சொத்துத் தகராறில் பள்ளிப்பாளையம் ஜெகதீசன் என்பவர் கொலை செய்யப்படுகிறார். அமைச்சர் தங்கமணியின் நெருங்கிய உறவினர் முன்னிலையில் அந்தக் கொலை நடைபெறுகிறது. அந்தக் கொலை வழக்கை விசாரித்த விஷ்ணுப்ரியா, அதற்கு திட்டம் தீட்டியதே நாமக்கல் மாவட்ட காவல்துறையின் உளவுப் பிரிவைக் கவனித்த ஒரு துணை ஆய்வாளர்தான் என கண்டுபிடிக்கிறார். தொடர்ந்து நடத்திய விசாரணையில் ஒரு டைரியை கண்டுபிடிக்கிறார். அந்த டைரியில் கொலைக்கு எப்படி உளவுத்துறை எஸ்.பி. ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்தார் என்பதோடு, நாமக்கல் மாவட்ட எஸ்.பி.க்கு கொலை விவரத்தை மறைப்பதற்காக 20 லட்ச ரூபாய் கொடுக்கப்பட்டது போன்ற விவரங்கள் இருந்தன.

cm-IPS-officiersஅந்த டைரி விஷ்ணுப்ரியாவிடம் இருந்தது, அமைச்சர் தங்கமணிக்கும் நாமக்கல் எஸ்.பி.க்கும் பெரிய தலைவலியாக இருந்தது. மரணம் சம்பவிப்பதற்கு சில நாட்கள் முன்பு விஷ்ணுப்ரியாவின் தனிப்பட்ட கஸ்டடியில் இருந்த அந்த டைரி காணாமல் போய்விட்டது. "அந்த டைரியை என்னிடம் தா' என செந்தில்குமார் கேட்டும் தராமல் இருந்த விஷ்ணுப்ரியா... டைரி காணாமல் போனதும் டென்ஷனானார். அதன்பிறகே விஷ்ணுப்ரியாவின் மரணம் நடைபெற்றது'' என்கிற காவல்துறையினர் கடைசிக் காலத்தில் விஷ்ணுப்ரியாவை அவர் வேலை பார்த்த நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகாவில் நடந்த சம்பவங்கள் பாதித்தன என்பதையும், விஷ்ணுப்ரியா எப்படி மாவட்ட அமைச்சர் தங்கமணி, சட்டம்-ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனுடன் மோதினார் எனவும் விவரிக்கிறார்கள் காவல்துறையைச் சேர்ந்தவர்கள்.

yuvarajஇந்த பின்னணிகள் எதையும் சி.பி.ஐ. கண்டுகொள்ளவில்லை. விஷ்ணுப்ரியாவின் மரணம் தொடர்பாக காவல்துறையால் விசாரிக்கப்பட்ட 70 சாட்சிகளில் ஒருவரைக்கூட சி.பி.ஐ. விசாரிக்கவில்லை. விஷ்ணுப்ரியாவின் மரணத்தைப் பற்றியும் அதிலுள்ள பின்னணிகள் பற்றியும் வெளிப்படையாக மீடியாக்களிடம் பேசிய கீழக்கரை டி.எஸ்.பி.யான மகேசுவரியையும் சி.பி.ஐ. விசாரிக்கவில்லை. செல்வாக்கான நபர்களுடன் மோதிய விஷ்ணுப்ரியாவை அவரது நேரடி மேலதிகாரியான எஸ்.பி. செந்தில் பயங்கரமாக டார்ச்சர் செய்தார். இதையெல்லாம் விஷ்ணுப்ரியா தனது பேட்ச்மேட் டி.எஸ்.பி.க்களான மகேஸ்வரி, கீதாஞ்சலி ஆகியோருடன் இணைந்து தங்களுக்கான ஒரு வாட்ஸ்அப் குரூப்பினை தொடங்கி உரையாடிக் கொள்ளும் போது பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

"யுவராஜ் வழக்கை முடி, அதைத் தோண்டாதே' என எஸ்.பி. செந்தில், பிரஷ்ஷர் கொடுத்ததை விஷ்ணுப்ரியா அதில் பதிவு செய்திருக்கிறார். அமைச்சர் தங்கமணிக்கும், போலீஸ் அதிகாரி டி.கே.ராஜேந்திரனுக்கும் நெருக்கமானவரின் டாஸ்மாக் பாரில் ரெய்டு நடத்தியவுடன் நாமக்கல் எஸ்.பி. செந்தில், விஷ்ணுப்ரியாவை எஸ்.பி.அலுவலகத்துக்கு அழைத்து... தொடர்ந்து நான்கு மணி நேரம் நிற்க வைத்து டார்ச்சர் செய்தார் என்பதையும் விஷ்ணுபிரியா தனது தோழிகளிடம் பகிர்ந்திருக்கிறார். அதேபோல் அமைச்சர் தங்கமணியின் உறவினர் சம்பந்தப்பட்ட கொலை வழக்கில் நடந்த விவரங்களையும் விஷ்ணுப்ரியா சொன்னார். விஷ்ணுப்ரியாவுடன் கடைசி வரை பயணித்த அவரது தாயாரைக் கூட சி.பி.ஐ. விசாரிக்கவில்லை.

lawyerவிஷ்ணுப்ரியாவின் அசைவுகளை நன்கு அறிந்த எஸ்.ஐ.ஆன சந்திரகலா சி.பி.ஐ.யிடம் தெளிவாக பேசினார். அவர் மோட்டார் சைக்கிளில் செல்லும்போது மூன்று முறை லாரி ஏற்றிக் கொல்ல முயற்சி நடந்தது. கடந்த 16 வருடங்களாக மோட்டார் பைக் ஓட்டிய சந்திரகலா இப்பொழுது மோட்டார் சைக்கிளை தொடவே பயப்படும் அளவிற்கு திட்டமிடப்பட்ட அந்த கொலைமுயற்சிக்கு பின்னால் இருந்தது யார்? என சி.பி.ஐ. கண்டுபிடிக்கவேயில்லை. அத்துடன் காணாமல் போனதாக சொல்லப்பட்ட விஷ்ணுப்ரியாவின் மொபைல் போன் எண் 94981 90449. அவர் இறந்தபிறகும் ஆக்டிவ் ஆக இருந்தது. அதை வைத்திருந்தவர் யார் என சி.பி.ஐ. கேட்கவே இல்லை என குற்றம்சாட்டுகிறார்கள் விஷ்ணுப்ரியாவின் நண்பர்கள்.

விஷ்ணுப்ரியாவிடம் வழிசலை காட்டிய நாமக்கல் எஸ்.பி. செந்திலின் திட்டங்களுக்கு அவர் ஒத்துழைக்கவில்லை என்பதனால் "சோத்துமூட்டை' என திட்டி அவமானப்படுத்தியிருக்கிறார். விஷ்ணுப்ரியா மரணத்திற்குப் பிறகும் அவரது மரணத்திற்கு காரணம் என மீடியாக்களில் விஷ்ணுப்ரியாவின் நண்பர்களால் குற்றம் சாட்டப்பட்ட செந்தில் மேல் ஒரு சிறிய நடவடிக்கை கூட எடுக்கப்படவில்லை. விஷ்ணுப்ரியா மரணத்திற்கு பிறகு நாமக்கல் எஸ்.பி.யாகவே தொடர்ந்த செந்தில், இப்பொழுது சென்னையில் பணப்புழக்கம் உள்ள மத்திய குற்றப்பிரிவில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்'' என்கிறார்கள் விஷ்ணுப்ரியாவின் காவல்துறை நண்பர்கள்.

விஷ்ணுப்ரியாவின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட அமைச்சரான தங்கமணிதான், எடப்பாடியின் ஆட்சியை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மூலமாக ஆரம்பத்தில் காப்பாற்றியவர். தங்கமணியின் டெல்லித் தொடர்புகள்தான் விஷ்ணுப்ரியாவின் மரணம் தொடர்பான சி.பி.ஐ. வழக்கு விசாரணையை நீர்த்துப் போக செய்துள்ளது என்கிற சேலம் மாவட்ட அ.தி.மு.க.வினர் விஷ்ணுப்ரியாவின் மரணத்தில் மர்மம் உள்ளது என அடித்துச் சொல்கிறார்கள்.

யாரைக் காப்பாற்ற சி.பி.ஐ. இந்த வழக்கை கைவிடுகிறது என கேட்பதுடன், விஷ்ணுப்ரியாவின் மரணத்தில் உள்ள மர்மங்களை தோண்ட அவரது நண்பர்கள் குழு கோர்ட் படியேற ஆயத்தமாகி வருகிறது.

-தாமோதரன் பிரகாஷ், ஜீவாதங்கவேல், நாகேந்திரன்

Vishnupriya
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe