லக நாடுகளைச் சேர்ந்த பொதுமக்கள், பொழுதுக்கும் கையைக் கழுவிக்கொண்டும் முகமூடி களை அணிந்துகொண்டும் இருக்கின்றனர். கொரோனா வைரஸ் பரவலாக ஏற்படுத்தி இருக்கும் தாக்கத்தின் விளைவே இது. ஆனால், இதுதான் சந்தர்ப்பம் என நினைத்த சில வியாபாரிகள், அறுபது முதல் எண்பது ரூபாய் வரை விற்கப்பட்டு வந்த 200 மி.லி. சானிடைசர், தற்போது முந்நூறு முதல் ஐநூறு ரூபாய் வரை விற்று வருகிறார்கள். மேலும், முகக்கவசங்கள் டூப்ளே மூன்று ரூபாயும், த்ரீ ப்ளே ஐந்து ரூபாய் வரையும் விற்கப் பட்டது. கொரோனா தாக்கத்தால் இருபத்தைந்து ரூபாய் வரை விற்கப் படுகிறது.

mask

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தீனன், ""ஒரு முகக்கவசத்தின் விலை 25 முதல் 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், சானிடைசரின் விலையை யும் கணிசமாக உயர்த்தி விட்டார்கள். அத்தியாவசியமாகிப் போன இந்தப் பொருட்களைப் பதுக்கிவைத்து, எம்.ஆர்.பி. ரேட்டுக்கு அதிகமாக விற்கிறார்கள். எதற்கும் பில் கிடையாது. தற்போது, மத்திய அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்திருக்கும் நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்தப் பொருட்களின் தேவை இன்னமும் அதிகமாகலாம் எனும்போது, அதைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்''’என்று வலியுறுத்துகிறார்.

சீனாவில் கடந்த மாதம் கொரோனா பாதிப்பு அதிகமானபோதே, தமிழகத்தில் பல மெடிக்கல்களுக்கு மாஸ்க் கொடுக்கவில்லை, அதைத் தயாரிக்கும் நிறுவனங்கள். அதேபோல, பிப்ரவரிக்குப் பிறகு, சிறிய மெடிக்கல்களுக்கு மாஸ்க்குகள் கொடுக்கப்படவில்லை. ஸ்டாக் இருக்கும் கடைகள் அதிக விலைக்கு விற்கின்றன என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையறிந்த புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி, நகரில் இயங்கும் மருந்துக் கடைகளை ஆய்வுசெய்து, அதிக விலையில் விற்கும் கடைகளுக்கு சீல் வைத்துச் சென்றார். சில கடைகள், கொள்முதல் விலைக்கான பில்லைக் காட்டியதால் தப்பித்தன.

Advertisment

mask

இதுகுறித்து மருந்துக் கடைக்காரர் ஒருவரிடம் கேட்டபோது, ""மாஸ்க்குகள் வழக்கமாக அறுவைச் சிகிச்சை செய்யக்கூடிய பெரிய மருத்துவமனைகளிலும், நகரப் பகுதிகளில் இருக்கும் மருந்துக் கடைகளிலும் தான் கிடைக்கும். கிராமப் பகுதிகளில் அவற்றின் விற்பனை என்பது குறைவுதான் என்றாலும், சில பாக்கெட்டுகளை அவசரத் தேவைக்காக வாங்கி வைத்திருப்போம். தற்போது, ஸ்டாக்கும் இல்லை. இருப்பு வைத்திருப்பவர்கள் இதைப் பயன்படுத்தி அதிக விலைக்கு விற்கிறார்கள். மனித உயிரோடு விலையாடும் அவர்களுக்கு மனிதாபி மானத்தின் அர்த்தம் புரியுமா''’என்று கேள்வியெழுப்பினார்.

சானிடைசர் மற்றும் முகக் கவசங்களின் தரம் குறித்து கேள்வி யெழும் நிலையில், சப்ளையர் ஹரீஷ் ராகவனிடம் பேசினோம், ""தேவை அதிகமாகும்போது, அதற்கான விலையையும் அதிகப்படுத்தி பலரும் விற்கிறார்கள். தமிழகத்தில் நடந்த சோதனையில் தரமற்ற போலி முகக்கவசங்களும் பறிமுதல் செய்யப் பட்டன.

mask

சில மருந்தகங்கள் எம்.ஆர்.பி. விலையைவிட அதிகமாக விற்றதால், பிரபலமான அப்பல்லோ பார்மஸி உள்ளிட்ட நாற்பது கடைகளுக்கு சீல்வைத்தது குறிப்பிடத்தக்கது.

முகக்கவசம் தயாரிக்க பதினோரு சான்றுகளை முறையாகப் பெற்றிருக்க வேண்டும். மருத்துவ உபகரணம் என்பதால், கைப்படாமல் தயாரிப்பது அவசியம். தேவை அதிகரித்திருப்பதால், குடிசைத் தொழில் மூலமாக முகக்கவசம் தயாரிப்பது முற்றிலும் தவறு. மேலும், பி.எஸ்.இ. எனப்படும் பாக்டீரியல் பில்ட்ரேஷன் எஃபிஸியன்ஸி எனப்படும் சோதனைச்சான்று பெற்றிருக்க வேண்டும். அந்தப் பரிசோதனையைக் கடந்து, 95 சதவீதம் தரமுள்ளதாக நிரூபிக்கப்பட்டால் மட்டுமே, முகக்கவசங்களை விற்க முடியும். இரண்டு வகை முகக்கவசங்கள் இருக்கின்றன. அதில் டூப்ளே முகக்கவசம் (ஸ்பன் பவுண்டு பாலி புரோபலீன்) மூலப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.

இந்த மூலப்பொருள் பெரும்பான்மையாக சீனாவில் இருந்தே இறக்குமதி ஆவதால், தற்போது அந்த நாடு தடை செய்துள்ளது. த்ரீப்ளே முகக்கவசத்தின் நடுவில் பாலி புரோபலீன் கொண்டு தயாரிக்கவேண்டும். அதேபோல, இதன்விலை கடந்த ஜனவரி மாதத்தில், குஜராத்தில் நடந்த எக்ஸ்போவில், ரூ.2.50 ஆக இருந்தது. தற்போது ரூ.15 வரை தயாரிப்பு செலவே வந்துவிட்டது. மார்க்கெட்டில் முப்பத்து ஐந்து ரூபாய் வரை விற்பனையானது. ஆனால், அரசு பத்து ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. அதிக பட்சம் ஒரு முகக்கவசத்தை இரண்டு, மூன்று நாட்களுக்கு மேல் பயன்படுத்த முடியாது.

அதேபோல், சானிடைசர் என்ற பெயரில் டெர்பண்டெய்ல் என்ற மூலப் பொருளைப் பயன்படுத்தி போலிகள் மார்க் கெட்டுக்கு வந்துவிட்டது வேத னைக்குரிய விஷயம்''’என்று வருத்தம்கொண்டார்.

சமூக ஆர்வலரான தேவேந்திரனிடம் கேட்டபோது, ""இப்படி அத்தியாவசியப் பொருட்களையே லாபத் துக்காக உயிர்போகிற நேரத்தில் கொள்ளை லாபத்திற்கு விற்கிறார்கள். அன்னாடங் காட்சிகள் என்ன செய்வார்கள் என்ற யோசனை வேண்டாமா? டெல்லியில் அறிவித்திருப் பது போல, ரேஷன் கடைகள் மூலம் இதையெல்லாம் விநியோகம் செய்ய அரசு உடனடியாக உத்தரவு பிறப்பித்தால் மட்டுமே, சாமான்யர்களைக் காப்பாற்ற முடியும்''’என்றார் அதிரடியாக.

-அரவிந்த், செம்பருத்தி