தன் மனைவி ராதிகாவை அழைத்துக்கொண்டு, நாடார் மகாஜன சங்கத்தின் பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜுவை அவருடைய வீட்டில் சந்தித்து, சால்வை அணிவித்து ஆதரவு கோரினார் சரத்குமார். விருதுநகர் தொகுதியிலுள்ள நாடார் வாக்கு வங்கியை மொத்தமாக ராதிகா பக்கம் வளைக்கும் முயற்சியாவே அச்சமுதாய வட்டாரத்தில் பேசப்படுகிறது. சரத்குமாரின் கணக்கு என்னவென்றால், ராதிகா சார்ந்துள்ள நாயுடு சமுதாய வாக்குகளையும் ஒருசேரக் கவர்ந்து, தன் மனைவியை பா.ஜ.க. எம்.பி.யாக்கி டெல்லிக்கு அனுப்பிவிடலாம் என்பதுதான்.
கரிக்கோல்ராஜுவுடன் சரத்குமார் தம்பதியர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பார்த்துக் கொதித்துப்போன அச்சமுதாயத்தின் முக்கிய பிரமுகர் "எந்த முகத்தை வைத்துக்கொண்டு கரிக்கோல்ராஜ் வீட்டுக்கு வந்தார்கள்?'' என்று நம்மிடம் கொட்டித் தீர்த்தார்.
"1994ல் சரத்குமாரை "நாட்டாமை' சினிமா தூக்கிவிட்டுச்சு. அரசியலுக்குள்ள வர்றதுக்கு ஒரு பேக்ரவுண்ட் தேவைப்பட்டுச்சு. அந்த நேரத்துல, தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் பங்குகள் ஸ்டெர்லிங் சிவசங்கரன் கைக்கு போயிருச்சு. சிவ சங்கரனும
தன் மனைவி ராதிகாவை அழைத்துக்கொண்டு, நாடார் மகாஜன சங்கத்தின் பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜுவை அவருடைய வீட்டில் சந்தித்து, சால்வை அணிவித்து ஆதரவு கோரினார் சரத்குமார். விருதுநகர் தொகுதியிலுள்ள நாடார் வாக்கு வங்கியை மொத்தமாக ராதிகா பக்கம் வளைக்கும் முயற்சியாவே அச்சமுதாய வட்டாரத்தில் பேசப்படுகிறது. சரத்குமாரின் கணக்கு என்னவென்றால், ராதிகா சார்ந்துள்ள நாயுடு சமுதாய வாக்குகளையும் ஒருசேரக் கவர்ந்து, தன் மனைவியை பா.ஜ.க. எம்.பி.யாக்கி டெல்லிக்கு அனுப்பிவிடலாம் என்பதுதான்.
கரிக்கோல்ராஜுவுடன் சரத்குமார் தம்பதியர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பார்த்துக் கொதித்துப்போன அச்சமுதாயத்தின் முக்கிய பிரமுகர் "எந்த முகத்தை வைத்துக்கொண்டு கரிக்கோல்ராஜ் வீட்டுக்கு வந்தார்கள்?'' என்று நம்மிடம் கொட்டித் தீர்த்தார்.
"1994ல் சரத்குமாரை "நாட்டாமை' சினிமா தூக்கிவிட்டுச்சு. அரசியலுக்குள்ள வர்றதுக்கு ஒரு பேக்ரவுண்ட் தேவைப்பட்டுச்சு. அந்த நேரத்துல, தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் பங்குகள் ஸ்டெர்லிங் சிவசங்கரன் கைக்கு போயிருச்சு. சிவ சங்கரனும், அப்ப மத்திய தொழில்துறை அமைச்சரா இருந்த முரசொலிமாறனும் நண்பர்கள். அதனால, நாடார்கள் தி.மு.க.வுக்கு எதிரான நிலை எடுத்தாங்க. வங்கியை மீட்கணும்னு சென்னைல நாடார்கள் ஊர்வலம் நடத்துனாங்க. நாடார் சமுதாய காவலன்னு பேர் எடுக்கணும்கிற பப்ளிசிடிக்காக அப்ப சரத்குமார் என்ட்ரி ஆனாரு. தி.மு.க. பிரபலமான சைதை கிட்டு ஆளுங்க அந்த ஊர்வலத்துல கல்லெறிஞ்சு விரட்டுனாங்க. இது னால, நாடார் சமுதாய மக்கள், தி.மு.க. ஆட்சி யாளர்களுக்கு எதிரான நிலை எடுத்தாங்க. நாடார் களைக் காம்ப்ரமைஸ் பண்ணுறதுக்கு தி.மு.க. தரப்புல சரத்குமார்கிட்ட காய் நகர்த்துனாங்க.
1998 பாராளுமன்றத் தேர்தல்ல தி.மு.க. வேட்பாளரா போட்டியிடறதுக்கு சரத்குமாருக்கு திருநெல்வேலில சீட் கொடுத்தாங்க. இன மக்கள் பகையா நினைச்ச தி.மு.க. கூட சரத்குமார் உறவு வச்சத, சமுதாயம் கோபத்தோடு பார்த்துச்சு. நடிகர் நாடகமாடிட்டாருன்னு கரிக்கோல்ராஜ் பேட்டி கொடுத்தாரு. சமுதாய எதிர்ப்பால், அந்தத் தேர்தல்ல சரத்குமார் தோத்துட்டாரு. ஆனாலும் சரத்குமாரோட நாடார் லேபிலுக்காக, 2001ல் தி.மு.க. அவரை ராஜ்யசபா உறுப்பினராக்குச்சு. இதெல்லாம் இனத் துரோகத்துக்காக அவருக்கு கிடைச்ச பரிசு.
2007ல் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்கிட்டு, 2011ல் நாடார் சங்கங் கள் கூட்டமைப்பு சரத்குமாரை தலைவராக்கி பெருந்தலைவர் மக்கள் கட்சியை ஆரம்பிச்சது. வாக்கு வங்கி பலத்தைக் காட்டணும்னு நாடார்கள் தீவிர அரசியலைக் கையில எடுத்தப்ப, சரத்குமார் சத்தமில்லாம அ.தி.மு.க. கிட்ட ரகசிய உடன்பாடு வச்சு, தன்னோட ச.ம.க. கட்சிக்கு ரெண்டு சீட் வாங்கிட்டாரு. சமுதாயத்துக்கு எதிரா நடந்து, தொடர்ந்து தோல்வியைச் சந்திச்சிட்டு வர்றாரு சரத்குமார்.
தி.மு.க., அ.தி.மு.க. ரெண்டு கட்சிக்கும் சரத்குமாரோட உண்மை முகம் தெரிஞ்சு, அவரை ஓரம் கட்டிட் டாங்க. இந்த நேரத்துல, காமராஜரை கையில எடுத்தாரு. விருதுநகர் ரோட்டுல 22 ஏக்கர்ல காமராஜருக்கு மணிமண்ட பம் கட்டணும். அதுல தேவர் சிலை, வ.உ.சி. சிலை, பாரதியார் சிலை எல்லாம் வைக்கணும்னாரு. மணிமண்டபம் இருக்கிற கள்ளிக்குடில எல்லா பெரிய ரயிலையும் நிற்கவைப்பேன்னாரு. காமராஜரை மட்டும் ஃபோகஸ் பண்ணுனா போதும்னு குளோபல் முதலாளி மதிப்பிரகாசம் இடம் கொடுத்தாரு. 2007 ஏப்ரல்ல, மணி மண்டபத்துக்கு அடிக்கல் நாட்டுற விழாவ பெரிசா வச்சு, தன்னை ஃபோகஸ் பண்ணுனாரு சரத்குமார். அப்ப என்னா சொன்னாரு தெரியுமா? "ஊர் கூடித்தான் தேர் இழுக்கணும். மணிமண்டப பணிக்கு ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்தாலும் பெற்றுக் கொள்வேன்' இப்படியெல்லாம் பேசிட்டு, அடுத்த அஞ்சே மாசத்துல, மனசுக்குள்ள இருந்த திட்டதோடு ச.ம.க. கட்சியைத் தொடங்கிட்டாரு. மணிமண்டப பணியை அப்படியே கிடப்புல போட்டுட்டாரு. திரும்பவும் அ.தி.மு.க.வோடு கூட்டணி வச்சு 2011ல தென்காசி தொகுதி எம்.எல்.ஏ. ஆனாரு.
அடுத்து சரத்குமாரோட அரசியல் போணியாகல. 2019-ல் திரும்பவும் காமராஜர் மணிமண்டபம் நினைப்பு வந்துச்சு. சரத்குமாரோட சுயநல அரசியலால மணிமண்டப ஏரியா 22 ஏக்கர்ல இருந்து 12 ஏக்கரா சுருங்கிருச்சு. அங்கே காமராஜர் சிலையை வச்சு ஒப்புக்கு மணிமண்டபத் திறப்பு விழா நடத்துனாரு. அப்ப முதலமைச்சரா இருந்த எடப்பாடி பழனிசாமி சென்னைல இருந்தே காணொலி காட்சி மூலமா திறந்துவச்சாரு.
மணிமண்டபத் திறப்பு விழா நேரத்துல, "பிற்காலத்துல உலக அதிசயங்கள்ல ஒண்ணா இந்த மணிமண்டபத்தை அமைத்துக்காட்டுவேன். தூண்களே இல்லாமல், ஜெர்மன் தொழில்நுட்பத்துல மைய மண்டபம் கட்டுறோம். அது ரெண்டாயிரம் பேர் அமரும் அளவுக்கு பிரம்மாண்டமா இருக்கும். நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய கணினி மையம்னு எல்லாமே அமைக்கப்படும்'னாரு. மணிமண்டபம் கட்ட(?) அப்ப செலவான தொகை ரூ.25 கோடின்னு குத்துமதிப்பா ஒரு கணக்கு சொன்னாரு. சரத்குமாரோ, அந்த அறக்கட்டளையோ, இப்ப என்ன கணக்கு வச்சிருக்குன்னு யாருக்குத் தெரியும்?''’எனக் கேட்டார், அந்த சமுதாயப் பிரமுகர்.
மதுரை -விருதுநகர் சாலையில் அமைந்துள்ள காமராஜர் மணிமண்டப வளாகத்துக்குச் சென்றோம். பூட்டப்பட்டிருந்த நிலையில், அந்தப் பகுதியில் ஒருவரைத் தேடிப்பிடித்து திறக்கச் சொன்னோம். "அதெல்லாம் யாரையும் உள்ளே விடக்கூடாதுன்னு உத்தரவு'’என்றார்.
"யாருடைய உத்தரவு?''’என்ற கேள்வியைக் கண்டுகொள்ளாத அவர், நம்மை அங்கிருந்து விரட்டுவ திலேயே குறியாக இருந்தார். புதர் மண்டிக்கிடந்த காமராஜர் மணிமண்டப வளாகத்துக்கு வெளியிலிருந்து பார்த்தபோது, பராமரிப்பில்லாத சிலை வடிவில் காமராஜர் பரிதாபமாகக் காட்சியளித்தார். நமக்கோ நெஞ்சு கனத்தது.