Advertisment

விருதுநகர் சி.இ.ஓ. வில்லித்தனம்? -பள்ளிக் கல்வித்துறை புகைச்சல்!

ceo

விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஞானகௌரியைக் கண்டித்து, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விதவிதமான போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. என்ன விவகாரம் இது?

Advertisment

"பள்ளிக் கல்வித்துறை நிர்வாக சீர்திருத்த பிரகாரம், அருப்புக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலகத்தில் பணிபுரிந்த பள்ளித் துணை ஆய்வாளர் (உஒ) ரமேஷின் பணியிடத்தை சரண்டர் செய்யாமல், விதிகளுக்கு எதிராக விருதுநகர் மாவட்ட கல்வி அலுவலகத்தில் உஒ பணியிடத்தில் அவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே, அங்கு உஒ-யாக இருந்த தங்கேஸ்வரன், திருத்தங்கல் எஸ்.ஆர். அரசு மேல்நிலைப் பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ceo

விருதுநகர் மாவட்டத்தில் பட்டியலின ஆசிரியர்கள் மீது சாதி வெறியோடு ஆதாரமற்ற புகார்கள் அள்ளித்தெளிக்கப்படுகின்றன. லஞ்சம் பெற்று இடமாறுதல்கள் நடக்கின்றன. ஒயின் ஷாப் பக்கம் சாராய நெடி அடிக்கிறதென்றால், முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்திலோ தெலுங்கு நெடி அடிக்கிறது. இந்த அலுவலகத்தில் அனைத்து சமூக அலுவலர்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவேண்டும்.

Advertisment

பேரா

பேராபட்டி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியை ஜூலியட் ரதி, ‘ஜாதி புத்தி’ எனத் திட்டுகிறார். "நான் வாள் பிடிச்ச பரம்பரைல இருந்து வந்தவ. யாருக்கும் பயப்படமாட்டேன்...'’என்று பேசுகிறார். "மாற்றுச் சான்றிதழ் தந்துவிடுவேன்'’என மாணவர்களை மிரட்டுகிறார். பள்ளியில் சாதிப் பாகுபாடு காட்டிவரும் அவருக்கு, விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் துணைபோகிறது.

ஆசிரியர் மாறுதல் கவுன்சிலிங்கில் முறைகேடுகள் நடக்கின் றன. ராமநாதபுரத்திலிருந்து விருதுநகர் மாவட்டம் பெரிய கொல்லபட்டிக்கு இடமாறுதல் உத்தரவு வாங்கி வந்த ஒரு ஆசிரியரால், அங்கு பணியில் சேரமுடியவில்லை. பெரியகொல்லபட்டி யில் ஆசிரியையாகப் பணிபுரிந்தவர், மடத்துப்பட்டிக்கு இடமாறுதல் செய்யப்பட்டும், அங்கு போகவில்லை. அந்த ஆசிரியை பெரிய கொல்லபட்டியிலேயே தொடர்ந்து பணியாற்றுவதற்காக, ராமநாதபுரத்திலிருந்து மாறுதல் உத்தரவு வாங்கிவந்த ஆசிரியருக்கு ரூ.1 லட்சம் கொடுத்ததெல்லாம் நடந்திருக்கிறது. இந்த விஷயத்தில் நேர்மையாக நடந்துகொள்ள நினைத்த பெரியகொல்லபட்டி தலைமை ஆசிரியரை ஒருமையில் பேசி திட்டியிருக்கின்றனர்.

பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர், "விருதுநகரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி,“அரசுக்கு களங்கத்தை ஏற்படுத்தி, முதலமைச்சரின் தூக்கம் இன்னும் கெட்டால்... அது பாராளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும். சி.இ.ஓ. மற்றும் டி.இ.ஓ. அலுவலக ஊழியர்கள் யார் யாரிடம் எவ்வளவு லஞ்சம் பெற்றனர் என்ற விபரத்தை வெளியிடுவோம்''” என்று எச்சரித்துள்ளனர்.

ceo

நம்மிடம் பேசிய தமிழ்நாடு உயர்நிலை -மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் விருதுநகர் மாவட்ட தலைவர் விஜயபாலன், "புகார்களை முன்வைத்து சி.இ.ஓ. ஞானகௌரியிடம் சங்கம் சார்பா பேசினோம். அப்படித்தான் பண்ணு வேன். இது என்னோட நிர்வாகம். நான் எடுக்கிறதுதான் முடிவு. இதுல நீங்க தலையிட முடியாதுன்னு சொன் னார். அதுக்கு நாங்க, "அப்படின்னா இயக்க நடவடிக்கை எடுப்போம்'னு சொன்னோம். அதுக்கு அந்தம்மா ‘"கோர்ட்டுக்கு கூட போங்க. ஆணையர்கிட்ட போய் சொல்லுங்க. ஆர்ப்பாட்டம் பண்ணப் போறீங்களா? வால்போஸ்டர் ஒட்டப்போறீங்களா? என்னமும் பண்ணிக்கங்க. ஐ டோன்ட் கேர்'னு சொன்னாங்க. அப்புறம்தான் போஸ்டர் ஒட்டு னோம். ஆர்ப்பாட்டம் பண்ணுனோம்''’என்றார்.

விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலு வலர் ஞானகௌரியைத் தொடர்புகொண்டோம்.

"அரசாணை 151-ன் படி விருதுநகர் மாவட் டத்திலும் மறுசீரமைப்பு நடந்தது. மூன்று பள்ளித் துணைஆய்வாளர்கள் இடம் இரண்டாகக் குறைக் கப்பட்டது. ஜூனியரான தங்கேஸ்வரன் இடம் இல் லாம விடுபட்டாரு. அவர் பட்டதாரி ஆசிரியர்ங் கிறதுனால.. தமிழாசிரியர் பணியிடத்த கொடுத் தோம். பேராபட்டி பள்ளியில தீண்டாமை பிரச் சினை மூணு வருஷமா இருக்கு. தலைமை ஆசிரி யைக்கு எதிரா மாணவர்களை மொத்தமா வச்சிக் கிட்டு ஒரு ஆசிரியர் தூண்டி விடறாரு. பெரிய கொல்லபட்டி டிரான்ஸ்பர் விவகாரம் நீங்க சொல் லித் தான் எனக்கே தெரியுது... நான் விசாரிக்கிறேன். கல்வித்துறை பொறுப்புல இருக்கிற நான் ஜாதி பார்க்கிறது இல்ல. எனக்கு எந்த அரசியல் அழுத்த மும் இல்ல. சொல்லுறவங்க என்ன வேணாலும் சொல்வாங்க. வாய் இருக்குன்னு பேசுவாங்க. இதுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியதில்ல.

சங்கத்துக்காரங்க என்ன நினைக்கிறாங்களோ, அதை சாதிக்கணும்னு பார்ப்பாங்க. சங்கத்து சார்பா என்னை சந்திச்சவங்களுக்கு சரியான புரிதல் இல்ல. நான் எடுத்துச் சொன்னாலும் புரிஞ்சிக்க அவங்க முயற்சி பண்ணல. அதனால, மேல்முறையீடுக்கு போங்கன்னு சொன்னேன். மேல்முறையீடுக்கு போயிருக்கணும்ல. எதுக்கு போஸ்டர் ஒட்றாங்க? நியாயமான வழி இருக்கும்போது, பிற வழிகளை ஏன் தேர்வு செஞ்சாங்க? சங்கத்தினரின் நடவடிக் கைகள்ல பெரிய அளவுக்கு பாலிடிக்ஸ் இருக்கு. நான் எப்போதும் நான்தான். என்னை யாரும் எந்தக் குற்றமும் சொல்ல முடியாது. சங்கத்துக்காரங்க சப்போர்ட் பண்ணுற தங்கேஸ்வரன், ரூ.8 லட்சம் லஞ்சம் கொடுத்துத்தான் இந்த போஸ்டிங்குக்கு (உஒ) வந்தேன்னு போட்ட மெசேஜ் என்கிட்ட இருக்கு. சங்கத்துக்காரங்க உண்மையிலேயே லஞ்சத் துக்கு எதிரானவங்களா இருந்தா.. லஞ்ச குற்றச் சாட்டை எங்கே சொல்லணுமோ, அங்கே சொல்ல வேண்டியதுதான? சும்மா எதுக்கு வெளிய சொல்லிக் கிட்டிருக்காங்க?'' என்று பதிலுக்கு பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் மீது குற்றம் சுமத்தினார்.

பள்ளிக் கல்வித்துறை அலுவலர்களோ, ஆசிரியர் களோ, பள்ளிகளைத் திறம்பட கண்காணிப்பதை உறுதி செய்வதற்காக, கள அளவில் நிர்வாகத்தை மறுசீரமைத்த நிலையில், மாணவர்களுக்குத் தர மான கல்வியை வழங்கிட முன்வரவேண்டும்.

nkn021122
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe