Advertisment

வில்லங்க குற்றச்சாட்டில் விருதுநகர் மாவட்ட கல்வி அதிகாரி!

dd

"கல்வி அலுவல ரின் பாலியல் வேட்டை! -சிக்கித் தவிக்கும் பெண்கள்!'’ என்னும் தலைப்பில் நக்கீரன் செய்தி வெளியிட்டிருந்த 2019 ஆகஸ்ட் 21-23 நக்கீரன் இதழைக் கையிலெடுத்துவந்து நம்மைச் சந்தித்தார், விருதுநகர் மாவட்ட கல்வித்துறையைச் சேர்ந்தவர்.

Advertisment

"பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்கள் தவறு செய்தால், ஆசிரி யர்கள் திருத்துவார்கள். விருதுநகர் மாவட்டத் திலோ, அரசு மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஒருவர் தவறு செய் கிறார். அதற்கு உடந்தையாக விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரே இருக்கிறார். ஒருவேளை இவர்கள் இருவரும் சகோதரத்துவத்துடன் பழகி வருவதாக வெளியில் சொன்னாலும், ஆசிரியர்கள் தரப்பு நம்பத் தயாராக இல்லை.

Advertisment

edu

அந்தத் தலைமை ஆசிரி யையிடம் பேசிப் பழகுவதில், முதன்மைக் கல்வி அலுவலருக்கு உள்ள ஆர்வம் பட்டவர்த்தன மாகத் தெரிகிறது. அந்தப் பள்ளியில் ஒருநாள் முழுவதும் இருந்திருக்கிறார். தற்போது, துறைரீதியாகவே அந்தத் தலைமை ஆசிரியையின் செல் வாக்கை வெகுவாக உயர்த்தி யிருக்கிற

"கல்வி அலுவல ரின் பாலியல் வேட்டை! -சிக்கித் தவிக்கும் பெண்கள்!'’ என்னும் தலைப்பில் நக்கீரன் செய்தி வெளியிட்டிருந்த 2019 ஆகஸ்ட் 21-23 நக்கீரன் இதழைக் கையிலெடுத்துவந்து நம்மைச் சந்தித்தார், விருதுநகர் மாவட்ட கல்வித்துறையைச் சேர்ந்தவர்.

Advertisment

"பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்கள் தவறு செய்தால், ஆசிரி யர்கள் திருத்துவார்கள். விருதுநகர் மாவட்டத் திலோ, அரசு மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஒருவர் தவறு செய் கிறார். அதற்கு உடந்தையாக விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரே இருக்கிறார். ஒருவேளை இவர்கள் இருவரும் சகோதரத்துவத்துடன் பழகி வருவதாக வெளியில் சொன்னாலும், ஆசிரியர்கள் தரப்பு நம்பத் தயாராக இல்லை.

Advertisment

edu

அந்தத் தலைமை ஆசிரி யையிடம் பேசிப் பழகுவதில், முதன்மைக் கல்வி அலுவலருக்கு உள்ள ஆர்வம் பட்டவர்த்தன மாகத் தெரிகிறது. அந்தப் பள்ளியில் ஒருநாள் முழுவதும் இருந்திருக்கிறார். தற்போது, துறைரீதியாகவே அந்தத் தலைமை ஆசிரியையின் செல் வாக்கை வெகுவாக உயர்த்தி யிருக்கிறார். அந்தத் தலைமை ஆசிரியை பணிபுரியும் மேல் நிலைப்பள்ளிக்கு புதுமை பள்ளிகள் விருதுடன் ரூ.1 லட்சமும் கிடைக்கச் செய்திருக்கிறார். சில வருடங் களுக்குமுன் பாலியல் புகாருக்கு ஆளான அந்தத் தலைமை ஆசிரி யைக்கு விதிமீறலாக நல்லாசிரியர் விருது பெறவும் பரிந் துரைத்திருக்கிறார். அவரைச் சந்தித்துப் பேசுவதற்காகவே, அந்த கிராமத்துப் பள்ளிக்கு அடிக்கடி சென்றுவந்த முதன்மைக் கல்வி அலுவலர், தற்போது தன் பக்கத்திலேயே அவரை வைத்துக் கொண்டார்.

அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளின் நிர்வாகிகளிடமிருந்து போஸ்டிங் விஷயத்திலிருந்து சகலத்துக்கும் பணம் பெற்றுத்தரும் தரகராக, விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பணி புரியும் சாணக்கியன் செயல் படுகிறார். முறைகேடான செயல்களுக்கு பணம் வாங்கு வதெல்லாம் இரவு நேரத்தில் தான். மிகவும் கொடுமை யாக இருக்கிறது. விருதுநகர் மாவட்ட கல்வித்துறையில் என்ன நடக்கிறது என்பதை அறியாதவர்களாக கல்வித்துறை இயக்குனர்கள் இருக்கின்றனர்''”என்றார் அவர் வேதனையுடன்.

சி.இ.ஓ.வுக்கு ஆல்-இன்-ஆல்’ என்று சொல்லப்படும் ஜூனியர் அசிஸ்டன்ட் சாணக்கியனிடம் பேசினோம். "சி.இ.ஓ.வுக்கு பணம் வாங்கித் தர்ற புரோக்கர் வேலை நான் பார்க்கல. அந்தமாதிரி தவறுகள் எதுவும் நான் பண்ணுனது இல்ல. பணம் வாங்குறதுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்ல. ஆனா.. என்னைப் பற்றி எல்லாரும் அப்படித்தான் பேசுறாங்க. ஏன் இந்தமாதிரி பேசுறாங்கன்னு தெரியல. இப்பல்லாம் எந்த போனையும் நான் அட்டென்ட் பண்ணுறதில்ல. என்கிட்ட யாராச்சும் பேசுனா.. எனக்கு எதுவும் தெரியாது. நீங்க நேர்ல ஆபீசுக்கு வந்து பேசிக்கங்கன்னு சொல்லிருவேன். எனக்கெதுக்கு வம்பு? நான் வெட்டியா பேசி எதுக்கு கெட்ட பெயர் வாங்கணும்? ஏதோ ஒண்ணு ரெண்டு தெரியாம நடந்திருக்கலாம். இனிமேல் அப்படி நடக்காது. எந்த ஒரு தப்பானதும் உங்ககிட்ட வராது''’ என்று வெள்ளந்தியாகப் பேசினார்.

ee

பள்ளிகளுக்கு விசிட்’செல்லும்போது தோற்றப் பொலிவுள்ள ஆசிரியைகளை வலிய வரவழைத்துப் பேசுகிறார். ஆசிரியைகள் சிலருக்கு வாட்ஸ்-அப் மெசேஜ் அனுப்புகிறார்..’ என்றெல்லாம் சி.இ.ஓ. மீது புகார் கிளம்பியிருக்கும் நிலையில், தனியார் பள்ளி ஒன்றில் பிரின்சிபலாக இருப்பவரது கணவர் நம்மிடம், "ஆமா சார்.. அப்படித்தான் சொல்றாங்க. சி.இ.ஓ. பேச்சிலராம். தனியா சி.இ.ஓ.வ பார்க்கப் போயிராத. போகும்போது துணைக்கு ரெண்டு மூணு டீச்சர்ஸ கூட்டிட்டுப் போயிருன்னு, அவங்க ஸ்கூல்ல வேலை பார்க்கிற டீச்சர்ஸ் பேசிக்கிறதா, என் வீட்டுக்காரம்மா சொன்னாங்க. நீயும் கவனமா இருன்னு நானும் சொல்லிவச்சிருக்கேன்''” என்றார் பதற்றத்துடன்.

விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இராமனைத் தொடர்புகொண் டோம்.

dd

“"நீங்க சொல்லுற அந்த ஸ்கூலுக்கு ஒரு நாள்தான் போயிருக்கேன். அந்தம்மாவுக்கு இப்ப அடிஷனல் சார்ஜ் கொடுத்திருக்கோம். நான் பேச்சிலர் என்ற விபரமெல்லாம் எதுக்கு? ஏன் இப்படி பேசுறாங்கன்னு தெரியல? ஆவணங்கள் அடிப்படைலதான் புதுமைப் பள்ளி விருது தர்றோம். வாட்ஸ்-அப்ல எந்த டீச்சருக்கும் நான் மெசேஜ் அனுப்பல. சாணக்கியன் மூலமா நான் பணம் வாங்குறதா சொல்லுறது உண்மையில்ல. நல்லாசிரியர் விருதுக்கு ப்ரபோசல் கொடுத்திருக்கவங்கள இன்னைக்கு வரச்சொல்லிருக்கோம். நான் இங்க ஜாயின் பண்ணி ரெண்டு மாசம்தான் ஆகுது. இல்லாதத ஏன் சொல்றாங்கன்னு தெரியல. எனக்கு வேண்டாத ஆளு பண்ணுற வேலை மாதிரி தெரியுது. உங்களுக்கு கிடைச்சது தவறான தகவல். கல்வித்துறையில் ஒழுக்கம் மிகவும் அவசியமானது''’என்று ஒரே போடாகப் போட்டார்.

விருதுநகர் மாவட்ட கல்வித் துறையில் ஒழுங்கீனங்கள் தொடர்ந்தபடியே இருக்கின்றன..’ என்று நமக்குக் கிடைத்த தகவலை முன்வைத்து விளக்கம் பெறுவதற் காகவும், துறைரீதியாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற் காகவும், தமிழக பள்ளிக் கல்வித்துறையின் மேல்நிலைக்கல்வி இணை இயக்குநர் கோபிதாஸை அவ ருடைய கைபேசி எண் 944லலலல787-ல் தொடர்புகொண்டோம். அவர் நமது லைனுக்கு வராத நிலையில், குறுந்தகவல் அனுப்பினோம்... அவரிடமிருந்து பதிலில்லை.

கற்றுத்தரும் ஆசிரியர்கள் மிகவும் விவரமானவர்கள் என்பதை அறிந்திருந்தும், அவர்கள் கண்முன்னே இதுபோன்ற தவறுகள் தொடர்ந்து நடப்பது கொடுமையிலும் கொடுமை!

nkn120823
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe