மிழ்நாட்டின் மயில்கள் சரணாலயம் என்று கூறப்படும் ஊர் விராலிமலை. சுமார் 1000 மயில்களுக்கு மேல் வாழ்ந்த இம்மலைப் பகுதியில், ஆக்கிரமிப்புகள், காடுகள் அழிப்பு உள்ளிட்ட பிரச்சனைகளால் மயில்கள் எண்ணிக்கை நூற்றுக்கும் குறைவாகிவிட்டது. அதேபோல், மலையைச் சுற்றியுள்ள அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பாளர் களால் கைப்பற்றப்படுவதால் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறாக உள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டுமென்று போராடியதன் விளைவாக, ஆகஸ்ட் 15 அன்று ஒரு சமூக ஆர்வலரின் உயிர் பறிபோயுள்ளது.

Advertisment

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதி கொடும்பாளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (எ) ஆரப்பன். பா.ஜ.க. பிரமுகரான இவருக்கு கல்பனாதேவி என்ற மனைவியும், ஹரிகிருஷ்ணன் என்ற மகனும் உள்ளனர். முருக பக்தரான இவர் விராலிமலை முருகன் கோயில் மலையைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஆக்கிரமிப்பு நிலங்களுக்கு கொடுத்த பட்டாக்களை ரத்து செய்யக்கோரி அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும் பயனில்லாததால் கடந்த ஏப்ரல் மாதம் அதே கோரிக்கையை வலியுறுத்தி செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தினார். அதன் பிறகும் நடவடிக்கை இல்லை.

இந்த நிலையில்தான் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று அதிகாலையிலேயே விராலிமலை முருகன் கோயிலுக்கு சென்றவர், அங்கு 70 அடி உயர முள்ள ராஜகோபு ரத்தின் மீது ஏறி ஒரு தேசியக் கொடியை விளக்கு கம்பத்தில் பறக்கவிட்டவர், மற்றொரு தேசியக் கொடியை கையில் பிடித்துக்கொண்டு நின்றுள்ளார். இதனைப் பார்த்த பக்தர்கள், காவல்துறை, வருவாய்த்துறை, தீயணைப்பு, அறநிலையத்துறைக்கும் தகவல் கொடுத்துள்ளனர். அங்கு வந்த அதிகாரிகள் பலமணி நேரம் பேச்சு வார்த்தை நடத்தியும் இறங்க மறுத்துள் ளார். 

viralimalai1

Advertisment

மற்றொரு பக்கம் தீயணைப்பு வீரர் கள் அவரை மீட்க ராஜகோபுரத்தில் ஏறியதைப் பார்த்த ஆறுமுகம், "யாரா வது மேலே ஏறினால் கீழே குதிப்பேன் என்று சொன்னவரிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திய பிறகு தானாக கீழே இறங்குவதாகக் கூறி பொம்மை களை பிடித்துக்கொண்டு கீழே இறங்கும்போது தடுமாற்றம் ஏற்பட்டு அவர் பிடித்திருந்த யாளி சிற்பம் உடைந்த தால், அங்கிருந்து கீழே மணிமண்டபத்தில் விழுந்த ஆறுமுகம், பலத்த காய மடைந்த நிலையில் அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத் துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கென வே இறந்துவிட்டதாகக் கூறியுள் ளனர். உடனே அவரது உடலை பிரேதப் பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த போலீசார், வழக்கு பதிவு செய்து ஆறுமுகத் துடன் சென்றவரிடம் விசா ரணை செய்தனர். 

இதுகுறித்து அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கூறும்போது, "இயற்கை வளங்களையும், அரசு சொத்துக்களையும் அதிகாரிகள் பாதுகாக்கத் தவறியதால் அதனைப் பாதுகாக்க சமூக ஆர் வலர்கள் போராடிவருகிறார்கள். அரசு சொத்துக்களை பாதுகாக் கப் போராடினால் உயிர் போவது தான் பரிசாகக் கிடைக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒருசில மாதங்களிலேயே அடுத்தடுத்த சில சமூக ஆர்வலர்களை இழந்துவிட்டோம்.

தற்போது போராட்டக் களத்திலேயே உயிரிழந்த ஆறுமுகம் ஏற்கெனவே கோயில் மலை அடிவார ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி செல்போன் டவரில் ஏறி போராடினார். போன வாரம் கோயிலுக்குள் நெகிழிப் பயன்பாடு அதிகமாக உள்ளதென்பதை தட்டிக்கேட்டால், நெகிழி உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை மூடச் சொன்னதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்திருக்கிறார்கள்.

Advertisment

இந்த நிலையில்தான் சுதந்திர தினத்தன்று அதிகாரி கள், பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து ஆக்கிரமிப்பை அகற்றச் செய்ய மலை மீதுள்ள ராஜகோபுரத்தில் ஏறியுள் ளார். இந்த ராஜகோபுரம் 5 நிலை கொண்ட 70 அடி உயரம் உள்ளது. 3 நிலைவரை உள்பக்கம் சிறிய படிகள் உள்ளது. அதற்கு மேலே சங்கிலி அமைக்கப்பட் டுள்ளது. ஆனால் ஆறுமுகம் நீண்ட நேரம் கோபுர உச்சியில் நின்றதால் உடல் தளர்ச்சியடைந்த நிலையில் சங்கிலியைப் பிடிக்காமல் பொம்மைகளை மட்டுமே பிடித்து இறங்கியபோது வழுக்கிவிட்டதால் சிலையிலும் உடைப்பு ஏற்பட்டு அதிகாரிகள் கண்முன்னே கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்த ஆறுமுகம் குடும்பத்திற்கு அரசு இழப்பீடும், அரசு வேலையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சடலத்தை அடக்கம் செய்யாமல் உறவினர்கள் போராட்டம் நடத்தினார்கள். அதிகாரிகளின் சமாதானப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு உடலை அடக்கம் செய்தனர். இனியாவது அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல் துரிதமாகச் செயல்பட்டு ஆறுமுகத்தின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்'' என்றனர்.

வருவாய்த்துறை அதிகாரிகளோ, "ஆறுமுகத்தின் கோரிக்கை, சுமார் 100 வருடமாக உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் என்கிறார். பழைய இடங்களுக்கு பட்டா உள்ளது. செட்டில்மெண்ட், யு.டி.ஆர்-க்கு பிறகு உள்ள ஆக்கிரமிப்புகளைத்தான் நாங்கள் அகற்ற முடியும். அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம். அதற்குள் இப்படி நடந்துவிட்டது'' என்கின்றனர். இனிமேலும் அதிகாரிகள் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு அலட்சியம் காட்டாமல் விரைந்து நடவடிக்கை எடுப்பது பல உயிர்களைக் காப்பாற்றும்.