அவர் தமிழ் நாட்டில் முக்கியப் பொறுப்பை வகிக்கும் மேற்கு மண்டலத்து அரசியல்வாதி. அவரது இளமைக் காலங்கள் மன்மதமை ஊற்றி எழுதப் பட்டவை. பெயரில் ராமனும் செயலலில் கிருஷ்ணனும் அவரது ஸ்பெஷாலிட்டி. இந்த ராமனின் "கிருஷ்ண லீலைகள்' நாட்டின் முதலமைச்சராக அப்போதிருந்த ஒரு ராமன் வரைக்கும் புகழ் பெற்றவை.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/VIPhouse.jpg)
ஒரு கட்டத்தில் அந்த லீலையின் மூலமாகவே தன் மனைவியாக ஒருவரை கரம் பிடித்தார் அவர். லட்சுமி கடாட்சமாய் அமைந்து விட்ட தனது மனைவியின் மூலம் கட்சிக்குள் வளரத் தொடங்கி விட்ட அவருக்கு... மனைவியின் தங்கையையும் அடைந்து விட்டால், இன்னொரு லட்சுமியும் தன்னிடமே சேர்ந்து விடும். அதனால் பல லட்சங்களால் வீடு முழுக்க பணத் தோரணமே கட்டி தொங்க விடலாம் என அவரது சாமர்த்திய புத்தி வழி சொன்னது.
மச்சினிச்சியின் வீட்டுக் கூரை மேல் ஏறி ஓட்டை உடைத்து உள்ளே குதித்தார். வலுக் கொண்டு மச்சினிச்சியை வளைத்தார்... அணைத் தார்... அப்புறம் தப்பி ஓடி விட்டார். தலைமறை வாகிவிட்ட அவர் மீது மச்சினிச்சி தரப்பால் அப்போது எப்.ஐ.ஆர் போடப்பட்டது. பின்னர் முதலமைச்சர் ராமனே அவருக்காக தலையிட்டு... சுமூகமாக பேசி, இந்த ராமனின் மனைவியின் தங்கச்சி யையே துணைவியாக்கி கொடுத்தார் அவருக்கு. தான் போட்ட திட்டம் நிறைவேறிவிட... பண மழை அவர் மேல் கொட்ட ஆரம்பித்து விட்டது.
பின்னர் ச.ம.உ. அமைச்சர்... என அவர் பல உயரங்களை எட்டிப் பிடிக்க ஆரம்பித்து விட்டார். அவர் உதவியாளராக, அவரின் அத்தனை ரகசியங்களையும் அறிந்தவராக வீரம் செறிந்த ஒருவரை தன் கூடவே வைத்து இருந்தார்.
அந்த ராமனின் இளமைக்கால மன்மத லீலை போலவே அவரது இரண்டு மகன்களும் தங்கள் நண்பர்களோடு குதி போட்டு ஆடிய ஆட்டமும், அதன் தொடர்ச்சியாக பல இளம்பெண்கள் பாதிக்கப்பட்டதும், தமிழ்நாட்டையே உலுக்கியது. அவர் சார்ந்திருக்கும் கட்சிக்கு பெரும் சறுக்கல் ஏற்பட்டதும் அவரது மகன்களால்தான்.
அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், அந்த விவகாரத்தை மறைத்து, கட்சிக்குள் இரு மகன்களையும் முன்னிலைப்படுத்த அவர் தீவிர முயற்சி எடுத்துக்கொள்வது கட்சிக்காரர்களுக்கு அறவே பிடிக்கவில்லை. இந்த நிலையில் தான் அவர் மேல் வெடிகுண்டு ஒன்று விழுந்தது போல ஊர் முழுக்க புகை பரவிக் கொண்டிருக்கிறது. அதாவது அவரின் உதவியாளரான வீரம் செறிந்தவர், ராமரின் இரண்டாவது துணைவியோடு நட்பு பாராட்டி இணக்கம் கொண்டு விட்டாராம். இதை அறிய நேர்ந்த அந்த வி.ஐ.பி., அதிர்ச்சி யடைந்தார். அவர் அவராகவே இல்லை.
தினமும் அவரது வீடு சலசலப்பு தோரணங்களை கட்டித் தொங்கிக் கொண்டு நிற்கிறது. சுவரேறி, வீட்டு கூரை மீதேறி ஓட்டை உடைத்து, உள்ளிறங்கி பெரும் சிரத்தையெடுத்து துணைவியை கட்டினேன். ஆனால்... தனது நம்பிக்கையான உதவியாளன் எளிமையாய் சாவி போட்டு கதவைத் திறந்து, உள்ளே நுழைந்து துணைவியை கவர்ந்து கொண்டு போனது எப்படி?
எல்லா ரகசியங்களையும் அறிந்த உதவி யாளனை வேலை நீக்கமும் செய்ய முடியாமல் அவர் தகிப்பதும் எத்தனை இளநீர் குடித்தாலும் தணிவதற்கில்லை என அவர் தவித்துக் கொண்டிருக்கிறார்.
எப்போது இவர் சிக்குவார் எனக் காத்துக் கொண்டிருந்து, கட்சிக்குள்ளேயே இருக்கும் எதிர்முகாம் ஆட்கள், வி.ஐ.பி. வீட்டு வில்லங்க சலசலப்பை கைப்பேசி வாயிலாகவும், வாயால் பேசியும் முடிந்தளவுக்கு அம்பலப்படுத்திக் கொண்டி ருக்கிறார்கள். அதனால், அவர் அவராகவே இல்லை. எதுவாகவோ ஆகிக் கொண்டு இருக்கிறார் என்கிறார்கள் பொள்ளாத... சாரி.. பொல்லாத ஊர்க்காரர்கள்.
-அ.அருள்குமார்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-10/viphouse-t.jpg)