செயற்குழுவில் ஓ.பி.எஸ். வீசிய ராஜினாமா என்கிற அஸ்திரம், கட்சியை இரண்டாக உடைத்து விட்டது என கவலையோடு தெரிவிக்கிறார்கள் அ.தி.மு.க. தலைவர்கள்.
தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்க தேர்தல் நடந்தது. அதில் ராயபுரத்தில் நடந்த மீனவர் கூட்டுறவு சங்க தேர்தலில் தான் புயல் மையம் கொண்டது. அங்குதான் அ.தி.மு.க.வின் அவைத் தலைவரான மதுசூதனனின் பிரதான சிஷ்யரான ஆர்.எஸ்.ராஜேஷ் தனது வேட்பாளர்களை நிறுத்தியிருந்தார். மதுசூதனன் நேரடியாக களமிறங்கினார். அதை எதிர்த்து அமைச்சரும் எடப் பாடியின் அறிவிப்பாள ராகவும் செயல்படும் ஜெயக்குமார் நின்றார்.
அவரது ஆட்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். அவர்களை எதிர்த்து டி.டி.வி. தினகரன் ஆட்களும் வேட்புமனு தாக்கல் செய் தனர். ஆனால் மதுசூதனன் சார்பில் ஆர்.எஸ்.ராஜேஷ் கொண்டு வந்த ஆட்களை உள்ளே அனுமதிக்கவில்லை. தகவல் மதுவுக்குப் போக, களத்தில் குதித்தார்.
நேரடியாக கூட்டுறவு சங்க தேர்தல் நடத்தும் மீன்வளத்துறை இயக்குநர் அலுவலகத்துக்குச் சென்றார். அங்கிருந்த வேட்பு மனுக்களை கிழித்துப் போட்டார். உடனே ஜெயக் குமார் ஆட்கள் மதுவின் ஆட்களை தாக்கினர். அதில் மதுவின் தொண்டரான தேசபந்து என்பவர் கத்தியால் குத்தப்பட்டார்.
இந்தத் தாக்குதலில் மதுவை காப்பாற்றி அழைத்துப் போன ஆர்.எஸ்.ராஜேஷ், காயமடைந்த தேசபந்து மூலமாக காவல்துறையில் ஜெயக்குமாருக்கு எதிராக புகார் தெரிவித்தார். அதற்குப் போட்டியாக தேர்தல் அதி காரியாக இருந்த மீன் வளத்துறை இயக்குநரை வைத்தே அ.தி.மு.க. அவைத் தலைவரான மதுசூதனன் மீதும் மா.செ.வான ஆர்.எஸ். ராஜேஷ் மீதும் புகார் கொடுத்தார் மீன்வளத்துறை அமைச்சரான ஜெயக் குமார்.
வெகுண்டெழுந்த மதுசூதனன், ""அ.தி.மு.க.வின் அவைத்தலைவரான என் மீதே அரசு அதிகாரி ஒருவர் புகார் அளிக்கிறார். உடனே அந்த அதிகாரியை ராமநாதபுரத்திற்கு மாற்றுங்கள்'' என முதல்வர் எடப்பாடியிடம் சொன்னார்.
அதுபற்றி எடப்பாடி மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் சொன்னார். ஒன்றும் செய்ய முடியாது என எடப்பாடி சொன்னதை மதிக்கவேயில்லை. அமைச்சர் ஜெயக்குமாரின் இந்த நடவடிக்கை வடசென்னை அ.தி.மு.க.வினரிடம் கொந் தளிப்பை ஏற்படுத்தியுள்ளது என்கிறார்கள் வடசென்னை அ.தி.மு.க.வினர்.
ஜெயக்குமாரின் இந்தச் செயலால் கோபத்தின் உச்சத்திற்கே போன மது, ""நான் ராஜினாமா செய்கிறேன். உங்களை விட சசிகலா எவ்வளவோ பரவாயில்லை. நான் டி.டி.வி. அணியில் சேரப் போகிறேன்'' என ஓ.பி.எஸ்.ஸிடம் கொந்தளித்தார். அவரை சமாதானப்படுத்திய ஓ.பி.எஸ். மதுசூதனனை நேரடியாக எடப்பாடியிடம் அழைத்துப் போனார்.
""ஜெயக்குமார் அவைத் தலைவரான என்னை மட்டும் மதிக்கவில்லை என்றால் கூட பரவாயில்லை. கட்சியின் ஒருங்கிணைப் பாளரான ஓ.பி.எஸ்.சையும் இணை ஒருங்கிணைப்பாளரான உங்களையும் மதிப்பதில்லை. சமீபத்தில் ராயபுரம் தொகுதியில் ஏழை மக்களுக்கான அடுக்கு மாடி கட்டும் திட்டத்தை ஜெயக்குமார் துவக்கி வைத்தார். அந்தத் திட்டத்திற்கான அடிக்கல்லில் முதலமைச்சர் பெயரே இடம்பெறவில்லை... என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார் ஜெயக்குமார்?'' என மதுசூதனன் போட்ட சத்தத்தில் எடப்பாடி ஆடிப் போய்ட்டார்.
இரட்டை இலை சின்னத்தை அ.தி.மு.க.வுக்கு தந்த உத்தரவில் எனது பெயர்தான் முதலில் இடம் பெற்றிருக்கிறது. நான் டி.டி.வி. பக்கம் போகிறேன்'' என பேசிக் கொண்டிருந்த மதுசூதனனுக்கு ஆதரவாக ஓ.பி.எஸ்.சும், ""அவைத் தலைவருக்கே மரியாதை இல்லை. அவர் மேல் அரசு அதிகாரி போலீசில் புகார் தெரிவித்தும் அவர் மாற்றப்படவில்லை என்றால், அது கட்சிக்கு ஏற்பட்ட அவமானம். நிலைமை இப்படியே போனால் வேறு மாதிரி ஆகிவிடும்'' என பேசினார்.
இருவரையும் சமாதானப்படுத்திய எடப்பாடி, ""நாம் இப்படி சண்டை போட்டால் நானும் மூட்டை கட்டிக் கொண்டு போக நேரிடும். நம்மிடமிருந்து ஆட்சியும் போய்விடும். கட்சியும் போய்விடும். வருகிற 1-ம் தேதி இந்த பிரச்சினை தொடர்பாக ஜெயக்குமாருடன் உட்கார்ந்து பேசுவோம்'' என மதுசூதன னையும் ஓ.பி.எஸ்.சையும் அனுப்பி வைத்தார் என முதல்வரின் இல்லத்தில் நடந்த சமாதான பேச்சு வார்த்தைகள்பற்றி விளக்கி னார்கள் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள்.
""வடசென்னையில் மதுவின் ஆதரவாளர் தாக் கப்பட்டார். தென்சென் னையின் பகுதியான திருவல்லிக்கேணியில் ஓ.பி.எஸ். ஆதரவாளரான வி.கே.பாபு, தி.நகர் எம்.எல். ஏ.வான சத்தியாவால் தாக்கப்பட்டார். மதுரையில் ஆர்.பி.உதயகுமாரின் ஆட்கள் ஓ.பி.எஸ். ஆட் களை ஓட விட்டார்கள். இப்படி தமிழகம் முழுவதும் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் எடப்பாடி ஆதரவாளர் களால் தாக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதுமிருந்து தனது ஆதரவாளர்கள் தாக்கப்படும் தகவலைக் கேட்டு ஓ.பி.எஸ். டென்ஷ னானார். ஆனால் அவரால் ஒன்றும் செய்ய முடிய வில்லை'' என்கின்றனர் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள்.
""ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் வேட்பாளராக நின்ற மதுசூதனன், எடப் பாடி ஆதரவாளர்களை நம்பவில்லை. அதனால் எடப்பாடி ஆதரவாளர்கள் மதுசூதனனுக்காக ஓட்டு கேட்கவில்லை. அதனால் தான் மதுசூதனன் ஓட்டுக்கு ஆறாயிரம் ரூபாய் கொடுத் தும் தோற்றுப் போனார். திருவாரூர்-திருப்பரங்குன் றம் இடைத்தேர்தல்களிலும் இந்த நிலைமை தொடரும். எடப்பாடி எப்படியும் சசிகலாவுடன் இணைவார் என்கிற சந்தேக கண்ணுடன் தான் ஓ.பி.எஸ். ஆட்கள் பார்க்கிறார்கள். அதனால் தான் திருப்பரங்குன்றம் சென்ற ஓ.பி.எஸ்., தினகரன் எந்த காலத்திலும் அ.தி. மு.க.விற்கு வரமுடியாது என சொல்லிவிட்டு வந்தார். மதுவின் ஆதர வாளரான ராஜேஷுக்கு பதவி கொடுக்க வட சென்னை மாவட்டத் தையே இரண்டாக பிரித் தார். அதுபோல ஒவ் வொரு ஊரையும், சட்ட மன்றத் தொகுதியையும், மாவட்டங்களையும் இரண்டாகப் பிரிக்க வேண்டும். அப்பொழுது தான் ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். அணிகள் இணைந்து செயல்பட முடியும்'' என்கிறார்கள் இ.பி.எஸ். ஆதரவாளர்கள்.
""அவர்கள் என்ன பிரிப்பது அ.தி.மு.க.வை ஓ.பி.எஸ். -அ.தி.மு.க., இ.பி.எஸ். அ.தி.மு.க. என இரண்டாக நாங்கள் பிரித்து விட்டோம். இதற் காக ஓ.பி.எஸ். ராஜினாமா எல்லாம் செய்ய மாட்டார். கட்சியை விட்டும் வெளி யேற மாட்டார்'' என்கி றார்கள் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள்.
-தாமோதரன் பிரகாஷ், அருண்பாண்டியன்