ங்கதேசத்தில் 2024-ல் நடைபெற்ற மாணவர் எழுச்சிப் போராட்டத்தின் தலைவராகத் திகழ்ந்த ஷரீப் ஒஸ்மான் ஹாதி, துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளாகி சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றுவந்த நிலை யில் உயிரிழந்ததையடுத்து வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது.

Advertisment

2024-ல் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் இன்குலாப் மஞ்ச் என்ற மாணவர் அமைப்பு முன்னிலை வகித்தது. அந்தப் போராட்டத்தில் மாணவர் தலைவரான ஷரீஃப் உஸ்மான் ஹாதி முன்னிலை வகித்தார். இதில் ஷேக் ஹசீனா அரசு தூக்கியெறியப்பட, நோபல் பரிசுபெற்ற பொருளாதார அறிஞர் முகம்மது யூனூஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது.

Advertisment

இடைக்கால அரசு அமைந்தபின், மாணவர் அமைப்பில் பெரும்பகுதி, தேசிய குடிமக்கள் கட்சி எனும் அரசியல் கட்சியை உருவாக்கியது. அந்தக் கட்சியுடன் நட்பைப் பேணினாலும் ஷரீப் ஹாதி, இன்குலாப் மஞ்ச் என்றொருஅரசியல் அமைப்பை உருவாக்கி தனியாகச் செயல்பட்டுவந்தார். இந்த அமைப்பு தீவிர இஸ்லாமிய கருத்தியல் நிலைப்பாட்டைக் கொண்டதாக இருந்தது. 

இந்தியாவுக்கு எதிரான கருத்து நிலைப் பாடு கொண்ட அமைப்பாக அது விமர்சனத் துக்குள்ளானது. அதற்குப் பல உதாரணங்கள் இருக்கின்றன. முகம்மது யூனுஸ் அரசு அமைந்த தும், 2024-ல் வங்கதேச- இந்தியா எல்லையில் அமைந்துள்ள அணைகளை உடைக்க வேண்டும். அவற்றிலிருந்து திடீரென நீர் திறந்துவிடப்பட்டதுதான் வங்கதேசத்தில் ஏற்பட்ட வெள்ளத்துக்குக் காரணம் எனக் கூறி போராட்டம் நடத்தினார் ஹாதி. 

Advertisment

அதேபோல ஹாதி, தனது முகநூல் பக்கத்தில், புரட்சிக்குக் காரணமான மாணவர் ஒற்றுமையைக் குலைக்க இந்தியா திட்டமிட்டு வருவதாக பகிரங்கமாக பதிவிட்டிருந்தார். மற்றொரு பதிவில் "கிரேட்டர் பங்களாதேஷ்' எனும் பெயரில் வங்கதேச மேப்பில் இந்தியா வின் பகுதிகளைச் சேர்த்துப் பதிவிட்டது சர்ச்சைகளைக் கிளப்பியது. சமீபத்தில் வங்கதேசத்திலுள்ள சர்வதேச தீர்ப்பாயம் ஷேக் ஹசீனாவுக்கு சாகும்வரை சிறைத்தண்டனை தீர்ப்பு விதித்தபோது, இந்தியா, ஹசீனாவை வங்கதேச அரசிடம் ஒப்படைக்கவேண்டுமென அவர் கருத்துத் தெரிவித்திருந்தார். 

இவையெல்லாம் இந்தியா மீதான ஹாதியின் துவேஷத்தை வெளிக்காட்டப் போதுமானதாகும்.

இந்நிலையில் 2026, பிப்ரவரியில் வங்க தேசத்தில் தேர்தல் நடத்த இடைக்கால அரசு திட்டமிட்டிருந்தது. இந்தத் தேர்தலில் போட்டி யிடத் திட்டமிட்டு டாக்காவில் பிரச்சாரத் தையும் தொடங்கியிருந்தார் ஷரீப். டிசம்பர் 12-ஆம் தேதி மசூதியொன்றில் தொழுகை முடித்து விட்டு ரிக்சாவில் சென்றுகொண்டிருந்த அவரை முகமூடியணிந்த நபர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பியோடினர். இதில் பலத்த காயமடைந்த ஷரீப், உயர்சிகிச்சைக்காக சிங்கப்பூர் கொண்டுசெல்லப்பட்டார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் சிங்கப் பூரில் சிகிச்சை பெற்றுவந்த ஷரீப், டிசம்பர் 18-ஆம் தேதி நள்ளிரவில் உயிரிழந்தார். இதை யடுத்து வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை வெடித்தது. நாடெங்கும் ஷரீப்பின் ஆதரவாளர் கள் கல்வீச்சு, தீவைப்பு என இறங்க, ராணுவம் அங்கே அமைதியை நிலைநாட்டப் போராடி வருகிறது.

bangladesh1

ஷரீப்பின் மரணத்துக்குக் காரணம், ஹசீனாவுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்துவந்ததால் அவாமி லீக் கட்சியினரின் கைவரிசையாக இருக்கலாம் அல்லது தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான விமர்சனங் களை ஷரீப் வெளிப்படுத்தி வந்தால், அவரது வாயை மூடுவதற்காக இந்திய உளவுத்துறையின் செயல்பாடாகக்கூட இருக்கலாம். தவிரவும் இடைக்கால அரசு அமைந்ததுமுதல் தீவிர மதவாத நிலைப்பாடுடைய, தீவிரவாதக் குழுக்கள் பங்களாதேஷில் தங்கள் செல்வாக்கை அதிகரிக்க முனைந்துவருகின்றன. அவற்றில் ஏதாவதொன்று இதனை மேற்கொண்டிருக்க லாம். அல்லது பாகிஸ்தான் துணையுடனான ஏதாவது தீவிரவாதக் குழுவின் நடவடிக்கையாக இருக்கலாமென வங்கதேச மக்கள் சந்தேகிக் கின்றனர். இடைக்கால அரசு அமைந்தபின் உரு வான மற்றொரு மாணவர் கட்சியான தேசிய குடி மக்கள் கட்சியின் தலைவர் ஹஸ்னத் அப்துல்லா, "ஷரீப்பின் மரணத்தையடுத்து, இந்தியாவின் வடகிழக்கிலுள்ள 7 மாநிலங்களின் பிரிவினை வாதத் தலைவர்களுக்கு வங்க தேசத்தில் அடைக் கலம் தருவோம். இந்தியாவை பிரிக்க உதவு வோம்' என பேசியிருக்கிறார். இதற்கு இந்தியாவி லிருந்து பலத்த கண்டனம் எழுந்துள்ளது.

இந்நிலையில் வன்முறையில் ஈடுபட்டவர் கள் வங்கதேசத்தின் சட்டோகிராமிலுள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரியின் வீடு மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். அத்துடன் ராஜ்ஷாஹி நகரத்திலுள்ள ஷேக் ஹசீனா கட்சி  அலுவலகம், வங்கத்தின் தேசத்தந்தை எனப்படும் முஜிபூர் ரஹ்மான் வீடு, வரலாற்றுச் சிறப்புமிக்க தன்மண்டி அருங்காட்சியகம் போன்றவற்றை யும் சேதப்படுத்தியுள்ளனர்.

பிரதம் அலோ, டெய்லி ஸ்டார் போன்ற அலுவலகங்கள் மீது தீவைத்து அழிக்கப் பட்டதும் இடைக்கால அரசை அதிர்ச்சி யடைய வைத்திருக்கிறது. தவிரவும் போராட்டக் குழுவினர், டாக்காவிலுள்ள இந்தியத் தூதரகத்தை மூடவேண்டுமென முழக்கங்களை எழுப்பியுள்ளனர். அதேசமயம் இந்தக் கலவரங்களுக்கி டையில் வங்கதேசத்தின் மைமென்சிங் மாவட்டத்திலுள்ள தொழிற்சாலையொன்றில் பணியாற்றிய தீபு சந்திரதாஸ் மத நிந்தனையில் ஈடுபட்டதாகக் கூறி, தொழிற்சாலைக்கு வெளியே அவர்மீது கும்பல் ஒன்று தாக்குதலில் இறங்கியது. அவரை அடித்துத் தூக்கி மரத்தில் தூங்கில் தொங்கவிட்டதுடன், அவரது சடலத்தை நெடுஞ்சாலையில் வைத்தும் எரித்தது. 2025-ல் கடந்த ஆறு மாதங்களில் மட்டும் இந்து, கிறித்தவ, பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் மீது 258 தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. தற்போதைய சம்பவத்துக்கு இடைக்கால அரசு கண்டனம் தெரிவித்ததுடன், தீபுவைக் கொன்றவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்குமெனத் தெரிவித்துள்ளது.

வங்க அரசின் தற்போதைய நிலைமைக்கு ஷரீப் ஒஸ்மான் காதியின் மரணம் உடனடிக் காரணமென்றாலும், வேறுபல காரணங்களும் சொல்லப்படுகிறது. இடைக்கால அரசு தேர்தலை நடத்துவதில் ஏற்பட்டு வரும் தாமதம், இடைக்கால அரசு வந்தபின் தீவிர இஸ்லாமிய குழுக்கள் அரசு அதிகாரத்துக்கு வர நினைப்பது, ஷேக் ஹசீனாவை, இந்தியா ஒப்படைக்காததால் இந்தியா மீதான ஆத்திரம், வங்கதேசத்தின் பொருளாதாரத் தேக்கத்தால் அந்நாட்டின் பணவீக்கம் 10 சதவிகிதத்துக்கு மேல் அதிகரித்திருப்பது, வேலையில்லாத் திண்டாட்டம் போன்றவையும் அதில் அடக்கம்.

bangladesh2

முக்கியமாக, தீவிர இஸ்லாமிய நிலைப்பாட்டை வலியுறுத்தும் குழுக்களின் செல் வாக்கைத் தவிர்த்து தேர்தலை நடத்தி, மீண்டும் ஜனநாயகப் பாதைக்குத் திரும்புவது வங்கதேசத்தின் ஆரோக்கியத் துக்கு நல்லது என அந்நாட்டின் ஜனநாயக ஆர்வலர்கள் நம்பு கின்றனர். அதேசமயம், இந்தியாவுக்கும் இந்த விவகாரம் மிக முக்கியமானதுதான். இந்தியாவின் அண்டை நாடுகளில் பாகிஸ்தான் முழுக்க இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டில் உள்ளது. பிற அண்டை நாடுகளான இலங்கை, வங்கதேசம், நேபாளம், மாலத்தீவு இவற்றில் இலங்கை எப்போதும் சீனாவுடன் நெருக் கத்தை ஏற்படுத்தியபடியே இந்தியாவுடன் உறவாடுகிறது.

நேபாளம், மாலத்தீவு, வங்க தேசம் மூன்றும் இந்தியாவுடன் நெருங்கிய நட்பைப் பேணின. ஆனால் 2014-க்குப் பின் நேபாளம், மாலத்தீவுடன் ஏற்பட்ட முரணால் அவையும் இலங்கையைப் போன்ற இரட்டை நிலைப்பாட்டுக்கே சென்றுவிட்டன. எஞ்சியிருந்த ஒரே நட்பு நாடான வங்கதேசத் திலும் நிலவரம் மாறிவருகிறது.

ஷேக் ஹசீனாவுக்கு அடைக் கலம் தருவதைவிடவும், வங்கதேசத் துடனான நட்பைப் பேணுவதே இந்தியாவுக்கு முக்கியமானது. அதற்காக ஹசீனாவை, நாம் வங்க தேசத்திடம் ஒப்படைக்கத் தேவை யில்லை. ஐரோப்பிய நாடுகள் எதி லாவது அடைக்கலம் தேடும்படி அனுப்பிவிட்டு வங்கதேச நட்பை உறுதிசெய்வதோடு, அங்கே தேர்தல் நடைபெறவும் உதவலாம். 

இந்தியாவின் அண்டை நாடுகளின் விவகாரங்களில் கழுகுப் பார்வையுடன் இருக்கும் சீனா, எந்த நேரத்திலும் தன் வலுவான பொருளாதார பலத்தால் வங்க தேசத்தை தனது ஆதரவு நாடாக மாற்றிவிடலாம். வங்கதேசம் என்ற குட்டி நாடுதானே என்ற அலட்சி யத்தில் இந்தியாவின் உயர்மட்ட அதிகாரிகள் அதற்கு இடமளித்து விடக்கூடாது என்பதே நம் கவலையாகும்.