Advertisment

கோர்ட்டை மீறி டெண்டர் மீறல்! - வேலைவாய்ப்புத் துறை கொந்தளிப்பு!

tender

தேர்தலுக்கு முன்பாக டெண்டர்கள் அனைத்திலும் கல்லா கட்டிவிட வேண்டும் என எல்லாத் துறைகளும் ஜரூராக உள்ளன. தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறையில் பணிபுரியும் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்திற்கான உபகரணங்களை கொள் முதல் செய்ய அண்மையில் 20 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்தது எடப்பாடி அரசு. டெண்டரும் வெளியிடப்பட்டது. ஆனால், அந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டு மீண்டும் மறு டெண்டர் விடப்பட்டு அதனை இறுதி செய்வதில் தீவிரமாக இயங்குகிறார்கள் உயரதிகாரிகள்.

Advertisment

tender

இதன் பின்னணி குறித்து விசாரித்தபோது, ""தனக்கு

தேர்தலுக்கு முன்பாக டெண்டர்கள் அனைத்திலும் கல்லா கட்டிவிட வேண்டும் என எல்லாத் துறைகளும் ஜரூராக உள்ளன. தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறையில் பணிபுரியும் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்திற்கான உபகரணங்களை கொள் முதல் செய்ய அண்மையில் 20 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்தது எடப்பாடி அரசு. டெண்டரும் வெளியிடப்பட்டது. ஆனால், அந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டு மீண்டும் மறு டெண்டர் விடப்பட்டு அதனை இறுதி செய்வதில் தீவிரமாக இயங்குகிறார்கள் உயரதிகாரிகள்.

Advertisment

tender

இதன் பின்னணி குறித்து விசாரித்தபோது, ""தனக்கு நெருக்கமான நிறுவனத்துக்கு டெண்டரை ஒதுக்க விரும்பினார் துறையின் செயலாளர் நசிமுதீன் ஐ.ஏ.எஸ். ஆனால், டெண்டர் கண்டிஷன்கள் ஒத்துழைக்காததால், அந்த நிறுவனத்துக்கு சாதகமான விதிமுறைகள் புகுத்தப்பட்டு, மறுடெண்டர் அறிவிக்கப்பட்டது. மறுடெண்டரில், எக்ஸ்.ஓ ஃபுட்வேர் பிரைவேட் லிமிடெட், அக்சன் ஸேஃப்டி சொல்யூசன்ஸ் பிரைவேட் லிமிடெட், மிடாஸ் ஸேஃப்டி பிரை வேட் லிமிடெட், யூனிகேர் ஃபயர் ஸேஃப்டி நிறுவனம் ஆகிய கம்பெனிகள் கலந்துகொண்டன.

Advertisment

இதில் நசிமுதீனின் விருப்பத்திற் குரிய ஒரு கம்பெனிக்கு சாதகமாக முடிவெடுக்க, அவருக்கு நெருக்கமான துறையிலுள்ள அதிகாரி செந்தில்குமாரை இணை இயக்குநராக நியமித்து டெண்டர் பணிகளை கவனிக்க உத்தரவிட்டார். இது சட்டத்திற்கு புறம்பானது என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கலானது. மனுவை விசாரித்த நீதிமன்றம், தகுதியற்ற நியமனம் என சொல்லி செந்தில்குமாரின் நியமனத்தை ரத்து செய்தது. இதனை அலட்சியப்படுத்திய நசிமுதீன், செந்தில்குமாரை கூடுதல் இயக்குநராக நியமித்து டெண்டரை கவனிக்கும் முழுஅதிகாரத்தையும் வழங்கியுள்ளார்.

tender

தகுதியற்ற ஒரு நிறுவனத்துக்கு இந்த டெண்டரை ஒதுக்கும் முடிவுகள் எடுக்கப்படுவதால், 20 கோடி ரூபாய் மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்கள் கொள்முதலில் சுமார் 5 கோடி அளவுக்கு ஊழல் நடக்கிறது. இதனால், தொழிலாளர்களின் பாதுகாப்பும் நலனும் கேள்விக்குறியாகியுள்ளன. இதுகுறித்து முதல்வரின் தனிப்பிரிவில் புகார் கொடுக்கப்பட்டும் நோ ஆக்சன்'' என சுட்டிக்காட்டுகிறார்கள்.

அதேபோல, பாதுகாப்பு குறைபாடுகளால் தீ விபத்து ஏற்படும் கம்பெனிகளை முறையாக ஆய்வுக்கு உட்படுத்தாமல் நிர்வாகத் திடமிருந்து கொடுக்கப்படும் வைட்டமின்களைப் பெற்றுக்கொண்டு கம்பெனியை மீண்டும் செயல்பட உயரதிகாரிகள் அனுமதிக்கின்றனர் என்கிற குற்றச்சாட்டும் இத்துறை தொழிலாளர்களிடம் பலமாக எதிரொலிக்கிறது. துறையின் அமைச்சர் நிலோஃபர் கஃபிலுக்கும் உயரதிகாரிகளுக்கும் ஏழாம் பொருத்தம் என்பதால் டம்மி யாக்கப்பட்டிருக்கிறார் அமைச்சர். முதல்வர் எடப்பாடியிடம் நெருக்கமாக இருக்கும் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் சிலர் , நசிமுதினின் பேட்ச்மெட் என்பதால் துறையில் நடக்கும் ஊழல்கள் கண்டு கொள்ளப்படுவதில்லை.

இந்த விவகாரங்கள் குறித்து நசிமுதீன் மற்றும் செந்தில்குமாரின் கருத்தறிய முயற்சித்த போது இருவரின் எண்களும் தொடர்பு எல்லைக்கு வெளியிலேயே இருந்தன. அவர்கள் கருத்துகளைத் தெரிவித்தால் வெளியிடத் தயாராக உள்ளோம்.

-இளையர்

nkn091220
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe