தொழில்நுட்பக் கல்வி இயக்கத்தில் விதிமீறல்! அக்சன் எடுப்பாரா ஐ.ஏ.எஸ். அதிகாரி?

ss

மிழக அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 55 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் இருக்கின்றன. இதில் தொடர்ந்து விதிகள் மீறப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதுகுறித்து தொழில்நுட்பக் கல்லூரி பேராசிரியர்கள் தரப்பில் விசா ரித்தபோது, தமிழகம் முழுவதுமுள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் சுமார் 150 துறைத் தலைவர்கள் இருக்கின்றனர். கல்லூரி முதல்வர்கள் (பிரின்சிபல்) ரிட்டயர்டாகும்போது அந்த பதவியில், இந்திய தொழில்நுட்பக் கல்வி குழும விதிகளின்படி, பொறியியல் அல்லது தொழில்நுட்பம் பயின்ற துறைத் தலைவர்களில் சீனியராக இருப்ப வர்கள் நியமிக்கப்படவேண்டும். ஆனால், தொழில் நுட்ப கல்வி இயக்ககத்தின் நிர்வாகப்பொறுப்பில் உதவிஇயக்குநராக இருந்த நிஷா, இயக்ககத்தின் ஆணையர்களை தவறாக வழிநடத்தி தனக்கு வேண் டிய முதலாமாண்டு விரிவுரையாளர்களையே (லெக்சரர்) கல்லூரிகளின் முதல்வர் பதவியில் முழு கூடுதல் பொறுப்பாக நியமித்தார்.

ss

இந்த முதலாமாண்டு லெக்சரர்கள் ஆங்கிலம், இய

இந்த முதலாமாண்டு லெக்சரர்கள் ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், கணிதம் போன்ற பாடப்பிரிவுகளை மாணவர்களுக்கு நடத்தி வருகின்றனர். விதிகளின்படி இவர்கள் துறைத் தலைவராகக்கூட பதவி உயர்வு பெற முடியாது. காரணம், பொறியியல் படித்தவர்களைத்தான் துறைத்தலைவர்களாக நியமிக்க வேண்டுமென்பது சட்ட விதி.

அப்படியிருக்கையில், விதிகளின்படி தகுதியற்ற அவர்களை பிரின்சிபல் பதவியில் கூடுதல் பொறுப்பாக நியமித்துவருவது சட்ட விரோதம். இதனால், கல்லூரியின் கல்வித்தரமும், நிர்வாகத்தரமும் சீர்குலைந்து வருகிறது. இப்படி விதிகளுக்குப் புறம்பாக நியமிக்கப்பட்டவர்களை பிரின்சிபல் பதவியிலிருந்து விலக்கிவிட்டு, தகுதிகளின் படியும், சட்ட விதிகளின்படியும் 2021-ல் துறைத் தலைவர்களாக பதவி உயர்வு பெற்றவர்களில் சீனியாரிட்டி படி பிரின்சிபாலாக நியமிக்கவேண்டும்.

இது ஒருபுறமிருக்க, பொறியியல் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளின் ஆசிரியர் பணியில் இருப்பவர்கள், 3 ஆண்டுகளுக்கு மேல் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் பணியாற்றக்கூடாது என்பது அரசாணை. ஆனால், அரசாணைக்குப் புறம்பாக, 10 ஆண்டுகள், 15 ஆண்டுகள் என பலரும் இயக்ககத்தில் பணியாற்றி வருகின்றனர்.

அரசாணைக்குப் புறம்பாக, இயக்ககத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்களை இடமாற்றம் செய்துவிட்டு விதிகளுக்கு உட் பட்டு தகுதியுள்ளவர்களை நிய மிக்க வேண்டும். இப்படிப்பட்ட சட்டவிரோத செயல்களை இயக்ககத்தின் ஆணையர் பொறுப்பில் இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடம் பலமுறை புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இதன் மீது முறையாக ஆக்சன் எடுக்கவிடாமல் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தடுத்து வந்தார் நிர்வாக உதவி இயக்குநர் நிஷா. ஆனால், இயக்ககத்தின் ஆணைய ராக இருந்த ஆப்ரஹாம் ஐ.ஏ.எஸ்., நிஷாவின் தகிடுதத்தம் தெரிந்து அவரை ட்ரான்ஸ்ஃபர் பண்ணினார்.

நிஷாவைப் போல, எவ்வித சீனியாரிட்டியும் இல்லாமல் டெபுடேசனில் இயக்ககத்துக்கு வந்து 15, 18 ஆண்டுகளுக்கும் மேலாக நிர்வாக பொறுப் பில் இருந்துவருகிற உதவி இயக்குநர் (தேர்வு), உதவி இயக்குநர் (திட்டம்), வட்டார அலுவலர்கள், சிறப்பு அலுவலர்கள், தொடர்பு அலுவலர், தொழில்நுட்ப உதவியாளர்கள் உள்ளிட்ட பலரை யும் மாற்ற லிஸ்ட் தயாரித்திருந்தார் ஆப்ரஹாம் ஐ.ஏ.எஸ். இதனையறிந்து அவரையே மாற்றி விட்டனர்” என்று குமுறுகின்றனர் பேராசிரியர்கள்.

தொழில்நுட்பக் கல்வி இயக்கக ஆணையரக வட்டாரங்களில் விசாரித்தபோது, ”விதிகளுக்குப் புறம்பாக நீண்ட வருடங்களாக பணிபுரிபவர்களின் எண்ணிக்கை இந்த இயக்ககத்தில் அதிகமாக இருக்கிறது. வணிகக்கல்வி பயிலகத்தில் லெக்சரராக பணியாற்றிய செந்தில்குமார், தொழில் நுட்ப இயக்ககத்தின் தொடர்பு அலுவலராக டெபுடேச னில் நியமிக்கப்பட்டார். 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே பணியிடத்தில் இருக்கிறார். இங்கு வந்த பிறகு இவருடைய பொருளாதாரச் சூழல் அசுர வளர்ச்சியடைந்திருக்கிறது. அதேபோல, சுயநிதி பொறியியல் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளின் படிப்புக் கட்டணம், மாணவர் சேர்க்கை ஆகியவற்றை முடிவு செய்வதற்காக இருக்கும் கட்டண நிர்ணய கமிட்டி யின் சிறப்பு அலுவலராக இருப்பவர் பார்த்திபன். வேலூர் தந்தை பெரியார் அரசினர் பொறியியல் கல்லூரி பேராசிரியராக இருந்து டெபுடேசனில் சிறப்பு அலுவலராக இங்கு வந்தவர். கடந்த 15 ஆண்டுகளாக இதே பொறுப்பில் இருக்கிறார்.

மாணவர்களுக்கு பாடம் எடுக்க வேண்டிய இந்த பேராசிரியரை, 3 ஆண்டுகளுக்குப் பிறகு கல்லூரிக்கு திருப்பி அனுப்பியிருக்க வேண்டும். ஆனால், இயக்ககத்தின் ஆணையர்கள் இதில் கவனம் செலுத்துவதில்லை.

இப்படி, டெபுடேசனில் இயக்ககத்தில் நீண்ட வருடங்களாக இருப்பவர்கள், தங்களுக்குள் சிண்டிகேட் அமைத்துக் கொண்டு, ஆணையராக வருபவர்கள் தங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் பார்த்துக்கொள்கிறார்கள். இதற்காக பண விளையாட்டுகள் ஏகத்துக்கும் கோலோச்சுகிறது. மேலும், டெபுடி கலெக்டர் கேடரிலுள்ள அதிகாரியைத்தான் உதவி இயக்குநர் (நிர்வாகம்) பதவியில் நியமிக்க வேண்டும் என சமீபத்தில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதிலும் அக்கறை காட்டவில்லை''’என்கின்றனர்.

தற்போதைய ஆணையர் இன்னசென்ட் திவ்யா ஐ.ஏ.எஸ். இந்த பிரச்சினைகள் மீது நடவடிக்கை எடுப்பாரா? என்கிற கேள்விதான் கோட்டையில் எதிரொலித்தபடி இருக்கிறது.

nkn090425
இதையும் படியுங்கள்
Subscribe